இதழ் 13
ஜனவரி 2010






Enter your email address to receive Vallinam updates:

Delivered by FeedBurner

 


கட்டுரை:

பிலிப் கலாஸ் : இசையின் தீராத‌ ப‌க்க‌ங்க‌ள்
அகிலன்
'எனது ஆரம்பக் காலங்களில் இத்தகைய இசையை நான் நிறுவ முயற்சித்தப் போது, என்னை ஒரு பைத்தியக்காரனாகவே எல்லோரும் கருதினார்கள். நான் எனது இசையை நிறுவுவதற்காக எல்லா அரங்குகளிலும், மேடைகளிலும் இலவசமாகவே எனது இசையை படைத்து வந்தேன். சில அரங்குகள் தேவாலயங்கள் சிறிய அன்பளிப்பு மூலமாக என்னை ஊக்குவித்தன.'

கட்டுரை:
காற்று வேட்டை

கெ.எல்.
இன்று சிரமப்படாமலே உணவும் நீரும் காற்றும் கிடைப்பதால் அதைப்பற்றி சிந்திக்கத் தோன்றுவதில்லை. ஆனால் பேரறிவையும் பெரும் செல்வத்தையும் மனிதனின் அனைத்து பலத்தையும் செலவழித்தாலும் உயிர்வாழ்வுக்குத் தேவையான உணவும் காற்றும் நீரும் கிடைக்காத ஒரு காலம் வரும்.

கட்டுரை:
வரமா? சாபமா?

நெடுவை தவத்திருமணி
யாரால் சாகடிக்கப்பட்டார்கள், என்ன காரணம், சட்டத்தின் நடவடிக்கை என்ன என்பதெல்லாம் நமக்குத் தெரிந்த ஒன்றுதான். அதாவது குடும்பத்துக்குள் ஏற்பட்ட குத்து வெட்டுப் பிரச்சினைக்கு பொதுமக்கள் பலியாகின்றார்கள். எவன் வீட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையேன்னானாம். இவர்கள் அடித்துக் கொள்ள ரோட்டில போறவன் சாவுறான். கோர்ட்டாவது, சட்டமாவது, புண்ணாக்காவது, புடலங்காயாவது.

கட்டுரை:
மொழி ஆணால் உருவாக்கப்பட்டது...

வீ.அ. மணிமொழி
முன்பு ஒரு சாராரை மட்டும் சார்ந்திருந்த மொழி தற்பொழுது ஆண்-பெண் என இருபாலருக்கும் பொதுவாக அமைந்து விட்டது. ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த சொற்களின் மீது பெண்களும் ஆதிக்கத்தைக் கொண்டாட தொடங்கி விட்டனர். ஆணுக்கு நிகராக பெண்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள தங்களுக்கேற்ற தன்பாலைச்சார்ந்த சொற்களையும் உருவாக்கிக் கொண்டர்.

கட்டுரை:
இலங்கைத் தமிழர்களின் ஆங்கில நூல்கள்: நூல்தேட்டம் ஆங்கில நூல் தொகுப்புக்கானதொரு அறிமுகம்

என். செல்வராஜா
எங்கிருந்தோ வந்த இலங்கைத் தமிழர் தமக்கு ஒரு சுமை என்று இலங்கையின் இனவாத அரசுகள் சிந்தித்து செயற்படும் இன்றைய நிலையில், இலங்கைத் தமிழரின் இருப்பிற்கான உரிமைப்போர் ஒரு சர்வதேச சமூகத்தின் அவதானத்திற்கு உரியதாக மாறிவரும் இவ்வேளையில் இலங்கையில் தமிழ்பேசும் குடியினரின் அந்நாட்டின் கட்டுமானத்திற்கு என்ன செய்தார்கள் என்ற கேள்விக்கு விடைதேடும் பணியொன்றும் எமக்குள்ளது.

பத்தி:
தமிழகத்திலும் ஒரு நீரோ மன்னன்

அ. ரெங்கசாமி
முள்வேலி முகாமுக்குள் அடைக்கப்பட்டிருக்கின்ற நம் உடன்பிறப்புக்களான தமிழ்மக்கள் நீதியாக- நேர்மையாக- மனித நேயத்துடன் நடத்தப்படுகின்றனர் என்றால், சிங்கள அரசு அங்கே இரும்புத்திரை போட்டப்பட்டிருப்பதை ஏன் என்ற கேள்விக்குச் சிங்கள அரசு மட்டும் அல்ல அதற்குத் துணைப் போகின்ற ஏனைய நாடுகளும் இதற்குப் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.

பத்தி:
அவஸ்தை

இராம. கண்ணபிரான்
ஓர் அறையின் தனித் தரையில் விரிக்கப்பட்ட ‘ஃபோம்’ மெத்தையில், வெற்று மார்போடு அரைக்காற்சட்டை அணிந்திருக்கும் ஓர் இளைஞன் ஒருக்களித்து உறங்கிக் கொண்டிருப்பதைப் படக் ‘கேமரா’ நமக்கு அறிமுகப்படுத்துகிறது.

லும்ப‌ன் ப‌க்க‌ம்:
ஒரு கோமாளியின் வ‌ருகை...

