இதழ் 16
ஏப்ரல் 2010
  எனது நங்கூரங்கள் ...9 : சிலோன்காரரின் லண்டன் வாழ்வு
இளைய அப்துல்லாஹ்
 
 
 
  சிறப்புப்பகுதி:

ம‌லேசியா - சிங்கை 2010

ம‌. ந‌வீன்

சர்ச்சை: இலக்கியச் சுரண்டல்

பத்தி:

காப்புரிமை (Copyright) - அறியாமையில் இந்தியர்கள்

அகிலன்

இயற்கை (1) - கோடை
எம். ரிஷான் ஷெரீப்

அகிரா குரோசவாவின் 'இகிரு': வாழ்வதின் பிரியம்
சு. யுவராஜன்

பிக்காசோவும் சரஸ்வதி அக்காவும்!
சந்துரு

உண்மை என்னவெனில் - 95 சதவிகித எழுத்தாளர்கள் எழுதுவதை வெறுப்பவர்கள்!
சீ. முத்துசாமி

கட்டுரை:

சொற்களில் சிக்கித் தவித்த காலமும் இலக்கியமும்
யதீந்திரா

தெலுங்கானா - காங்கிரஸின் கோரத்தாண்டவம்
நெடுவை தவத்திருமணி

சிறுகதை:

சிறகு
சு. யுவராஜன்


ஓரங்க நாடகம்
ஸ்ரீரஞ்சனி

சுவீர்
கிரகம்

தொடர்:


எனது நங்கூரங்கள் ...9
இளைய அப்துல்லாஹ்

நடந்து வந்த பாதையில் ...3
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

செம்புழுதி மழைச்சாரலில் கரைந்துருகும் காலம் ...10
சீ. முத்துசாமி

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...6

ஏ. தேவராஜன்

றியாஸ் குரானா

இரா. சரவண தீர்த்தா

செல்வராஜ் ஜெகதீசன்

தர்மினி

ரேணுகா

திரைவிமர்சனம்:


அங்காடித் தெரு : மீந்திருக்கும் வாழ்வு
ம‌. ந‌வீன்

இதழ் அறிமுகம்:


எதிர் (www.ethir.org)

எதிர்வினை:


சு. யுவராஜனின் ‘அழைப்பு’
க. ராஜம்ரஞ்சனி
     
     
 

லண்டனில் தமிழர்கள் தங்கள் இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ள படாத பாடு பட வேண்டியிருக்கிறது. எல்லாவகையிலும் தாங்கள் பிரிட்டிஷ் பிரஜையா? இலங்கைப் பிரஜையா? என்ற அடையாளத்தை பெற முடியாமல் தடுமாற வேண்டியிருக்கிறது.

ஞாயிற்றுக்கிழமை அவசர அவரசரமாக எனது கிறிஸ்தவ நண்பன் ஒருவன் தேவாலயத்துக்கு ஓடிக் கொண்டிருந்தான். “என்ன விசயம்? ஏன் இவ்வளவு அவசரமா சேர்ச்சுக்கு ஓடுகிறாய்” என்று கேட்டால் “தேவாலயத்தில் பாதரின் கண்ணில் பட வேண்டும் அதற்காகத் தான்” என்கிறான். சேர்ச்சில் பாதரின் கண்களில் ஞாயிற்றுக்கிழமை பூசையின் போது பட்டால்தான் அவர் ஒரு கிறிஸ்தவன் என்று பாதர் சேட்டிபிக்கட் கொடுப்பார்.

கிரமமாக தேவாலயத்துக்குப் போனால் தான் கிறிஸ்துவனக்குரிய சலுகைகள் இங்கு லண்டனில் கிடைக்கும்.

இப்பொழுதுதான் கலியாணம் அதற்கு பிறகு பிள்ளையை பாடசாலையில் சேர்ப்பது போன்ற விடயங்கள் இலகுவாகும்.

தேவாலயத்துக்குப் போனால் மட்டும் போதாது. பூசை முடிந்து பாதரிடம் கட்டாயம் கடைசியில் ஒரு வார்த்தை பேசிவிட்டுவர வேண்டும்.

அப்பொழுதுதான் கத்தோலிக்க பாடசாலையில் சேர்வதற்கு பிள்ளைக்கு சிபாரிசு கடிதம் கொடுப்பார் பாதர். தேவாலய பாதரின் சேட்டிபிகட் இல்லாமல் அவரது சீல் இல்லாமல் கையெழுத்து இல்லாமல் கத்தோலிக்க பாடசாலைகள் பிள்ளைகளை சேர்க்க மாட்டா. எனவேதான் பிள்ளைகளுக்காகவும் தங்களது கத்தோலிக்க அடையாளத்தை உறுதிப்படுத்தவும் ஞாயிற்றுக்கிழமை சேர்ச்சுக்கு போக வேண்டிய கட்டாயத்துக்காக போடும் பல சிலோன் தமிழர்களை இங்கு லண்டனில் கண்டு கொண்டிருக்கிறேன் நான்.

