இதழ் 24
டிசம்பர் 2010
  சிங்கப்பூர் மூத்த எழுத்தாளர் இராம கண்ணபிரானுடன் ஓர் உரையாடல்...
'மலேசியா - சிங்கை 2010 நூலை முன்வைத்து'
சந்திப்பு & படங்கள் : கே. பாலமுருகன்
 
 
 
  நேர்காணல்:

"ஒற்றுமை என்பது புனிதமானதல்ல!"

சேனன்

தமிழ்நாட்டைச் சாராமல், இலங்கைத் தமிழ் இலக்கியவாதிகளால் தனித்தியங்க முடியும்!
லெ. முருகபூபதி

சிங்கப்பூர் மூத்த எழுத்தாளர் இராம கண்ணபிரானுடன் ஓர் உரையாடல்... 'மலேசியா - சிங்கை 2010' நூலை முன்வைத்து'
கே. பாலமுருகன்


பத்தி:

தி பீட்டல்ஸ் (The Beatles)
அகிலன்

ஜே. ஜே. சில குறிப்புகள் : சில சிந்தனைகள்
சு. யுவராஜன்


விமர்சனம்:

ஆஸ்ட்ரோ வெள்ளித்திரை குறும்படப் போட்டி 2010 - தேர்வான பத்து மலேசிய குறும்படங்களின் விமர்சனம்
கே. பாலமுருகன்

சில நேரங்களில் சில ஏவாள்கள் - தொன்ம குறியீடும் ஆதியில் தோற்றுப்போன ஏவாளும்
கே. பாலமுருகன்

ஸ்ரீரஞ்சனியின் நான் நிழலானால்... ஒரு விமர்சனப் பார்வை
கலாநிதி மைதிலி தயாநிதி

இலங்கைக் கவிஞர் எஸ். நளீமின் 'இலை துளிர்த்து குயில் கூவும்'
எம். ரிஷான் ஷெரீப்

பதிவு:

வல்லினம் சந்திப்பு 1 - சில நினைவுகள்
யோகி


சிறுகதை:

தங்கராசு
ஷைலஜா

தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...6
எம். ஜி. சுரேஷ்

நடந்து வந்த பாதையில் ...13
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

ஆன்ம விரல்கள் அளாவிய கூழ் ...1
சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...14

ம‌. ந‌வீன்

யதீந்திரா

ஏ. தேவராஜன்

செல்வராஜ் ஜெகதீசன்

ரெ. பாண்டியன்


கிண்ணியா எஸ்.பாயிஸா அலி



எதிர்வினை:


சமூக போராளியின் நேர்காணல்
வெ. தனலெட்சுமி

தவறுக்கு வருந்துகிறேன்
எம். கே. குமார்


கடிதம்:

மக்கள் ஓசை ஞாயிறு பதிப்பு ஆசிரியருக்கு ஒரு கடிதம்
கே. பாலமுருகன்
     
     
 

கேள்வி: 'மலேசிய- சிங்கப்பூர் 2010' எனும் தலைப்பில் மலேசிய சிங்கை படைப்பாளிகளின் படைப்புகளைத் தொகுத்து 'வல்லினம்' சிறப்பு மலராக வந்ததைத் தாங்கள் அறிந்ததோடு அம்மலரை வாசித்தும் முடித்துவிட்டீர்கள் என அறிகிறேன். அதனைக் குறித்த தங்களின் பொதுவான பார்வை என்ன?

கடந்த ஒரு வருடத்தில் வெளிவந்திருக்கும் 12 வல்லினம் இணைய இதழ்களிலிருந்து திரட்டப்பட்ட 50க்கும் மேற்பட்ட எழுத்துப் படைப்புகள் இந்தத் தொகுப்பில் வெளியிடப்பட்டுள்ளன. இதிலுள்ள படைப்புகளை எழுதியவர்கள் 31 படைப்பாளிகள் அதாவது 24 மலேசியப் படைப்பாளிகள், 7 சிங்கப்பூர் படைப்பாளிகள். படைப்புகளின் தலைப்புகளை, தம் நவீன ஓவிய எழுத்துக்களால் அழகுப்படுத்தியுள்ளார் ஓவியர் சந்துரு. வல்லினம் (மலேசியா சிங்கப்பூர் 2010) இதழ் தொகுப்பில் சிறப்பு நேர்காணல்கள், கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

கேள்வி: மூன்று முக்கியமானவர்களை வல்லினம் நேர்காணல் செய்து இந்தத் தொகுப்பில் வெளியிட்டுள்ளது. அந்த நேர்காணலில் உங்களைக் கவர்ந்த விசயங்கள் என்ன?

