இதழ் 18 - ஜூன் 2010   எனது நங்கூரங்கள் ...11
சைக்கிள் சூழலின் தோழன்
இளைய அப்துல்லாஹ்
 
 
 
  நேர்காணல்:

இன்று பெண்ணியம் கொச்சைப் படுத்தப்படுகின்றது!
க. பாக்கியம்

பத்தி:

நண்பரின் பரிசு

அ. முத்துலிங்கம்

இயற்கை (3) - வனம்
எம். ரிஷான் ஷெரீப்

கிர்கிஸ்தானில் ஒரு கல்யாண பட்டுப்புடவை
சீ. முத்துசாமி

செம்மொழி மாநாடும் செம்மறி ஆடுகளும் – கலைஞர் தாத்தாவுக்குக் கண்ணீர் விடாத கடிதம்
சு. யுவராஜன்

கட்டுரை:

கல்விக் கடைகள் - வியாபாரம் ஜோர்
நெடுவை தவத்திருமணி

சர்கீ மிக்கைலோவிச் ஐசென்ஸ்டைன் (Sergei Mikhailovich Eisenstein)
சு. காளிதாஸ்

உரிமைதான் புரட்சியின் எல்லை
கா. ஆறுமுகம்

ஒரு சிறுகதை ஒரு நாவல்
கிரகம்

சிங்கப்பூரின் தமிழ்க் கவிதைச் சூழல் (90-களுக்குப் பிறகு)
முனைவர் எம்.எஸ். ஸ்ரீ லஷ்மி

சிறுகதை:

குழந்தையின் தாய்
செல்வராஜ் ஜெகதீசன்


இரண்டாவது முகம்
ராம்ப்ரசாத்

தொடர்:


ப‌ல வேடிக்கை ம‌னித‌ர்க‌ள் போல‌ ...6
ம‌. ந‌வீன்

எனது நங்கூரங்கள் ...11
இளைய அப்துல்லாஹ்

நடந்து வந்த பாதையில் ...6
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...8

ஏ. தேவராஜன்

தர்மினி

லதா

ம‌. க‌விதா

பூங்குழலி வீரன்

தினேசுவரி

ரேணுகா


புத்தகப்பார்வை:


மனக்கரையில் "லங்காட் நதிக்கரை"
க. ராஜம்ரஞ்சனி

எதிர்வினை:


இது பாடாவதிகளின் காலம்
சு. யுவராஜன்

"இலக்கிய மோசடி" விவாதத்தில் நான்...
மனஹரன்
     
     
 

சைக்கிள் ஓடத் தெரியாமல் எனது நண்பர் ஒருவருக்கு “றோயல் மெயில்” நிறுவனத்தில் கிடைக்கவிருந்த வேலை கிடைக்காமல் போய்விட்டது.

லண்டனில் “றோயல் மெயிலில்” தபால் பட்டுவாடா செய்யும் வேலை அது. காலையில் சைக்கிளில்தான் தபால் கொண்டு போக வேண்டும். எனது நண்பருக்கு சைக்கிள் ஓடத் தெரியாது. ஆனால் அவர் கார் ஓடுவார்.

லண்டனில் தபால்காரர் என்றால் அவரின் அடையாளம் சிவப்பு நிற பைசிக்கள் தான். பெரிய நிறுவனங்களின் அதிக தபால்கள் சிவப்பு நிற வான் ஒன்றில் போகும்.

தபாலுக்கு என்று பெரிய பெரிய கெண்டயினர் வாகனங்கள் ஓடுகின்றன. எல்லாவற்றிலும் “றோயல் மெயில்” என்ற சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும். றோயல் மெயிலின் நிறம் சிவப்பு.

சைக்கிள் என்பது சிலருக்கு சிம்ம சொப்பனம்தான். சைக்கிள் ஓடத் தெரியாத பலர் எங்களில் இருக்கிறார்கள்.

ஊரில் எங்கள் கிராமத்தில் புளியங்குளத்தில் ஒருவரிடமும் கார் இருக்கவில்லை. உழவு மெசின், மாட்டுவண்டிதான் ஊர்க்காரர்களின் வாகனங்கள், எங்கள் முல்லைத்தீவு றோட்டால் எமது கிராமத்தை ஊடறுத்துக் கொண்டு பல கார்கள் போய் வரும். ஆனால் அவை வேறு ஊர்களின் கார்கள். எங்கள் ஊருக் கென்று ஒரு காரும் இருந்ததில்லை அப்பொழுது.

