![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
|||||||||||
இதழ் 11 நவம்பர் 2009 |
இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...2 உருது மூலம் : அக்தார் - உல் - மொன் தமிழில்: இளங்கோவன் |
||||||||||
|
|||||||||||
நகரம் பொருதும் பேருந்துகளுக்கும் அதிரும் இரயில் வண்டிகளுக்கும் இடையில் இம்மாபெரும் நகரத்தில் உன்னால் ஓர் அலறலைக் கேட்க முடியுமா? நிரந்தரமாய் மேய்கின்ற கூட்டத்தில் தேனீக்களின் ரீங்காரமிருக்கின்றது தயவுசெய்து முடிந்தால் யாரையாவது பட்டப்பகலில் கொலை செய்! போய் எவளையாவது கற்பழி இம்மாபெரும் நகரில் ஓர் அலறலை யாரால் கேட்க முடியும்? நண்பனே, பெருநகரங்கள் பெருந்திட்டங்களுக்காக அமைச்சர்களின் பேருரைகளுக்காக தலைவர்களின் நகர்வலத்துக்காக ஊர்வலங்களுக்காக ஆர்ப்பாட்டங்களுக்காக ஒற்றுமை போன்ற இத்யாதிக்காக இது ஞானவிருத்தி மையமென்று உனக்கு யார் சொன்னது? இது இராத்திரி மனிதர்களின் - ஒழுக்கச் செலவுக்காக அதோ பார்! புதிதாக வந்திறங்கிய அரச வாரிசை - நகரப் பெருமக்களெல்லாம் அவனடிநக்கி விண்ணப்பங்கள் கொடுப்பர் பின் எவனாவது வங்கி அதிபர் எவனாவது புதியத் தூதுவர் எவனாவது புதியக் குட்டித் தலைவன் தொழில் அபிவிருத்தித் திட்டங்களோடு எவனாவது தொழிற்சாலை முதலாளி கலாசாரத் தூதுக் குழு பெரியத் திட்டங்கள் பெரியப் பலிகள் பெரும் பேச்சுகள் நிகழ்ச்சிகள் விருந்துகள் பெரிய ஹோட்டல்கள் பெரும்பெரும் தந்திரங்கள் - ஐயா பெருநகரங்கள் பெரியமனிதர்களுக்கு மட்டுமே ஆனால், தங்க நகரத்தைக் கண்டு மகிழ புதிய உலகத்தை நிர்மாணிக்க வந்தவர்கள் பெயரில்லாமல் போய் இங்கே இன்னும் வசிக்கிறார்கள் போகவேண்டிய தூரங்கள் மறந்து அவர்களின் பெருந்தன்மையும் பேராத்மாக்களும் ஞானமும், திறமையும் அரசியல் வட்டத்தில் அடிபட்டுப் போயின பெருநகரம் பெரும்பணிகளுக்கு நண்பனே நொறுங்கும் இதயம் தென்படும் விண்கலமல்ல; இம்மாபெரும் நகரத்தில் ஓர் அலறலைக் கேட்கமுடியும்? |
|||||||||||
அக்தார் - உல் - மொன் பிறப்பு : 1915 உத்தரப் பிரதேசம், இந்தியா. உருது புதுக்கவிதை இயக்கத்தின் தலையாயக் கவிஞர், பம்பாய் படவுலகின் பாடலாசிரியர், திரைப்பட இயக்குனர். |
|||||||||||
உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் |
|||||||||||
வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine
For Arts And Literature |