கலியாணம் என்று வரும் பொழுதும் இந்த தேவாலயத்துடனான தொடர்பு மிக அதிகமாக பார்க்கப்படுகிறது. தேவாலயத்துடன் தொடர்பு பட்டிருந்தால் தான் இங்கு கலியாணம் முடித்து வைக்க பாதர் கடிதம் கொடுப்பார்.

இங்குள்ள ஒருவர் திருமணம் முடிக்க கிறிஸ்தவராக இருந்தால் சிலோனில் உள்ள அவரது சேர்ச்சுக்கும் இங்குள்ள சேர்ச்சுக்கும் தொடர்புள்ளவராக இருந்தால் தான் பாதர் அனுமதி வழங்குவார்.

லண்டனிலுள்ள பாதர் சிலோனில் உள்ள அவர்களது பாதருக்கு கடிதம் மூலமோ தொலைபேசி மூலமோ தொடர்பு ஏற்படுத்தி மணமகனோ மணமகளோ முதலில் திருமணம் முடிக்காத கன்னியானவர்கள் என்று உறுதிப்படுத்துவார்கள். ஆகவே தான் இங்குள்ள தமிழர்கள் இரண்டு தேவாலயங்களோடும் உறவை பேண வேண்டிய தேவையுள்ளவர்களாக இருக்கின்றனர்.

அகதிகளாக வாழ்பவர்களுக்கும் இதுதான் நடைமுறை. சிலோன் பாஸ்போட்டில் இருப்பவர்களுக்கும் இதுதான் நடைமுறை. அதனால்தான் என்ன வேலை வெட்டி இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமை என்றவுடன் விழுந்தடித்துக் கொண்டு சேர்ச்சுக்கு ஓடிப் போகிறார்கள் கத்தோலிக்க அன்பர்கள்.

போன வாரம் எங்கள் வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் சிங்கள பெண்மணி ஒருவர் வந்திருந்தார்.

வந்த நேரத்தில் இருந்து அழுது கொண்டிருந்தார். ஏன் என்ன பிரச்சனை என்று கேட்டால் சிலோனின் கேகாலையில் இருந்த தனது தகப்பன் செத்து விட்டார். தன்னால் போக முடியவில்லையே என்று விம்மினார். லண்டனில் இருந்து செத்த வீட்டுக்கெல்லாம் உடனடியாக போக முடியாது. அவளுக்கு வீட்டில் நான்கு பேர். புருஷன், இரண்டு பிள்ளைகள், அவ. போகிற தென்றால் நான்கு பேரையும் கூட்டிக் கொண்டு போக விமான டிக்கெட்டுக்கு 3200 பவுன் வேணும்.

ஊருக்கு போனால் சிலவு. குறைந்தது 4000 பவுன் வேணும். எப்படி 4000 பவுணை செலவு செய்வது யார் தருவார். யாரிடம் கடன் வாங்குவது. அப்படி கடன் வாங்கினாலும் பின்னர் சிலோனில் இருந்து வந்து எப்படி கடனை எந்த வழியில் கட்டுவது என்று மனம் கலங்கிப் போய் அழுது கொண்டிருந்தார். அதோடு இன்னொரு விசயத்தையும் சொன்னார்.

தகப்பனின் செத்த வீட்டை வெப் கமரா மூலம் “ஸ்கைப்”இல் பார்த்ததாக குறிப்பிட்டார். எப்பிடி இருக்கிறது நிலமை பாருங்கள். கேகாலையில் நடந்த செத்த வீட்டை லண்டனில் இருந்து கொண்டு வெப் கமராவில் கொம்யூட்டரில் பார்க்க வேண்டிய நிலமை அவளுக்கு. இன்னும் எத்தனை பேர் இப்பிடி இருக்கிறார்கள் தெரியுமா?

பத்து வருடம் இருபது வருடம் என்று எந்த விசாவும் இல்லாமல் அல்லாடிக் கொண்டிருக்கும் தமிழர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்.

ஐந்து வருடம் அகதிகளுக்கு விசா கொடுக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் சிலோனுக்கு போக முடியாதவர்களாக இருக்கின்றனர். சிலோனுக்கு போனால் விசா பழுதாகிவிடும். சிலோனில் உயிர் பயம் என்றுதான் விசா வாங்குகிறார்கள்.