மலேசியா ஹிண்ராப் போராட்டவாதியான திரு.க.உதயகுமார் அவர்களின் நேர்காணலும், இலக்கியப் போராட்டவாதியான இளங்கோவனின் நேர்காணலும் மிகவும் முக்கியமானவை. இலக்கிய ஆளுமையான இளங்கோவன் பன்முகம் கொண்டவர். தொழிலால் ஒளிப்பதிவாளர், நாடக விரிவுரையாளர், அரசாங்க கலச்சார அதிகாரி, படைப்பால் அவர் கவிஞர், சிறுகதையாளர், நாடக ஆசிரியர்.

11 நாடக தொகுப்பு நூல்களை வெளியீட்டிருக்கும் இளங்கோவன், அதிகாரத்தை எதிர்க்கும் ஒரு போராளி. அவர் நாடகங்களில் ஒடுக்கப்பட்டவர்களின் குரல்களே ஓங்கி ஒலிக்கும். இளங்கோவனின் பேட்டிகள் கட்டியம் என்ற 'journal'-லும் மனுஷய புத்திரனின் உயிர்மை அச்சு இதழிலும் முன்பு வந்துள்ளன. வல்லினம் சிறப்புப் புத்தகத்திற்கான இந்தப் பேட்டியில், இளங்கோவனிடம் கேட்கப்பட்ட 22 கேள்விகளுக்கு, அவர் விரிவாகப் பதில் அளிக்கிறார். அவருடைய இலக்கியப் பயணம் பற்றியும், படைப்புகள் பற்றியும், மலேசிய சிங்கப்பூர் தமிழக அனைத்துலக இலக்கியம் பற்றியும் அவர்தம் நேர்காணலில் விரிவாகக் கூறியிருக்கிறார்.

கேள்வி: இன்றைய மலேசியா- சிங்கப்பூர் கவிதைகளில் பெருமளவு மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதாகவே கருதுகிறேன். சிற்றிதழ்களுக்கென ஒரு கவிதை பாணியும் உருவாகி தனி நபர் சார்ந்து மிகவும் வேகமாக வளர்ந்து வருவதாகவும் நினைக்கிறேன். இந்தத் தொகுப்பு மலரில் வெளிவந்துள்ள கவிதைகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

திரட்டப்பட்ட கவிதைகளில் ம. நவீன், சந்துரு, தோழி முதலியோர் எழுதிய சில கவிதைகள் என்னைக் கவர்ந்துள்ளன. பந்தா இல்லாத ஒரு தலைவனின் இயல்பை ம. நவீன் இப்படிப் பார்க்கிறார்;

ஒன்றுபோலவே வந்தமரும் சிட்டுக்குருவிகள்
ஒன்றுபோலவே பறக்கின்றன
அவற்றை அழைத்துவரும்
தலைமை பறவைக்கு
கூடுதலான
வண்ணமோ வடிவமோ
ஒருபோதும் இல்லை.

ஓர் இடத்தின்மீது இருக்கும் தம் தீர்க்கமான பற்றுதலைச் சந்துரு இவ்வாறு எழுதுகிறார்;

20 வருடங்களுக்கு முன்
எங்கிருந்தாய் என்றனர்
இங்குதான் இருந்தேன் என்றேன்
20 வருடங்களுக்குப் பிறகு
எங்கிருப்பாய் என்றனர்
இங்குத்தான் இருப்பேன் என்றேன்
என் பதில் அவர்களுக்குப் பிடிக்கவில்லை.

ஒரு கனவு வழியாக நனவிலி மனம் தன் குடும்ப உறுப்பினர்களான அம்மா, அப்பா, தம்பி பற்றி எண்ணுவதை தோழி கூறுகிறார்;

ஆழ்ந்த உறக்கத்தில்
கனவு என்னை
குளியலறையை நோக்கி
அழைத்துச் சென்றது.

பளபளக்கும் கண்ணாடியில்
அன்று குளித்தவர்களின்
நிர்வாணம்
காட்சிகளாகத் தோன்றி
மறைந்தன.

கேள்வி: தோழியின் அந்தக் கவிதை மலேசியத் தமிழ் சூழலில் ஓரளவிற்குச் சலனத்தை ஏற்படுத்தியது மட்டுமல்ல, நிறைய விமர்சனங்களையும் பெற்றுவிட்டது என்றே சொல்லலாம். அவருடைய அந்தக் கவிதையில் குளியலையும் நிர்வாணத்தையும் ஒரு படிமமாகவே கையாண்டுள்ளார்.

