இதழ் 16
ஏப்ரல் 2010
  "உண்மை என்னவெனில் - 95 சதவிகித எழுத்தாளர்கள் எழுதுவதை வெறுப்பவர்கள்!"
சீ. முத்துசாமி
 
 
 
  சிறப்புப்பகுதி:

ம‌லேசியா - சிங்கை 2010

ம‌. ந‌வீன்

சர்ச்சை: இலக்கியச் சுரண்டல்

பத்தி:

காப்புரிமை (Copyright) - அறியாமையில் இந்தியர்கள்

அகிலன்

இயற்கை (1) - கோடை
எம். ரிஷான் ஷெரீப்

அகிரா குரோசவாவின் 'இகிரு': வாழ்வதின் பிரியம்
சு. யுவராஜன்

பிக்காசோவும் சரஸ்வதி அக்காவும்!
சந்துரு

உண்மை என்னவெனில் - 95 சதவிகித எழுத்தாளர்கள் எழுதுவதை வெறுப்பவர்கள்!
சீ. முத்துசாமி

கட்டுரை:

சொற்களில் சிக்கித் தவித்த காலமும் இலக்கியமும்
யதீந்திரா

தெலுங்கானா - காங்கிரஸின் கோரத்தாண்டவம்
நெடுவை தவத்திருமணி

சிறுகதை:

சிறகு
சு. யுவராஜன்


ஓரங்க நாடகம்
ஸ்ரீரஞ்சனி

சுவீர்
கிரகம்

தொடர்:


எனது நங்கூரங்கள் ...9
இளைய அப்துல்லாஹ்

நடந்து வந்த பாதையில் ...3
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

செம்புழுதி மழைச்சாரலில் கரைந்துருகும் காலம் ...10
சீ. முத்துசாமி

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...6

ஏ. தேவராஜன்

றியாஸ் குரானா

இரா. சரவண தீர்த்தா

செல்வராஜ் ஜெகதீசன்

தர்மினி

ரேணுகா

திரைவிமர்சனம்:


அங்காடித் தெரு : மீந்திருக்கும் வாழ்வு
ம‌. ந‌வீன்

இதழ் அறிமுகம்:


எதிர் (www.ethir.org)

எதிர்வினை:


சு. யுவராஜனின் ‘அழைப்பு’
க. ராஜம்ரஞ்சனி
     
     
 

சமீபத்தில் படிக்க நேர்ந்த ஒரு பேட்டி (நன்றி: தி ஸ்டார்) சில நாட்கள் கூடவே தொடர்ந்து வந்து உள்ளே ஏதோ தொந்தரவு செய்த வண்ணம் இருந்தது.

எழுத்து சார்ந்த இத்தகைய மன அவசம் ஒருவகை பயத்தை உள்ளே படரவிட, எழுத்து என்பது ஒருவகை சந்தோஷ விருப்ப நிகழ்வு என்பதான எனது தனிப்பட்ட நீண்டநாள் கற்பனை கலையத் தொடங்கி விட்டிருந்தது.

அதிலும் குறிப்பாக நமது மலேசிய தமிழ் நவீன எதிர்மறை இலக்கியச் சூழலில், எழுத்தை ஒரு passion ஆக கொள்ள இயலாத எவரும், அதனை ஒரு தொடர் ஓட்டமாக நிகழ்த்துவது என்பது சாத்தியமற்ற செயல் என்பதை பல சமகால எழுத்தாளர்களின் செயல்பாடுகள் உணர்த்தியுள்ள நிலையில் இந்த மனநிலை கூடுதல் முக்கியத்துவம் பெறுவதை தவிர்க்க இயலவில்லை.

இந்த மனநிலை குறித்த சில கேள்விகளை முன்னிறுத்தி விடை தேட உதவிய அம்சங்கள் அந்தப் பேட்டியில் இருந்தது என்பது உண்மையே.

இது குறித்தெல்லாம் ஏற்கெனவே பலரும் கருத்துக்களைப் பகிர்ந்துள்ள வேளையில் அப்படி என்ன இந்தப் பேட்டியில் விஷேசம் என்கிற கேள்வி எழலாம்.

ஒன்று இக்கருத்துகளுக்குச் சொந்தக்காரரின் ‘முகவரி’. மற்றது அக்கருத்துக்களில் உள்ளோட்டமாய் உணர முடிந்த அசலான தீர்க்கமும் தெளிவும் நேர்மையும்.

