இதழ் 10
அக்டோபர் 2009
  எனது நங்கூரங்கள் ...3
கலியாணம் என்னும் பெரும் செலவு
இளைய அப்துல்லாஹ்
 
     
  பத்தி:

ஒரு மாட்டுத்தலை காதில் சொல்லிப் போன சேதிகள்

சீ. முத்துசாமி

எனக்குத் தெரிந்த மழை
யோகி


மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை; ஓர் இலக்கியப் பார்வை
சு. யுவ‌ராஜ‌ன்


கட்டுரை:

கதையும் நாடகப்பொருளும்
இராம. கண்ணபிரான்

மலைகள் மீதொரு ராட்சத யாளி
ஜெயந்தி சங்கர்


சிறுகதை:

பதிஎழு அறியாப் பழந்தமிழ் மக்கள்
அ.ரெங்கசாமி


மண் மீதும் மலை மீதும் படர்ந்திருந்த நீலங்கள்!
கோ.முனியாண்டி


தொடர் :


பல வேடிக்கை மனிதரைப் போல...3
"தமிழ் எங்கள் ...யிர்"

ம‌.ந‌வீன்


பரதேசியின் நாட்குறிப்புகள் ...3
மஹாத்மன்


எனது நங்கூரங்கள் ...3
இளைய அப்துல்லாஹ்

செம்புழுதி மழைச்சாரலில் கரைந்துருகும் காலம் ...8
சீ. முத்துசாமி


கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...1


ஜி.எஸ். தயாளன்


எம். ரிஷான் ஷெரீப்

ஷிஜூ சிதம்பரம்

புனிதா முனியாண்டி

சேனன்

ரேணுகா


பதிவு:

வல்லினம் இதழ் ஏற்பாட்டில் 'கலை இலக்கிய விழா'

ம. நவீன்


விமர்சனம்:

வல்லினம் கவிதைகள்

ஜாசின் ஏ.தேவராஜன்

வல்லினம் சிறுகதைகள்

சு. யுவ‌ராஜ‌ன்

"வல்லினம்" – ஒரு பார்வை (செப்டம்பர் மாத வல்லினம் இதழ் விமர்சனம்)

கவின் மலர்


புத்தகப்பார்வை:

மஹாத்மன் சிறுகதைகள்

சிவா பெரியண்ணன்


எதிர்வினை:

புத்தர், போதிமரம், சரணம் மற்றும் மரணங்கள்

தர்மினி

     
     
 

உண்மையில் கலியாணம் என்பது செலவுக்கானதா என்று எனது இரண்டு கூட்டாளிகள் தலை குழம்பி போய் இருக்கிறார்கள். ஒருவர் லண்டனில் இருந்து இந்தியாவுக்கு போய் பொம்பிளையை ஸ்ரீலங்காவிலிருந்து கூப்பிட்டு தாலிகட்டி விட்டு அங்கு தமிழகத்தில் சம்பிரதாயங்கள் எல்லாம் முடித்து விட்டு பிறகு ஸ்ரீலங்காவுக்கு பொம்பிளையை அனுப்பி வைத்து விட்டு இங்கே லண்டன் வந்ததன் பிறகு மனிசியை ஸ்பொன்ஸர் பண்ணி கூப்பிடவேணும்.

இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு கூட்டம் குடும்பம் எல்லாம் கலியாணம் பார்க்க வரப் போகிறோம். நீ டிக்கட் எடுத்துத் தா! என்று இவருக்கு நச்சரிக்க இவர் தலையில் கை வைத்துக் கொண்டிருக்கிறார். எல்லோருக்கும் டிக்கட் காசுக்கு எங்கே போறது?

எல்லோரும் லண்டனிலை மரத்திலை பவுன் காசு காய்த்து தொங்குகிறது என்று நினைத்திருக்கிறார்கள்.

