முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 25
ஜனவரி 2011

  இது இருப‌த்து ஐந்தாவ‌து இத‌ழ்
ம‌. ந‌வீன்
 
 
       
நேர்காணல்:

"புரட்சியாளர்கள் இறக்குமதிச் சரக்குகளல்ல"

ஆதவன் தீட்சண்யா


பத்தி:

இது இருப‌த்து ஐந்தாவ‌து இத‌ழ்
ம‌. ந‌வீன்


சிறுகதை:

சிற்றறிவு
எஸ். ராமகிருஷ்ணன்

அப்பாவின் தண்டனைகள்
ஏ. தேவராஜன்


பதிவு:

எழுத்தாளார் அ. ரெங்கசாமிக்கு விருது


கேள்வி பதில்:

சாரு பதில்கள்
சாரு நிவேதிதா


தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...7
எம். ஜி. சுரேஷ்

நடந்து வந்த பாதையில் ...14
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

ஆன்ம விரல்கள் அளாவிய கூழ் ...2
சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி

ஒளிந்து விளையாடும் சினிமாவின் கதைகள் ...1
கே. பாலமுருகன்

புலம் பெயர் வாழ்வு ...1
இளைய அப்துல்லா

சுவடுகள் பதிவுமொரு பாதை ...1
பூங்குழலி வீரன்

வழித்துணை ...1
ப. மணிஜெகதீசன்

மொழியியல் ஒரு பார்வை ...1
வீ. அ. மணிமொழி

விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு ...1
ம‌. ந‌வீன்

தர்மினி பக்கம் ...1
தர்மினி

பயணிப்பவனின் பக்கம் ...1
தயாஜி

கட்டங்களில் அமைந்த உலகு ...1
யோகி



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...15

தேனம்மைலெக்ஷ்மணன்

செல்வராஜ் ஜெகதீசன்

கே. பாலமுருகன்

எம். ரிஷான் ஷெரீப்

ரெ. பாண்டியன்


எதிர்வினை:

"மலேசியா - சிங்கப்பூர் 2010" வல்லினம் தொகுப்பை முன்வைத்து கவிதைகள் ஒரு பார்வை
தவமணி (KSAH)

ஒரு அதிஷ்டம் நிறைந்த நாள்
சுரேந்திரகுமார்

அறிவிப்பு:

எஸ். ராமகிருஷ்ணனின் துயில் நாவல் வெளியீடு

நேர்காணல் மூன்றாம் இதழ்

கே. பாலமுருகனுக்கு 2009 ஆண்டிற்கான கரிகாற் சோழன் விருது

வ‌ல்லின‌த்திற்கு இது ஐந்தாவ‌து வ‌ய‌து. 2007 இல் காலாண்டித‌ழாக‌ உருவான‌ வ‌ல்லின‌ம் 2009 ல் மாத‌ இத‌ழாக‌ இணைய‌த்தில் வ‌லம் வ‌ர‌த்தொட‌ங்கிய‌து. 2011ல் இந்த‌ ஜ‌ன‌வ‌ரி மாத‌ம் 25 ஆவ‌து இத‌ழாக‌ த‌ன்னை வெளிப்ப‌டுத்திக்கொள்கிற‌து. ம‌லேசியாவில் மாற்று பார்வை கொண்ட‌‌ இத‌ழ்க‌ள் தொட‌ர்ந்து வெளிவ‌ருவ‌து சாத்திய‌மா என்ற‌ கேள்விக்கு 'வ‌ல்லின‌ம்' த‌ன‌து அழுத்த‌மான‌ ப‌தில்க‌ளை தொட‌ர்ந்த‌ செய‌ல்பாட்டின் வ‌ழி வ‌ழ‌ங்கிக்கொண்டிருக்கிற‌து.

இத‌ழ் ம‌ட்டும‌ல்லாம‌ல் வ‌ல்லின‌ம் த‌ன்னை ஓர் இய‌க்க‌மாக‌வும் அவ்வ‌ப்போது வெளிக்காட்டிக்கொண்டே இருக்கிற‌து. த‌மிழ‌க‌ம் ம‌ற்றும் புல‌ம்பெய‌ர்ந்த‌ எழுத்தாள‌ர்க‌ளுடனான‌ ச‌ந்திப்புக‌ள், ம‌லேசிய‌ எழுத்தாள‌ர்க‌ளுட‌னான‌ க‌ல‌ந்துரையாட‌ல்க‌ள், புத்த‌க‌ப் ப‌திப்புக‌ள், ஓவிய‌ க‌ண்காட்சி, நிழ‌ல்ப‌ட‌க் க‌ண்காட்சி, சிறுக‌தை ம‌ற்றும் க‌விதை க‌ருத்த‌ர‌ங்குக‌ள் என‌ ஒவ்வொரு செய‌ல்பாடும் ம‌லேசிய‌ க‌லை இல‌க்கிய‌த்தை அடுத்த‌டுத்த‌க் க‌ட்ட‌த்திற்கு ந‌க‌ர்த்த‌வே திட்ட‌மிட்டு செய‌ல்ப‌டுத்த‌ப்ப‌டுகின்ற‌ன‌.

