இதழ் 10 அக்டோபர் 2009 |
இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள்...1 ஜெர்மன் மூலம்: பெர்ட்டோல்ட் பிரெக்ட் தமிழில்: இளங்கோவன் |
||
ஒரு வாசிக்கத் தெரிந்த கூலியின் சில கேள்விகள் ஏழுவாயில்களைக் கொண்ட தேபிஸ் நகரை யார் கட்டியது? புத்தகங்கள் சுட்டுவதெல்லாம் மன்னர்களின் பெயரை அம்மன்னர்களென்ன பாறைகளை அடுக்கினார்களா? தரைமட்டமாக்கப்பட்ட பேபிலோன் ஒவ்வொரு முறையும் நிமிர்ந்தது யாரால்? தங்கஞ்சுரக்கும் லீமாவில் தொழிலாளர்கள் தங்கியிருந்த வீடுகள் எப்படிப்பட்டவை? சீனப்பெருஞ்சுவர் கட்டிமுடிக்கப்பட்ட மாலை கொத்தர்களெல்லாம் எங்குப் போனார்கள்? ரோமாபுரியின் வெற்றி வளைவுகளைக் கட்டியதார்? சீசர்கள், வாகை சூடியது யாரை மிதித்து? கவிதைகள் போற்றும் பைசேண்ட்டியத்தில் வசிப்பதற்கு அரண்மணைகள் மட்டும்தானா? அட்லாண்டிஸ் கண்டத்தை கடல்கொண்ட நள்ளிரவு மூழ்கியோர் நினைவெல்லாம் தத்தம் அடிமைகளைப் பற்றித்தானாம் இளம் அலெக்ஸாந்தர் இந்தியாவை வென்றான். தனியாகவா? சீசர் ஃகோவுல்சை கொன்றொழித்தான். அவனோடு ஒரு சமையற்காரன் கூட செல்லவில்லையா? ஸ்பெயின் வேந்தன் பிலிப் தன் கப்பற் படை தண்ணீரில் மூழ்கியதற்கு அழுதானாம் அவன் மட்டும் தான் அழுதானா? இரண்டாம் பிரெடரிக் ஏழாண்டு போரில் வென்றான். வேறு யார் வென்றது? ஒவ்வொரு பக்கமும் ஒரு வெற்றி வென்றோர்க்கு யார் சமைத்துப் போட்டது? பத்தாண்டுகளுக்கு ஒருமுறை பார் புகழும் பெரிய மனிதனின் வருகை வரிகளை யார் கட்டியது? எத்தனை அறிக்கைகள் எத்தனைக் கேள்விகள்
பெர்ட்டோல்ட் பிரெக்ட் (1898-1956) |
|||
உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் |
|||
வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine
For Arts And Literature |