வல்லினத்திற்கு படைப்புகளை அனுப்பும் எழுத்தாள நண்பர்கள், வேறு இணைய
இதழ்களிலோ அல்லது
அச்சு இதழ்களிலோ ஏற்கனவே பிரசுரமான படைப்புகளை அனுப்ப வேண்டாமென
கேட்டுக்கொள்கிறோம் - ஆசிரியர் குழு
பத்தி: நண்பரின் பரிசு அ. முத்துலிங்கம் இந்த வருட ஆரம்பத்திலிருந்து என் தூக்க அளவை அரைமணி நேரம் நீட்டினேன். பெண்களின் சராசரி தூக்க நேரத்தை ஆண்கள் எப்படியும் இந்த வருடம் முடிவதற்கிடையில் முந்தவேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம். ஆனால் என்னுடைய முயற்சி ஏப்ரல் 21ம் தேதியுடன் நிறுத்தப்பட்டது.
பத்தி: இயற்கை (3) - வனம் எம். ரிஷான் ஷெரீப் வனங்களின் பாடல்களை இரவுகளில் கேட்கலாம். ஏதேதோ பூச்சிகளின் ரீங்கார பிண்ணனி இசையில் அவை இரவுகள் தோறும் பாடுகின்றன. காலம் அழித்துச் செல்லும் தன் இருப்புப்பற்றிய ஏக்கங்கள் நிறைந்ததாக அப்பாடல்கள் இருக்கலாம்.
பத்தி: கிர்கிஸ்தானில் ஒரு கல்யாண பட்டுப்புடவை சீ. முத்துசாமி மேலைநாட்டில் சமீபத்தில் நடந்த ஓர் இலக்கிய ஆய்வில் ஏன் அதிகமான பெண் எழுத்தாளர்கள் நாவல் என்கிற விரிந்த தளத்தை திட்டமிட்டே தவிர்த்து விடுகிறார்கள் என்கிற கருதுகோளை முன்னிறுத்தி விடை தேட முற்பட்டார்கள். பத்தி: செம்மொழி மாநாடும் செம்மறி ஆடுகளும் – கலைஞர் தாத்தாவுக்குக் கண்ணீர் விடாத கடிதம் சு. யுவராஜன் மேலைநாட்டில் சமீபத்தில் நடந்த ஓர் இலக்கிய ஆய்வில் ஏன் அதிகமான பெண் எழுத்தாளர்கள் நாவல் என்கிற விரிந்த தளத்தை திட்டமிட்டே தவிர்த்து விடுகிறார்கள் என்கிற கருதுகோளை முன்னிறுத்தி விடை தேட முற்பட்டார்கள்.
கட்டுரை: கல்விக் கடைகள் - வியாபாரம் ஜோர் நெடுவை தவத்திருமணி தமிழ் நாட்டில் ப்ளஸ் டூ ரிசல்ட் வந்த பிறகு பத்திரிக்கைகளில் கல்லூரிகளின் விளம்பரங்கள் தூள் கிளப்புகின்றன. தனியார் பள்ளிக்கூடங்களின் விளம்பரங்களும் பட்டையைக் கிளப்புகின்றன. பத்திரிக்கைகள் அனைத்தும் விளம்பரத்தாலேயே நிரம்புகின்றன.
கட்டுரை: சர்கீ மிக்கைலோவிச் ஐசென்ஸ்டைன் (Sergei Mikhailovich Eisenstein) சு. காளிதாஸ் ‘கற்றது தமிழ்’ படத்தின் இயக்குநர் ராம் அவர்களின் பேட்டியைப் பார்ப்பதற்கான வாய்ப்பு கிட்டியது. இதுவரை கேட்டிராத கலை மற்றும் சினிமா சம்பந்தமான பல புதிய தகவல்களையும் புரிதலையும் மிக நேர்த்தியாகவும் ஆழமாகவும் அவர் விவாதிக்கக் கண்டேன்.
