இதழ் 20 - ஆகஸ்ட் 2010   கவிதை:
ஏ. தேவராஜன்
 
 
 
  பத்தி:

'நான் கோமாளியாக இருக்கவே விரும்புகிறேன்' - சார்லி சப்ளின்

சு. காளிதாஸ்

வேட்கைக் காற்று : 13 ம‌லேசிய‌க் கலைஞர்கள் - ஓர் அறிமுக‌ம்
சு. யுவராஜன்

வ‌ற்றிப்போகும் சினிமா இசை!
அகில‌ன்

இயற்கை (5) - கடல்
எம். ரிஷான் ஷெரீப்

மெக்சிகன் சூப்பர் ஹீரோ - எல் சேன்டோ (El Santo)
கிரகம்

கட்டுரை:

கூட்டணிகளால் கொள்ளை போகும் இந்திய ஜனநாயகம்
நெடுவை தவத்திருமணி

ம‌ண்ணின்றி வ‌ள‌ரும் ம‌ர‌ங்க‌ளும் சிங்கை இல‌க்கிய‌மும்
ல‌தா

காதல் விபரீதங்கள்
சந்தியா கிரிதர்

சிறுகதை:

போலீஸ் வந்துவிட்டால்...
ராம்ப்ரசாத்


சங்கமம்
கிரகம்

தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...2
எம். ஜி. சுரேஷ்

எனது நங்கூரங்கள் ...13
இளைய அப்துல்லாஹ்

நடந்து வந்த பாதையில் ...8
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...10

ஏ. தேவராஜன்

லதா

கிண்ணியா எஸ். பாயிஸா அலி

வ. ஐ. ச. ஜெயபாலன்

எதிர்வினை:


இல‌க்கிய‌ விவாத‌மும் அக்க‌ப்போர்க‌ளும்!
முனைவர் எம். எஸ். ஸ்ரீ லஷ்மி
     
     
 

சற்றுக் கூடுதல் கனத்துடன் இன்றைய மழை அழும்!

இன்றைய காலை
எதிர்பாராமல் எரிந்துகொண்டிருந்த பொழுதில்
முன்னிரவின் மழைக்காலம்
ஞாபகத்தினின்று
தூரப்போயிருந்தது

ஆனாலும்
வெகுச் சீக்கிரத்தில்
வந்தடைந்தது
மழைக்காலச் சிலிர்ப்புகள்

நேற்றைய அடைமழையின்
ஆனந்த லகரிகள்
எங்கள் ஒவ்வொருவரிடமுமிருந்து
விடைபெற்றன
இன்றைய காலையில்

ஆனாலும்
இன்னொரு ரூபத்தில்
அதிர்வைத் தந்தன

குறுகிய அவகாசத்தில்
எங்கள் கைகளுக்குள்
திடுமென முளைத்த
இறுதிக் கயிற்றில்
எந்த உறுதியில்
பற்றிக்கொண்டிருக்கின்றன
வார்த்தைகளற்ற நம்பிக்கைகள்

இரவு மழையின்
அர்த்தம் புரியாமல்
கடுங்குளிரின் வெடவெடப்பில்
வெளிப்படாத
அந்த நிமிடங்களின்
அந்தரங்க மகிழ்ச்சிக்கப்பாற்பட்ட
சில பிரியங்களை
நீயோ நானோ
அல்லது நமக்குள் யாரோ
இந்தக் காலையின்
நமக்கான முதல் மரணத்தில்
வெளிப்படுத்தலாம்

தாமதிக்கின்ற
ஒவ்வொரு துளியும்
நமது மழைக்காலத்தை
உலர்த்திவிடக்கூடியது

ஒட்டுமொத்த பிரியங்களை
நமக்கான ஒரே மரணம்
தீர்மானிக்கின்ற வேளை
ஆசுவாசப்படலாம்

ஆனாலும் தாமதமெனச்
சிதை பேசும் வார்த்தைகளில்
கூடுதலாய் அழலாம்
இன்றும் பெய்யும்
முன்னிரவின் மழை
நாமின்றி

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768