இதழ் 12
டிசம்பர் 2009
  கவிதை
ஏ.தேவராஜன்
 
     
  பத்தி:

டடவாவும் ஈ ஷந்தியனும்

அகிலன்

குருநாதர் கும்பமுனியின் பொன் வாக்கும் கலைந்ததொரு கனவும்
சீ. முத்துசாமி


Bye… Bye
தோழி

மலர்ந்தது ஈழம்!
அ. ரெங்கசாமி

கட்டுரை:

உல‌கில் புதிய‌ வ‌ழித்த‌ட‌ம் - ஏபெக் மாநாடு : ஒரு பார்வை
கெ.எல்.

மக்கள் எவ்வழியோ அவ்வழியே அரசும்
நெடுவை தவத்திருமணி

ஒரு தேசாந்திரியின் யாத்திரையில்
முனைவர் M.S ஸ்ரீலக்ஷ்மி

சிறுகதை:

அவள் - நான் - அவர்கள்
மா. சண்முகசிவா


கருப்பண்ணன்
சு. யுவராஜன்

ராதா: எண் 7, இருபத்து நான்காவது மாடி
முனிஸ்வரன்

உற்றுழி
கமலாதேவி அரவிந்தன்

கார்ட்டூன் வரைபவனின் கதை
ம. நவீன்

நீலக்கடல் மீது பாவும் நீலகண்டப் பறவைகள்!
கோ. முனியாண்டி

சிகப்பு விளக்கு
விக்னேஸ் பாபு

தொடர்:


செம்புழுதி மழைச்சாரலில் கரைந்துருகும் காலம் ...9
சீ. முத்துசாமி

பரதேசியின் நாட்குறிப்புகள் ...5
மஹாத்மன்


எனது நங்கூரங்கள் ...5
இளைய அப்துல்லாஹ்

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...3


எம். ரிஷான் ஷெரீப்


தீபச்செல்வன்

தர்மினி

ஏ.தேவராஜன்

செல்வராஜ் ஜெகதீசன்

பதிவு:

"நா கோவிந்தசாமி எனும் படைப்பாளி"
புஷ்பலதா கதிரவேலு

குரு அரவிந்தனின் நூல், ஒலிவட்டு வெளியீட்டு விழா
மணிமாலா

இதழ் அறிமுகம்:

மரங்கொத்தி
மன்னார் அமுதன்

நேர்காணல்
பவுத்த அய்யனார்

புத்தகப்பார்வை:

குரு அரவிந்தனின் நீர்மூழ்கி நீரில் மூழ்கி... (குறுநாவல் தொகுதி)
முனைவர் கௌசல்யா சுப்பிரமணியன்
     
     
 

1

சில கனவுப் பறவைகள்
நள்ளிரவில் கூடி வந்து
என் கால்களைக் கொத்தின

கொஞ்சம் கூசலும்
பின்பு மெல்லிய வலியையும்
அவை ஏற்படுத்தின

இரைகளுக்காகவோவெனத்
தீர்மானித்திருந்தேன்
அதுவரை

பறவைகளுடன்
என் சம்பாஷணை
நீடித்த அடுத்த கணம்
தங்கள் கழுத்தில்
தூதுவத்துக்கான செய்தியை
வேண்டி நின்றன

எல்லாம்
வெவ்வேறு பறவைகளாயினும்
ஒரே செய்தியை யாசித்தமை
எனக்குள்
கலவரத்தைக் கிளர்த்தின

அவற்றோடு வாழ்தலென்பது
என் பூர்வாங்க விருப்பமென்பதை
அவற்றிற்கான செய்தியை
எப்படிச் சொல்வதென்பதில்
தள்ளிப் போட்டபடி
இந்த நாழிகை
கழிந்துகொண்டிருக்கிறது
அதிகாலை வரை...


2

மொளோரென்று
ஈக்கள் மொய்க்கும்போதெல்லாம்
அவை
உணவுக்காகத்தானோவென்று
முடிவு கட்டிவிடாதே

ஒருகால்
ஒரு கா....ல்...
உன் இதயத்துக்காகவும்
இருக்கலாம்

எனவே
கூட்டித் துப்புரவு செய்து வை


3

நமக்கான சிக்கலென்று
உணர்ந்துகொண்டபின்
உனக்கான
எனக்கானவென
வகுத்துக்கொண்டு
ஒவ்வொன்றாய்
ஆய்ந்தெடுக்க முனைந்தோம்

ஆய்ந்தெடுத்தவற்றைத்
துகளாக்கி
சல்லடையில்
எஞ்சியிருந்ததைப் பார்த்தோம்

ஒன்றுமில்லை...
ஒன்றுமில்லை...
ஒன்றுமில்லை...


4

மணிக்கணக்கில் பேசிவிட்டு
நள்ளிரவும் உறங்கிய பின்தான்
வீடு வந்து சேர்ந்தேன்
பிணமாய்


5

எதைக் கொண்டு வந்தோம்
எதைக் கொண்டு சென்றோம்?

எதையாவது கொண்டு வந்து
எதையாவது கொண்டு போகத்தானே!


6

பணிப்பெண்
தண்ணீர் விட்டுக் கழுவுகிறாள்
வீட்டை

எசமான் வருவதற்குள்
சொட்டுத் தடயமின்றித்
துடைத்துவிடுகிறாள்

நிலைப்பேழையில்
கண்ணாடிக்குள்
கண்ணாடி தெரிகிறது

அமைதியான
ஒரு மூலையில்
எழுந்த நூலாம்படை
காற்றில் அசைவாடி
தனக்குள் குடியிருக்க
அழைத்தன
சில பூச்சிகளை...

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768