இதழ் 12
டிசம்பர் 2009

hit counters





Enter your email address to receive Vallinam updates:

Delivered by FeedBurner

 


கட்டுரை:

உல‌கில் புதிய‌ வ‌ழித்த‌ட‌ம் - ஏபெக் மாநாடு : ஒரு பார்வை
கெ.எல்.
சமச்சீரான, நிலைத்தன்மையான, நீடித்த பொருளியல் வளர்ச்சிக்கான வழிமுறைகளை ஆராய வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்கவில்லை. வரிகள், ஏராள விதிமுறைகள் போன்ற தடைகளைத் தவிர்த்து, நாடுகளுக்கு இடையே தடையற்ற வர்த்தகத்துக்கு வழி அமைக்க வேண்டும் என்பது சிங்கப்பூரின் தலைமையில் நடைபெற்ற இந்தப் பொருளியல் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கை. இதன் மூலம் வர்த்தகம் எளிதாகும். நேரம் மிச்சமாகும். இருதரப்புக்கும் ஆதாயம் கிடைக்கும். இருதரப்பும் வளர்ச்சி காண முடியும்.

கட்டுரை:
மக்கள் எவ்வழியோ அவ்வழியே அரசும்

நெடுவை தவத்திருமணி
மக்கள் சொத்து மகேசன் சொத்து என்பார்கள். தற்போதைய ட்ரெண்ட் - மக்களின் பணம் மந்திரிகளின் பணம் என்றாகிவிட்டது. யார் கேட்க முடியும்? யார் தான் கேட்பார்கள்? யாரால் தான் கேட்க முடியும்? கேட்டால் போதும், கேட்பவனை ஓட ஓட விரட்டுவார்கள். வழக்குகளை தொடருவார்கள். கஞ்சாவை வீட்டில் வைப்பார்கள். கைது செய்வார்கள். கேட்டவனை குடும்பத்தோடு கொளுத்துவார்கள். இவர்களைத்தான் தமிழர்கள் எங்கள் ‘தலைவர்கள்’ என்று சொல்கின்றார்கள்.

கட்டுரை:
ஒரு தேசாந்திரியின் யாத்திரையில்

முனைவர் M.S ஸ்ரீலக்ஷ்மி
பல நாடுகளில் வசிக்கும் போது இடையிடையே பிறந்த மண்ணின் நினைவு வருவதும், மற்ற நாட்டுப் பழக்க வழக்கங்களைப் பார்க்கும் போது தனது மண்ணின் (பிறந்த மண்ணின்) நினைவு வருவதும் ஒரு யாத்ரீகனின் பார்வையில் தவிர்க்க முடியாதது. இந்த நினைவுகளை மிக நேர்த்தியாகப் பதிவு செய்துள்ள முத்துலிங்கத்தின் பணி காலப்பரிணாமத்தின் அடிப்படையில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பது என் கருத்து. வருங்காலத் தலைமுறையினர் இலங்கைத் தமிழர்களின் வளமைகள், பழக்கங்கள் குறித்து ஓரளவாவது அறிந்து கொள்ள முடியும்.

பத்தி:
குருநாதர் கும்பமுனியின் பொன் வாக்கும் கலைந்ததொரு கனவும்

சீ. முத்துசாமி
பினாங்கு வெஸ்டர்ன் சாலை, ஜாலான் உத்தாமா கத்தோலிக்க கிருஷ்துவ கல்லறை. மேலே மேக மூட்டம். மெலிதான ஒளியின் ஊடுருவல். கண்களுக்கு குளிர்ச்சியும் இதமும் தந்து பரவசமூட்டியது. அடர்ந்து நின்ற மரங்களின் ஊடே அழகான கல்லறைகள் அணிவகுத்து நிற்பது போல். கல்லறைகளைச் சூழ்ந்து நிற்கும் குடும்ப உறுப்பினர்கள், புற்களைச் சுத்தம் செய்வதும் மலர்களை வைத்து அலங்கரிப்பதுமாக, இதமான காட்சி. ஆங்காங்கே பலரும் நினைவு நூற்களைப் பின்னிக்கொண்டு உணர்ச்சி வசப்பட்ட நிலையில் தரையில் உட்கார்ந்து பிரார்த்திக் கொண்டிருந்தனர்.