1962ல் பம்பாயிலுள்ள ஒரு பார்ஸி குடும்பத்தில் பிறந்து டேராடூனில் உள்ள பிரசித்தி பெற்ற டூன் (Doon) பள்ளியில் தனது தொடக்கக் கால கல்வியை முடித்து, அதன் பின் இங்கிலாந்திலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழி பட்டப்படிப்பை முடித்த அர்டாசில் வகில் (Ardashir Vakil) என்கிற இந்த எழுத்தாளரின் எழுத்துப் பயணம் தொடங்கியது 1995ல்.

அதுதான் Beach Boy என்கிற அவரது முதல் நாவல். ஓர் இளம் எழுத்தாளர்கள் குழுவில் அங்கத்தினராக இருந்த தருணத்தில், அவர்கள் தங்களுக்குள் படைப்புகளைப் பரிவர்த்தனை செய்து கொள்ளும் வழக்கம் கொண்டிருந்திருக்கிறார்கள். அதன் நீட்சியாக அவர்கள் 1995-ல் தங்களது அத்தகைய படைப்புகளை ஒரு சிறுகதைத் தொகுப்பாக வெளிக் கொணர அதனைக் காண நேர்ந்த Penguin பதிப்பகத்தாரின் கண்களில் குறிப்பாக அர்டாசிர் வாகிலின் சிறுகதை தனித்துவம் வாய்ந்ததாக தோன்ற அவரிடம் மேலும் விஸ்தாரமான தளத்தில் அமையக் கூடிய ஒரு நாவல் எழுதித் தர கேட்டிருக்கின்றனர்.

அப்படி எழுதப்பட்டு பிரசுரம் கண்டு பாராட்டும் பெற்ற நாவல்தான் இந்த Beach Boy. இப்படியொரு சந்தர்ப்பம் தனக்கு வாய்த்ததற்கான காரணியாக (பெரும்பாலோர் முன் வைக்கக்கூடிய ‘அதிர்ஷ்டம்’ என்பதை) அவர் முன்வைக்கவில்லை என்பதே ஈர்ப்பதானதொரு விஷயமாக எதிர்நின்றது.

அவர் அது குறித்து பேசுமிடத்தில் இப்படிக் கூறுகிறார். "இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்ததற்கு அதிர்ஷ்ட தேவதையின் கடைக்கண் பார்வை என் மேல் விழுந்ததுதான் காரணம் எனச் சொல்ல மாட்டேன். அது நீங்கள் ஒரு தீவிர படைப்பாளியா இல்லையா என்பதைப் பொறுத்தது. ஒரு முறை எனது நாவலை கிரேக்க மொழியில் மொழிபெயர்க்க ஒரு பதிப்பகம் என்னிடம் அனுமதி கேட்டது. அது குறித்து பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு நண்பர் இப்படிக் குறிப்பிட்டார். அப்படியொரு வாய்ப்பு தேடி வந்தது உனது அதிர்ஷ்டம். அதற்கு நான் இப்படி பதில் சொன்னேன். சிலர் சொல்வார்கள் நான் அவர்களுக்கு கொடுத்த இந்த வாய்ப்பு அவர்களது அதிர்ஷ்டம் என்பார்கள்."

இந்த தன்னம்பிக்கை தொனிக்கும் வார்த்தைகளை அவர் முன்வைக்க, ஒரு சிறந்த படைப்பாளி ஆவதற்கான விலை என்ன என்பதை அவர் அனுபவப்பூர்வமாக உணர்ந்து தெளிந்திருந்தமையே காரணம் எனலாம். அவர் தற்சமயம் லண்டன் பல்கலைக்கழகத்தில் ஒரு பேராசிரியராக புனைவு எழுத்து குறித்து போதித்து வருவதும் ஒரு கூடுதல் தன்னம்பிக்கையைத் தந்திருக்கலாம்.

‘மிகத் தெளிவானதொரு கோடு. திறன் உடையவர்கள். அது இல்லாதவர்கள் என்பதை பிரிக்கும் கோடு. வெகு சிலருக்கே அந்தத் திறன் உண்டு.'

