இதழ் 14
பிப்ரவரி 2010
  கவிதை
ரேணுகா
 
     
  நேர்காணல்: பகுதி 2

"இது வரைக்கும் நான் விலை போகவில்லை"

பி. உதயகுமார்

பத்தி:

நான் பார்த்த இளையராஜா

அகிலன்

காற்றின் மொழி
வீ. அ. மணிமொழி


2009-ன் ஆண்டின் சில நினைவுக்குறிப்புகள்… கொஞ்சம் தாமதமாக
சு. யுவராஜன்

தும்பி
ம. நவீன்

கட்டுரை:

தாமரை
ஜெயந்தி சங்கர்

சிறுகதை:

குரல்
சீ. முத்துசாமி


ஊமைகளின் உலகம்..!
குரு அரவிந்தன்

மறுபிறவி
கிரகம்

துளசிப்பாட்டி
க.ராஜம்ரஞ்சனி

தொடர்:


எனது நங்கூரங்கள் ...7
இளைய அப்துல்லாஹ்


நடந்து வந்த பாதையில் ...2
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...4


சு. யுவராஜன்


தர்மினி

தினேசுவரி

பா.அ.சிவம்

இளைய அப்துல்லாஹ்

மன்னார் அமுதன்

ரேணுகா

சிறப்புப்பகுதி:

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் - ஒரு பார்வை

புத்தகப்பார்வை:


'சிதைவு'களோடு 'தேம்பி அழாதே பாப்பா'
எம். ரிஷான் ஷெரீப்
     
     
 

கண்டெடுப்பவர் கவனத்திற்கு

விரும்பலாம், வெறுக்கலாம்
எனும்படியான
சுவாரஸ்யமானதும் அற்றதுமான
பயணக்குறிப்பேடு ஒன்று
காணாமல் போய்விட்டது

விலைமாதர் தேடி பயணப்பட்ட
முதல் குறிப்பு உங்களுக்கு அலுப்பேற்றலாம்
படபடப்பும் குற்ற உணர்ச்சியும்
உங்களையும் ஆட்கொள்ளலாம் என்பதால்
தாகசாந்தி : ஒன்று என்னும் குறிப்பை படிக்காமலேயே கிழித்தெறிந்து விடலாம்
இரண்டு, மூன்று, நான்கு....
நீளும் தாகசாந்திக்குறிப்புகள் உங்களுக்கு உதவக்கூடும்
சுய இன்பத்தில் ஆர்வம் மிக்கவரென்றால்

நகர்தல் தலைப்பிட்டக்குறிப்புகள்
உங்களுக்கு அந்நியமாய் தோன்றலாம்
தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டபின்
மாய நாயொன்று வெறிகொண்டு துரத்த
ஒவ்வொரு முறையும்
மாறிக்கொண்டே இருந்த முகவரிகளுக்கு
அஞ்சல் செய்யப்படாக் குறிப்புகள் அது

நடுவீட்டில் கிடத்தி வைத்து
தலைமாட்டில் விளக்கு, ஊதிபத்தி ஏற்றியபின்
மிகச்சாதாரணமாய் வரும்
அழைப்புகளின் நிமித்தம்
சூன்யவெளியில் பயணித்தெரியூட்டிய
சதைகளின் வாசமும் ஜூவலையின் தகிப்பும் சுமந்து
பழுப்பேறியிருக்கும் சில பக்கங்கள்

இந்தமுறை வேண்டாமென்று
ஒவ்வொருமுறையும் தேக்கிவைத்தச்
சொற்களைச் சுமந்துகொண்டு
இரு இருக்கைகள் முன்னால் அமர்ந்திருந்த
காதலை வெறித்தபடியே
ஐந்து மணிநேரப் பேருந்து பயணம்
மடைதிறந்து பெருகி வழிந்திருக்கும்
சில பக்கங்களில்

ஒன்றும் செய்வதற்கில்லை நான்
கிழித்தெறிந்தாலும்
உங்களுக்கேயெனப் பத்திரப்படுத்தினாலும்
பேசி சிரித்துக்கொண்டாலும்
முடிந்தால் திருப்பிவிடுங்கள்
முதல் பக்கத்தில் நான்
எழுத மறந்த முகவரிக்கு



இழந்த காதல்

இழந்த காதல்
வேண்டுமென்றேன்

நிதானித்தவர்...
என்னால் முடியாததெதுவுமில்லை
சகலமும் அறிந்தவன் நான்
உன் எண்ணம் அறிவேன்
உயிர்த்தெழச் செய்யட்டுமா
நீ நேசிக்கும் ஒருவரை என்றார்

இழந்த காதல்
வேண்டுமென்றேன்

என்னால் சமைத்திட முடியும்
ஓர் அங்குலம் பிசகாமல்
வாழ்ந்து பார்க்கிறாயா மீண்டும்
தோட்டத்து வாழ்வை என்றார்

இழந்த காதல்
வேண்டுமென்றேன்

புன்முறுவல் படர
இன்னும் அடுக்கத் தொடங்கினார்
புளுகு மூட்டைகளை

இழந்த காதல்
வேண்டுமென்றேன்

முகம் சிறுத்து
தணிந்தக் குரலில் சொன்னார்
அது என்னால் முடியாது
உங்கள் சடங்குகள் அனுமதிக்காது

அப்போ என்னா மயித்துக்கு
வரம் கேள் என்றாய்
என்றேன்

ஒன்றும் சொல்லாமல்
என்னை வெறித்தப்படி நின்றார்
கடவுள்

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768