பத்தி:
Bye… Bye

தோழி
திடீரென்று பையன் கத்தி அழத் தொடங்கியிருந்தான். அவன் அப்பா அவனை அடிக்க அடிக்க அவன் குரல் உயர்ந்து கொண்டே சென்றது. வெகு நேரம் இந்த நாடகம் நீடித்துக் கொண்டிருந்தது. கடைசியில் அப்பாதான் தோற்றுப் போனார். நான் யுவாவின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டேன். கண்களால் பார்க்க முடியாத ஓசைகள் மட்டும் பயமுறுத்திய அனுபவம்.

பத்தி:
மலர்ந்தது ஈழம்!

அ. ரெங்கசாமி
சுண்டைக்காய் நாடு இலங்கை. அதன் கடற்படை இந்தியக் குடிமக்களான தமிழக மீனவர்களை அன்றாடம் அழித்துக் கொண்டிருக்கின்றது. அந்த ஏழை மீனவர்களின் அழுகுரல் தமிழக முதல்வரின் காதுகளில் விழவில்லையே! அந்த ஏழைகளுக்காக, கருணாநிதியின் கண்கள் கலங்கவில்லையே! ஏனெனில், தமிழக முதல்வர் இன்று ஒரு மேட்டுக்குடி! ஏழைகளுக்காக இரங்குவதும் கண்ணீர் வடிப்பதும் கேவலம் என்பது மேட்டுக் குடியினரின் மரபு!

தொடர்: பரதேசியின் நாட்குறிப்புகள் ...5
மஹாத்மன்
அநேக ஜாகா போஸ்ட்களில் கழிப்பறை இருக்காது. மின் விசிறி இருக்காது. உட்கார ஒரு நல்ல நாற்காலி இருக்காது. அது இருந்தால் இது இருக்காது; இது இருந்தால் அது இருக்காது. இரவில் கொசுவர்த்திகளின் புகைக்கு கொசுக்கள் கொஞ்சங்கூட பயப்படாமல் இஷ்டம் போல இரத்தம் குடித்துவிட்டு மந்தகதியில் பறந்துச் செல்லும்.

தொடர்: எனது நங்கூரங்கள் ...5
இளைய அப்துல்லாஹ்
ஆண்கள் இந்த விடயத்தில் பெரிதும் முரண்டு பிடிப்பதை லண்டனில் நான் எத்தனையோ குடும்பங்களில் நேரடியாகக் கண்டிருக்கிறேன். குடும்பத்தில் பிரச்சினை வரும்பொழுது கூட இருக்கும் துணையை திருப்பதிப்படுத்தாமல் தங்களோடு தாங்களே பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள முடியாமல் தத்தமது நண்பர்களிடம் போய் மனக்கவலையை முறையிடுகிறார்கள்.

தொடர்: செம்புழுதி மழைச்சாரலில் கரைந்துருகும் காலம் ...9
சீ. முத்துசாமி
ஒரு மாலைப் பொழுதில், கோயில் வளாகத்தில் நடந்தேறிய சில்லிப்பந்து ஆட்டம் முடிகிற தருவாயில், கூத்து மேடை கீழிருந்து வெளிப்பட்ட முனகலோடு நான்கு குட்டிகள் வெளியே தலைநீட்டி தள்ளாடி நின்றன. ஆளுக்கொன்றாக தூக்கி வைத்து கொஞ்ச ஒருவன் ஆசை காட்டினான்.