மேலும் ஒரு மிக முக்கியச் செய்தியையும் அவர் பதிவு செய்கிறார், 'இன்னொரு திறனும் அவசியம் தேவை. கடுமையாக உழைக்கத் தயாராக இருக்கும் திறன் அது. ஓர் எழுத்தாளனாக நீங்கள் அறியப்படும்போது ஒரு குண்டுமணி அளவான புகழே உங்களை வந்தடையலாம். ஆனால் அதன் பின்னே கடுமையான உங்களின் உழைப்பு இருக்க வேண்டும்.'

வார்த்தைகளும் வாக்கியங்களும் ஒருவகை obsession ஆகவே அவரிடம் காணப்படுகிறது. அது குறித்த அவரது தன்னிலை விளக்கம் இது. நிறைய எழுத்தாளர்கள் வாசகனை விரைந்து பக்கங்களை திருப்ப வைக்கும் திறனுக்காகப் பாராட்டப்படுகிறார்கள். ஆனால், எனக்கு எனது கதைகளை நகர்த்தும் ஒவ்வொரு வார்த்தையும் வாக்கியமும் அதி முக்கியமானவை. மிகுந்த உழைப்போடு பொருத்தப்பாட்டோடு அவற்றை அமைக்க மிகுந்த அக்கறை கொள்வேன். சொற்களின் வாக்கியங்களின் வலிமை குறித்து அதிகமும் சிந்திப்பேன்.

இது எனது படைப்புகளுக்கும் நான் வாசிக்க நேரும் பிறரின் படைப்புகளுக்கும் பொருந்தும். மோசமான எழுத்தை என்னால் தொடர்ந்து வாசிக்க இயலாது. தொடர்ந்து பேசும் அவர் - வாக்கியங்கள் என்பதுதான் ஒரு கதையின் நுண்புள்ளி ஒரு புத்தகம் என்பது வாக்கியம் வாக்கியமாக மதிப்பிடப்பட வேண்டும் என்பேன்.

உதாரணத்திற்கு Raymond Carver அல்லது Haruki Mukarami படைப்புகளைப் பாருங்கள். முதல் பக்கத்தை வாசிக்கும்போதே நீங்கள் சந்தோஷத்தில் மூழ்கிப் போகிறீர்கள். அடுத்த பக்கம் திருப்ப வேண்டும் என்கிற கேள்விக்கே அங்கே இடமில்லை!

எழுத்தில் வெளிப்பட வேண்டிய இத்தகைய தீவிர நோக்கு நிலை குறித்த அர்டாசீரின் அணுகுமுறை நமது இலக்கிய உலகோடு பொருத்திப் பார்த்து சிந்திக்க வேண்டிய கடப்பாடு நமக்குண்டு.

அதிலும் குறிப்பாக நமது இன்றைய இளம் எழுத்தாளர்கள் ஒரு சிலரின் எழுத்தையேனும் நுண்பெருக்கி வட்டத்துள் கொண்டு வந்து உற்று நோக்க, அதில் குறிப்பிட்ட ஓர் எதிர்மறை அம்சம் தூக்கலாகத் தெரிவதை தவிர்க்க இயலவில்லை.

பொருத்தப்பாடு உடைய சொற்களின் தேர்விலும், அதன் கோர்வையான இணைப்பிலும் ஒருவித அவசரத்தனமும் அசிரத்தையும் துல்லிதமாக காணக் கிடைப்பது ஏமாற்றமளிக்கிறது. மிகுந்த நெகிழ்வுத் தன்மையுடன் கூடிய சொற்களின் கட்டமைப்பில் அவை நீர்த்துப்போய், கருத்துக்களை குழப்பியும் மழுங்கடித்தும் வாசகனை துன்புறுத்துகின்றன.

அர்டாசீரின் இத்தகைய எழுத்து குறித்த தீவிர நோக்குநிலை மட்டுமே அதற்கான சிறந்த மருந்தாக அமையும் என்பதால், அத்தகைய நோக்குநிலை நமது இளம் படைப்பாளிகளுக்கு விரைவில் வந்து சேருவது நிச்சயம் அவர்களின் படைப்புலகை மேலும் கூர்மைப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

தன்னுடைய எழுத்துக்கான ஆதர்சங்களாக அர்டாசீர் குறிப்பிடும் எழுத்தாளர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பெறுபவர்களாக J.D.Salinger மற்றும் R.K.Narayan இருக்கிறார்கள். மேலும் Haruki Murakami-இன் The wind-up chronicle - Edward ST.Aubyn படைப்பான Some Hope trilogi-யும் தன்னை மிகவும் கவர்ந்த படைப்புகளாக குறிப்பிடுகிறார்.