வ‌ல்லின‌த்தின் இந்த‌ப் ப‌ய‌ணத்தில் த‌மிழ‌க‌ ம‌ற்றும் புல‌ம்பெய‌ர்ந்த‌ த‌மிழ‌ர்க‌ள் ஆர்வ‌த்தோடு ப‌ங்கெடுப்ப‌தில் ந‌ம‌க்கும் ம‌கிழ்ச்சிதான். ஆனாலும் எங்க‌ள் நோக்க‌ம் ம‌லேசிய‌ ம‌ற்றும் சிங்கை இல‌க்கிய‌த்தை முன்னெடுத்துச் செல்வ‌துதான் என்ப‌தில் தெளிவாக‌ இருக்கிறோம். அவ்வ‌கையில் இவ்வாண்டும் மிக‌ முக்கிய‌மான‌ இர‌ண்டு திட்ட‌ங்க‌ளை வ‌குத்து செய‌ல்ப‌டுத்த‌ ஆர்வ‌ம் கொண்டுள்ளோம்.

ஆவ‌ண‌ ப‌ட‌ம்

ம‌லேசிய‌ இல‌க்கிய‌ வ‌ர‌லாறும் ம‌லேசிய‌ இல‌க்கிய‌வாதிக‌ளின் ஆளுமையும் எழுதுப‌வ‌ர்க‌ள் அர‌சிய‌லின் அடிப்ப‌டையில் மாற்றிய‌மைக்க‌ப் படுகின்ற‌து. ஒவ்வொருவ‌ரும் அவ‌ர‌வ‌ர் விருப்பு வெறுப்பு அடிப்ப‌டையில் சில‌வ‌ற்றை நீக்க‌வும் சேர்க்க‌வும் செய்கின்றன‌ர். இந்த‌ப் போக்கு தொட‌ராம‌ல் இருக்க‌வும் ம‌லேசிய‌ இல‌க்கிய‌வாதிக‌ளின் ப‌டைப்புல‌கையும் ஆளுமையையும் ப‌திவுசெய்ய‌வும் எழுத்தாள‌ர்க‌ளின் ஆவ‌ண‌ப்ப‌ட‌ங்க‌ள் த‌யாரிக்கும் ப‌ணி ந‌ட‌ந்து வ‌ருகிற‌து. இப்ப‌திவு குறுந்தட்டாக (CD) வ‌டிவ‌மைக்க‌ப்ப‌ட்டு வெளியிட‌ப்ப‌டும். எத்த‌னை ஆண்டுக‌ள் ஆனாலும் ம‌லேசிய‌ இல‌க்கிய‌வாதிக‌ளின் வாழ்வு அவ‌ர்க‌ள் குர‌ல் வ‌ழியே தொட‌ர்ந்திருக்க‌ இம்முய‌ற்சி பெரிதும் உத‌வும் என‌ ந‌ம்புகிறோம்.

சிறுக‌தை போட்டி

ஆசிரிய‌ர் ப‌யிற்சி க‌ல்லூரி மாண‌வ‌ர்க‌ளுக்கு ம‌த்தியில் ஆரோக்கிய‌மான‌ சிறுக‌தை எழுதும் போக்கு உண்டாக‌ க‌ல்லூரிக‌ள் தோறும் ப‌யிற்சி ப‌ட்ட‌றை ந‌ட‌த்துவ‌துட‌ன் சிறுக‌தை போட்டியும் ந‌ட‌த்த‌ முடிவு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து. மேலும் மாண‌வ‌ர்க‌ளின் நல்ல‌ சிறுக‌தைக‌ள் தொகுக்க‌ப்ப‌ட்டு புத்த‌க‌மாக‌ அச்ச‌டிக்க‌ப்ப‌டும். புத்த‌க‌ங்க‌ள் இல‌வ‌ச‌மாக‌வே எல்லா ஆசிரிய‌ர் ப‌யிற்சி க‌ல்லூரிக‌ளுக்கும் வ‌ழ‌ங்க‌ப்ப‌டும்.

நிழ‌ல்ப‌ட‌த்தொகுப்பு

காண்ப‌தற்கு அரிய‌ ம‌லேசிய‌ ம‌ற்றும் சிங்கை எழுத்தாள‌ர்க‌ளின் புகைப்ப‌ட‌மும் வ‌ர‌லாற்றில் முக்கிய‌த்துவ‌ம் வாய்ந்த‌ இல‌க்கிய‌ நிக‌ழ்வுக‌ள் தொட‌ர்பான‌ ப‌ட‌ங்க‌ளும் இத்திட்ட‌த்தின் வ‌ழி சேக‌ரிக்க‌ப்ப‌டும். ஆண்டின் அடிப்ப‌டையில் அப்ப‌ட‌ங்க‌ள் வ‌ல்லின‌த்தில் தொகுக்க‌ப்ப‌டும். அடுத்த‌டுத்த‌ த‌லைமுறைக்கு அப்ப‌ட‌ங்க‌ள் ந‌ல்ல‌ ஆவ‌ண‌மாக‌த் திக‌ழும். எழுத்தாள‌ர்க‌ளும் எழுத்தார்வ‌ள‌ர்க‌ளும் உங்க‌ளிட‌ம் உள்ள‌ அரிய‌ புகைப்ப‌ட‌ங்க‌ளை வ‌ல்லின‌ம் மின்ன‌ஞ்ச‌ல் முக‌வ‌ரிக்கு அனுப்பிவைத்து உத‌வ‌லாம்.

