கட்டுரை:
இடைநிலைப் பள்ளியில் தமிழுக்கொரு சோதனை காண்டம் ‘அடா பூன் செரூப்பா, தடா பூன் செரூப்பா’! ஏ.தேவராஜன் நாட்டிலுள்ள எல்லாத் தமிழாசிரியர்களும், தமிழார்வலர்களும் இன்னும் எத்தனை தடவை கூடிப் பேசப்போகிறார்களோ தெரியவில்லை. பேச்சு ஒரு பக்கமும், மேலிடத்துச் ‘சாமியார்கள்’ அடுத்த தேர்தல் வரைக்கும் இழுத்தடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எல்லா நாட்டு அரசியலும் தமிழனை அதிகமாகவே நேசிக்கிறது போலும். தமிழனைத் தாயமாகவே உருட்டி உருட்டி அலைக்கழித்துக்கொண்டிருக்கிறது.
கட்டுரை: வாசிப்பு : சில பதிவுகள் ப. மணி ஜெகதீசன் வாசிக்கும் பழக்கம் (reading habit) இன்றி வளரும் இளையோரைவிட, வாசிப்பதை விரும்பாத (reading reluctancy) ஒரு சாரரும் பெருகி வருவதை மிகுந்த மனச்சஞ்சலத்துடன் நாம் கண்டு வருகிறோம். இளையோர் மத்தியில் வாசிப்பு பழக்கம் விருப்பமான ஒரு காரியமாக இருப்பது அருகி வருகிறது. செயலூக்கமும், சிந்தனைத் தெளிவும் மிக்க சமுதாயம் மறைந்து, உலகாயதத் தேவைகளைப் பூர்த்தி செய்வதையே முகாமையான நோக்காகக் கொண்ட வாழ்க்கைச் சித்தாந்தம் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.
கட்டுரை: ஆன்மீக அயோக்கியத்தனங்கள் நெடுவை தவத்திருமணி கடவுள் என்பது வேறு. மனிதன் என்பவன் வேறு. கடவுள் என்பது ஒரு சக்தி. அந்தச் சக்தி மனிதனின் மனத்தில் இருக்கிறது. அன்பே கடவுள் என்றெல்லாம் முன்னோர்கள் சொல்லி இருக்கின்றார்கள். மனமது செம்மையானால் மந்திரம் தேவையில்லை என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அதையெல்லாம் விட்டு விட்டு சாமியார்களைப் போற்றுவதும், கால்களில் விழுவதும் கடைந்தெடுத்த முட்டாள்களின் செயல்கள்.
பத்தி: அக்காவின் சிவப்பு புலோட் சு.யுவராஜன் அந்த சிவப்பு புலோட்டின் ருசி மிகவும் வித்தியாசமாக இருந்தது. அதற்கு முன்போ அல்லது பின்போ அத்தகைய ருசிக் கொண்ட புலோட்டை நான் சாப்பிட்டதில்லை. நான் இப்படி சொல்வது உங்களுக்கு மிகையாகத் தோன்றலாம். ஆனால் மேலெழுதிய வாக்கியத்தை என் நெருங்கிய நண்பர்கள் படித்தால் நிச்சயம் அதிர்ச்சியடைவார்கள். பொதுவாக நான் அவ்வளவு சீக்கிரத்தில் எதையும் பாராட்டுவதில்லை.
பத்தி: மறக்கும் கலை! ம. நவீன் பொதுவாகவே நான் எதை விரும்பி செய்தாலும் அல்லது ஆசைப்பட்டாலும் அவ்வாசை நிறைவேறும் தருணம் இது போன்ற பயமே முதலில் என்னை வந்தடைகிறது. சொற்பமாக என்னிடம் உள்ள வார்த்தைகளால் அதை பயம் என்கிறேனே தவிர அவ்வுணர்வுக்கு அறுதியிட்ட வார்த்தை இருப்பதாகத் தெரியவில்லை. கொஞ்சம் நீட்டி சொன்னால், நான் விரும்பி பெற்ற அது இன்னொரு சந்தர்ப்பத்தில் எந்த அதிருப்தியும் தெரிவிக்காமலும் தனது இருப்பைக் காட்டாமலும் என் நினைவிலிருந்து விலகிச்செல்லும் தருணம் குறித்தான ஆச்சரிய உணர்வு எனலாம்.