அவர் தனது சுய படைப்புகளின் எழுத்து மொழி மேலும் அதன் கூடுதல் நுட்பமான விவரணைகளும் அதன் மேல் அவருக்கிருக்கும் ஆழ்ந்த காதலை வெளிப்படுத்துகின்றன.

அவரது முதல் நாவலான Beach Boy எட்டு வயது நிரம்பிய சைரஸ் ரெடிமணி (Cyrus Readymoney) என்கிற சிறுவனின் அகப்பார்வையின் ஊடே நகர்ந்தபடி- 1970இல் பம்பாய் பெருநகர் வாழ்வில் அச்சிறுவன் எதிர்கொண்ட அனுபவங்களை மிகவும் விரிவாகவும் நுட்பமாகவும் விவரித்துச் செல்கிறது. இந்த நாவல் எட்டு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதோடு- 1997ல் white bread முதல் நாவல் பரிசுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது. Betty trask பரிசை வென்றது. அவரது இரண்டாவது நாவலான One Day 2003இல் பிரசுரம் கண்டு Encore Award இறுதிச் சுற்றுக்கு தேர்வு பெற்றது.

எழுதுவது என்கிற செயல்பாடு குறித்தும் அவர் வித்தியாசமான எண்ணத்தை முன்மொழிகிறார். பலரும் எழுதுவது என்கிற மனித செயல்பாடு குறித்து ஒரு ரொமான்டிக் கற்பனையை வகுத்து வைத்துள்ளனர். எழுதுபவர்கள் எப்போதும் சுகமான ஓரிடத்தில் அமர்ந்து தங்களது கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு வார்த்தைகளை கொட்டுகின்றனர் என்பது போல.

உண்மையைச் சொல்வதானால் 95 சதவிகித எழுத்தாளர்கள் ‘எழுதுவதை’ வெறுப்பவர்கள்தான். அதனை எங்கேனும் ஒரு அறையில் தன்னை வலிந்து திணித்துக் கொண்டு, இடையூறுகள் ஏதுமற்ற சூழலில் எழுதுவதே இயல்பானதொன்று. அடிப்படையில் அது ஒரு வேலை. நீங்கள் மீண்டும் மீண்டும் உங்களது மேசைக்குத் திரும்பி உட்கார்ந்து எழுதத் தொடங்க வேண்டும்.

இதில் சவால் என்னவெனில் உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு கட்டொழுங்கு தேவை. நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்ல உங்களுக்கு முதலாளி என்று எவருமில்லை.

பொதுவாகவே, அனைவரிடமும் பிறரோடு பகிர்ந்து கொள்ள ஏதேனும் இருந்தபடிதான் உள்ளது என்பது எனது நம்பிக்கை. அதைத்தான் ஒரு புனைவாக்க ஆசிரியனாக நான் போதித்தும் வருகிறேன். எழுத விரும்புபவர்கள் யாவரும் ஏதேனும் ஒன்றை எழுதலாம்.

சமீபத்தில் கோலாலம்பூரில் நடந்த புனைவெழுத்து பட்டறை ஒன்றுக்கு பயிற்சியளிக்க வருகை புரிந்திருந்த அர்டாசிர் அவர்கள் - நமது மலேசிய இலக்கியம் குறித்தான தனது எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

உங்களிடம் ஒரு கவர்ச்சியான தனித்துவமிக்க கலாச்சார கலவையும் வரலாறும் நிலக்காட்சியும் உண்டு. Tash Aw எழுதிய The Harmony Silk factory நாவலை வாசித்தபோது அதை அனுபவபூர்வமாக உணர்ந்தேன். உங்கள் நாட்டை உலகுக்கு எடுத்துக் காட்ட நிறைய உண்டு. அவர் போன்றதொரு எழுத்தாளர் பிற எழுத்தாளர்கள் அதனைச் செய்ய ஊக்கம் அளிக்கலாம்.


Ardashir Vakil-லின் The Star (மலேசிய ஆங்கில நாளேடு) கட்டுரைக்கான சுட்டி:
http://thestar.com.my/lifestyle/story.asp?file=/2010/2/26/lifebookshelf/5549884&sec=lifebookshelf

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768