கட்டுரை: உரிமைதான் புரட்சியின் எல்லை கா. ஆறுமுகம் மூன்று முக்கிய இனங்கள் வாழும் மலேசியாவில், கொள்கை அமைப்புமுறை நிலைத்தன்மை (Stability) என்பதை முதன்மைப்படுத்துகிறது. மலாய்க்காரர், சீனர், இந்தியர்
என்ற வகையில் பிரிவினைக் கொள்கைகளை அமலாக்கம் செய்யும்போது உண்டாகும் முரண்பாடுகளை அமைதிப்படுத்த சட்டங்களை உருவாக்கி அதன்வழி ஓர்
அடக்குமுறை அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
கட்டுரை: ஒரு சிறுகதை ஒரு நாவல் கிரகம் சத்தியக்கட்டு எழுத்தாளர் இமையத்தின் வீடியோ மாரியம்மன் சிறுகதை தொகுப்பிலுள்ள சிறுகதை. சிறுகதையானது 41 பக்கங்கள் கொண்டது. 41 பக்கங்களும் நேர்த்தியானவை. ஏதோ ஒரு தகவலை தருவதாகவே ஒவ்வொரு பக்கங்களும் இருக்கின்றன.
கட்டுரை: சிங்கப்பூரின் தமிழ்க் கவிதைச் சூழல் (90-களுக்குப் பிறகு) முனைவர் எம்.எஸ். ஸ்ரீ லஷ்மி சிங்கப்பூரின் கவிதைச் சூழல் என்னும் இக்கட்டுரை சிங்கப்பூரில் நல்ல கவிதைகள் எழுதப்பட வேண்டும்; கவிதைத்துறை ஆரோக்கியமாக வளர வேண்டும் என்னும் உயர்ந்த நோக்கிலும், விமர்சன நோக்கிலும் எழுதப்படுகிறது.
புத்தகப்பார்வை: மனக்கரையில் "லங்காட் நதிக்கரை" க. ராஜம்ரஞ்சனி மலேசிய மூத்த எழுத்தாளர் அ.ரெங்கசாமியின் ‘லங்காட் நதிக்கரையில்’ தூரத்தில் மலேசிய வரலாற்றில் ஒரு சிறு புள்ளியாக தெரிந்தாலும் அதனுள் உட்புகுந்தபோது நான் சிறுபுள்ளியாகி போனது உண்மை.
சிறுகதை:
குழந்தையின் தாய்
செல்வராஜ் ஜெகதீசன் இந்த டீச்சர் உத்தியோகத்தை ஏத்துண்டு, இன்னியோட பதினஞ்சு வருசமாறது. அதே பாடத்தைத் திருப்பி திருப்பி சொல்லித் தரதுல ஆரம்பத்துல கொஞ்சம் வெறுப்பா கூடத்
தோணித்து. பின் நானே ஒரு மாதிரி சமாளிச்சுண்டேன்.
சிறுகதை:
இரண்டாவது முகம்
ராம்ப்ரசாத் ராகவிக்கு படபடப்பாக இருந்தது. மதன் தன்னிடம் ஏதோ தனியாக பேச வேண்டும் என்பதாகத் தான் தொடர்பு கொண்டிருக்கிறான். நிச்சயம் அதுவாகத்தான் இருக்கும். பயலுக்கு இப்போவாவது தைரியம் வந்ததே.
தொடர்: பல வேடிக்கை மனிதர்கள் போல ...6 ம. நவீன் எந்தக் காலத்திலும் அதிகாரத்தோடு ஒரு சாமானியன் சண்டையிட்டு வெல்ல முடியாது என உறுதியாகிவிட்டது. எனவே நல்ல விலைக்கு என் முதுகு தண்டை விற்பனை செய்யலாம் என முடிவெடுத்துவிட்டேன்.
தொடர்: எனது நங்கூரங்கள் ...11 இளைய அப்துல்லாஹ் எங்கள் வீட்டில் மட்டும் தான் சைக்கிள் இல்லை. அதனை வாங்கித் தர வேண்டும் என்று எங்களது அம்மய்யா யோசிக்கவும் இல்லை. நான் சின்னப்பிள்ளை என்பதனால் சைக்கிள் பற்றி அவர் யோசிக்காமல் இருந்திருக்கலாம்.
தொடர்: நடந்து வந்த பாதையில் ...6 கமலாதேவி அரவிந்தன் மனித மனம் என்பது அங்கு எவ்வளவு பெரிய விஷயம்? அந்தரங்கமும், கிசுகிசுப்பும், ஆழமனக் கொந்தளிப்பும், காமமும், குரோதமும், காதலும் ப்ரேமமும், என மனிதன் அல்லாடிக் கொண்டிருக்க, வாழ்க்கையை, அப்படியே வாழ்க்கையாகத்தானே வடிக்கவேண்டும்?