இதழ் 21
செப்டம்பர் 2010
  நடந்துவந்த பாதையில் ...9
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்
 
 
 
  பத்தி:

வல்லினம் க‌லை இல‌க்கிய‌ விழா 2

ம. நவீன்

மா. சண்முகசிவா : கனிவில் நனைந்த அக்கறை
சு. யுவராஜன்

பின்தொட‌ரும் ஓவிய‌ங்க‌ள்
யோகி

ஒரு மின்ன‌ஞ்ச‌லும்... த‌ற்கொலை செய்து கொள்ளும் த‌த்துவ‌ங்க‌ளும்!
ம‌. ந‌வீன்

இயற்கை (6) - காற்று
எம். ரிஷான் ஷெரீப்

கட்டுரை:

பிறந்த மண்ணின் இறந்த காலங்கள்
ஏ. தேவராஜன்

புனைவிலக்கியத்தில் நா. கோவிந்தசாமி... ஒரு மீள் பார்வை
கமலாதேவி அரவிந்தன்

‘கூர்’ - 2010 கனடா கலை இலக்கிய மலர் கட்டுரைகள் குறித்த கருத்துக் குறிப்பு
க. நவம்

புத்தகப்பார்வை:

எம். ரிஷான் ஷெரீஃபின் 'வீழ்தலின் நிழல்' - எனது பார்வையில்!
தேனம்மை லக்ஷ்மணன்

பதிவு:

நான் நிழலானால் சிறுகதைத் தொகுதி - விமர்சனக் கூட்டம்
வாணி பாலசுந்தரம்

சிறுகதை:

மார்க் தரும் நற்செய்தி
நாகரத்தினம் கிருஷ்ணா

தும்பிகள்
ஆர். அபிலாஷ்

பயணம்
சின்னப்பயல்

காசியும் கருப்பு நாயும்
ம. நவீன்

மௌனத்தின் உள்ளிருக்கும் மௌனங்கள்
க. ராஜம்ரஞ்சனி

தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...3
எம். ஜி. சுரேஷ்

நடந்து வந்த பாதையில் ...9
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...11

லீனா மணிமேகலை

தர்மினி

இரா. சரவணதீர்த்தா

கிண்ணியா எஸ். பாயிஸா அலி

ஏ. தேவராஜன்

ம. நவீன்

ராக்கியார்


எதிர்வினை:


இலக்கியக் குற்றவாளியின் வாக்குமூலம்
பா. அ. சிவம்

பா. அ. சிவத்தின் எதிர்வினைக்கான பதில்
ம. நவீன்

     
     
 

மறுநாள் காலையிலேயே, முனைவர் பட்டத்துக்கு படிக்கும் மாணவர் ரவிவர்மாவோடு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சென்றாள். சில முக்கியமான குறிப்புக்களுக்கு வேண்டி, இன்றியமையாத நூல்களுக்காக அங்கு சென்றிருந்தாள். அன்றைய தலைவர், திரு இளங்கோ அவர்கள், முகப்பிலேயே அன்போடு வரவேற்றார். ரவிவர்மாவின் பேராசிரியர், ரவிவர்மாவின் தீஸிஸ் பற்றி பேசிக்கொண்டே, அவளை லைப்ரரிக்கு அழைத்துச்செல்ல, அருமை, அருமையான , புத்தகக் குவியல்களுக்கிடையே, மகிழ்ச்சியில் திக்கு முக்காடிப்போனாள்.

எதிர்பார்த்ததைவிட தங்கம் தங்கமாய் புத்தகங்கள் கண் சிமிட்டி அழைக்க, எதை எடுக்க, எதை விட. வேண்டிய குறிப்புக்களை திகட்டத் திகட்ட எழுதி எடுத்துக்கொண்டிருக்க, 2 பேராசிரியைகள், அவர்கள் எழுதிய நூல்களைத் தர, அன்போடு பெற்றுக்கொண்டு, அவசரம் அவசரமாகத் திரும்பினாள்.

