இதழ் 23
நவம்பர் 2010

கவிதை
ரெ. பாண்டியன்

 
 
  நேர்காணல்:

“எந்த அதிகாரத்திடமும் எவ்வித சமரசமும் செய்துகொள்ளாமல் இருக்கும் ஒரு படைப்பாளிக்குள் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பே அவனைக் கலைஞனாக்கி, அவன் கலாசிருஷ்டிக்கு உன்னதம் சேர்க்கின்றது.”

இளங்கோவன்



இளங்கோவன் சிறப்பிதழ் பத்திகள்:


அக்னிக் குஞ்சு

சீ. முத்துசாமி

இடம்பெயராத இளங்கோவன் எனும் ஆளுமை!
கோ. முனியாண்டி

நிஷா : காலமும் வெளியும்

இராம. கண்ணபிரான்

FLUSH - வெறுப்பின் குருதி
சு. யுவராஜன்

இளங்கோவன் : தீ முள்

ம. நவீன்

இலக்கிய வானில் ஓர் விடிவெள்ளி
முனைவர் ஸ்ரீலஷ்மி



த‌ற்கொலை போதிக்கும் த‌த்துவ‌ங்க‌ள்!
யோகி



அஞ்சலி:


ரெ. ச‌ண்முக‌ம் : க‌லையின் குர‌ல்
ம. நவீன்



கட்டுரை:


மலேசியக் கல்விச் சூழலில் தமிழாளுமையின் சரிவும் இழந்தே பழகிய அரைநூற்றாண்டுச் சுரணையும்!
ஏ. தேவராஜன்

அயராது உழைக்கும் ஜப்பானியர்கள்
சந்தியா கிரிதர்



சிறுகதை:


சுவர் ஓவியங்களில் ஒளிந்திருக்கும் நகரம்
கே. பாலமுருகன்



தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...5
எம். ஜி. சுரேஷ்

நடந்து வந்த பாதையில் ...11
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்



கவிதை:


இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...13

பா. அ. சிவம்

ரெ. பாண்டியன்


ஏ. தேவராஜன்




அறிவிப்பு:

வ‌ல்லின‌ம் ச‌ந்திப்பு 1
     
 

அகப்படாதவர்கள்

எல்லோரும் மனதிற்குள்
வெள்ளோட்டம்
பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்
ஒரே பொய்யை
நம்பும்படியாய் உள்ளதா இல்லையா என

பலர் வெள்ளோட்டத்தில் திருப்தியற்று
பின்வாங்கியிருக்கையில்
ஒரே ஒருவன்
அந்த பொய்யை
நுட்பங்களற்று
சொல்லி வைத்து விடுகிறான்

அகப்பட்டான்
எல்லோருக்குமான ஒரு திருடன்


லாவகம்

தன் முதுகுப்புறம் மறையும்
ரயிலின் நகர்வை
கழுத்து வலிக்க
அந்தப் பக்கம் முடியுமட்டும்
திரும்பிப் பார்த்துவிட்டு
கழுத்துச் சுழுக்கும் வேகத்தில் திரும்பி
இந்தப் பக்கம்
ரயிலின் தொடர் நகர்வை
பின்தொடர்கிறது
ஆறுமாத வாண்டின் அகல விரிந்த இமைகள்

அந்தப் பக்கத்தின் தொடர்ச்சி
இந்தப் பக்கத்தில் இருக்கிறது
என்பதை
இவள் கற்றுக் கொண்ட தருணமெது.


எதிர்வினை

என் அதட்டலுக்கு
படுத்திருந்த வாக்கில் சலனமற்று
செய்த சேட்டையின் இன்னொரு நீட்சியாய்
தன் கண்ணருகே
என்னைச்சுற்றி
சிறுவிரல் வட்டம் கூட்டி
நிதானமாய்
என் சினத்தை
சிறை வைக்கிறான்
என் சூரியன்


முடம்

சிறிய பென்சிலை எடுக்க முயன்றேன்
அங்கே போய் விழுந்தது
அங்கே போய் யத்தனித்தேன்
இங்கே போய் விழுந்தது

சிறிசுதானே என்கிற அலட்சியம் விரல்களாயும்
அடங்காது குதிக்கும் நிராகரிப்பு பென்சிலாயும்
முடமாக்கி நிறுத்தும்
முழுப்பிறவியை.


‘தாங்க் யூ’

பின்னால் சைக்கிள் வருவது பார்த்து
நடைபாதையை விட்டு ஒதுங்கி
புல்தரையில் நடந்தேன்
நேரே பார்த்து.

என்னைப் பாராது
வேகமாய் கடந்து சென்ற சைக்கிளிலிருந்து
ஒரு ‘தாங்க் யூ’
எனக்கு முன்னால்
தரையில்
விழுந்து
சிதறிற்று.

 

 

 

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768