வல்லினத்திற்கு படைப்புகளை அனுப்பும் எழுத்தாள நண்பர்கள், வேறு இணைய
இதழ்களிலோ அல்லது
அச்சு இதழ்களிலோ ஏற்கனவே பிரசுரமான படைப்புகளை அனுப்ப வேண்டாமென
கேட்டுக்கொள்கிறோம் - ஆசிரியர் குழுகலை இலக்கிய விழா 2 - வரவு மற்றும் செலவு
விபரம்
பதிவு: பின் தொடரும் நிழலின் குரல் - ஜெயமோகன் மலேசிய வருகை - ஒரு பதிவு கே. பாலமுருகன் நவீன இலக்கியச் சிந்தனைக்களத்தின் மூலம் இலக்கிய ஆன்மீக நிகழ்வுகளுக்காக கூலிம் தியான ஆசிரமத்தின் பொறுப்பாளர் சுவாமி பிரமானந்த சரஸ்வதியின் ஏற்பாட்டில் இந்திய எழுத்தாளரும் தத்துவம் ஆன்மீகம் வரலாறு செவ்விலக்கியம் நவீன இலக்கியம் என பல தளங்களில் தனித்துவமான ஆளுமையுடன் எழுதி வரும் படைப்பாளியுமான ஜெயமோகன் அவர்கள் 7 நாட்கள் மலேசியாவிற்கு வருகை புரிந்திருந்தார்.
பத்தி: இசை நிறுவனம் தொடங்குவது... அகிலன் இசை விமர்சனம், சாடல்கள், இசைத் திருட்டு என்று பலவற்றை படித்தும், எழுதியும் பார்த்திருக்கிறோம். இந்த முறை இசைத்துறையில் எப்படி ஈடுபடலாம் என்பதைப் பற்றிப் பார்ப்போம். இசைத்துறை ஒரு ஆனந்தமான அதேசமயம் கவர்ச்சிக்கரமான ஒரு துறை. ஆபத்தான துறையும் கூட (சில வகைகளில்).
பத்தி: பின் ஜெயமோகன்: சில நினைவுகள் சு. யுவராஜன் ஜெயமோகன் மலேசியாலிருந்து தமிழகம் திரும்பிய சில நாட்களுக்குப் பிறகு எங்கள் வீட்டிற்கு வருவதாக நவீன் சொல்லியிருந்தார். வழக்கமாக வார இறுதியில் சந்திப்போம். ஆனால் அன்று வியாழன் இரவு. நவீனின் குரலில் வழக்கத்திற்கு மாறான தளர்ச்சி இருந்தது. ஜெயமோகனின் சமீபத்திய வருகையால் அதிகமாக மாற்றங்களை நண்பர்கள் வட்டத்திலேயே நவீனிடம்தான் பார்க்க முடிந்தது.
கட்டுரை: அன்னை தெரெசாவின் நூற்றாண்டு விழா புன்னியாமீன் பள்ளிக்கூடத்தில் பயிற்றுவிப்பதை தெரேசா விரும்பினாலும் கல்கத்தாவில் அவரைச் சூழ்ந்துள்ள பகுதிகளின் வறுமை நிலை அவரை அதிகமதிகமாய் கலங்கச் செய்தது. 1948 இல் ஏழைகளுடனான தனது ஊழியத்தை ஆரம்பித்தார். பாரம்பரிய லொரேட்டோவின் அங்கியைக் களைந்து, நீல கரையிடப்பட்ட சாதாரண வெண்ணிற பருத்தி புடவையை அணிந்தவராய், இந்திய குடியுரிமைப் பெற்றுக்கொண்டு குடிசை பகுதிகளுக்குள் நடமாடினார்.
கட்டுரை: நிறைவளிக்கிறதா தமிழாசிரியர்களின் இலக்கியப் பங்களிப்பு? ஏ. தேவராஜன் மலேசியச் சூழலில் தமிழாசிரியர்களைப் பற்றி நல்லவர்கள், வல்லவர்கள் என நிறையவே சொல்ல வேண்டியிருக்கிறது. ஏறக்குறைய இரண்டு மாமாங்கங்களாய் உள்ளத்தில் துருத்திக்கொண்டிருக்கிற முள் போல. யாரிடமாவது எங்கேயாவது கொட்டித் தொலைக்க வேண்டும்போல் இருக்கும். மனிதர்களிடம் சொல்லலாமென்றால் அவர்களிடம் கேட்கின்ற காதுகள் இல்லை. அச்சு ஊடகங்கள் பெரும்பாலும் அரசியலாலும் துக்கடா செய்திகளாலும் பக்கங்களை நிரப்பிக்கொள்கின்றன.