கூத்துப் பட்டறையில், அயல் நாட்டிலிருந்தும், சிங்கையிலிருந்தும், இருவர் வந்திருக்க, அந்தக்கலைஞர்களிடம் ஆசிரியர், she is a bilingual writer, poet, playwright director, very talented lady... என்றெல்லாம் இவளை பெருமிதத்தோடு அறிமுகப்படுத்த, அப்படியே வெட்கமாகப் போய்விட்டது. சிங்கப்பூர் கலைஞர் சீனர். மற்றவர் இட்டாலியர். சில நிமிஷங்கள் பேசிவிட்டு, அவசரம் அவசரமாக, அறைக்குள் ஓடினாள்.

அன்று மதியத்துக்குமேல், சென்னையில் சிறப்புமிகு மானாட்டு நிகழ்வில் கலந்து கொள்ள போக வேண்டியிருந்தது. சிங்கப்பூரிலிருந்தே ஏற்பாடான நிகழ்ச்சி அது. [அன்றெல்லாம் தமிழ்க்கருத்தரங்கில் கலந்துகொள்வதில் ஏனோ, அப்படி ஒரு பித்து இருந்தது. ஆனால் சத்யமாயிட்டும் இப்பொழுது மலையாள மாநாடுகள் அன்றி வேறில்லை.]

உடனடியாகக் குளித்து ,உடை மாற்றி, ஆசிரியரிடம் விடை பெறச்சென்றாள். ”கமலாதேவி! மேடையில் தைரியமாகப் பேசுங்கள். சிங்கப்பூர் போல் அல்ல. இங்கு தமிழ் நாட்டில் நிரம்ப அரசியல் கோமாளிகள் உண்டு. அவர்களையெல்லாம் கண்டு மிரளக்கூடாது. பத்திரமாகப்போய் வாருங்கள். மேடையில் கம்பீரமாகப் பேசுங்கள்,' என்ற அறிவுரையோடு, அருமையாக, ஆசிரியர் ஏற்பாட்டில், மானாட்டு அரங்கில் நுழைந்த வினாடி, ஒரு நிமிஷம் உலகமே இன்பமயமாகிப்போனது.

என்டெ பொன்னே...? என்னென்பேன்? எப்படிச்சொல்வேன்? என்ன அருமையான காட்சி தெரியுமா? ஆண்களில் எல்லோருமே வெள்ளை வேஷ்டியும், வெள்ளை ஜிப்பா, ஷர்ட்டுமாய், என்ன கண்கொள்ளாக்காட்சி தெரியுமா? பெண்களானால், குங்குமப்பொட்டும், மூக்குக் குத்தியும், கலர்கலர் புடவையுமாய் அழகோ அழகு. பார்க்கப் பார்க்கத் தெவிட்டவே இல்லை. சிங்கப்பூரில் காணவே முடியாத நிகழ்ச்சி. எல்லாப்பெண்களும் கொண்டை, அல்லது தெற்றிப்பின்னலிட்டு, வந்திருக்க, இவள் மட்டும் கேரளக் கஷவு முண்டும் நேரியலில், மலையாள வேஷத்தில் நிற்க, சில நிமிஷங்கள் தான். பார்ப்பவர்கள் எல்லோருமே ”வணக்கம் அம்மா' என்றிட ”நமஸ்காரம்,” என்று சொல்லிச் சொல்லி மனசு பஞ்சுப்பட்டாய்ப் பறந்தது.

அரைமணி நேரத்திலேயே பல சினேகிதிகள் கிட்டிவிட்டார்கள். அவர்களின் பெயர்களோ கேட்டாலே நாவினிக்கும். நெஞ்சினிக்கும். வாய் மணக்கும். கீதாஞ்சலி, மங்கையர்க்கரசி, கற்பகவல்லி, வளர்மதி, இவர்களோடு பொன்னி என்ற இளம்பெண்ணும் சேர்ந்து கொள்ள, பரஸ்பரம் அறிமுகத்திலேயே, இவளுக்கு அவர்களை எல்லோரையுமே பிடித்துப்போயிற்று. அவர்களுக்கும் இவளையும்.