சைக்கிள் மட்டும்தான் எங்களின் ஆச்சரியம். அதுதான் எங்களின் ஏகபோக வாகனம். அதுவும் எங்கள் கிராமத்தில் எல்லோரிடமும் கிடையாது. எனக்கு நினைவு படுத்தி இப்பொழுது பார்க்கும் பொழுது தங்கராசா அண்ணர் வீட்டில், ட்றைவர் மணியம் வீட்டில், செல்லையா அண்ணர் வீட்டில், வோச்சர் செல்லையாண்ணை வீட்டில், ட்றைவர் சபா அண்ணை வீட்டில் என்று எங்களின் வீட்டை சுற்றி உள்ள அண்டை அசல் வீடுகளில் எல்லாம் வீட்டுக்கொரு சைக்கிள் இருந்தது. பெருமையாக இருக்கிறது.

ஆனால் எங்கள் வீட்டில் மட்டும் தான் சைக்கிள் இல்லை. அதனை வாங்கித் தர வேண்டும் என்று எங்களது அம்மய்யா யோசிக்கவும் இல்லை. நான் சின்னப்பிள்ளை என்பதனால் சைக்கிள் பற்றி அவர் யோசிக்காமல் இருந்திருக்கலாம்.

ஆனால் ஒரு சைக்கிள் தான் எனது கனவாக இருந்தது. அந்தக் காலத்தில் பி.எஸ்.ஏ. சைக்கிள், ரலி சைக்கிள், என்று இந்த இரண்டு சைக்கிள்களுக்கும் பெரும் மவுசு இருந்தது. ரலி சைக்கிளுக்கு ஏன் அப்படி ஒரு மவுசு இருந்தது என்று தெரியவில்லை. வெளிநாட்டு சாமான்களில் மிகவும் ஆசைப்படும் நாங்கள் இங்கிலாந்தில் செய்த சைக்கிள் மீது ஆசைப்பட்டதுக்கும் காரணம் லண்டன் சாமான் இது என்பதனால் இருந்திருக்கலாம்.

றலி சைக்கிள் 1887இல் சேர், பிராங் பௌடன் என்பவரால் நொட்டிங்கம் பகுதியில் றலி ஸறீட் என்ற இடத்தில் சிறிய கொம்பனி ஒன்றில் செய்யப்பட்டது. பிறகு அந்த வீதியில் இடத்தின் பெயரே சைக்கிளுக்கு சூட்டப்பட்டது. இப்படி “றலி” கொம்பனி வளர்ந்து வர 1921ஆம் ஆண்டில் சேர் பிராங் மரணமடைகிறார். அதற்கு பிறகு 1921 இலேயே பிராங்கின் மகன் நரோல்ட் பௌடன் கொம்பனியை பொறுப்பெடுக்கிறார்.

பொறுப்பெடுத்த கையோடு இங்கிலாந்தில் பிரபல்யமான பி.எஸ்.ஏ, ஹட்ஜ், கார்ல்டன், ஹிம்ப் ஹேகுலீஸ் ஆகிய ஐந்து சைக்கிள் பிராண்டுகளையும் தனது “ரலி” கொம்பனியின் கீழ் கொண்டு வந்தார். வாங்கினார்.

“பி.எஸ்.ஏ.” சைக்கிளும் “றலி” சைக்கிளும் எங்கள் கிராமங்களில் மிகவும் பிரபலம். ஆனால் எனக்கு ஒரு சைக்கிள் இல்லாமல் ஒரு மன ஏக்கமே மனதில் இருந்தது. எங்கள் வீடு ரோட்டோரத்தில் பஸ் ஹோல்ட்டுக்கு பக்கத்தில் என்பதனால் முல்லைத்தீவுப் பக்கம் போகிறவர்களும் மாங்குளம்; பக்கம் பஸ்ஸில் போகிறவர்களும் சைக்கிளை கொண்டு வந்து எங்கள் வீட்டில் தான் வைத்து விட்டு போவார்கள்.

எங்கள் வீட்டில் தினமும் மூன்று நான்கு சைக்கிள்கள் இருக்கும். ஆனால் அவைகளை பார்த்து ஆசைப்படுவதோடு சரி அவற்றை எடுத்து ஓட முடியாது. ஏனெனில் அவற்றை வைத்து அதன் சொந்தக்காரர்கள் பூட்டு விட்டு போய் விடுவார்கள்.

பூட்டிய சைக்கிள் களைப் பார்க்கும் பொழுது கோபம் கோபமாக வரும். அதன் பிறகுதான் நான் ஒரு உத்தியை கையாண்டேன். யாரெல்லாம் எங்கள் வீட்டில் சைக்கிளை வைத்துவிட்டு பூட்டி விட்டு போகிறார்களோ அவர்களின் சைக்கிளுக்கு காத்தை திறந்து விடுவது. பின்னேரம் அவர்கள் தங்களது வேலை முடிந்து வீட்டுக்கு சைக்கிளை ஓடிக் கொண்டு போக முடியாது உருட்டிக் கொண்டுதான் போக வேண்டும். சமயாசமயங்களில் ரயருக்கு ஊசியாலும் குத்தியிருக்கிறேன்.