எனக்குத் தெரிந்த பிரபல்யமான ஊடகவியலாளர் ஒருவரை சந்தித்தேன். மனைவி குழந்தைகளோடு மிக நன்றாக கொழும்பில் வாழ்ந்தவர். இங்கு வந்து அகதியாக பதிந்து விட்டு அல்லோலகல்லோலப்படுகிறார். முதல் முறை அரசியல் அந்தஸ்துக்கு லண்டனில் கோரிக்கை விட அவருக்கு அகதி கோருதலுக்கான ஆதாரம் போதாது என்று ரிஜக்ட் பண்ணி விட்டார்கள். இப்பொழுது அப்பீலுக்கு போட்டுவிட்டு காத்திருக்கிறார். இது அண்மையில் நடக்கும் சங்கதிகள்.

இப்பொழுதுதான் யுத்தம் சிலோனில் இல்லையே என்று அரசாங்க அகதி கேஸ் வேக்கர்கள் மிகத் தெளிவாக சொல்கின்றனர்.

தினமும் இலங்கை பிரித்தனியா, அமெரிக்க தூதரகங்கள் தங்கள் நாடுகளுக்கு அறிக்கை அனுப்பிக் கொண்டிருக்கின்றன. அந்த அறிக்கைகளை வைத்துக் கொண்டு அந்தந்த நாடுகள் முடிவுகளை எடுத்துக் கொண்டிருக்கின்றன. அதற்கு அப்பால் அகதிகளால் ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கிறது.

ஒரு கல்யாணவீட்டுக்கு போய் இருந்தேன். பெரும் பணக்காரர், யாழ்ப்பாணத் தமிழர். ஆனால் கல்யாணத்தை மிக எளிதாக நடத்தியிருந்தார். அவர் என்னோடு மனம் விட்டுப் பேசினார். உண்மையில் பிள்ளைகள் எங்களது சொல்லைக் கேட்கிறார்களில்லை என்பது அவரது பெருங்கவலை. அவரின் மகள் கலியாணத்துக்கு முன்பே தான் காதலித்த பெடியனோடு உடலுறவு கொண்டு வயித்தில் பிள்ளை உருவாகிவிட்டது. "அந்தப் பிள்ளையை அழித்து விடு" என்று தகப்பன் சொல்லியிருக்கிறார். ஆனால் மகள் மாட்டேன் என்று அடம் பிடித்து விட்டாள்.

சரி என்று அரை மனதோடு அவள் காதலித்த பெடியனுக்கே கலியாணம் செய்து வைக்க ஒப்புக் கொண்டார். ஆனால் தான் பாசம் வைத்த பிள்ளை தன்னைக் கேட்காமல் இந்தியாக்காரன் ஒருவனை பிடித்து வந்து விட்டாளே என்ற பெருங்கவலை அவருக்கு.

அவருக்கு இருக்கும் பணத்துக்கு ஊரைக் கூட்டி கலியாணத்தை ஒரு பெருந்திருவிழாவாக செய்திருக்கலாம்.

ஆனால் பிள்ளைகள் சொல்லுக் கேட்காமல் விட்டால் என்ன செய்வது? மாப்பிள்ளை பார்க்கவில்லை. பொம்பிளை பார்க்கவில்லை. காதல், கர்ப்பம், கலியாணம் என்று போய்விட்டது.

பிறகு கலியாணத்தின் பிறகு விசாரித்தால் மாப்பிள்ளைக்கு ஒரு வேலையுமில்லை. வேலை செய்யும் நோக்கமுமில்லை.

மிகவும் சோம்பேறித்தனமான ஒரு பெடியனை பெட்டை பிடித்து விட்டாள் என்று தெரிந்தது. அவரின் அந்தஸ்துக்கு பங்கம் வந்துவிட அவர் நோயில் விழுந்தார்.

இப்பொழுது பெண் பிள்ளையின் தாயுக்கும் தகப்பனுக்கும் சண்டை. தாய் தன்னிடம் ஒன்றும் சொல்லவில்லை, என்று தகப்பன் சொல்கிறார்.

“சொல்வதற்கு நீங்கள் எப்பொழுது கேட்டீர்கள்?” என்று தாய் ஏசுகிறா. தகப்பன், தாய், பிள்ளைகளுக்கிடையான அன்போ, புரிந்துணர்வோ இல்லை. வெறுமனே காசு, காசு என்று அலைந்து பாசத்தை தொலைத்து விட்டு தேடுகிறார்கள்.

“இப்பொழுது இருக்கும் மில்லியன் கணக்கான சொத்தில் ஒரு சிறு துளியை மகனுக்கும் வேலை இல்லாத மருமகனுக்கும் கொடுங்கள்!” என்று தாய் தகப்பனை நெருக்குகிறா.