ஆமாம். நவீனக் கவிதைகளில் படிமத்தை உருவாக்கி கவிதையை நகர்த்துவது குறிப்பிடத்தக்க முயற்சியாகும். நனவு மனதைக் கொண்டு சில விசயங்களைச் சொல்வது மிகவும் கடினமாகும். ஆகையால் இந்தக் கவிதையில் தோழி கனவு மனதைக் கொண்டு தொடங்குகிறார். இது ஒரு வகையில் சர்யலிச சிந்தனை எனக்கூட சொல்லலாம்.ஆரம்பத்தில் லத்தின் அமெரிக்க மொழிகளில் இயற்றப்பட்ட இலக்கியங்கள் சர்யலீசத்தையும் மாய யதார்த்தத்தையும்தான் சார்ந்திருந்தது.

இவ்விதழில் குறிப்பிடத்தக்க ஏனைய படைப்புகளில் சிறுகதைகளும் அடங்கும். சிறுகதைகளை, மா.சண்முகசிவா, கோ.புண்ணியவான், சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி போன்ற மூத்த எழுத்தாளர்களும், ம. நவீன், சு.யுவராஜன் போன்ற இளம் எழுத்தாளர்களும் எழுதியிருக்கிறார்கள். ஆதரவற்ற திணே என்பவளைக் காப்பாற்றுகின்ற துர்க்காபாயின் கரவற்ற செயலை மா.சண்முகசிவா சித்தரிக்க, இறந்துபோன தன் சொந்த தாய்மாமாவின் கார்ட்டூன் வாழ்க்கையைக் கதைப்படுத்துகிறார் ம. நவீன்.

வல்லினம் சிறப்புப் புத்தகத்தில், அனுபவக் கட்டுரை, அறிவியல் கட்டுரை, வரலாற்றுக் கட்டுரை, விமர்சனக் கட்டுரை, இசைக்கட்டுரை, என பலத்தரப்பட்ட கட்டுரைகள் பதிக்கப்பட்டுள்ளன. தம்மோடு முதுகலைப்பட்ட வகுப்பில் படிக்கும் காதுகேளாத, வாய்ப் பேசமுடியாத சக மாணவன் அந்தோணி, அசை மொழி வாயிலாக எவ்வாறு கற்கிறான் என்பதை ’நிறைய கண்களுடன் ஒருவன்’ என்ற தம் அனுபவக் கட்டுரையில் விவரிக்கிறார் வீ.அ.மணிமொழி. இது ஒரு அனுபவம் சார்ந்த கட்டுரை. படித்து முடிக்கும்போது அந்த அந்தோணியிந்தான் உருவம்தான் கண்களுக்குள் விரிகிறது. ஐம்புலன்களுக்கு அப்பாற்பட்டு கற்பது என்பதை வியப்பாகவே சொல்ல வேண்டியிருக்கிறது. தென் அமெரிக்காவில் வாழ்ந்த மாயா இனத்தவரைப் பற்றி ‘உலகின் இறுதி நாள்’ என்ற தம் அறிவியல் கட்டுரையில் கூறுகிறார் விக்னேஷ்வரன். அறிவியல் ரீதியில் மறைந்துபோன ஓர் இனத்தின் தகவல்களை, வாழ்க்கையை, வரலாற்றைத் தன் கட்டுரையில் பதிவு செய்துள்ளார். அவர்களின் தொழில்நுட்பம் சார்ந்தும் சில தகவல்கள் வியக்க வைக்கின்றன.

சித்ரா ரமேஷின் ‘ஒரு டோடோ பறவையின் வரலாறு’ கட்டுரை, இலக்கியத்தில் நவீனத்துவம் குறித்து பேசுகிறது. சிங்கப்பூரில் நடத்தப்பட்ட நவீன இலக்கியக் கருத்தரங்கத்தில் இந்தக் கட்டுரையைச் சித்ரா ரமேஷ் வாசித்திருக்கிறார். டோடோ பறவையின் வாழ்க்கையை நவீனத்துவத்துடன் இணைத்து மிக கூர்மையாக இந்தக் கட்டுரையை எழுதியிருக்கிறார். மஹாத்மன் சிறுகதை தொகுப்பை வாசித்த சிவா பெரியண்ணன், அவர் கதைகள் மலேசிய விளிம்பு நிலை மனிதர்களின் போராட்டங்களையும், அவருடைய தேசாந்திர அனுபவங்களையும் விவரிக்கின்றன என்று விமர்சிக்கிறார்.

கேள்வி: மஹாத்மன் சிறுகதைகள் குறித்து உங்களுக்கு என்ன புரிதல் உண்டு?

