நேர்காணல்: தமிழ்நாட்டைச் சாராமல், இலங்கைத் தமிழ் இலக்கியவாதிகளால் தனித்தியங்க முடியும்! லெ. முருகபூபதி அனைத்துலக தமிழ் எழுத்தாளர்களை ஒன்றிணைக்கும் மாநாடு முதல் முறையாக இலங்கையில் வரும் ஜனவரி 6,7,8 தேதிகளில் நடைபெறவுள்ளது. மாநாட்டின் நோக்கம், திட்டங்கள் குறித்து இலங்கை அனைத்துலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் அமைப்பாளர், எழுத்தாளர் முருகபூபதியுடன் 'வல்லினம்' உரையாடியது.
பத்தி: தி பீட்டல்ஸ் (The Beatles) அகிலன் தி பீட்டல்ஸ் (The Beatles), உலகத்திலேயே மிகவும்
பிரபலமான இசை குழு என்று போற்றப்படுபவர்கள். இதில் மிகப்பெரிய ஆச்சரியம்
ஏறக்குறைய 40 வருடங்களாக அதே புகழுடனும், விற்பனையிலும் முதல் நிலையில்
இருக்கும் ஒரே இசை குழு என்றால் அது பீட்டல்ஸ் தான். பத்தி: ஜே. ஜே. சில குறிப்புகள் : சில சிந்தனைகள் சு. யுவராஜன் பழமையின் கிணற்றிலிருந்து தவளைகள் இன்னும் 30 ஆண்டுகளில் வெளியேறிவிடும் என கனவு காண்கிறான் ஜே ஜே. அந்த 30 வருடமான 2010-ல் ஜேஜேவின் கனவு இன்னும் தளர்நடையுடன் தள்ளாடி கொண்டிருப்பதன் சாட்சியாக இக்கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் நான் இருக்கிறேன்.
விமர்சனம்: ஸ்ரீரஞ்சனியின் நான் நிழலானால்... ஒரு விமர்சனப் பார்வை கலாநிதி மைதிலி தயாநிதி ஸ்ரீ ரஞ்சனி தனது கதைகளில் இரு வேறு பண்பாட்டு உலகங்களை சிருட்டிக்கிறார். ஒன்று புலம் பெயர் மக்களின் உள்ளக வாழ்க்கையை நெறிப்படுத்தும் யாழ்ப்பாணப் பண்பாட்டு உலகம். மற்றது, கனடாவில் வீட்டுக்கு வெளியே புற உலகிற் தரிசிக்கும் அந்நிய கலாசார உலகம்.
விமர்சனம்: இலங்கைக் கவிஞர் எஸ். நளீமின் 'இலை துளிர்த்து குயில் கூவும்' எம். ரிஷான் ஷெரீப் வானம் ஒரு குப்பைத் திடலெனில் அதிலிருந்து கீழே விழுபவை குப்பைகள்தானே? தனது 'இலை துளிர்த்து குயில் கூவும்' தொகுப்பின் முதலாவது கவிதையில் இப்படித்தான் மழையை ஒரு குப்பையெனச் சொல்கிறார் கவிஞர் எஸ். நளீம்.
பதிவு: வல்லினம் சந்திப்பு 1 - சில நினைவுகள் யோகி நெடுநாளைக்குப் பிறகு நவீன் ஏற்பாடு செய்திருந்த தைப்பிங் இலக்கியப் பயணத்துக்கு செல்வதற்கு நான் என்னை தயார்படுத்தி இருந்தேன். இதற்கு முன் அவர் ஏற்பாடு செய்திருந்த எந்தப் பயணத்துக்கும் நான் செய்யும் பணி என்னை அனுமதித்ததில்லை.
சிறுகதை:
தங்கராசு
ஷைலஜா ஆளாளுக்கு குரல்கொடுத்தபோது ஊரில் ஒரே ஒருவன் மட்டும் மழையை சபித்தான். வானத்தை நோக்கி இடியாய் உறுமினான். அவனுடைய நிலத்துக்கிணற்றில் மட்டும் வற்றாத நீர் உண்டு. ஆனால் அதை அவன் விலைக்கு விற்பான், அதுவும் ஏழைபாழை என்று பார்க்காமல் அதட்டி உருட்டிக்காசு கேட்பான். ஒரு குடத்துக்கு ஒரு ரூபாய். தவிச்சவாய்க்கு இலவசமாய் தண்ணீர் தராத பாதகன்.
தொடர்: அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...6 எம். ஜி. சுரேஷ் கிரேக்கத் தத்துவஞானி அரிஸ்டாட்டில் மாசிடோனியாவில் பிறந்தவர். மாசிடோனிய மன்னரும், மாவீரன் அலெக்ஸாண்டரின் தந்தையுமான பிலிப்பிடம் அரிஸ்டாட்டிலின் தந்தை மருத்துவராக இருந்தார். மன்னர் பிலிப் தன் மகன் சிறுவன் அலெக்ஸாண்டருக்குக் கல்வி கற்பிக்க விரும்பினார். அப்போது அவர் கண்களில் அரண்மனை வைத்தியரின் மகனான அரிஸ்டாட்டில் தென்பட்டார்.
தொடர்: நடந்து வந்த பாதையில் ...13 கமலாதேவி அரவிந்தன் உள்ளூர கனன்று கொண்டிருந்த கோபத்தை மறக்க, அவையை நோக்கியபோது, இவர்கள் எழுந்து வந்த இருக்கையில், அருமைத்தோழிகள் மங்கை, கீதா, அன்னபூரணி, என நிறைந்து அமர்ந்திருந்தார்கள். இவளை நோக்கி, மகிழ்ச்சியோடு கை காட்ட, இவளால் கை காட்ட முடியவில்லை. ஸ்க்ரிப்டில் மீண்டும் ஒருமுறை கண்களை ஓட்டினாள்.
தொடர்: ஆன்ம விரல்கள் அளாவிய கூழ் ...1 சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி கார் வேகமாகச் சென்று கொண்டிருந்தாலும் எந்த விதமான குலுக்கல், குதித்தல் இல்லாமல் இந்தப் பாதையில் செல்வது இதுதான் முதன் முறையோ என்று மனம் அசைபோட ஆரம்பித்ததும், நினைவுகள் நழுவி மெல்ல செம்மண் சாலைக்குள் ஓடி விரிந்து கொண்டே சென்றன. இப்பாதையில்தான் எங்கள் தோட்டத்திலிருந்து கூலிம் புகழ் பட்லீஷா பள்ளிக்கு நிதமும் போய்க்கொண்டிருந்தது மெல்ல மேல் மனதுக்குள் வந்தது.