கடந்த ஓராண்டாக மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம், எழுத்தாளர் முத்து
அவர்களின் உதவியால் காலாண்டு சிறுகதை ஆய்வை நடத்தி வருவது அனைவரும் அறிந்த
ஒன்று. இச்சிறுகதை ஆய்விற்கு நீதிபதியாக இருப்பவர்தான், பேரவை கதைக்கும்
நீதிபதியாக இருக்கிறார் என நினைக்கிறேன். இந்நிலையில், கோ. புண்ணியவான்
எழுதிய சிறுகதை மக்கள் ஓசையில் வெளிவந்தது.
சரி, இரு குழுவிலும் நீதிபதியாக இருக்கிற நடுவருக்குக் கொஞ்சம் கூடவா
கோ.புண்ணியவானின் கதையை வாசித்த ஞாபகம் இல்லாமல் போய்விடும்.
அதுவும் கோ. புண்ணியவான் என்பவர் கோ.முனியாண்டியோ சீ.முத்துசாமியோ அல்ல. 13
முறை பரிசை வென்றவர். கோ. புண்ணியவானின் இந்தக் கதை நிச்சயமாக மலேசிய தமிழ்
எழுத்தாளர் சங்க சிறுகதை ஆய்விற்கு இறுதிச் சுற்றுக்கு வந்திருக்கும்.
அதோடு அல்லாமல் ஆய்வில் பேசப்பட்டிருக்கும்போது அதே நீதிபதி எப்படிப் பேரவை
கதைகளின்போது மறந்தார்?
நீதிபதிகளும் பல்கலைக்கழகமும் அதன் ஆலோசகர்களும் பதில் சொல்லியாக வேண்டும்
இரண்டாவது, எங்கிருந்து ஐயா இவ்வளவு "தமில் புழமை" கொண்டவர்கள் இவ்வளவு
காலம் இருந்தார்கள். அதன் ஆலோசகர்களின் வேலையும் இதில் அடங்கி உள்ளதுதானே?

(கோ. புண்ணியவானின் வெற்றி பெற்ற கதைத்தலைப்பில் (இறந்தவனைப் பற்றிய
வாக்குமூலம்) அச்சுப்பிழை)
அந்த பல்கலைக்கழகத்தில் வேற்று மொழியில் மலாய் அல்லது ஆங்கில புத்தகம்
இப்படிப்பட்ட பிழைகளோடு பல்கலைக்கழகத்தின் சின்னத்தோடு வெளியீடு காண
முடியுமா?
இவ்வளவு பெரிய அறிவுஜீவிகள் அடங்கியுள்ள "பள்களைக்கலகத்தில்" இந்த
நிலைமையா?
|