இதழ் 16
ஏப்ரல் 2010
  கவிதை : வீட்டில் உருவாகும் மழை
ஏ. தேவராஜன்
 
 
 
  சிறப்புப்பகுதி:

ம‌லேசியா - சிங்கை 2010

ம‌. ந‌வீன்

சர்ச்சை: இலக்கியச் சுரண்டல்

பத்தி:

காப்புரிமை (Copyright) - அறியாமையில் இந்தியர்கள்

அகிலன்

இயற்கை (1) - கோடை
எம். ரிஷான் ஷெரீப்

அகிரா குரோசவாவின் 'இகிரு': வாழ்வதின் பிரியம்
சு. யுவராஜன்

பிக்காசோவும் சரஸ்வதி அக்காவும்!
சந்துரு

உண்மை என்னவெனில் - 95 சதவிகித எழுத்தாளர்கள் எழுதுவதை வெறுப்பவர்கள்!
சீ. முத்துசாமி

கட்டுரை:

சொற்களில் சிக்கித் தவித்த காலமும் இலக்கியமும்
யதீந்திரா

தெலுங்கானா - காங்கிரஸின் கோரத்தாண்டவம்
நெடுவை தவத்திருமணி

சிறுகதை:

சிறகு
சு. யுவராஜன்


ஓரங்க நாடகம்
ஸ்ரீரஞ்சனி

சுவீர்
கிரகம்

தொடர்:


எனது நங்கூரங்கள் ...9
இளைய அப்துல்லாஹ்

நடந்து வந்த பாதையில் ...3
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

செம்புழுதி மழைச்சாரலில் கரைந்துருகும் காலம் ...10
சீ. முத்துசாமி

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...6

ஏ. தேவராஜன்

றியாஸ் குரானா

இரா. சரவண தீர்த்தா

செல்வராஜ் ஜெகதீசன்

தர்மினி

ரேணுகா

திரைவிமர்சனம்:


அங்காடித் தெரு : மீந்திருக்கும் வாழ்வு
ம‌. ந‌வீன்

இதழ் அறிமுகம்:


எதிர் (www.ethir.org)

எதிர்வினை:


சு. யுவராஜனின் ‘அழைப்பு’
க. ராஜம்ரஞ்சனி
     
     
 

அடைமழையில்
சுற்றிய வளாகங்கள்
தங்களை ஒப்புக்கொடுத்தபடி
கொஞ்சமும் நீர் தீண்டாப்
பேணலில்
அந்த வாகனத்துக்குள்ளே
ஒரு குடும்பம்
அடைபட்டுக் கிடந்தது

கண்ணாடிக்குப் புறத்தே
வழிந்தாடும் நீரின்
ஒரு துளியை
அல்லது ஒரேயொரு குமிழியை
உடைத்துவிடும் ஆவலில்
உள்ளிருந்தே வசப்படுத்த முயன்றனர்
குழந்தைகள்

கண்ணாடித் துடைப்பான்கள்
நீரின் கன்னங்களை
வெளுத்துக்கொண்டிருந்தன

வளசையில்
பற்றியிருந்த கரங்களில்
முளைத்த கண்களில்
மழை பற்றிய கோபம்
உச்சமடைந்திருந்தது

நடைதளத்தில்
இன்று மழைக்கான நாளென
எல்லோரும் பின்வாங்கினர்

யாருடைய ஆசைகளும்
நிறைவேறாத
இந்த மாலைப் பொழுதைச் சுமந்த வண்ணம்
வீடடைந்தனர்

உக்கடை தானியக்கி
தானாகத் திறந்துகொள்ள
வாகனம் உள் வாசலில் நின்றது

குளிக்கச் சொல்லி
பிள்ளைகள்
துரிதப்படுத்தப்பட்டனர்

துளிகள் தீண்டாச்
சோகத்தோடு குளியலறையின்
மேற்குழாய்க்கு அடியில்
கண்கள் மூட
தண்ணீர்ப் பூக்கள் உதிர
பிள்ளைகள் இருவரும்
சிரிக்கின்றனர்

"மழையில
நனையிற மாதிரி இருக்குல்லே!"

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768