இதழ் 24
டிசம்பர் 2010
  மக்கள் ஓசை ஞாயிறு பதிப்பு ஆசிரியருக்கு ஒரு கடிதம்
கே. பாலமுருகன்
 
 
 
  நேர்காணல்:

"ஒற்றுமை என்பது புனிதமானதல்ல!"

சேனன்

தமிழ்நாட்டைச் சாராமல், இலங்கைத் தமிழ் இலக்கியவாதிகளால் தனித்தியங்க முடியும்!
லெ. முருகபூபதி

சிங்கப்பூர் மூத்த எழுத்தாளர் இராம கண்ணபிரானுடன் ஓர் உரையாடல்... 'மலேசியா - சிங்கை 2010' நூலை முன்வைத்து'
கே. பாலமுருகன்


பத்தி:

தி பீட்டல்ஸ் (The Beatles)
அகிலன்

ஜே. ஜே. சில குறிப்புகள் : சில சிந்தனைகள்
சு. யுவராஜன்


விமர்சனம்:

ஆஸ்ட்ரோ வெள்ளித்திரை குறும்படப் போட்டி 2010 - தேர்வான பத்து மலேசிய குறும்படங்களின் விமர்சனம்
கே. பாலமுருகன்

சில நேரங்களில் சில ஏவாள்கள் - தொன்ம குறியீடும் ஆதியில் தோற்றுப்போன ஏவாளும்
கே. பாலமுருகன்

ஸ்ரீரஞ்சனியின் நான் நிழலானால்... ஒரு விமர்சனப் பார்வை
கலாநிதி மைதிலி தயாநிதி

இலங்கைக் கவிஞர் எஸ். நளீமின் 'இலை துளிர்த்து குயில் கூவும்'
எம். ரிஷான் ஷெரீப்

பதிவு:

வல்லினம் சந்திப்பு 1 - சில நினைவுகள்
யோகி


சிறுகதை:

தங்கராசு
ஷைலஜா

தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...6
எம். ஜி. சுரேஷ்

நடந்து வந்த பாதையில் ...13
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

ஆன்ம விரல்கள் அளாவிய கூழ் ...1
சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...14

ம‌. ந‌வீன்

யதீந்திரா

ஏ. தேவராஜன்

செல்வராஜ் ஜெகதீசன்

ரெ. பாண்டியன்


கிண்ணியா எஸ்.பாயிஸா அலி



எதிர்வினை:


சமூக போராளியின் நேர்காணல்
வெ. தனலெட்சுமி

தவறுக்கு வருந்துகிறேன்
எம். கே. குமார்


கடிதம்:

மக்கள் ஓசை ஞாயிறு பதிப்பு ஆசிரியருக்கு ஒரு கடிதம்
கே. பாலமுருகன்
     
     
 

வணக்கம். நான் பத்திரிக்கைகளுக்கு எழுதுவதை நிறுத்தி முதலாம் ஆண்டு நினைவு விழாவும் முடிந்துவிட்ட இந்தவேளையில் திடீரென உங்கள் ஞாயிறு பதிப்பைப் பார்த்து (28.11.2010) அதிர்ச்சியுற்று காய்ச்சலும் வந்துவிட்டது. எனக்கு மட்டுமல்ல என்னுடைய நண்பர்கள் சிலரும் தொலைப்பேசியில் அழைத்து தங்களின் அதிர்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்கள். 2007 ஆம் ஆண்டில் ஏற்கனவே மக்கள் ஓசையில் பிரசுரமாகிவிட்ட இந்த ‘மலர்கொடி’ சிறுகதையின் மீது உங்களுக்கு உள்ள ஆர்வத்தையும் பற்றையும் நினைக்கும்போது மெய்சிலிர்த்துப் போகிறேன். ஆகையால்தான் அந்தச் சிறுகதையை அப்படியே கடந்த 28.11.2010 (ஞாயிறு) அன்று மீள்பிரசுரம் செய்து 50 வெள்ளி பரிசும் கொடுத்துள்ளீர்கள்.

இனி உங்களுக்குப் பிடித்தமான உங்கள் மனதைக் கவர்ந்த கதைகளை, அது எந்த வருடத்தில் எழுதப்பட்டு உங்கள் பத்திரிக்கையில் பிரசுரம் ஆகியிருந்தாலும் அதை மீள்பிரசுரம் செய்வதற்குத் தயங்காமல் ஒத்துழைப்பீர்கள் என்கிற நம்பிக்கையைக் கொடுத்துள்ளீர்கள். மனம் நெகிழ்கிறது. இருந்தாலும் இப்படிப்பட்ட ஒரு செயலை அல்லது தீர்மானத்தை எடுக்கும்போது இனியாவது சம்பந்தபட்ட எழுத்தாளனுக்கு மதிப்பளித்து கதை மீள்பிரசுரம் குறித்து தெரியப்படுத்துங்கள். அப்படிச் செய்யத் தவறினால் அது மிகப்பெரிய குற்றம் என அடையாளப்படுத்த முடியும்.

மலர்கொடியின் மீது இத்துனை விருப்பமா? அதாவது மலர்கொடி என்கிற சிறுகதையின் மீது உங்களுக்குள்ள அசைக்க முடியாத நம்பிக்கை இருப்பதை உணர்கிறேன். ஆனால் உங்களின் இந்தச் செயலுக்கு முன்னால் என் தீர்மானம் பொய்த்துப் போக வாய்ப்பளித்துவிட்டீர்களே? மலேசியப் பத்திரிக்கைகளுக்கு எழுதக்கூடாது என்கிற என்னுடைய கடந்த வருடத் தீர்மானத்தை, ஒருநாளில் பொய்யாக்கிவிட்டீர்களே என நினைக்கும்போது, உங்களுடைய பின்நவீனத்துவக் குழாயில் சிக்கிக் கொண்ட என் மலர்கொடியை ஏக்கமாக மட்டுமே பார்க்கத் தோன்றுகிறது.

1. 2007 இல் நான் இந்தச் சிறுகதையை எழுதும்போது என் மொழிநடையும், என் சிந்தனையும் வாசிப்பும் சிறுகதை ஆற்றலும் வேறுமாதிரிதான் இருந்திருக்கும். அந்தப் பின்புலத்தைக் கொண்டுதான் மலர்கொடி சிறுகதையை எழுதியிருந்தேன். இப்பொழுது 4 வருடங்கள் ஆகிவிட்டன. என் நிலை மாறியிருக்கும். என் வாசிப்பு, தேடல், வளர்ச்சி எல்லாவற்றையும் கேலி செய்யும் வகையில் எந்த அர்த்தமுமின்றி 4 வருடங்களுக்கு முந்தைய கதையை எந்தப் பின்குறிப்பும் இல்லாமல் மீள்பிரசுரம் செய்வதற்கு யார் உங்களுக்கு உரிமையைக் கொடுத்தது?

2. உங்களுக்குப் பிரசுரிப்பதற்குக் கதை வேண்டுமென்று என்னிடம் சொல்லியிருந்தால், கட்டாயம் என் அநங்கம் இதழில் ஒரு விளம்பரம் செய்து உங்களுக்கு இலவச எழுத்தாளர்களைச் சேர்த்திருப்பேன். 4 வருடத்திற்கு முந்தைய சிறுகதையை, ஏதோ கடந்த வாரம் எழுதப்பட்ட கதை போல பிரசுரித்து பணமெல்லாம் கொடுக்கும் அளவிற்கு என்ன சிக்கல் எனச் சொல்லமுடியுமா?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768