பூட்டாத சைக்கிளை எடுத்து ஓடி விட்டு பத்திரமாக விட்டு விடுவேன். நான் பழகிய சைக்கிள்; ட்ரைவர் சபா அண்ணருடையது. அவர் இப்பொழுது உயிரோடு இல்லை. மிக நல்ல மனிதர்.

முல்லைத் தீவு பஸ் டிப்போவில் ட்ரைவராக வேலை பார்ர்தவர் எங்கள் ஊரின் இருந்து ஒவ்வொரு நாளும் வேலைக்கு போவார். காலையில் எங்கள் வீட்டில் சைக்கிளை கொண்டு வந்து விட்டுவிட்டு போவார். அதில் தான் கீழே விழுந்து விழுந்து ஓடப்பழகினேன்.

சைக்கிள் ஓடும் காலங்களில் எனது இரண்டு கால்களிலும் புண் நிரந்தரமாக இருக்கும். முழங்கால்கள் எப்பொழுதும் உரஞ்சுப்பட்டுப் போய் கிடக்கும்.

அந்தரத்தில் இரண்டு சில்லுகளில் ஓடும் சைக்கிளை எடுத்து ஓடுவதென்றால் பெரிய விசயம்தான்.

இங்கு ஐரோப்பிய நாடுகளில் சைக்கிள் சைக்கிள் என்றே உயிரை விடுகிறார்கள். உலகம் வெப்பமயமாதலை தடுக்க வேண்டுமா சைக்கிளை உபயோகியுங்கள் என்கிறார்கள்.

“சைக்கிள் ஓடுங்கள்!” என்று லண்டனில் மேயர் ஊக்கப்படுத்துகிறார். லண்டன் சிற்றிக்கு கார் கொண்டு வர வேண்டாம் என்று அரசாங்கம் கத்துகிறது. அது மட்டுமல்ல காரை சிற்றிக்குள் கொண்டு வந்தால் 8 பவுண் கென்சக்ஸன் சார்ஜ் கட்ட வேண்டும். சிற்றிக்குள் கார் கொண்டு வருவதற்கான பணம் அது.

சைக்கிள் புகை விடாது, பெற்றோல் தேவையில்லை. கரியமல வாயுவை வெளியேற்றாது எனவே உலகில் சுற்றுச் சூழலுக்கு மிகச் சிறந்த வாகனம் சைக்கிள் மட்டுமே என்கின்றன உலக நாடுகள்.

இங்கு லண்டனிலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் சைக்கிள் உபயோகம் பற்றி பெரும் பிரச்சாரங்கள் செய்கிறார்கள்.

இங்கிலாந்திலும் சைக்கிள் பாதை தனியே இருக்கிறது. அதற்கு வழி காட்டியும் இருக்கிறது. எங்கு வேண்டுமானாலும் சைக்கிளிலேயே நீங்கள் போய் வரலாம்.

நோர்வேக்கு போன போது பார்த்தேன் சிற்றியில் எல்லா இடக்களிலும் சைக்கிளை வைத்திருக்கிறார்கள். அதற்கு ஒரு அட்டையை வாங்க வேண்டும் அது இலவசம். அந்த அட்டையை நோட்டில் கவுன்ஸிலால் வைக்கப்பட்டிருக்கும் சைக்கிளில் சொருகி அதனை எடுத்து இலவசமாக ஓடலாம். உங்கள் பயணம் முடிந்து போனால் சிற்றியில் எங்கு வேண்டுமானாலும் நிறுத்தி விட்டு போகலாம். கவுன்ஸில் வாகனம் மாலையில் வந்து எல்லாச் சைக்கிள்களையும் ஒழுங்கு படுத்தி விட்டுப் போகும்.

ஹோலன்ட் தான் உலகில் அதிகம் சைக்கிள் புழகத்தில் உள்ள நாடு. அங்கு அனேகமாக ஒவ்வொருவரிடமும் சைக்கிள் இருக்கும். சைக்கிளுக்கு இன்சூரன்ஸ் பண்ணி வைப்பார்கள். தொலைந்து போனால் புதிய சைக்கிள் கிடைக்கும். ஹொலன்டில் சைக்கிள் பாதை பிரபலமானது. முழு ஹொலன்டையும் சுத்தி பார்க்க சைக்கிள் பாதை இருக்கிறது. அங்கு ஒவ்வொருவரும் சைக்கிளை கண்ணும் கருத்துமாக போற்றுகிறார்கள். உலகுக்கு கேடில்லாத வாகனம் அது என்று எல்லோரும் கொண்டாடுகிறார்கள். ஹொலன்ட் பிரதமர் சைக்கிளில்தான் பாராளுமன்றத்துக்கு வருகிறார் என்றால் சிலோனில் ஆச்சரியமாகத்தான் இருக்கும். டீ எம் ஜெயரத்ன சைக்கிளில் வருவாரா பாராளுமன்றத்துக்கு? யோசித்துக் கூட பார்க்க முடியாது.

