இதழ் 14 பிப்ரவரி 2010 |
கவிதை இளைய அப்துல்லாஹ் |
||||||||||
|
|||||||||||
என்னோடு உறங்கும் பூனை பாய்ந்து வந்து என்னோடுதான் அது உறங்குகிறது. எனது படுக்கையில் எனது அருகாமையில் என்னை விட்டு அகலமாட்டேன் என்கிறது பூனையின் முடிகள் சுகமானது அதன் கழுத்தில் ஒரு தாலி கட்டி அழகு பார்த்தேன் பூனையின் தாலி என்னை குத்துகிறது விலக மறுத்த பூனை பல வருடங்களாக என்னோடேயே இருக்கிறது எனக்கு வலிக்கிறது என்பது பூனைக்கு தெரிகிறதாயினும் என்னோடுதான் உறங்குகிறது தினம் அடம் பிடித்து அப்புறபப்படுத்த முடியாமைக்கு தாலி இருக்கிறது ஒரு வேள்வி போலத்தான் பூனைக்கும் எனக்குமான உறவு அது எப்பொழுது மாறிப்போனது என்று நினைவில்லை அழகிய பூனை அது நிறைந்த மயிர் அதுக்கு மயிரால் உராயும் போதெல்லாம் சுகம் அடங்க மறுக்கிறது பூனை சில வேளைகளில் அது அத்து மீறுகிறது ஆனாலும் பூனை எங்குமே போக விடாத படிக்கு என்னோடு உறங்குகிறது கால்கள் பின்னிக்கிடக்கும் போதெல்லாம் என் கால்களை அது சொந்தமாக்குகிறது பூனைக்கு எனது வலியில் ஒரு சிரிப்பிருக்கிறது. |
|||||||||||
உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் |
|||||||||||
வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine
For Arts And Literature |