முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 26
பிப்ரவரி 2011

ஜனவரி 2011 (இதழ் 25) தொடங்கி வல்லினத்தில் "சாரு பதில்கள்". வல்லினம் வாசகர்களின் கேள்விகளுக்கு
சாரு நிவேதிதா எழுதும் பதில்கள் தொடர்ந்து இடம்பெறும். உங்களின் கேள்விகளை
editor@vallinam.com.my என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.






             
 

மலேசிய இந்தியர்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கும் 'இண்டர்லோக்' (Interlok) மலாய் நாவல் சர்ச்சை குறித்தான அலசல்கள்


"பறையனாக இருப்பதில் நமக்கு என்ன பிரச்சனை?"
ம. நவீன்

நாம் போராட்டம் என நம்பும் ஒன்று எதன் அடிப்படையில் உருவாகிறது எனும் தெளிவு நமக்கு பல சமயங்களில் இருப்பதில்லை. சில பிரச்சனைகள் வளரும் போது நாம் அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சில சமயங்களில் அதற்கு ஆதரவாகவும் இருக்கிறோம்...

காலம் கடந்த ஞானமும் தண்டனையும்: “இண்டர்லோக் சமூகத்தின் ஆழ்மனம்”
கே. பாலமுருகன்

“அந்த மலாய் நாவலில் இடம்பெற்றுள்ள சாதி துவேச வார்த்தையை (பறையர்) அகற்ற வேண்டும்”. அண்மையில் செய்தி அறிக்கை ஒன்றில் இந்த வாக்கியம் இடம்பெற்றிருந்தது. “பறையர்” எனும் சொல் மிகவும் கீழானது எனும் மிக அழுத்தமான எண்ணம் கொண்டவர்களின் வாக்குமூலம்தான் இது...

அடையாளமற்றவர்கள்
சு. யுவ‌ராஜ‌ன்

அந்த மழலை தமிழ் பேசும் வானொலி அலையைத் தவறுதலாகத் தட்டினால் அவ்வப்போது 42,000 இந்தியர்கள் இன்னும் முறையான அடையாள அட்டை இல்லாமல் இருக்கின்றனர் என்ற செய்தியைச் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் அன்றாடம் கொட்டிக் கொண்டிருக்கும் ஆயிரம் குப்பைகளுள் அதுவும் ஒன்றென வாளாவிருக்க முடியவில்லை...


சிறுகதை


அமென்
கிர‌க‌ம்

மேரியின் சொந்த ஊர் குருவாயூர். பள்ளிப்படிப்பைக் கான்வெண்ட் ஒன்றில் படித்தாள். கான்வெண்ட் குருவாயூரிலிருந்து பத்து கிலோமீட்டர் தள்ளியிருந்ததாள் கான்வெண்ட் ஹாஸ்டலில் தங்கிபடித்தாள். கான்வெண்ட் நடத்தி வந்தவர்கள் கிறிஸ்துவ அமைப்பை சேர்ந்தவர்கள்...

விட்டாச்சு லீவு
சின்னப்பயல்

“ஆகு, ஆகு”ன்னு பீச்சாங்கைப் பெருவெரல தரயில ஊணி சோத்தாங்கையிலிருந்த கோலிக்குண்டை, பீச்சாங்கையின் மோதிரவிரலுக்கு பக்கத்து வெரல்ல பொருத்தி, அந்த வெரலப்பின்னுக்கு இழூ……த்து எதிருல இருந்த என்னோட குண்டைக் குறி பாத்து அடிச்சான் செல்வா.


குறும்பட விமர்சனம்


'வாழ்க்கையை உரையாடுதல்' - சஞ்சய் குமார் பெருமாளின் ஜகாட் (Jagat)
கே. பாலமுருகன்

ஒரு ஒதுக்குப்புறமான உணவகம். அரை இருள் எங்கும் பரவியிருக்கிறது. எந்தப் போலியான ஒப்பனையும் இல்லாத உண்மையான இரு மனிதர்கள். மது அருந்தி கொண்டே உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் உரையாடலிலிருந்து காட்சிகள் இன்னொரு வாழ்க்கைக்குள் இழுத்துக் கொண்டு போகின்றன...

 
கேள்வி பதில்


பெற்றோல்
(இப்போதைய "தலையங்கம்")


கவிதை

o இளங்கோவன்
o லதாமகன்
தவ சஜிதரன்
o செல்வராஜ் ஜெகதீசன்
o ஏ. தேவராஜன்
ரெ. பாண்டியன்


தொடர்

அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...8
எம். ஜி. சுரேஷ்
1724 ஆம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்த இம்மானுவேல் காண்ட் ஒரு முக்கியமான சிந்தனையாளர் எனலாம். அறிவின் மீதான இவரது கோட்பாடு முக்கியத்துவம் வாய்ந்தது. தனக்கு முன் நிலவிய அறிவின் மீதான கோட்பாடுகளை இவர் நிராகரித்தார்...

நடந்து வந்த பாதையில் ...15
கமலாதேவி அரவிந்தன்
உள்ளே நுழைந்த மறுநிமிஷம், 'சேச்சி!' என்ற கூக்குரலோடு மாணவர்கள் சூழ்ந்து கொள்ள, முத்துசாமி சார், அலுவலக அறையினின்று வெளிப்பட்டார். மாநாட்டில் நடந்த அனைத்து சேதிகளையும்...

 
 
உல‌க‌த் த‌மிழ் எழுத்தாள‌ர்க‌ளின் க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்
இனி ஒவ்வொரு மாத‌மும் வ‌ல்லின‌த்தில்...

 
       
 
 
 
 
       
 
 
 
 
       
 
 
 
 
       
             

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768