திரைவிமர்சனம்: நான் மகான் அல்ல - மனநோயின் வேர்களும் குற்றவாளிகளின் நகரமும் கே. பாலமுருகன் கொலைகளை மிகக் கொடூரமாகவும் தந்திரமாகவும் செய்து முடிக்கும் அந்த நால்வரும் கார்த்தி ஒருவனிடம் அடி வாங்கி சாகிறார்கள். இதுவும்கூட முரண்தான். கார்த்தி படத்தில் கராத்தே கற்றவன் என்பதால் இதைச் சகித்துக் கொள்ளலாம். மற்றப்படி “நான் மகான் அல்ல” இன்னும் ஆழமாகக் குற்றவாளிகளின் அகத்தை ஆராய்ந்திருக்கலாம்.
புத்தக அறிமுகம்: அன்புள்ள அய்யனார் - சுந்தர ராமசாமியின் 200 கடிதங்கள் 1986 - 2005 வருடங்களுக்கிடையில் சுந்தர ராமசாமி அய்யனாருக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு இந்நூல். வெகுளியான இளம் வாசகராக முதல் கடிதத்தை எழுதிய அய்யனார் இலக்கிய 'நண்பர்களுக்கு எல்லாம் நண்பராகப்' பரிமாணம் பெற்றிருப்பதில் சுந்தர ராமசாமியின் பங்கு கணிசமானது என்று கடிதப் பரிமாற்றங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
அறிவிப்பு: தும்பி அறிவியல் இதழ் அறிமுக விழா வரும் 9 அக்டோபர் 2010-ல் தும்பி இதழ் அதிகாரபூர்வமாக வெளியிடப்படுவதோடு அதன் உருவாக்கத்தில் துணை நின்ற கைக்கொடுத்த நல்லுல்லங்களை பாராட்டும் முகமாக விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பத்துமலையில் அமைந்துள்ள STC Caterers அவர்களின் மண்டபத்தில் வெளியீட்டு விழா மாலை 7 மணிக்குத் துவங்கும்.
சிறுவர் இலக்கியம்: ஆமையும் எருதும் அல்லது நீருக்கும் நிலத்துக்கும் நாமே ராசா வ. ஐ. ச. ஜெயபாலன் ஆமை தனது பரம்பரை புத்தகமே உலகத்திலேயே பழமையானதும் உண்மையானதும் என்று காண்கிற தேவதைகளிடம் எல்லாம் சொல்லும். அதனால் உலகத்தில் ஆமைகள்தான் உசத்தி என்று அந்த ஆமை சொல்லிவந்தது. இதைக் கேள்விப்படும் போதெல்லாம் எருது கோபப்படும்.
சிறுகதை:
"பெல்ஜியம்" கண்ணாடி
சின்னப்பயல் வீடு பூரா ஒதுங்க வைத்ததில் நேரம் போனதே தெரியவில்லை. தாத்தா பரண் மேல் அமர்ந்து கொண்டார். நன்கு துணியைச் சுற்றி மூடி வைத்துவிட்டேன். ஆனாலும் உள்மனம் ஏதோ ஒன்று சொல்லிக்கொண்டே இருந்தது.
சிறுகதை:
ஒரு பைத்தியமும் ஒரு கொலையும்
ராம்ப்ரசாத் வாழ்வின் இறுதி நாட்களை விரல் விட்டு எண்ணிக் கொண்டிருந்த கபாலீஸ்வரன் தன் கல்லூரி நாட்களை ஒரு முறை விரல் விடாமல் எண்ணிப் பார்த்தான். எரிச்சலோடு சிகரெட் புகையை இழுத்து விட்டுக் கொண்டான். சிகரெட் நுனி கனன்று தகித்தது.
தொடர்: அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...4 எம். ஜி. சுரேஷ் முதலில் ஒரு அனுமானம் தோன்றுகிறது. விரைவிலேயே அந்த அனுமானம் ஒரு கோட்பாடாக உருவாகிறது. வேறொரு புதிய அனுமானம் தோன்றும் போது, பழைய கோட்பாடு ரத்து செய்யப்படுகிறது. பின்பு மீண்டும் ஒரு புதிய அனுமானம் தோன்றுகிறது.
எனது நங்கூரங்கள் ...14 இளைய அப்துல்லாஹ் லண்டனில் ஒரு பையன் கலியாணம் முடிக்க யோசித்தான். ஊரிலிருந்துதான் பொம்பிளையைக் கொண்டுவந்து முடிப்பம் என்று அவனது அண்ணாவும் அண்ணியும் ஆலோசனை சொன்னார்கள். அவனுக்கும் அது நல்லதாகப்பட்டது.
தொடர்: நடந்து வந்த பாதையில் ...10 கமலாதேவி அரவிந்தன் தோழிகள் இப்படிக் கலகலத்துக் கொண்டிருக்க, எதிரே Dr. ராஜமாணிக்கமும் கிள்ளி வளவனும் வர, கீதா எழுந்து நிற்க, அனைவருமே கைகூப்பினோம். இவள் முனைவர் ராஜமாணிக்கத்தை மனம் திறந்து பாராட்டினாள்.