|
ஒடுக்கப்படும் மக்களை வைத்துக் காசு சம்பாதித்தலும் அரசியல்
இலாபமடைவதுமாகச் சுயநலம் முத்திப்போய்க் கிடக்கும் காலத்தில் வாழ்கின்றோம்.
நசுக்கப்படுபவர்களின் எதிர்ப்புக் குரல்களை வடிவமைக்கவும் வெளிக் கொண்டு
வரவும் முயற்சிக்கும் யாராக இருப்பினும் அவர்களின் பக்கம் எம் ஆதரவு
என்றும் நிற்கும்.
விளிம்பு மனிதர்களுக்காகவென்று படங்காட்டும் பலரும், தத்தம் அரசியலை
வெளிச்சப்படுத்தி அதிகாரத்தில் ஒட்டுண்ணியாகி உறிஞ்சக்கூடியதை
உறிஞ்சுகின்றார்கள். எதிர்ப்பை முன்னிலையில் வைத்தே நாம் இணைவோம் பிரிவோம்.
‘தமது தேவைகளுக்காகவே மட்டும்’ இயங்கும் ஊடகவியலில், எதிர்ப்பாளர்களை
ஒருங்கிணைத்து எதிர்க்குரலை ஓங்கி வளர்ப்பதே நம் நோக்கம்.
எவ்விதமான ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகக் குரல் கொடுப்போம்.
அனைத்து ஏற்றத்தாழ்வுகளுக்கும் எதிராக ஒன்றுபடுவோம்.
மனிதவுரிமை – தொழிற்சங்கம் – சார்ந்து இயங்கும் அனைவரையும் பங்களிக்கும்
படி வேண்டுகின்றோம்.
குறிப்பாக இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் முதலான நாடுகளிலிருந்து
பங்களிப்புகளை வரவேற்கின்றோம்.
ஆசிரியர்கள்
editor@ethir.org
www.ethir.org
|
|