இதழ் 20 - ஆகஸ்ட் 2010   காதல் விபரீதங்கள்
சந்தியா கிரிதர்
 
 
 
  பத்தி:

'நான் கோமாளியாக இருக்கவே விரும்புகிறேன்' - சார்லி சப்ளின்

சு. காளிதாஸ்

வேட்கைக் காற்று : 13 ம‌லேசிய‌க் கலைஞர்கள் - ஓர் அறிமுக‌ம்
சு. யுவராஜன்

வ‌ற்றிப்போகும் சினிமா இசை!
அகில‌ன்

இயற்கை (5) - கடல்
எம். ரிஷான் ஷெரீப்

மெக்சிகன் சூப்பர் ஹீரோ - எல் சேன்டோ (El Santo)
கிரகம்

கட்டுரை:

கூட்டணிகளால் கொள்ளை போகும் இந்திய ஜனநாயகம்
நெடுவை தவத்திருமணி

ம‌ண்ணின்றி வ‌ள‌ரும் ம‌ர‌ங்க‌ளும் சிங்கை இல‌க்கிய‌மும்
ல‌தா

காதல் விபரீதங்கள்
சந்தியா கிரிதர்

சிறுகதை:

போலீஸ் வந்துவிட்டால்...
ராம்ப்ரசாத்


சங்கமம்
கிரகம்

தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...2
எம். ஜி. சுரேஷ்

எனது நங்கூரங்கள் ...13
இளைய அப்துல்லாஹ்

நடந்து வந்த பாதையில் ...8
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...10

ஏ. தேவராஜன்

லதா

கிண்ணியா எஸ். பாயிஸா அலி

வ. ஐ. ச. ஜெயபாலன்

எதிர்வினை:


இல‌க்கிய‌ விவாத‌மும் அக்க‌ப்போர்க‌ளும்!
முனைவர் எம். எஸ். ஸ்ரீ லஷ்மி
     
     
 

இந்தியாவின் வடமாநிலங்களில் சில அசம்பாவிதங்கள் சர்வசாதாரணமாக நிகழ்ந்து வருகின்றன. குடும்ப கௌரவத்தை மதிக்காமல் திருமணம் செய்து கொள்ளும் இளஞ்ஜோடிகளை, கப்-பஞ்சாயத்து (Khap Panchayat) உறுப்பினர்கள், காக்கைகுருவியைப் போல சுட்டுத் தள்ளுகிறார்கள். மாநில அரசும், காவல்துறையும் இந்தக் கொலைச்சம்பவத்தை சட்டவிரோதமான செயலென்று அறிந்தும, எவ்வித நடவடிக்கை எடுக்காமல் மென்மேலும் இத்தகைய கொலை நிகழ்வதற்கு இடம் கொடுத்து வருகிறது. காபியை அருந்திக்கொண்டு அதிகாலையில் செய்தித்தாளை புரட்டும்போது, இத்தகைய செய்திகள் தொண்டையில் இறங்கிக் கொண்டிருக்கும் காபியை உறைய வைக்கிறது. காதல் பைத்தியம் பிடித்தவருக்கு காதலே ஒரு சுவாசமாகயிருக்கலாம். இந்தக் காதல், மதம், ஜாதி, குலம், கோத்ரம் இவைகளுக்கு அப்பாற்பட்டு இருமனங்களுக்கிடையே உருவாகிறது. காதலுக்கு கண்ணில்லை, அங்கே இரண்டு உள்ளங்கள்தான் மௌனமாக பேசுகின்றன, இணைகின்றன. காதலுக்கு சமூக நியதிகளைக் கடைபிடிக்கத் தெரியாது, சட்டத்தால் அதனை கட்டுப்படுத்த முடியாது. இவற்றுக்கும் அப்பாற்பட்டு உருவாகிற காதலை இந்தச் சமுதாயம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. ஹரியானாவில் ஒரே கோத்ரத்தைச் சார்ந்த ஆணும்-பெண்ணும் பதிவுத் திருமணம் செய்து கொண்டார்கள். ஒரே கோத்ரத்திலுள்ள ஆணும் பெண்ணுக்குமிடையே உள்ள உடன்பிறப்பு அதாவது சகோதர-சகோதரி உறவை கணவன்-மனைவி உறவாக மாற்ற முனைவது மாபெரும் குற்றமென்று அடித்துச் சொல்லுகிற கப்-பஞ்சாயத்து. இந்த திருமணத்தை நிராகரித்து, இளஞ்ஜோடிகளை வெட்டி வீழ்த்தியது. ஹரியானாவில் இதுபோல நிறைய சம்பவங்கள் நிகழ்ந்து வருவது ஒரு சாதாரண விஷயமாகும். ஹரியானாவில் நடைபெறும் இந்தச் சம்பவம் தற்சமயம் உத்திரப்பிரதேசம், பசாப், மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலும் இடம்பெயர்ந்துள்ளது.

