புல்லைத் தின்னாதவர்கள்
பாய்வதற்குப்
பதுங்கும்....
புல்லைத்
தின்னாதவர்கள்
உன்னைப்போல்....
சூழ்ச்சியால்
வலையில்
சிக்க வைத்தாலும்
சிணுங்க மாட்டார்கள்..
உன்னைப்போல்
வெற்றியைப்
புசிக்கும் வரை...
தாகம் தணியும் வரை...
வைத்த குறி
எட்டும் வரை..
கண்களின் கூர்மை
குறையாது
உன்னைப்போல்.....
ஆனால்....
விடுதலைக்கு
பின்னால்
உன் பெயரை
முன்மொழிந்தோரை
நீ வணங்கு..
...அவர்களால்தான்.
உன் வீரம்....
உயிர்வாழ்கிறது....
புதிய அகராதி
என்னப்பன்
குனிந்த தலை நிமிராமல்
வழிந்தோட விட்ட
மரப்பால்....
என் அம்மை
மண்ணுக்குத் தெளித்த
சிவப்பு பன்னீர்....
நம்பினோம்
மின்னுவோம்
நட்சத்திரங்களாக
என்று......
இல்லாத
ஒன்றை
இருக்கு
என்று
நம்ப வைத்தார்கள்
வானத்தின் நீலமாய்
53 ஆவது
திருவிழாவிலும்
அரை வயிறு
கஞ்சிதான்
பிறைபோலே..
புரிந்தது
தேசியக் கொடியின்
புதிய அகராதி....
|