|
|
இரண்டு அவன் இன்னருள்1
கதிரவன் எங்ஙனம்
பிரிக்க முடியாத
வழியும் கதிரும் உதிக்கும் அவனுமோ
அங்ஙனம் சிவனும் சக்தியும்.
சிவன் என்பவன்
அமைதி, சாந்தம், உறுதி, பற்றற்ற சாட்சி.
சிவன் ஆடலை நுகர்வோன்.
சிவன் இன்பத்திற்காக சக்தி
உலகமாக விளையாடுகிறாள்.
சிவன்
காற்றாட எழமாட்டாத வீற்றிருக்கும் உண்மை.
சக்தி
சதா காலாவதியாகும் அறிவு.
சிவன்
முத்துப்போல வியர்த்திருக்கும் கற்புநெறி
சக்தி
மூர்ச்சையாகும் புலனடக்கம்.
சிவன்
சாபமும் சாபவிமோசனமும்
சக்தி
சிறைமாறும் கைதி
சிவனும் சக்தியும் சேர்ந்தால்
ஆனந்தம்
என்று திரை விலக்கியது நல்லாசிரியன் உரை
மறைவில் நின்றது
ஆதிக்கம்
அன்றே.
1 திருமூலரின் கடவுள் வாழ்த்து வரி.
உயிர்ச் சிதறல்
அப்பா என்றழைத்தது குழந்தை
ஆபத்பாண்டவனே என்று கேட்டது எனக்கு
சென்ற ஆண்டு அப்பாவும்
இந்த ஆண்டு பெரியப்பாவும்
காலஞ்சென்றார்கள்
ஆபத்பாண்டவா என்ற அழைப்புக்குரியவர்களும்
அழைத்த குரல்களும்
நூற்றாண்டுகளாய் மரித்து மட்கிய பின்பும்
உயிர்ச் சிதறடிக்கும்
ஆபத்பாண்டவனே என்கிற அழைப்பில்
தேடிகொடுத்துவிட்டுச் சென்ற வாஞ்சையும்
சொல்லி அழத்தெரியாத அபயமும்.
|
|