வெவ்வேறு மாநிலத்து மக்கள் வாழுகின்ற மும்பை மெட்ரோ நகரமென்று அழைக்கப்படுகிறது. மதம், ஜாதி, குலம், கோத்ரம் இவைகளுக்கு அப்பாற்பட்டு ஒரு இயந்திரத்தைபோல வாழுகின்ற மும்பைவாசிகள், ஒரே காலனியிலிருந்தும் பக்கத்து வீட்டுக்காரரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்று ஆர்வமில்லாமல், அக்கறையும் எடுத்துக் கொள்ளாமல் இருக்கின்றனர். பாறை போல நெஞ்சம் படைத்த இவர்களிடமிருந்து அன்பு, பரிவு, இரக்கம், மனிதநேயம் ஆகியவற்றை எதிர்பார்க்க முடியாது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பிராமண குடும்பத்தில் பிறந்த அல்பனா என்ற பெண்மணி கீழ்ஜாதியில் பிறந்த பிரபுவை திருமணம் செய்து கொண்டதால், அவளுடைய சகோதரன் திலீப், பிரபுவின் குடும்பத்தை ஒட்டு மொத்தமாக வெட்டி வீழ்த்தினான். இந்த கொலைச் சம்பவத்தால் மும்பை என்கிற மெட்ரோ நகரம் ஒரு கொலை நகரமாக தோற்றமளித்தது.

உத்திரப்பிரதேசத்திலிருந்து நான்கு குழந்தைகளோடு நாராயண் திவாரி 1980ஆம் ஆண்டு வயித்துப்பிழைப்புக்காக மும்பையின் புறநகர் பகுதியிலுள்ள சால் (Chawl) என்று சொல்லப்படுகிற ஒண்டுக்குடித்தனத்துக்கு குடியேறினார். எளிய தோற்றத்தைக் கொண்ட நாராயண் திவாரி ஒரு மில் தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்தார். பிராமண குடும்பத்தை சார்ந்த திவாரி தம்பதியர்கள் நான்கு குழந்தைகளை ஒரு கண்டிப்போடு வளர்த்தார்கள். மேலும் அவர்கள் பெண் குழந்தைகளை ஒரு கட்டுப்பாட்டோடு வளர்த்து வந்தார்கள். கல்பனாவின் பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் திவாரி தம்பதியர்கள், அவளை பிராமண குடும்பத்தைச் சார்ந்த பிள்ளைக்கு கட்டி வைத்தார்கள். இரண்டு மகன்கள், தந்தை வேலை பார்த்து வந்த அதே மில் தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்தார்கள். தைரியம், துணிச்சல் இரண்டையும் கொண்ட கடைசிப்பெண் அல்பனா பள்ளிப்படிப்பு முடிந்த கையோடு கல்லூரிக்கு சென்று படிக்கத் தொடங்கினாள். கல்லூரியில் நேஷனல் காடெட் கார்ப்ஸ் (National Cadet Corps) அதாவது என்.சி.சி.யில் (NCC) இணைந்த அல்பனா அவ்வப்போது பதினைந்து நாட்களுக்கு NCC காம்புக்காக (NCC Camp) வேறொரு ஊருக்குச் செல்வது வழக்கம். வேறொரு ஊருக்குப் பெண்களைத் தனியாகச் செல்ல ஒருபோதும் அனுமதிக்காத திவாரி தம்பதியர்கள், அல்பனா விஷயத்தில் மட்டும் அவர்களுடைய கண்டிப்பு சற்று தளர்ந்து இருந்தது.