ஆனால் தன் சொல்லைக் கேட்காத பெண் பிள்ளை எக்கேடு கெட்டும் போகட்டும் என்று தகப்பன் அடம் பிடிக்கிறார். தாய்க்கும் தகப்பனுக்கும் சண்டை முற்றி விட்டது.

இவ்வளவு காலமும் சண்டையாகத்தான் இருந்தது. இப்பொழுது முற்றிப் போய் விட சரி என்னை டிவோஸ் பண்ணுங்கள். நான் வேறையாக போகிறேன் என்று பெண்ணின் தாய் தந்தையோடு அடம் பிடிக்கிறா.

ஏற்கெனவே பிரச்சனையாகி டிவோஸ் வரைக்கும் போன உறவை ஊர் சிரிக்கும் என்பதற்காக ஒட்ட வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் மகளின் பிரச்சனை இப்பொழுது தாய் தந்தை டிவோஸ் வரைக்கும் போய் விட்டது. இனி ஒட்ட முடியாமல் இருக்கிறது.

குடும்பம் விழி பிதுங்கிப் போய் இருக்கிறது. மில்லியனராக வாழ்ந்து என்ன பிரயோசனம். குடும்பத்தில் மன நிம்மதி இல்லாவிடில், ஒவ்வொரு நாளும் நரக வேதனைதான்.

மனைவி யோசிக்கிறா டிவோஸ் பண்ணினால் இங்கு பிரித்தானியாவில் புருஷனின் சொத்தில் அரைவாசி அப்படியே தாலி கட்டிய மனைவிக்கு போக வேண்டும் என்பதுதான் விதி; சட்டம். எனவே அவவுக்கு மில்லியன் கணக்கான சொத்து வந்து சேர்ந்து விடும் அதனில் ஒரு பகுதியை மகனுக்கு கொடுக்கலாம் தானே.

எப்பிடி எல்லாம் எமது குடும்ப முறை அன்பான வாழ்க்கை முறை சிதைந்து போய் விட்டது எமது புலம் பெயர்ந்த வாழ்வில் பாருங்கள்.

எப்படி வீட்டில் மகிழ்ச்சி இருக்கும்? வெறுமனே படாடோப வாழ்க்கை வாழும் மனிதர்கள் ஊர்விட்டு வந்து வெறும் இயந்திரங்கள் போலத் தான் இருக்கின்றனர்.

லண்டனில் அன்றாடம் உழைத்து வாரச்சம்பளம், மாதச்சம்பளம் எடுத்து பெண்சாதியையும் பிள்ளைகளையும் அன்போடு கவனிக்கும் எத்தனையோ குடும்பங்களை நான் லண்டனில் கண்டிருக்கிறேன்.

மனதில் ஆசை. வாழ்வின் மீதான அங்கலாய்ப்பு என்பனதான் மனிதர்களை உலுக்கி எடுக்கின்றன. போதுமென்ற மனம் இல்லாமல் அலைந்து கொண்டு வாழ்வைத் தொலைத்தவர்கள் அதிகம். தொலைத்து கொண்டிருப்பவர்கள் அதிகம்.

இங்கு லண்டனில் பல சிலோன் முஸ்லிம்களின் வீடுகளுக்கு போயிருக்கிறேன். அவர்கள் சிலோனில் வாழ்வது போலவே பெண்களை வேலைக்கு அனுப்பாமல் ஆண்கள் உழைக்க போகிறார்கள். இதில் என்ன வசதி என்றால் பிள்ளைகளை எப்பொழுதும் உம்மா கண்காணித்துக் கொண்டு இருப்பா வீட்டில்.

பெண் பிள்ளைகள் கூட உம்மாவின் கண்காணிப்பில் எப்பொழுதும் இருக்கும். ஆண் பிள்ளைகளும் நன்றாக வளருகிறார்கள்.

பாகிஸ்தான், இந்திய முஸ்லிம்களைவிட சிலோன் முஸ்லிம்கள் இங்கு வாழ்ந்தாலும் ஒரு கட்டுக்கோப்பான வாழ்க்கை வாழ்கிறார்கள். அவர்களின் வீடுகளில் பிரச்சனைகளும் குறைவு.

ஆகவே அம்மா, அப்பாவின் முழு அரவணைப்பில் ஆண் பிள்ளைகளையும் பெண் பிள்ளைகளையும் கலியாணம் முடிக்கும் வரை கொண்டு போக வேண்டும். அன்பால் சாதிக்க முடியும்.

ஆனால் லண்டனில் பல தமிழ் பெற்றோர்கள் இந்த விடயத்தில் தோற்றுத்தான் போய் விடுகிறார்கள். பேராசைதான் காரணம் என்று ஒரு வார்த்தையில் சொல்வேன் நான்.

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768