மஹாத்மன் சிறுகதைகளில் குறுநாவலுக்குரிய அம்சம் இருக்கும் என சிவா பெரியண்ணன் சொல்வதில் எனக்கும் உடன்பாடு உண்டு. அவரது சிறுகதைகளை மொத்தமாகத் தொகுத்து மதிப்பிட்டால், அவையனைத்தும் ஒரு நீண்ட நெடிய நாவலின் பகுதிகளாகத் தெரியும். அந்த நாவலைத்தான் சிறு சிறு பகுதிகளாக அவர் எழுதி வருகிறார் எனத் தோன்றுகிறது. மேலும் மஹாத்மன் ஒரு தேசாந்தரி என்பதால், இடத்திற்கு இடம் அவர் பயணிக்கும் தன் தேசாந்திர அனுபவத்தைக் கதைகளாகப் பதிவு செய்துள்ளார். அவருடைய முந்தைய அனுபவங்கள் மதத்தைச் சார்ந்தும் பல விநோதமான தகவல்களையும் மதிப்பீடுகளையும் கொடுக்கின்றன. குறிப்பாக கிருத்துவ நம்பிக்கைகளை அவர்களுடைய மத உணர்வுகளை மஹாத்மன் பல இடங்களில் பதிவு செய்து அதைக் கேள்விக்கும் உட்படுத்துகிறார்.

தொடர்ந்து ‘நான் பார்த்த இளையராஜா’ என்ற இசைக்கட்டுரையில் இசைஞானியின் தயாளக் குணத்தைக் கூறி நெகிழ்கிறார் அகிலன். பொதுவில் இளையராஜா மிகவும் கடுமையானவரைப் போலவும் யாரிடம் சகஜமாகப் பேசமாட்டார் என்பது போலவும் அவர் குறித்த பிம்பத்தை ஊடகங்கள் கட்டி வைத்துள்ளது. ஆனால் அகிலனின் இந்த இசைக் கட்டுரையை வாசிக்கும்போது அவருடன் இளையராஜா மிகவும் அணுக்கமாகப் பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார் என்பது தெரிய வருகிறது. ஆரம்பக்காலக்கட்டத்தில் அங்கும் இங்கும் அலைந்து சிரமப்பட்டு, தன் மூத்த சகோதரர் திரு.வரதராஜுவால் அடையாளப்படுத்தப்பட்ட இளமைக்கால இளையராஜவைத்தான் அகிலனில் அவர் பார்த்திருக்கக்கூடும் என நினைக்கிறேன்.

சு. யுவராஜன் ‘வேட்கைக் காற்று’ என்ற தம் கட்டுரையில் 13 மலேசியக் கலைஞர்களையும் அறிமுகப்படுத்துகிறார். இது ஒரு முக்கியமான அறிமுகக் கட்டுரை. டாக்டர் எம்.எஸ் லட்சுமி ‘சிங்கப்பூர் தமிழ் இலக்கிய முன்னோடிகள்’ எனும் கட்டுரையில் 6 சிங்கப்பூர் படைப்பாளிகளையும் அறிமுகம் செய்கிறார்கள்.

கேள்வி: இந்தத் தொகுப்பு நூலைச் சார்ந்து சிங்கப்பூர் எழுத்தாளரும் ஆய்வாளரும் விமர்சகருமான பலவகையான பன்முகம் கொண்ட தாங்கள் எம்மாதிரியான புரிதலை அல்லது கருத்தாக்கங்களைக் கொண்டிருக்கிறீர்கள்?

வல்லினம் ‘மலேசிய-சிங்கப்பூர் 2010’ சிறப்புப் புத்தகம் பற்றி மூன்று கருத்துகள்:

அ. மலேசிய சிங்கப்பூர் படைப்பாளிகளை இணைக்கும் ஓர் இலக்கிய உறவுப் பாலமாக இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆ. இளம் தமிழ் வாசகர்களுக்கு, மலேசிய சிங்கையின் அண்மைய ஆக்கங்களை இம்மலர் அறிமுகப்படுத்துகிறது. தமிழுக்குள் புதியதாக நுழையும் இளம் வாசகர்களுக்கான இங்கு அண்மையில் படைக்கப்பட்டிருக்கும் இலக்கியத்தை அறிமுகப்படுத்தும் சிறந்த ஆவணமாக வல்லினத் தொகுப்பு இருக்கும். மேலும் தமிழகத்தில் இருந்து எழுதி வரும் பல முக்கியமான எழுத்தாளர்களுக்கும் மலேசியா சிங்கப்பூரின் நவீன இலக்கியங்களை அறிமுகப்படுத்தவும் முடியும்.

இ. இருப்பத்தோறாம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுக் கால, மலேசிய-சிங்கப்பூர் நாடுகளின் நவீன படைப்புகளை ஆய்வாளர்கள் இனம்காணும் வகையில், இந்தச் சிறப்புப் புத்தகம் ஓர் ஆவணமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் மலேசிய இலக்கியவாதிகளின் வாசகர்களின் நூலகத்தில் கட்டாயம் இடம்பெற வேண்டிய தொகுப்பு இது. பாதுகாக்கப்பட வேண்டிய முயற்சி.

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768