இதழ் 21
செப்டம்பர் 2010
  கவிதை:
ஏ. தேவராஜன்
 
 
 
  பத்தி:

வல்லினம் க‌லை இல‌க்கிய‌ விழா 2

ம. நவீன்

மா. சண்முகசிவா : கனிவில் நனைந்த அக்கறை
சு. யுவராஜன்

பின்தொட‌ரும் ஓவிய‌ங்க‌ள்
யோகி

ஒரு மின்ன‌ஞ்ச‌லும்... த‌ற்கொலை செய்து கொள்ளும் த‌த்துவ‌ங்க‌ளும்!
ம‌. ந‌வீன்

இயற்கை (6) - காற்று
எம். ரிஷான் ஷெரீப்

கட்டுரை:

பிறந்த மண்ணின் இறந்த காலங்கள்
ஏ. தேவராஜன்

புனைவிலக்கியத்தில் நா. கோவிந்தசாமி... ஒரு மீள் பார்வை
கமலாதேவி அரவிந்தன்

‘கூர்’ - 2010 கனடா கலை இலக்கிய மலர் கட்டுரைகள் குறித்த கருத்துக் குறிப்பு
க. நவம்

புத்தகப்பார்வை:

எம். ரிஷான் ஷெரீஃபின் 'வீழ்தலின் நிழல்' - எனது பார்வையில்!
தேனம்மை லக்ஷ்மணன்

பதிவு:

நான் நிழலானால் சிறுகதைத் தொகுதி - விமர்சனக் கூட்டம்
வாணி பாலசுந்தரம்

சிறுகதை:

மார்க் தரும் நற்செய்தி
நாகரத்தினம் கிருஷ்ணா

தும்பிகள்
ஆர். அபிலாஷ்

பயணம்
சின்னப்பயல்

காசியும் கருப்பு நாயும்
ம. நவீன்

மௌனத்தின் உள்ளிருக்கும் மௌனங்கள்
க. ராஜம்ரஞ்சனி

தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...3
எம். ஜி. சுரேஷ்

நடந்து வந்த பாதையில் ...9
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...11

லீனா மணிமேகலை

தர்மினி

இரா. சரவணதீர்த்தா

கிண்ணியா எஸ். பாயிஸா அலி

ஏ. தேவராஜன்

ம. நவீன்

ராக்கியார்


எதிர்வினை:


இலக்கியக் குற்றவாளியின் வாக்குமூலம்
பா. அ. சிவம்

பா. அ. சிவத்தின் எதிர்வினைக்கான பதில்
ம. நவீன்

     
     
 

விரல்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் சில மகரந்தங்கள்!

* கோயில் இல்லா ஊரில்
குடியிருக்காதே
மனிதர்கள் இல்லா ஊரில்
தெய்வம் குடியிருக்கலாமா?

* ஒவ்வொரு தோட்டத்திலும்
வரலாற்றுக்குத் தெரியாத
சோகக் கதைகள்!

* மழையும் வெயிலும்
புயலும்
ஏன் தேர்தலும் கூட
வந்து போச்சு
தென்றலைத் தவிர!

* தோட்டத்திற்குச் சென்றிருந்தேன்
சுதந்திரமாய் இன்னமும்
நாய்களும் கோழிகளும்!

* ரப்பர் மரங்களை
அழித்தபோதே
எங்கள் உயிரும்
பிரிந்து விட்டது!

* இன்னமும் வணங்குகிறோம்
சாமி படத்துக்குப் பக்கத்தில்
உளி!

* எங்கள் உடலின்
ஏதேனும் ஒரு பாகத்தில்
தோட்டத்தின் முத்திரை
உளியோ பீலியோ
செதுக்கிய தழும்பு!

* பதுங்கித் திரிந்த
நெல் வயலுக்குள்
தட்டுப்படலாம்
என்றோ தொலைந்து போன
என் பள்ளிக் காலணி!

* தமிழ்ப் பள்ளிக்கு வெளியே
இன்னமும் காத்திருக்கிறார்
அப்பாவின் பீர் போத்தலில்
நீராகரத் தண்ணீருடன்
என் அம்மா
எனக்காக!

* வெளியிலிருந்து
தோட்டத்தைப் பேசாதே
தோட்டத்துக்குள்ளிருந்து
எதையாவது பேசு!

* தோட்டத் தமிழ்ப்பள்ளியில்
மாண்புமிகு பேசினார்:
பிள்ளைகளைத்
தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புங்களென்று

* அடுத்த பிறவியில்
என்னுள் பிறக்க வேண்டும்
தோட்டம்

* சுதந்திரம் பற்றிக்
கவிதை கேட்டார்கள்
சுதந்திரமாய்ச்
சொல்வதிற்கில்லை!

* சுதந்திரமென்றால்
துங்கு அப்துல் ரஹ்மான்...
துன் அப்துல் ரசாக்...
துன் ஹ¤சேன் ஒன்...
துன் டாக்டர் மகாதீர்...
டத்தோ ஸ்ரீ அப்துல்லா அகமட் படாவி...
டத்தோ ஸ்ரீ நஜீப்...
இவர்கள்தான்!
இவர்கள்தான்!!

* சுதந்திரமென்றால் என்ன
துங்குவுடன் பேச வேண்டுமென
அப்பாவின் ஆசைபோல்
எனக்கும் என் தலைமுறைக்கும்
நிறைவேறப் போவதில்லை!

* சுதந்திர நாளில்
எங்கள் தோட்டத்தில்
கொடியேற்றி
நாட்டுப் பண் பாடி
மிட்டாய் கொடுத்தார்கள்
‘வேல்ஸ்’துரை
எங்களையெல்லாம்
தட்டிக் கொடுத்தார்...
அவரது புன்னகையை
நினைவுபடுத்தி
ஒரமாய் அழுகின்றோம்

* எங்கள் தோட்டத்து வீடுகள்
சாலையைவிட
மோசமாயிருக்கின்றன...
கொடிக் கம்பும் இல்லை
எங்கே பறக்க விடுவது
தேசக் கொடியை?

* சுதந்திர நாள்!
வரலாற்றை மறந்தவர்களுக்கு
நினைவூட்டும் நாள்

மீண்டும் மறந்து விடுகிறார்கள்
அடுத்த சுதந்திரம்
வரும் வரை...

* என் அப்பாவிடம்
நான் கூட கேட்டதில்லை
மகன் கேட்டான்

“ரெண்டாவது சுதந்திரம்
எப்பப்பா கிடைக்கும்?”

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768