புத்தகப்பார்வை: குரு அரவிந்தனின் நீர்மூழ்கி நீரில் மூழ்கி... (குறுநாவல் தொகுதி)
முனைவர் கௌசல்யா சுப்பிரமணியன்

பதிவு: "நா கோவிந்தசாமி எனும் படைப்பாளி"
புஷ்பலதா கதிரவேலு

பதிவு: குரு அரவிந்தனின் நூல், ஒலிவட்டு வெளியீட்டு விழா
மணிமாலா

இதழ் அறிமுகம்: இருமாத கவிதையிதழான “மரங்கொத்தி” - ஒரு பார்வை
மன்னார் அமுதன்

இதழ் அறிமுகம்: நேர்காணல்
பவுத்த அய்யனார்

 
 


சிறுகதை: அவள் - நான் - அவர்கள்
மா. சண்முகசிவா
ஒரு கணம் ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டோம். அடர்த்தியான நிசப்தம் கவிழ்ந்தது. மேஜையின் விரிப்பும் தாட்களும் ஜன்னலோர காற்றில் படபடத்தன. நெஞ்சில் ஏதோ கனமாக இறங்கியது. 'அடக் கடவுளே, எப்படி இது நடந்திருக்கும்?' நம்ப மனம் மறுத்தது.


சிறுகதை: கருப்பண்ணன்
சு. யுவராஜன்
பெரியசாமி திடீரென பாய்ந்து தலைக்கவிழ்ந்து நின்றவரின் சட்டையைப் பிடித்து இரண்டு அறை விட்டார். ‘கடசில ஒன் சாதி புத்திய காட்டிட்டல’, கத்தினார் பெரியசாமி. தவறி விழ இருந்தவர் பக்கத்திலிருந்த மரத்தைத் தாங்கிப் பிடித்துக் கொண்டார்.


சிறுகதை: ராதா: எண் 7, இருபத்து நான்காவது மாடி
முனிஸ்வரன்
சோஃபாவில் டயானா இளவரசியை நினைவுக்குக் கொண்டுவரும் கண்கள், பாதி மூடிய மாதிரியும் மீதி திறந்த மாதிரியும் இருக்க மிதமாகச் சார்ந்து படுத்திருந்த அவளை அப்படியே அள்ளிக் கொள்ளவேண்டும் என்று மட்டும்தான் தோன்றிற்று.


சிறுகதை: உற்றுழி
கமலாதேவி அரவிந்தன்
வந்ததும் சிரித்துக்கொண்டே மந்தாகினியின் காதில் ஏதோ குசுகுசுத்தார் மலர் அம்மா. அடுத்த கணம் அது நிகழ்ந்தது. மந்தாகினி பளார் என்று மலர் அம்மாவின் கன்னத்தில் விட்டார் ஒரு அறை


சிறுகதை: கார்ட்டூன் வரைபவனின் கதை
ம. நவீன்
ராஜா உண்மையில் தற்கொலை தான் செய்து கொண்டிருந்தார். ராஜாவின் தற்கொலை எங்கிருந்து தொடங்கியது என மனம் யோசிக்கத் தொடங்கியது.


சிறுகதை: நீலக்கடல் மீது பாவும் நீலகண்டப் பறவைகள்!
கோ. முனியாண்டி
ஒவ்வொரு வார்த்தையையும், சாந்தி மனம் திறந்து எழுதியிருந்தாள். பல இடங்களில் மனதைத் தைத்து விடும் வகையில் வார்த்தைகளை அந்தப் பெண் வெளியிட்டிருந்தாள். விஷ்ணுவிற்கு பிரமிப்பாய் இருந்து திகைப்பை ஏற்படுத்தியது.


சிறுகதை: சிகப்பு விளக்கு
விக்னேஸ் பாபு
ஐந்து வருஷத்துக் மேல் ஆனதால் வெள்ளை கடிதம் மஞ்சள் கடிதம் போல் காட்சியளித்தது. கடிதத்தை கிழிக்க முயன்று பாதி கிழித்த பின்பு மேற்கொண்டு கிழிக்காமல் மீண்டும் மடித்து மணி பிரஸ்சில் வைத்துக் கொண்டான்.

கவிதை:
o இளங்கோவன் 
o எம். ரிஷான் ஷெரீப் 
தீபச்செல்வன்
o தர்மினி
ஏ.தேவராஜன்
செல்வராஜ் ஜெகதீசன்

 

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768