இதழ் 16 ஏப்ரல் 2010 |
கவிதை : திருட்டுக்குப்பின்னுள்ள அரசியல்
றியாஸ் குரானா |
||||||||||
|
|||||||||||
பெரும் பதற்றத்தோடு அந்த வீட்டுக்குள் நுழைகிறான். எல்லோரும் உறங்கியிருப்பார்கள் என்ற கருத்தை உண்மையாக்கியபிறகே அந்த வீட்டுக்குள் நுழைய வேண்டியிருந்திருக்கும். சிலர் விழித்திருக்கவோ அல்லது அரைத்தூக்க மயக்கத்தில் புரண்டுகொண்டிருக்கவோகூடும் ஆயினும், எல்லோரும் உறக்கம் என எடுத்துக்கொள்ளவே விரும்பியிருக்கலாம். ஒவ்வொரு அறையாக கடந்துசெல்கிறான். அவனுடைய காலடிச்சத்தங்கள் அந்த வீட்டிலுள்ள மின்விசிறியின் ஒலிகளால் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஆடைகள் சரிசெய்யாத உறக்கத்தில் கிடக்கும் ஒரு இளம்பெண்ணை நின்று ரசித்துக்கொண்டிருக்கிறான். முலைகள் மின்விசிறியின் காற்றைக் குடித்துக் கொண்டிருக்கின்றன. தொடைகளுக்கு நடுவே அவளுடைய கைகள் செத்துக்கிடக்கின்றன. கடும் அவசரத்துடனும், பெரும் பரபரப்புடனும்; காற்றில் துடிக்கும் அவளுடைய தலைமுடியை ஒப்பிட்டுப்பார்க்கலாம். மறுதிசையில் புரண்டுபடுக்கிறாள். அடுத்த அறைக்குள் நுழைகிறான். வந்தவேலைமுடிந்துவிட்டது.திருடிய பொருட்களோடு வீடுவந்துவிட்டான். அவனுடைய திருட்டின் அழகியல்பற்றி ஒரு சம்பாசனை ஆரம்பித்தது. மது அருந்தப்பட்டது. நண்பர்கள் எல்லோரும் பேசிக்கொண்டிருந்தனர். அந்த நிறைவெறியில் எழுந்துநின்றான். அந்த வீட்டில் திருடிய தனது எஜமானியின் மார்புக்கச்சையை ஒருமுறை அணிந்துகொண்டான் அந்த அடிமை. அதற்குள் கைகளை அனுப்பி துளாவிவிட்டு மீண்டும் மதுவை அருந்தத்தொடங்கினான். |
|||||||||||
உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் |
|||||||||||
வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine
For Arts And Literature |