எங்க‌ளின் தேவை

தொட‌ர்ந்து எங்க‌ளின் திட்ட‌ங்க‌ளை முன்னகர்த்த பொருளாதார‌ போதாமையே த‌டையாக‌ உள்ள‌து. எந்த‌ விள‌ம்ப‌ர‌த்தின் உத‌வியும் கிடைக்க‌ப்பெறாம‌ல், ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் பெற‌ப்ப‌டும் ப‌ண‌ம் மூல‌மாக‌வே இத்த‌னை கால‌மும் வ‌ல்லின‌ம் செய‌ல்ப‌ட்டு வ‌ந்த‌து. இந்நிலையில் தொட‌ர்ந்து மேற்க‌ண்ட‌ திட்ட‌ங்க‌ளை அமுல்ப‌டுத்த‌ வ‌ல்லின‌ம் வாச‌க‌ர்க‌ளிட‌ம் ப‌ண‌ உத‌வியோ அல்ல‌து விள‌ம்ப‌ர‌ உத‌வியோ எதிர்ப்பார்க்கிறோம். நீங்க‌ள் வ‌ழ‌ங்கும் ப‌ண‌ம் ஒவ்வொரு மாத‌மும் வ‌ல்லின‌ம் அக‌ப்ப‌க்க‌த்தில் ப‌ட்டிய‌லிட‌ப்ப‌டும். அதே போல‌ செல‌வுக‌ளும் ர‌சீதுக‌ளோடு தெரிவிக்க‌ப்ப‌டும். நிச்ச‌ய‌ம் வ‌ல்லின‌ம் வ‌ள‌ர்ச்சிக்காக‌ வ‌ழ‌ங்க‌ப்ப‌டும் ப‌ண‌ம் எவ்வ‌கையான‌ சுய‌ ம‌ற்றும் அனாவ‌சிய‌ தேவைக‌ளுக்குப் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டாது என்ப‌த‌னை தெரிவித்துக் கொள்கிறோம்.

வ‌ங்கி எண் : 512400202204 (Maybank)

அக‌ப்ப‌க்க‌த்தை மேம்ப‌டுத்த‌

வ‌ல்லின‌ம் இணைய இதழ் மரபார்ந்த (HTML) முறையில் ஒவ்வொரு மாதமும் வடிவமைக்கப்படுகின்றது. அத‌ன் வ‌ழிமுறைக‌ள் க‌டின‌மான‌வை. இத‌னால் அதிக‌ நேர‌ம் எடுத்து வ‌ல்லின‌த்தை உருவாக்க‌ வேண்டி இருக்கிற‌து. என‌வே எளிதாக‌ வ‌ல்லின‌த்தை ஒவ்வொரு மாத‌மும் பதிவேற்ற, தொழிற்நுட்ப‌ம் தெரிந்த‌வ‌ர்க‌ளின் உத‌வி தேவைப்ப‌டுகிற‌து. வ‌ல்லின‌ம் அக‌ப்ப‌க்க‌த்தை எளிதாக‌ உருவாக்க‌ ஆலோச‌னைக‌ளையும் வ‌ழ‌ங்க‌லாம்.

இனி வ‌ல்லின‌ம் புதிய‌ எழுத்தாள‌ர்களை ஊக்குவிக்க‌வும், மூத்த‌ எழுத்தாள‌ர்க‌ளை ஆவ‌ண‌ப்ப‌டுத்த‌வும், ச‌ம‌கால‌ எழுத்தாள‌ர்க‌ளை தீவிர‌மாக‌ இய‌ங்க‌ வைக்க‌வும் தொட‌ர்ந்து முனைப்பு காட்டும். 25வது இத‌ழை முன்னிட்டு 10 புதிய‌ தொட‌ர்க‌ளை இணைத்துள்ளோம். இது இன்னும் அதிக‌ரிக்கும். இன்னும் சில‌ர் எழுத‌ ஆவ‌ல் கொண்டுள்ள‌ன‌ர்.

அது நீங்க‌ளாக‌வும் இருக்க‌லாம். த‌ய‌ங்காம‌ல் உங்க‌ள் ஆக்க‌ங்க‌ளை அனுப்புங்க‌ள். அவ‌சிய‌மெனில் செறிவாக்க‌ப்ப‌ட்டு பிர‌சுரிக்க‌ப்ப‌டும்.

எல்லா வ‌கையான‌ தொட‌ர்புக்கும்:

மின்னஞ்சல்:

editor@vallinam.com.my

na_vin82@yahoo.com.sg

valllinamm@gmail.com


தொலைபேசி:

+6016 319 4522 (ம‌. ந‌வீன்)

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768