தாலி. கூறை. நகை. நட்டு போக்குவரத்து கலியாண செலவு என்று ஒரு பத்தாயிரம் பவுணாவது வேண்டுமென்று ஆலாய் பறக்கிறார் அவர் ஏற்கனவே அவருக்கு வங்கியில் கடன் 12 ஆயிரம் பவுண்ட். இரண்டாமவர் அம்மாவையும் அப்பாவையும் தமிழ் நாட்டில் இருந்து இங்கே கூப்பிட்டு விடடு இங்கு ஏதாவது ஒரு அம்மன் கோவிலில் கலியாணம் முடிக்கலாம் என்று யோசிக்கிறார். அதற்கு அம்மா அப்பாவை லண்டனுக்கு கூப்பிடுவது ஒன்றும் சாதாரணமான விடயமேயில்லை.

இப்பொழுதெல்லாம் இங்கே லண்டனில் சாமத்திய வீடுகளே பெரும் பெரும் செலவில் தான் நடக்கிறது. அட சாமத்திய வீடு என்ன சாமத்திய வீடு அரங்கேற்றங்களே பெரும் பொருட் செலவில் தான் நடக்கின்றன.

உண்மையில் திருமணங்கள் என்பவை செலவு மிக்கவையா என்ற கேள்வி எழுகின்றது எனக்கு. நான் கலியாணம் செய்யும் பொழுது என்னிடம் இருந்தது பெறும் இரண்டாயிரம் ரூபாய் தான். உண்மையிலேயே இது ஆச்சரியப்பட வேண்டிய ஒன்றாக இன்னும் எனது மனதுக்கு தெரியவில்லை. நான் மனதார நிறைவாகவே இருக்கிறேன்.

இரண்டு தடித்த ஹாட்போட் பெட்டிகளில் ஒன்றில் புத்தகங்கள் மற்றதில் உடுப்பு மனிசிக்கு ஒரு எழுபத்தைந்து ரூபா சூட்கேஸ். எனக்கும் அதேபோல ஒன்று அதற்குள் தான் உடுப்புகளை வைத்துக் கொண்டு திருகோணமலைக்கு போனோம். பின்னர் அக்குறணையில் ஒரு வீட்டில் இலவசமாக இருந்தோம். இரண்டு ரூம் கொண்ட அரதப்பழசான மண்வீடு மேலே இருந்து தூசு கொட்டும் மழைத் தண்ணீர் விழாமல் இருக்க பொலித்தீன் வையை கட்டியிருந்தோம். பக்கத்து றூமில் ஆடுகளை கட்டி வைத்திருந்தார் வீட்டுக்காரர்.

அங்கு தான் மூத்தவளை வளர்த்தோம். மனிசியோ நானோ அதனைப்பற்றி கொஞ்சம் கூட கவலைப்படவில்லை.

எல்லாம் போதுமென்ற மனதும் மேலதிகமான அவாவும் இல்லாமல் இருந்திருந்தால் எல்லாம் சாத்தியம் என்று கலியாணம் கட்டி பதினேழு வருடங்களின் பின்பும் யோசிக்கும் பொழுதும் மனதுக்கு நிறைவைத் தருகிறது.

இஸ்லாமிய திருமணங்கள் மிகவும் இலகுதான். நபிகளார் சொன்னார்கள் இளைஞர்களே! உங்களில் தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றவர் மணந்து கொள்ளட்டும்! இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும். ஏனெனில் நோன்பு ஆசையைக் கட்டுப்படுத்தக் கூடியதாகும்.

உங்களால் இயலுமானதை மஹராக கொடுத்து ஒரு பெண்ணை திருமணம் முடித்துக் கொள்ள இஸ்லாம் அனுமதி வழங்குகிறது. சீதனம் என்ற கொடுமையை எதிர்த்து இஸ்லாம் சொல்கிறது. ஆண் மகன் பெண்ணுக்கு ஏதாவது கொடுத்துத்தான் திருமணம் முடிக்க வேண்டும். அதிலும் யாருக்கும் சிரமம் வைக்காமல் பெண் விரும்பினால் ஒரு பேரீச்சம்பழம் அல்லது ஒரு குர்ஆன் வசனத்தைக் கூட கொடுப்பனவாக கொடுத்து பெண்ணை ஆண் மனம் புரிந்து கொள்ளலாம்.