மறுநாள் காலை அமர்வில்தான் இவளுக்கு நிகழ்ச்சி. பேராசிரியர்கள், இலக்கியவாதிகள், அரசியல்வாதிகள் எனப் பலரும் பேசினார்கள். மனசு குளிரக்குளிர அபிஷேகம் செய்த புண்ணியம் மட்டும் சத்யமாயிட்டும், தமிழ்ப்பேராசிரியர்களுக்கு மட்டுமே. என்னமாய் பேசினார்கள் தெரியுமா? அதிலும் Dr. ராஜமாணிக்கம் எனும் பேராசிரியர், அச்சு அச்சாய் அம்சமாய், எவ்வளவு ஆழமாய் பேசினார் தெரியுமா?

மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த இலக்கியவாதிகள் பேச்சு.... ஹூம்... அப்படி ஒரு ஏமாற்றத்தை இவள் எதிர்பார்க்கவேயில்லை. தமிழிலக்கியத்தின் சமகால இலக்கியம் பேசவில்லை. கல்கியின் கேதாரியின் தாயார், மாதவைய்யரின் குட்டிக்கதைகள் பற்றிக்கூட தப்பு தப்பாய் பேசினார்கள், மானுட யதார்த்தத்தை சுதிலயத்தோடு எழுதுபவரோ, அங்கதச்சுவையோடு எழுதுபவரோ, சமூக சிந்தனையோ, எதுவுமே அவர்களின் கணிப்பில் வரவே இல்லை. இலக்கற்ற இலக்கில் அவர்களும் பேச்சாளர்கள் என்று நுனிப்புல் மேய்ந்துவிட்டுப்போனார்கள், துக்கம் தாங்கவில்லை. இவர்களா பேச்சாளர்கள்?

ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதுவதென்பது எவ்வளவு பெரிய உழைப்பு, எத்தனை நாட்கள் பாடுபட வேண்டும்? இந்தக் கட்டுரை எழுத, இங்கு பேச வேண்டிய இந்தத் தலைப்புக்காக, எத்தனை இரவுகள், கண்விழித்துக் குறிப்புக்கள் சேகரித்திருப்பாள்? ஆனால் இங்கு நடந்த கூத்திலோ, இது எதுவுமே இல்லை. சும்மா அனாயாசமாக, மைக்கைப் பிடித்துப்பேச, அதில் கைச்சுவையை வேறு அள்ளி விட்டு, கூட்டத்தினரை சிரிக்க வைத்த கோமாளித்தனம் வேறு, அப்படியே பற்றிக் கொண்டு வந்தது கோபம். [இதில் விசேஷம் என்ன தெரியுமா, இவர்கள் இலக்கியம் படைத்தவர்களே [எழுத்தாளர் கூட] அல்லவாம், ஆனால் இலக்கியப்பேச்சாளர்களாம்]

அதையே பெரிய சாதனையாகப் பேசி, மேடையை விட்டு கீழே இறங்கியதும், எப்படி எமது பேச்சு? என்று சுயமாய் அட்சதை போட்டுக்கொண்டு, கேட்பதைப் பார்க்கப் பார்க்க, அப்படிக் கோபம் கோபமாய் வந்தது. ஆனால், மறு நிகழ்வில் கற்பகமும், கீதாஞ்சலியும் மீண்டும் உள்ளக்குளிர அபிஷேகம் செய்தாற்போல், அவ்வளவு அருமையாகப்பேசினார்கள். வளர்மதியும், பொன்னியும் மங்கையர்க்கரசியும் கூட பொறுப்பாய் தான் பேசினார்கள். பொன்னியின் பெயர் பொன்னுத்தாயி, சுருக்கி பொன்னி என்று கூறினாள் என்பது அமர்விலிருந்த போதுதான் தெரிந்தது. கிள்ளிவளவன் என்பவரும் ஆழமாக பேசினார், ரசித்துக்கேட்க முடிந்தது.