எனது சிறிய வயதின் ஆசையாக ஒரு சைக்கிளை சொந்தமாக வைத்துப் பாவிக்க முடியவில்லை. கடைசி வரைக்கும் அது கை கூடாத ஆசையாகத்தான் இருக்கிறது.

ஊரை விட்டு விட்டு வந்தததன் பிறகு உடுப்பிட்டியில் ஒரு சைக்கிள் கடையில் வேலை செய்தேன். யாழ்ப்பாணத்தில் இருந்து புதிய சைக்கிளை ஓடிக் கொண்டு உடுப்பிட்டிக்கு வரும் வேலை எனக்கு கிடைத்தது.

எங்களது சைக்கிள் கடைக்கு சைக்கிள் வாக்குகிறவர் வந்து ஓடர் கொடுத்தால் புதிய சைக்கிளை யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டு வந்து கொடுப்போம்.
அதில் புதிய சைக்கிளை நான்தான் ஓட்டிக் கொண்டு வருவேன். அதின் ஒரு சந்தோசம் தான்.

இங்கு லண்டனில் விதம் விதமான சைக்கிள்கள் இருக்கின்றன. பல பல டிசைன்களில் பல பல விலைகளில் கிடைக்கும். 1500 பவுண் 2000 பவுண் விலைக்கும் சைக்கிள் கிடைக்கிறது. அதாவது இலங்கை காசுக்கு மூன்றரை, நாலு லட்சம் ரூபாவுக்கும் சைக்கிள் கிடைக்கிறது. சிலோனில் “லுமாலா” சைக்கிள் சிலோன் ரேடியோ விளம்பரம் மூலம் பிரபல்யமாகி விட்டது.

லண்டனில் “பூட் மார்கட்” என்று சனி, ஞாயிறு சந்தைகள் இருக்கின்றன. அங்கு போய் எனது மகன் ஒரு சைக்கிள் வாங்கி வந்தான். பத்து பவுனுக்கு.
ஆனால் ஊரில் உள்ளது மாதிரி ஒற்றை செயின் சைக்கிள் இல்லை இது. இது எல்லாம் எங்கள் ஓட்டத்துக்கு சரி வராது. எங்கள் ஊர் சைக்கிள் மாதிரி ஒன்றை இங்கு கொண்டு வந்து ஓட வேண்டும் என்ன வேகம் என்ன குதூகலம்.

இங்குள்ள சைக்கிளை ஓடும் போது சிலோனில் உள்ளது மாதிரியான அனுபவம் கிடைக்குதில்லை.

ஐரோப்பிய நாடுகளில் சைக்கிள்காரருக்கு முன்னுரிமை கொடுத்து தான் கார் போன்ற வாகனங்கள் ஓட வேண்டும். ஒரு சைக்கிள் காரர் போனால் அவரை முன்னால் மெதுவாக ஓடவிட்டுத்தான் வாகனக்காரர் போக வேண்டும். தப்பித் தவறி அவரை தட்டி விட்டால் அவ்வளவு தான் கார் ஓட்டியுடைய இன்சூரஸ்ஸில் இருந்து பெரிய தொகை அவருக்கு கிடைக்கும். காரணம் ஏதாவது சைக்கிள்காரருக்கு ஏற்பட்டால் கார் ஓட்டி அவ்வளவுதான்.

இவ்வளவு மகத்துவம் சைக்கிள் காரர்களுக்கு இருக்கிறது.

இங்கு சைக்கிள் வாங்கும் போது கூடவே பூட்டும் வாங்க வேண்டும். அல்லது சின்னப் பெடியன்கள் சைக்கிளை கள வெடுத்துக் கொண்டு போய் விடுவார்கள்.

ஊரில் எனது வீட்டுக்கு முன்னால் உள்ள நெடு வீதியில் சாரத்தை கட்டிக் கொண்டு அந்த சூட்டில் வெறும் மேலோடு சைக்கிள் ஓட வேண்டும் போல ஆசையாய் இருக்கிறது.

எப்பொழுதான் வரப்போகிறது அந்தக் காலம்?

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768