இதழ் 13
ஜனவரி 2010
  க‌விதை
இளங்கோவன்
 
     
  நேர்காண‌ல்:

"அர‌சாங்க‌த்திற்குத் தேவை ந‌ம்மை நாமே குறை சொல்லிக் கொள்ளும் ஏமாளித்த‌ன‌ம்"

பி. உத‌ய‌குமார்

சிறப்புப் பகுதி:

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் - ஒரு பார்வை


பத்தி:

தமிழகத்திலும் ஒரு நீரோ மன்னன்

அ. ரெங்கசாமி

அவஸ்தை
இராம. கண்ணபிரான்


கட்டுரை:

பிலிப் கலாஸ் : இசையின் தீராத‌ ப‌க்க‌ங்க‌ள்
அகிலன்

காற்று வேட்டை
கெ.எல்.

வரமா? சாபமா?
நெடுவை தவத்திருமணி

மொழி ஆணால் உருவாக்கப்பட்டது...
வீ.அ. மணிமொழி

இலங்கைத் தமிழர்களின் ஆங்கில நூல்கள்: நூல்தேட்டம் ஆங்கில நூல் தொகுப்புக்கானதொரு அறிமுகம்
என். செல்வராஜா

சிறுகதை:

குரங்கு
கிரகம்


பிரமைகள்
ஸ்ரீரஞ்சனி

தொடர்:


ப‌ல வேடிக்கை ம‌னிதரைப் போல‌ ...5
ம‌. ந‌வீன்

எனது நங்கூரங்கள் ...6
இளைய அப்துல்லாஹ்

நடந்து வந்த பாதையில் ...1
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

கவிதை:

இளங்கோவன்


இரா. சரவணதீர்த்தா


மன்னார் அமுதன்

ஏ.தேவராஜன்

பதிவு:

மலேசியத் தமிழ்க் கவிதாயினிகளின் முதலாவது மலையருவிக் கவியரங்கம்
தினேசுவரி

புத்தகப்பார்வை:

விட்டு விடுதலை காண்
நிந்தவுர் ஷிப்லி

லும்ப‌ன் ப‌க்க‌ம்:


ஒரு கோமாளியின் வ‌ருகை...
லும்ப‌ன்

அறிவிப்பு:


அஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்தும் சர்வதேச தமிழ்ச் சிறுகதை, கவிதைப் போட்டி

எதிர்வினை:


கடிதம்
     
     
 


Courtesy of Internal Security Department, Ministry of Home Affairs, Singapore


ஊரடங்கு

பிற்பகல் 12 புதன்கிழமை 22 ஜூலை 1964

கருநீல ஆடையும் மூங்கில் தொப்பியும் அணிந்த
சீனக்கிழவனின் காய்ப்பேறி எண்ணெய் பிசுபிசுக்கும் இடது கரத்திலிருந்து
கவனமாய் எடுத்துக் கொண்ட வர்ணங்களூறிய பனிப்பந்தை உறிஞ்சியவாறு
கலவரத்தைக் கண்ணோட்டமிட்டேன் சிசில் தெருவின் நடுமையத்தில்
தெலுக் ஆயர் தொடக்கப் பள்ளிக்கும் சி ஐ டி கட்டடடத்துக்கும் இடையே
நிலைக்குத்திய ரிக்சாவிலிருந்து

சீனர்கள், மலாயக்கார்கள், இந்தியர்கள்
மூட்டைத்தூக்கிச் சென்றனர் பிள்ளைகளையும் புத்தகப் பைகளையும்
அப்பாவும் ஐந்து மாமாக்களும் எங்கோர் தெருவிலிருந்து வந்து
அல்லாடிக் கொண்டிருந்தனர் பயணிக்க முடியா வீதியின் பீதியில்

சரமாரியாய் விழுந்தது அரசியலற்ற பிரச்சாரம்
"ஓடு! மலாய்க்கார்கள் சீனர்களை வெட்டுகிறார்கள்"

பத்து இந்தியக் கைகள் தள்ளிக் கொண்டு வந்த சீன ரிக்சாவில்
வீடுசேர்ந்தேன் வெள்ளைச் சீருடையில் வண்ணங்கள் தெருக்கூத்தாட

பிற்பகல் 12 வெள்ளிக்கிழமை 24 ஜூலை 1964
ஜெனரல் ஆஸ்பத்திரியிலிருந்து கண்டோன்மெண்ட் சாலை வழியாக
ஜுரத்துடன் பிதற்றும் அம்மாவோடு
   "என்னைத் தொடாதே நான் தீட்டு"
   "தீட்டுன்னா என்ன?"
   "சோறு தண்ணியில்லாத தாழ்த்தப்பட்டவன் நம்ம கோயில் புகுந்து
           பொங்கலைத் தின்னதாலே கோயிலை மூடிட்டோம் தீட்டுன்னு"

பாராங்கத்திகளேந்திய எட்டுச் சீனர்கள் எங்களை மண்டியிட வைத்தனர்
"மலாய்க்காரியா? முஸ்லீமா?"
கத்தி அம்மாவின் சிவந்தக் கழுத்தை வருடியது
புருவங்களுக்கிடையே குங்குமப்பொட்டைச் சிறையெடுக்க முடியாததால்
பச்சை குத்தியிருந்த சீனன் விரலில் எச்சில் துப்பி
ஊர்க்குறத்தி குத்திவிட்ட பச்சைப் பொட்டைச் சுரண்டிப் பார்த்தான்
"ஓ! இந்தியாவா?" "போ!"

மாலை 4 மணி ஞாயிற்றுக்கிழமை 24 ஆகஸ்ட் 2003
அம்மாவின் பச்சைப் பொட்டு விபூதியூடே
மணியாகிறதென்கிறது
அப்பாவின் உடலை மௌன்ட் வெர்னன் தகனசாலைக்குப் பெட்டியில்
கிடத்தும்போது

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வவல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768/span>