அடுத்து அரசியல்வாதிகளின் பேச்சு. என்டெ ஈஷ்வரா? ஈஷ்வரா? அது போல் ஒரு கொடுமை இவ்வுலகில் இல்லை என்று ஓடிவிடலாமா என்றிருந்தது. பத்திரிக்கைகளிலும், ஊடகங்களிலும், மட்டுமே, அறிந்திருந்த திருமுகங்களை, நேரில் பார்த்த சோகம் இம்மட்டு அம்மட்டல்ல. என் சொல்வேன்? எப்படிச்சொல்வேன்? தோளில் துண்டு பறக்க , அன்றைய எதிர்க்கட்சியை அவர்கள் விளாசிய விளாசலை, எழுதவா? கனல் பறக்க அவர்கள் விளம்பிய அரசியல் சிலேடையை மொழியவா? ஆச்சர்யம் என்ன தெரியுமா? அரசியல்வாதிகள் கேரளத்திலும் சரி. தமிழ்நாட்டிலும் சரி. இவர்கள் சத்யமாயிட்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். ஆனால் அவர்களுக்கு கிட்டிய ராஜோபசாரமோ, ஹூம், பட்டுக்கம்பளம் விரிக்காத குறைதான்.

ஒரு வரி, ஒரே ஒரு வரி, அல்லது ஒரு வாக்கியம் கூட நிகழ்வுக்கு பொருத்தமாகப் பேசவில்லை, தெரியுமா? ஆனால் அவர்கள் போகும்போது அவர்கள் பின்னாலேயே ஏற்பாட்டாளர்கள் ஓடினார்கள். அவர்கள் பேசிய கவைக்குதவா பேச்சுக்கும் தலையாட்டினார்கள். சிரித்தார்கள். கை தட்டினார்கள். ஆனால் அருமையாகப்பேசிய பலரை அவர்கள் கண்டு கொள்ளவேயில்லை.

அதற்குள் இரவு உணவுவேளை வந்துவிட்டது. சாப்பிடவே முடியவில்லை. இவள் பரிதவித்தாள். மாலைக்குளியல், பூஜை எதுவுமே இன்னும் ஆகவில்லை. அரக்கப்பரக்க அறைக்குள் வந்து, குளித்து, கையோடு கொண்டு வந்திருந்த ஈஷ்வரியை, கண்ணிலொற்றி, நாமம் ஜெபித்து முடிக்க, தோழிகள் கதவைத் தட்டினார்கள். அறைத்தோழிக்கு சிரமம் கொடுக்க வேண்டாமே, என்றிவர்கள் அனைவரும் கீழே வந்து லோபியில் அமர, காற்று சில்லென்று வீச, ரம்ம்மியமான அந்த சூழ்னிலை இன்றும் அப்படியே கண்ணில் நிற்கிறது.

பேச்சு பாட்டுக்குச்சுற்றி வளைத்து, குடும்பம், இவளது இலக்கியம் பற்றி வர, திடீரென்று பொன்னி கேட்டாள், 'கமலாக்கா, நீங்கள்தான் மலையாளத்தில் பெரிய, ரைட்டர், டைரக்டராச்சே? எங்களுக்காக, ஒரு மலையாளப்பாடல் பாடுங்களேன்'. மற்ற தோழிகளும் கூட வற்புறுத்த, என்ன செய்ய? வேறுவழி?... பாடினாள், ஆனால் மலையாளப் பாடலல்ல.
அவளுக்கு மிகவும் பிடித்த ஒரு தமிழ்ப்பாடல். பாரதிராஜாவின் படப்பாடல். என்ன பாடல் தெரியுமா?

ஞான் : அந்த நெலாவைத்தான் ஞான் கையிலே புடிச்சேன், எண்டெ ராசாவுக்காக? என்று தொடங்கியதுதான் தாமதம்...

உடனே கீச்சுக்குரலில்,

பொன்னி : எங்கே எங்கே கொஞ்சம் ஞான் பாக்கறேன், கண்ணை மூடு கொஞ்சம் ஞான் காட்டறேன்” என்று பொன்னி எதிர்பாட்டுப்பாட, இவள் அதிர்ந்துபோய் நிற்க, தோழிகள் ஊசிப்பட்டாசாய் வெடித்துச் சிரிக்க, வெட்கமும், கோபமுமாய் இவள் ஒருநிமிடம் திகைத்துப்போய் நிற்க...

-தொடரும்

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768