பத்தி: பேயும் பயப்படும் அ.ரெங்கசாமி மூன்றாவது இரவும் வந்தது. உடுக்கைச் சத்தமும் பூசாரிகளின் ஆரவாரமும் இரவை உலுக்கின. இத்தனை நாளும் ஊர்மக்களும் உறங்கவில்லை. தனித்து கோயிலில் படுத்திருந்த அடைக்கனுக்கும் உறக்கம் பிடிக்கவில்லை. தொடர்ந்து நடந்து கொண்டிருந்த பேயின் செயல் அவரின் நெஞ்சில் பெருஞ்சினத்தை மூட்டியிருக்க வேண்டும்.
புத்தகப்பார்வை:
தேடியிருக்கும் தருணங்கள்… 17 ஆண்டுகளுக்குப் பின்னர் இளஞ்செழியன் முனைவர் ரெ. கார்த்திகேசு மலேசியத் தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான எழுத்தாளர். 1960களிலிருந்து மலேசிய இலக்கிய உலகில் தடம் பதித்து வருகிறார்; ஐந்து புதினங்களை எழுதியுள்ளார். நான் இடைநிலைப்பள்ளி மாணவனாக இருந்த போதே அவர்பற்றி என் தாயார் சொல்லக் கேள்விப் பட்டிருந்தேன். இருந்தும் ஏனோ அவர் எழுதிய எந்தவொரு புதினத்தையும் இதுநாள் வரை வாசித்திருக்கவில்லை.
இந்நிலை நேற்றோடு ஒரு முடிவுக்கு வந்தது.
சிறுகதை:
புலவர் வேந்தர்கோனின் வரலாறிலிருந்து பிரிக்க இயலாத இன்னும் சில பக்கங்கள்
கோ. புண்ணியவான் மண்டபத்தில் போடப்பட்ட நாற்காலிகள் பல பிட்டச்சூடு பாக்கியம் பெறாமலேயே கிடந்தன. டத்தோசிரிக்காக புலவர் தயார் செய்து வைத்திருந்த ஆளுயர மாலை அவர் வரவில்லை யெனவானால், உள்ளூர் டத்தோவுக்கு ஆகும் என ஆறுதல் அடைந்திருந்தார். கூட்டம் எதிர்ப்பார்த்தபடி இல்லை.
சிறுகதை:
அழைப்பு
சு. யுவராஜன் வீடு மற்றும் கார் கடன் கட்டி இரண்டு மாதமாகிவிட்டது. கார் லட்சுமியின் பேரில் இருப்பதால் வங்கியிலிருந்து அழைத் திருக்கிறார்கள். இம்முறை காரைப் பறிமுதல் செய்யப் போவதாக மிரட்டும் தொனியில் பேசியிருக்கிறார்கள். 'மூனு வருஷத்தில எப்பவாது லேட்டா கட்டியி ருப்பமா? மனுஷ னங்களுக்கு மரியாதயே இல்ல' சொல்லி முடிக்கும்போது லட்சுமியின் குரல் தழுதழுத் திருந்தது.
தொடர்: எனது நங்கூரங்கள் ...8 | விபச்சாரத்தின் அழகும் சிவப்பு இளைய அப்துல்லாஹ் இங்கு லண்டனில் எனக்குத் தெரிந்த பெண்மணி தனது கறுப்பு தோலை வெள்ளையாக்க ஒரு கடைக்கு போய் அளவுக்கு அதிகமாக பிளீச்சிங் பண்ணி முகம் இப்பொழுது உலகத்தில் இல்லாத ஒரு கலருக்கு வந்துவிட்டது. பிறவுணும் வெள்ளையும் கறுப்பும் கலந்த ஒரு கலர். புருஷனுக்கு அந்தக் கலர் பிடிக்கவில்லை. தினமும் வீட்டில் மனிசியைக் காணும் போதேல்லாம் சண்டைதான்.
தொடர்: நடந்து வந்த பாதையில் ...3 கமலாதேவி அரவிந்தன் வகுப்பில் மாணவர்களை
அதட்டுவதும், எல்லாரையும் நாட்டாமை செய்தும், ரவீந்திரன் சாரோடு
உரிமையோடும் பழகி, வகுப்பையே கலகலக்க வைக்கும் பசுபதி, சராசரி
மாணவரல்ல. பசுபதியின் தீட்சண்யம் திகைக்க வைத்தது. பசுபதியின்
தமிழ்தான் இடறியதே தவிர, பசுபதி, பசுபதி தான்.