லும்ப‌ன்
இந்த‌க் கோமாளி ஏறும் மேடைக‌ள் தோறும் 'த‌மிழ் நாட்டில் ம‌லேசிய‌ இல‌க்கிய‌த்திற்கு பீட‌ம் வைத்துள்ளேன்... நாற்காலி வைத்துள்ளேன்... மேசை வைத்துள்ளேன்...' என‌ ஜோக் அடிக்கும். ஜோக்கை ர‌சித்து அனைவ‌ரும் கை த‌ட்டி சிரிப்பார்க‌ள்.

திரைவிமர்சனம்:
அவரார் (Avatar)

குரு அரவிந்தன்
இந்தப் படத்தைப் பார்க்கும்போது இராமாயணக்கதை, கூடுவிட்டுக் கூடுபாயூம் விக்கிரமாதித்தன் கதை எல்லாம் ஞாபகத்திற்கு வருகின்றன. மகாபாரதத்தில் கண்ணனை அவதாரம் என்கிறோம். இந்தப்படத்திலும் கார்மேகக் கண்ணன் போல ஒருவர் வருகின்றார்.

புத்தகப்பார்வை: விட்டு விடுதலை காண்
நிந்தவுர் ஷிப்லி


பதிவு: மலேசியத் தமிழ்க் கவிதாயினிகளின் முதலாவது மலையருவிக் கவியரங்கம்
தினேசுவரி

அறிவிப்பு : அஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்தும் சர்வதேச தமிழ்ச் சிறுகதை, கவிதைப் போட்டி

எதிர்வினை

 
 


சிறுகதை: குரங்கு
கிரகம்
"போனவாரம் நீங்க அட்டண்ட் செய்த இண்டர்வியூவில் செலக்ட் ஆகியிருக்கிங்க. உங்களோட வருட சம்பளம் பதினைந்து லட்சம். இது பத்தின முழுவிவரம் உங்க மெயிலுக்கு அனுப்பியிருக்கோம். உங்களோட கன்பர்மேசன் மெயிலை இன்னைக்கு சாங்காலத்துக்குள்ள அனுப்பிடுங்க. மற்ற விவரங்களை உங்களோட மெயில் பார்த்துட்டு போன் செய்கிறேன்" என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்தாள் சரிதா.


சிறுகதை: பிரமைகள்
ஸ்ரீரஞ்சனி
தொடர்ந்து M.Sc செய்யலாம் அல்லது எங்கேயாவது கிட்டவாக வேலை எடுத்தால் அவளுடன் அவளின் course முடியும் வரை தொடர்பைப் பேணலாம். அதற்குப் பிறகு ஆறுதலாக திருமணத்துக்கு வழி தேடலாம் என்றெல்லாம் கட்டிய கனவுகளை அப்பாவுக்கு வந்த சடுதியான மாரடைப்பின் விளைவான இறப்பு தகர்த்து விடுகிறது.


தொடர்: ப‌ல வேடிக்கை ம‌னிதரைப் போல‌ ...5
ம‌. ந‌வீன்
ஆச்ச‌ரிய‌மாக‌ நான் 'பெர்ன‌மா' தொலைக்காட்சியில் எழுத்தாள‌ர் ச‌ங்க‌த்தின் போக்கு குறித்து ஒரு நேர்காண‌லில் ப‌திவு செய்த‌ என‌து க‌ருத்துக‌ளுக்கு அத‌ன் த‌லைவ‌ர் பெ. இராஜேந்திர‌ன் ப‌திலுரைக்கும் வித‌மாக அதே 'பெர்ன‌மா' தொலைக்காட்சியில் சில‌ க‌ருத்துக‌ளை முன் வைத்திருந்தார். அதில் ஒரு ஆய்வாள‌னுக்கே உரிய‌ சில‌ புதிய‌ க‌ண்டுபிடிப்புக‌ளின் வ‌ழி த‌ன் அற்புத‌மான‌ க‌ருத்தைப் ப‌திவு செய்திருந்தார்.


தொடர்: எனது நங்கூரங்கள் ...6
இளைய அப்துல்லாஹ்
கூழா முறிப்பில் இருந்த குடும்பம் ஓடி ஓடி புதுக்குடியிருப்பு பகுதிகளூடாக ஒழிந்து ஒழிந்து காடுகளுக்குள் உயிரை காப்பாற்றிக் கொள்ள ஓடி கடைசியில் முள்ளி வாய்க்கால் வரை உயிரை தாக்காட்டி வைத்திருந்த அம்மாவும் அப்பாவும் துப்பாக்கி குண்டு பட்டு செத்துப் போனார்களாம்.


தொடர்: நடந்து வந்த பாதையில் ...1
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்
இவளை அழைத்துச் சென்று பத்திரமாய் விட்டுவிட்டு, உடனே மற்றவர்கள் போய்விட, முத்துசாமி பேசிய முதல் வாக்கியம், ‘உங்களுக்கு இங்கு என்ன கற்றுக்கொடுப்பதென்றே புரியவில்லை?' நீங்களே எழுத்தாளர், நாடகாசிரியர், கவிதாயினி, இங்கு உங்களுக்கு என்ன புதிதாய் கற்றுக் கொடுக்கப் போகிறோம்’ என்றபோது கவலை வந்தது.

கவிதை:
o இளங்கோவன் 
o இரா. சரவணதீர்த்தா 
மன்னார் அமுதன்
o ஏ.தேவராஜன்

 

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768