இதழ் 14
பிப்ரவரி 2010
  கவிதை
தினேசுவரி
 
     
  நேர்காணல்: பகுதி 2

"இது வரைக்கும் நான் விலை போகவில்லை"

பி. உதயகுமார்

பத்தி:

நான் பார்த்த இளையராஜா

அகிலன்

காற்றின் மொழி
வீ. அ. மணிமொழி


2009-ன் ஆண்டின் சில நினைவுக்குறிப்புகள்… கொஞ்சம் தாமதமாக
சு. யுவராஜன்

தும்பி
ம. நவீன்

கட்டுரை:

தாமரை
ஜெயந்தி சங்கர்

சிறுகதை:

குரல்
சீ. முத்துசாமி


ஊமைகளின் உலகம்..!
குரு அரவிந்தன்

மறுபிறவி
கிரகம்

துளசிப்பாட்டி
க.ராஜம்ரஞ்சனி

தொடர்:


எனது நங்கூரங்கள் ...7
இளைய அப்துல்லாஹ்


நடந்து வந்த பாதையில் ...2
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...4


சு. யுவராஜன்


தர்மினி

தினேசுவரி

பா.அ.சிவம்

இளைய அப்துல்லாஹ்

மன்னார் அமுதன்

ரேணுகா

சிறப்புப்பகுதி:

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் - ஒரு பார்வை

புத்தகப்பார்வை:


'சிதைவு'களோடு 'தேம்பி அழாதே பாப்பா'
எம். ரிஷான் ஷெரீப்
     
     
 

அம்மா பிள்ளை


என் திருமணம்
கற்றுக் கொடுத்தது
அம்மாவின்
மரணங்களைக்
கணக்கிட.......

அம்மாவின்
முதல்
மரணத்தை
உணர்த்தி
உலுக்கியது
நான்
பங்கிட்டுக் கொண்ட
கட்டில்தான்......

அம்மாவின்
மரணங்கள்
மேலும் மேலும்
கூடிக் கொண்டே
போகிறது
என் கணக்கில்...
எனக்கு இரண்டு
பிள்ளைகளாகியும்
கூட....

உணர்வு பிழியப்பட்ட
துணியாய் அம்மா
வீடென்னும் கொடியில்
உலர்ந்து போய்
கிடந்துள்ளதை
இன்னொரு கொடியில்
காய்ந்ததும்
உணர்கிறேன்....

அப்பா பிள்ளையாக
இருந்த நான்
அம்மா பிள்ளையாக
மாறிய காரணத்திற்கு
விடை தேடிக் கொண்டிருக்கிறாள்
தங்கை
அவளும்
அம்மா பிள்ளையாகப்
போகும்
சாத்தியங்கள்
வெகு அருகில்
என அறியாமல்......

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768