இவ்வுலகம் இன்பகரமானது, உலக இன்பங்களில் மிகவும் சிறப்பானது நல்ல மனைவியை அடைவதாகும் என்று நபிகளார் சொல்லியிருக்கிறார். நல்ல மனைவியை, பொறுமைசாலியான கணவனை அடைந்தவர்கள் எப்பொழுதும் பாக்கியசாலிகள்.

அண்மையில் எனது நண்பன் ஒருவன் தனது மனைவியை விட்டு பிரிந்து விட்டான். மனைவி சந்தேகப்படுகிறாள். அதனால் சண்டை என்கிறான். இத்தனைக்கும் காதலித்து தேவாலயத்தில் கலியாணம் முடித்தவர்கள் இவர்கள். தீராத சந்தேகம் பெண்ணோடு தொடர்பு என்பதுதான் ஆண்கள் மீது பெண்கள் போடும் பெரும் குற்றச்சாட்டு இதனை அழகான அந்த மனைவியும் கணவனும் உட்கார்ந்து பேசி விட்டுக் கொடுத்து வாழத் தெரியாமல் பிரிந்து விட்டார்கள். இனி வெறுப்பு ஒரு குழந்தை இருக்கிறது அவனின் எதிர்காலம் என்றெல்லாம் எத்தனை பிரச்சினை வரப்போகிறது. விட்டுக் கொடுக்கத் தெரியாத நீங்கள் ஏன் கல்யாணம் முடிக்கிறீர்கள். இருந்து பேசுங்கள். பிரச்சினை தீர இதுதான் வழி என்று சொல்லத் தோன்றுகிறது எனக்கு.

எப்பொழுது ஒரு கணவனை அவனது மனைவி சிறந்தவன் சொல்கிறாளோ உண்மையிலேயே அவன் தான் சிறந்த மனிதன். என்று நபிகளார் சொன்னார்கள். ஒவ்வொரு ஆண்களும் உங்கள் மனைவியிடம் கேளுங்கள்.

இப்பொழுதெல்லாம் முஸ்லிம்களின் கலியாணங்கள் கூட பெரும் ஆடம்பரமான செலவுகளுக்கு போய் விடுகின்றன. எல்லாம் பணக்காரரை முன்வைத்துத்தான் விருந்துகள் நடத்தப்படுகின்றன.

எந்த (திருமண) விருந்துக்கு செல்வந்தர்கள் அழைக்கப்பட்டு ஏழைகள் மறுக்கப்படுகிறார்களோ அவர் இறைவனுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்தவராவர் என்று நபி பெருமானார் சொல்கின்றார்.

இப்பொழுது படாடோப செலவுகள் தொடர்பாக யாரும் அலட்டிக் கொள்வதில்லை. எத்தனை நபிமொழிகள் எத்தனை குர்ஆன் வசனங்கள் இருக்கின்றன. முஸ்லிம்கள் அதனை உதாசீனம் செய்துவிட்டு வாழுகின்றனர்.

மற்றவர்களுக்காக வாழவேண்டும் என்று கங்கணம்கட்டி நிற்பவர்களின் வாழ்வு அழிந்து போனதுக்கு ஆயிரம் உதாரணங்கள் இருக்கின்றன எமது கண்முன்னால்......

கள்ளக்காசு

தமிழகத்துக்குப் போகிறவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அங்கு இந்திய ரூபாய் நோட்டுகளில் பல கள்ள நோட்டுகள் புழங்குகின்றன. வணிக வங்கிகள், ஏ.டி.எம். மெசின்கள், பெருங்கடைகள் என்று எல்லா இடமும் கள்ளநோட்டுகள் புழங்குகின்றன. 2007ஆம் ஆண்டு மட்டும் 10 கோடி ரூபா பெறுமதியான கள்ள நோட்டுகளை இந்தியாவில் பிடித்திருக்கிறார்கள். 2008ஆம் ஆண்டு ஆறுகோடி ரூபா பெறுமதியான கள்ள நோட்டுகள் பிடிபட்டிருக்கின்றன.

