இதழ் 18 - ஜூன் 2010   கவிதை
ரேணுகா
 
 
 
  நேர்காணல்:

இன்று பெண்ணியம் கொச்சைப் படுத்தப்படுகின்றது!
க. பாக்கியம்

பத்தி:

நண்பரின் பரிசு

அ. முத்துலிங்கம்

இயற்கை (3) - வனம்
எம். ரிஷான் ஷெரீப்

கிர்கிஸ்தானில் ஒரு கல்யாண பட்டுப்புடவை
சீ. முத்துசாமி

செம்மொழி மாநாடும் செம்மறி ஆடுகளும் – கலைஞர் தாத்தாவுக்குக் கண்ணீர் விடாத கடிதம்
சு. யுவராஜன்

கட்டுரை:

கல்விக் கடைகள் - வியாபாரம் ஜோர்
நெடுவை தவத்திருமணி

சர்கீ மிக்கைலோவிச் ஐசென்ஸ்டைன் (Sergei Mikhailovich Eisenstein)
சு. காளிதாஸ்

உரிமைதான் புரட்சியின் எல்லை
கா. ஆறுமுகம்

ஒரு சிறுகதை ஒரு நாவல்
கிரகம்

சிங்கப்பூரின் தமிழ்க் கவிதைச் சூழல் (90-களுக்குப் பிறகு)
முனைவர் எம்.எஸ். ஸ்ரீ லஷ்மி

சிறுகதை:

குழந்தையின் தாய்
செல்வராஜ் ஜெகதீசன்


இரண்டாவது முகம்
ராம்ப்ரசாத்

தொடர்:


ப‌ல வேடிக்கை ம‌னித‌ர்க‌ள் போல‌ ...6
ம‌. ந‌வீன்

எனது நங்கூரங்கள் ...11
இளைய அப்துல்லாஹ்

நடந்து வந்த பாதையில் ...6
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...8

ஏ. தேவராஜன்

தர்மினி

லதா

ம‌. க‌விதா

பூங்குழலி வீரன்

தினேசுவரி

ரேணுகா


புத்தகப்பார்வை:


மனக்கரையில் "லங்காட் நதிக்கரை"
க. ராஜம்ரஞ்சனி

எதிர்வினை:


இது பாடாவதிகளின் காலம்
சு. யுவராஜன்

"இலக்கிய மோசடி" விவாதத்தில் நான்...
மனஹரன்
     
     
 

வீடு திரும்புதல்

ஒவ்வொருமுறையும்
கேட்கத் தவறுவதில்லை நான் நண்பர்களிடத்தில்
அவர்களின் பெருநாள் கொண்டாட்டம் பற்றி
மாற்றி கேட்பேன் சில சமயங்களில்
வீடு திரும்புதலில் அப்படி என்ன விசேசம் என்று

ஒரு மாதிரி பதில்தான் இரண்டிற்கும்
முலைப்பால் குடித்தத் திருப்தி என்பார்கள்

மலாய் நண்பர்கள் 'கம்பங்களை' சிலாகிப்பார்கள்
'தானா மெலாயுவை' எங்களுடன் கூறுபோடுவதில் இருக்கும் சங்கடம்
'கம்பங்கள்' குறித்து அவர்களுக்கில்லை
இன்னும் ஜீவித்திருக்கும் மண்ணில்
நிகழ்ந்திடும் உணர்வுபூர்வமான தலைமுறைகளின் ஒன்றுகூடல்
'பாலேக் கம்போங்' குறித்து
கான்கிரீட் காடுகளிலான வாழ்வு
நித்தமும் நினைவுக்கொள்ளச்செய்கிறது என்பார்கள்

சீன நண்பர்கள் சிறுநகரவாசிகள்
பெருநகரங்களையும் ஒன்றுவிடாமல்
வென்றுவிட்ட / வென்றுகொண்டிருக்கும் களைப்பிற்கு
ஒத்தடமிடும் நிவாரணி என்பார்கள் சிறுநகரங்களை
தேடிக் களைக்க வேண்டியதில்லை
நீண்டிருக்கும் கடைத்தெருக்களில்
காலாற நடப்பதே போதுமானது
சிவப்பிலான கடைகள்தோறும்
பரிட்சயமான மனிதமுகங்கள்தாம்

என்னிடம் கேட்பதில்லை யாரும்
அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை
கேட்பதற்கும் ஒன்றுமில்லைதான்
பொதுவுடமையாளர்கள் நானும் என்னைச்சார்ந்தவர்களும்
நேயமிக்க 'பண்டமாற்று' குடியுரிமைக்காரர்கள்
இந்த நாடு முழுமையும் எங்களுக்குச் சொந்தம்
வேறென்ன வேண்டும்
வாழ்க 'ஒரே மலேசியா'


 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768