இதழ் 14
பிப்ரவரி 2010
  இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...4
சிங்கள மூலம் : பராக்கிரம கோடித்துவக்கு
தமிழில் : இளங்கோவன்
 
     
  நேர்காணல்: பகுதி 2

"இது வரைக்கும் நான் விலை போகவில்லை"

பி. உதயகுமார்

பத்தி:

நான் பார்த்த இளையராஜா

அகிலன்

காற்றின் மொழி
வீ. அ. மணிமொழி


2009-ன் ஆண்டின் சில நினைவுக்குறிப்புகள்… கொஞ்சம் தாமதமாக
சு. யுவராஜன்

தும்பி
ம. நவீன்

கட்டுரை:

தாமரை
ஜெயந்தி சங்கர்

சிறுகதை:

குரல்
சீ. முத்துசாமி


ஊமைகளின் உலகம்..!
குரு அரவிந்தன்

மறுபிறவி
கிரகம்

துளசிப்பாட்டி
க.ராஜம்ரஞ்சனி

தொடர்:


எனது நங்கூரங்கள் ...7
இளைய அப்துல்லாஹ்


நடந்து வந்த பாதையில் ...2
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...4


சு. யுவராஜன்


தர்மினி

தினேசுவரி

பா.அ.சிவம்

இளைய அப்துல்லாஹ்

மன்னார் அமுதன்

ரேணுகா

சிறப்புப்பகுதி:

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் - ஒரு பார்வை

புத்தகப்பார்வை:


'சிதைவு'களோடு 'தேம்பி அழாதே பாப்பா'
எம். ரிஷான் ஷெரீப்
     
     
 

குசுமாவதி

'குசுமாவதி தன்னுடைய இரண்டேயிரண்டு வெள்ளைச் சீருடைகளை உலர்த்த முடியாததால் நேற்றுப் பள்ளிக்கு வரவில்லை. தயவுசெய்து, அதற்காக அவளைத் தண்டித்து விடாதீர்கள்.'

ஒரு கையில் கழி
மறு கையில் கடிதம்,
நான் படித்தேன்;
மனம் பதைத்தேன்.
குசுமாவதி
உலகத்தில் எவனுக்காவது
உரிமையிருக்கின்றதா
உன்னைத் தண்டிக்க
உனக்கு இரண்டேயிரண்டு
ஆடைகளை ஒதுக்கியதற்காகச்
சாட்டையால்
அடிக்கவேண்டும் சமுதாயத்தை.

ஆமாம் சார்...
நேற்றிரவு தீமூட்டிக் காயவைத்த ஆடையோடு
பனையோலைப் பந்தமேந்தி
பாடப் புத்தகங்களோடு,
அறிமுகமில்லா அச்சங்களை
மனத்தில் அழித்தவாறு
பன்னிரு மைல் தூர
குடாவா கிராமத்திலிருந்து
கல்விச்செல்வம் பொறுக்க
நான் வருகிறேன்

கோடிழுக்கா வானப் புத்தகத்தில்
சூரியன் இரத்தமை சிந்துவதற்குள்
எரியும் பந்த ஒளியில் நான் வருகிறேன்
ஒவ்வொரு கல்லாய்த் தாண்டித் தாண்டி
ஒவ்வொரு கல்லாய்த் தாண்டித் தாண்டி.

சுருக்கமில்லா ஓடைப்பாதையில்
செவ்வாய்ப் பாக்குப்பூச்சிகள் நீந்தும்...
நிமிர்ந்தால் மலைப்பூட்டும் மரவெளியெல்லாம்
குரங்குக் குட்டிகள் பல்லிளிக்கும்...
சிரிப்பைத் தெளித்தவாறே நான் வருகிறேன்
ஒவ்வொரு கல்லாய்த் தாண்டித் தாண்டி
ஒவ்வொரு கல்லாய்த் தாண்டித் தாண்டி
கால் சுளுக்கிக் கொண்டால் மட்டுமே
ஓய்வெடுக்கக் கல் கிட்டும்

ஒருநாள் அடர்ந்த காட்டுக்குள்ளே
மூங்கிற் புதர் மத்தியிலே
பெரிய கற்சிலைப்போல்
அமைதியாய் என்னைப் பார்த்திருந்தது
காட்டு யானை ஒன்று

இல்லை சார்...
எனக்கென்ன கவலை
காட்டில் வீழ்ந்து
தரையைப் போர்த்தும்
குருலுராஜா மலர்கள்
யார் இதயத்தை அசைக்கப் போகின்றன
நான் வருகிறேன் சிரித்துக் கொண்டே...
சிரித்துக் கொண்டே
ஒவ்வொரு கல்லாய்த் தாண்டித் தாண்டி
ஒவ்வொரு கல்லாய்த் தாண்டித் தாண்டி

முதுகிலிருந்து புட்டம்வரை
முற்றாய்க் கிழிந்த ஓராடை
மும்முறை தைத்தும் தாங்கவில்லை
இன்னொன்றோ இத்தவணைக்குள்
இற்றுப்போகும் என் வேர்வையிலே
ஓ புத்தாடைக்கு!
வீட்டில் பிரச்னை அதுதான்
என் வேண்டுதலும் அதுதான்

கனவிலேனும் அது கிடைத்தால்
கட்டாயம் நான் வருவேன்
அடுத்த தவணையும் தான்
மத்திய உயர்நிலைப் பள்ளிக்கு
கல்விச்செல்வம் பொறுக்க.

ஆமாம் சார்...
ஒவ்வொரு கல்லாய்த் தாண்டித் தாண்டி
ஒவ்வொரு கல்லாய்த் தாண்டித் தாண்டி
சிரித்துக்கொண்டே...

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768