திவாரி குடும்பத்தைப் போல கேரளாவிலிருந்து கிருஷ்ணன் தம்பதியர்கள் ஒரு பெண், ஒரு பிள்ளை என்று இரண்டு குழந்தைகளோடு மும்பையின் அதே புறநகர் பகுதியின் ஒண்டுக்குடுத்தனத்துக்கு குடியேறினார்கள். திவாரி வீட்டுக்கு அடுத்து இரண்டு குடித்தனங்கள் தள்ளி கிருஷ்ணன் குடும்பத்தினர்கள் ஒரு சின்ன வீட்டில் வசித்து வந்தார்கள். எழவ ஜாதியைச் சார்ந்த கிருஷ்ணன், அவரது மகன் பிரபு இருவரும் ஒரே தொழிற்சாலையில் வேலை செய்தார்கள். அல்பனாவும் பிரபுவும் நண்பர்களாக பழகினார்கள். நாளடைவில் இருவரின் மனமும் ஒன்றிணைந்து காதலாக மாறியது. அவர்களுடைய நட்பு என்கிற உறவு காதலாக மலர்ந்தது. இதை அறிந்த திவாரி குடும்பத்தினர், உடனடியாக அல்பனாவை மீண்டும் கான்பூருக்கு திருப்பி அனுப்புகிற முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டார்கள். ஏற்கனவே NCC காம்புக்கு செல்ல வேண்டியிருந்ததால் அல்பனா எதையும் சொல்லிக் கொள்ளாமல் தோழியோடு புறப்பட்டு சென்றாள். இரண்டு நாட்கள் கழித்து அல்பனாவைப் பார்க்க பிரபு காம்புக்கு வந்திருந்தான். NCC காம்ப் முடிந்தவுடன் பிரபுவின் அத்தை ஏலம்மா தம்பதியர் வீட்டுக்கு சென்ற இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்கிற விருப்பத்தை வெளிப்படுத்தினார்கள்;. வெவ்வேறு ஜாதியைச் சார்ந்த இருவருக்கும் ஏலம்மா தம்பதியர்களின் பொறுப்பில் பதிவுத் திருமணம் நடைபெற்றது. அல்பனா-பிரபு புதிய திருமண தம்பதியராக சில காலங்கள் ஏலம்மா வீட்டில் வசித்தார்கள். ஒண்டுக்குடித்தனம் பகுதியிலுள்ள பிறந்த வீட்டுக்கு செல்லாமல் நான்கு மாதங்கள் கழித்து ஏலம்மா வீட்டிலிருந்து அல்பனா-பிரபு புதுமண தம்பதியராக கிருஷ்ணன் வீட்டுக்கு வந்தார்கள். திருமணத்திற்கு பிறகு அல்பனா கல்லூரிப் படிப்பை தொடர்ந்தாள். அல்பனாவின் மனதை மாற்றுவதற்கு தாய், சகோதரி இருவரும் அவளைக் கல்லூரிக்கு சென்று பார்த்தார்கள். அல்பனாவின் மனஉறுதி அவர்களுடைய முயற்சிகளை முறியடித்தது. அவளுடைய பிறந்தகத்தின் தொல்லையால் பிரபு, அல்பனாவை மீண்டும் ஏலம்மா வீட்டுக்கு அனுப்பி வைத்தான். அல்பனாவின் திருமணம் திலீப்பின் மனதில் அழமான காயத்தை பதித்து விட்டது. 2004ஆம் ஆண்டு மே 16ஆம் திகதியன்று திலீப் நண்பர்களோடு இரவு வேளையில் கிருஷ்ணன் வீட்டுக்குள் புகுந்து ஒவ்வொருவரையும் ஆத்திரம் தீர வெட்டி வீழ்த்தினான். கிருஷ்ணன் வீட்டிலிருந்து கிளம்பிய கூச்சலைக் கேட்டு அக்கம்பக்கத்துகாரர்கள் திலீப்பை தடுக்க முற்பட்டார்கள். இந்தச் சம்பவத்தன்று ஏலம்மா வீட்டில் தங்கியிருந்த அல்பனா உயிர் பிழைத்தாள். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பிரபுவின் தாயார், சகோதரி இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள். நினைவிழந்த இந்திரா தேவி இரண்டு வருடங்கள் கழித்து மரணமடைந்தாள். நான்கு மாத குழந்தையை சுமந்த வண்ணம், அல்பனா புகுந்த வீட்டுப் பொறுப்பை ஏற்று சுபர்னாவை படிக்க வைத்தாள். படிப்பை முடித்த சுபர்னா நல்ல கம்பெனியொன்றில் வேலைக்கு சேர்ந்தாள். அதே கம்பெனியில் வேலை பார்த்த ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டாள்.

