இதழ் 13
ஜனவரி 2010
  க‌விதை
இரா. சரவணதீர்த்தா
 
     
  நேர்காண‌ல்:

"அர‌சாங்க‌த்திற்குத் தேவை ந‌ம்மை நாமே குறை சொல்லிக் கொள்ளும் ஏமாளித்த‌ன‌ம்"

பி. உத‌ய‌குமார்

சிறப்புப் பகுதி:

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் - ஒரு பார்வை


பத்தி:

தமிழகத்திலும் ஒரு நீரோ மன்னன்

அ. ரெங்கசாமி

அவஸ்தை
இராம. கண்ணபிரான்


கட்டுரை:

பிலிப் கலாஸ் : இசையின் தீராத‌ ப‌க்க‌ங்க‌ள்
அகிலன்

காற்று வேட்டை
கெ.எல்.

வரமா? சாபமா?
நெடுவை தவத்திருமணி

மொழி ஆணால் உருவாக்கப்பட்டது...
வீ.அ. மணிமொழி

இலங்கைத் தமிழர்களின் ஆங்கில நூல்கள்: நூல்தேட்டம் ஆங்கில நூல் தொகுப்புக்கானதொரு அறிமுகம்
என். செல்வராஜா

சிறுகதை:

குரங்கு
கிரகம்


பிரமைகள்
ஸ்ரீரஞ்சனி

தொடர்:


ப‌ல வேடிக்கை ம‌னிதரைப் போல‌ ...5
ம‌. ந‌வீன்

எனது நங்கூரங்கள் ...6
இளைய அப்துல்லாஹ்

நடந்து வந்த பாதையில் ...1
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

கவிதை:

இளங்கோவன்


இரா. சரவணதீர்த்தா


மன்னார் அமுதன்

ஏ.தேவராஜன்

பதிவு:

மலேசியத் தமிழ்க் கவிதாயினிகளின் முதலாவது மலையருவிக் கவியரங்கம்
தினேசுவரி

புத்தகப்பார்வை:

விட்டு விடுதலை காண்
நிந்தவுர் ஷிப்லி

லும்ப‌ன் ப‌க்க‌ம்:


ஒரு கோமாளியின் வ‌ருகை...
லும்ப‌ன்

அறிவிப்பு:


அஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்தும் சர்வதேச தமிழ்ச் சிறுகதை, கவிதைப் போட்டி

எதிர்வினை:


கடிதம்
     
     
 

மறக்கமுடியலே... மறக்கப்பட்டவர்களால்

வீடு வாங்குன்னு
என் பாட்டி
விட்ட ஒப்பாரி
என் காதுல விழுது...

"பின்" இல்லாதவனுக்கு
பன்னு கூட
"கோட்டா" தானுன்னு
துங்கு காலத்துப்பாட்டிக்கு
புதுப் பாலிசி
எப்படி தெரியும்?

ஒரு கம்பெனி
தொறக்கச் சொல்லி
வியாபாரம் பண்ணுலாம்னு
என் தாத்தா வற்புறுத்தியது
ஞாபகம் இருக்கு...
பூமி புத்திரனின்
ஒழைக்காத ஒறவு
வேணுமுன்னு சொன்னா
சாலை போட்டவருக்கு
ஏறுமா?

எதமறந்தாலும்
தமிழ மறக்காதடா...
அது நம்ம தாய்மொழி...
செத்துப்போன
அப்பன் சொன்னதும்
புத்தியில பதிஞ்சு
கிடக்கு....
வழி வழி
வந்தத
மழிப்பானுன்னு
எஸ்டேட் மேனஜரை
மட்டும் தெரிஞ்ச
அப்பனுக்கு
என்ன தெரியும்...?

ஓட்டு போட்டா
தராசுக்கு போடுவேனு
என் அம்மா
பெரும பட்டுகுட்டு
இருந்ததும்
நெனவுக்கு வருது...

நெகாராக்கு..
பி.ராம்லி படம்.......
மலேசியா கொடி...
மெர்டேகா சத்தம்....
எல்லாத்தையும்
மறக்க முடியலே....
மறக்கப்பட்டவர்களாலே......


தொடரும் தேடல்......

நிர்வாணமாய்
வீதியில் கறந்த இடத்தை தேடி...

பல முறை முட்டி மோதிய
காய்ந்த உதடுகள்
எக்கிப் பிடித்தவுடன்
களைத்து போய்
முளைத்தெழுந்தன காம்புகள்!

தொடர்ந்து சப்பினாலும்
சிவக்கவில்லை
உதடும் காம்புகளும்..
மிச்ச மீதியை
கொட்டித் தீர்த்திட
சொட்டுக்கு அழுத்தியது
எலும்பு விரல்கள்..

வலித்தது..
காம்புடன் தாய்மையும்..

இருப்பினும்...
வாழ்வியலுக்குத் தொடங்குகிறது
தேடல்....


உயிர் வடியும் விடியும் வரை.....

சீனாவின் பீரங்கி..
ரஷ்சியாவின் தானியங்கி......
இந்தியாவின் ஏ கெ 47 ...
முற்றம் இட்டதில்...
மாளாத மண் வாடையோடு .....
சிதறுண்டு கிடக்கிறது..
தமிழன் சதைகள்...

வாழ்வதற்கும்
மண்ணில்லை
புதைப்பதற்கும்
மண்ணில்லை
தமிழ் கதைக்கு..
ஹோலிவூட்டில்
இதுவரையிலும்
விருது இல்லை.....

பரவாயில்லை..
எங்கள் அகராதியிலில்லை
நீண்ட உறக்கம்
உடலுக்கு
மட்டும்தான்.....

புறப்பட்டோம்
மறுபடியும் மறுபடியும்
மாவீரன் உயிர் வடியும்
விடியும் வரை.....
என்ற நம்பிக்கையில்.....


"மரணம்"

இன்று
நாளை
விரைவில்.......
பல
வேடங்களில்
ஒரு நடிகன்

நடிகர் சங்கம் இல்லை
சங்கமம் மட்டும்.

கதை... காதறுந்த ஊசி...
உச்சக்கட்டம்....ஞானம்
இசை....அழுகை

பல
மொழிகளில்
ஒரு திரைப்படம்....
இது "ஒரு படைப்பாளனின்"
வெற்றிப்படைப்பு....

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வவல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768/span>