காசு மெசின்களில் வங்கிகளில் ஆட்களை சட்டவிரோதிகள் பிடித்து கள்ள நோட்டுகளை அடைத்து விடுகிறார்கள். அதனை எடுக்கின்ற அப்பாவி பொதுமக்களை பொலிஸ் பிடித்து அடித்து துவைத்து விடுகிறது.

சிக்கல் என்னவென்றால் நீங்கள் இலங்கையில் இருந்தோ வேறு இடத்தில் இருந்தோ தமிழ் நாட்டுக்கு போகிறீர்கள் என்றால் வலு கவனமாக இருக்க வேண்டும். உள்ளுர்க்காரர் கள்ள நோட்டோடு பிடிபட்டால் வேறு விதமாகவும், வெளிநாட்டுக்காரர் கள்ள நோட்டோடு பிடிபட்டால் வேறு விதமாகவும் நடத்துவார்கள். தமிழ்நாட்டு பொலிஸை பற்றி தெரியும்தானே. அடித்து நொறுக்கி விடுவார்கள்.

எதையும் அப்பாவியாக செய்யாமல் வலு உசாராக இருங்கள். ஏ.டி.எம். மெசின்களில் காசு எடுப்பதில் இருந்து காசை நன்றாகத் தடவிப் பாருங்கள். கொழும்பில் இருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட பெருந்தொகை இந்தியக் காசுகள் பிடிபட்டிருக்கின்றன. உங்கள் கையில் இருக்கும் இந்திய ரூபாய்தான் நல்லது என்பதற்கு அடையாளங்கள் சொல்கிறேன். பார்த்துக் கொள்ளுங்கள்:

1. காசுக்கு குறுக்கே ஓடும் சில்வர் இழையில் ஆர்.பி.ஐ.யின் முத்திரைகள் இந்தியிலும் ஆங்கில மொழியிலும் இருக்கும். ஆர்.பி.ஐ. என்றால் றிசேவ் பாங்க் ஒஃப் இன்டியா.

2. ஒவ்வொரு தாளிலும் மூன்று வோட்டர் மார்க் இருக்கும்: காந்தியின் உருவம், தாளின் மதிப்பு, ஆர்.பி.ஐ. இதனை அவதானித்தாலே போதும்.

நீங்கள் கள்ள நோட்டை வைத்து பிடிபட்டால் அது கிரிமினல் குற்றத்துக்குப் போய் விடும். அதுக்குப் பிறகு பொலிஸ் உங்களை சும்மா விடாது. பொலிஸுக்கு லஞ்சம் கொடுத்து வெளியில் வந்தாலும் சி.பி.ஐ. துரத்தும். பிறகு இந்திய ஜெயிலில் அல்லது இந்தியாவுக்கு போக முடியாமல் கூட ஆகிவிடும்.

500 ரூபா, 1000 ரூபா தாள்களில்தான் கள்ள நோட்டுகள் அதிகமாக அச்சிடப்படுகின்றன என்று சி.பி.ஐ. சொல்கிறது. பெருங்கடைகளில் இருந்து சாமான் வாங்கிவிட்டு மிகுதியை வாங்கும்போது அவதானமாக இருங்கள்.

கள்ள நோட்டுக்கள் அதிகம் புழங்குவது ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் தானாம். கண்டுபிடித்திருக்கிறார்கள். வங்கி அதிகாரிகளும் கள்ள நோட்டை நல்ல மாதிரி வெளியில் விடுகிறார்களாம். கள்ளர்கள் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள்.

வங்கியே இப்படி செய்யும்போது சாமானியர்கள் எந்தமட்டுக்கு. எனவே, என்னருமை தோழர்களே அவதானமாக இருங்கள். அல்லது தமிழகத்தில் ஜெயிலுக்கு போக நேரிடும்.

- தொடரும்

o எனது நங்கூரங்கள் ...1
o எனது நங்கூரங்கள் ...2

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768