ஆறு வயது பெண் குழந்தையோடு, ஏலம்மா வீட்டுக்கு அருகே ஒரு சின்ன அறை வாடகைக்கு எடுத்துக் கொண்டு, தனியார் கம்பெனியில் வேலை பார்த்து கொண்டிருக்கும் அல்பனா ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ முனைந்தாலும் மனம் மட்டும் அந்த ஆழமான காயங்களை மறக்க முடியாமல் மௌனமாக அழுது கொண்டிருக்கிறது. உல்லாசமாக வாழவேண்டிய காலங்கள் ஒரு பட்டு போன மரமானதை நினைத்து அல்பனாவின் இதயம் தாங்கமுடியாத வலியால் துடிக்கிறது. வலி, வேதனை இரண்டுக்குமிடையே வைராக்கியத்தோடு வாழ்க்கையை வாழவேண்டுமென்ற மனோதிடமும், இடைவிடாது உழைப்பும் அல்பனாவை ஒரு தைரியசாலியான பெண்ணாக மாற்றி விட்டது. திடீரென்று முளைக்கும் பிரச்சனைகளை சமாளிக்கும் பக்குவத்தை பெற்றிருப்பது அல்பனாவின் சிறப்பு அம்சமென்று சொல்லலாம்.

பிருந்தா கராத் தலைமையில் செயல்படும் AIDWA வின் உதவியால் அல்பனா, திலீப்புக்கு மரணதண்டனை கோரி மும்பை உயர்நீதி மன்றத்தில் வழக்கை தாக்கல் செய்தாள். ஆனால் உயர்நீதி மன்றம் திலிப்புக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. அல்பனா நம்பிக்கையை கைவிடாமல் மீண்டும் உச்சநீதி மன்றத்தில் திலீப்புக்கு மரணதண்டனை கோரி வழக்கை தாக்கல் செய்திருக்கிறாள். காலம் தாமதமானாலும் நீதி தவறாது கிடைக்குமென்ற அல்பனாவின் நம்பிக்கை நிச்சயமாக நிறைவேறும். ஆறு வயது பெண் குழந்தையோடு தனியாக சுதந்திரமாக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் அல்பனாவைப் போல இன்றும் குடும்ப கௌரவத்தின் பெயரில் எத்தனையோ கொலைகள் அண்மையில் நிகழ்கின்றன. இந்த சமூகத்தில் ஒத்தை மரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் எத்தனையோப் பெண்களை பார்க்கலாம். அன்று அல்பனா மட்டும் தான் ஒத்தை மரமாக காணப்பட்டாள், இன்று எத்தனை பெண்களின் வாழ்க்கை சீரழிந்து கொண்டிருக்கிறது, இன்னும் எத்தனை பெண்களின் வாழ்க்கை குடும்ப கௌரவத்தின் பெயரில் சீரழியப் போகிறது?

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768