|
|
இஸ்லாம் மதத்தில் தற்கொலை தாக்குதல் ஹலாலா? ஹராமா?

உலகத்தில் குர்ஆன் இன் போதனைகளையும் நபி பெருமானாரின் ஹதீஸ்
(வாய்மொழி)களையும் இறுக பின் பற்றும் முஸ்லிம்களைப் போல, வேறு மதங்களில்
இவ்வளவு இறுக்கம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
குர்ஆன் இனது ஒரு வசனம் அல்லது அல்லாஹ்வை பயந்து கொள் என்று சொல்லும்
பொழுது ஒரு முஸ்லிம் நாடு, மொழி, நிறம், பால், கறுப்பரா, வெள்ளையரா என்பதனை
எல்லாம் மறந்து அந்த வார்த்தைக்கு கட்டுப்பட்டு விடுவார்.
ஒருவன் தனது உயிரை அழித்துக் கொள்வதற்கு, தற்கொலைக்கு எந்த அனுமதியும்
இல்லை இஸ்லாம் மதத்தில்.
சொர்க்கம், நரகம் இரண்டையும் வலியுறுத்தி உலக வாழ்வு, ஆகிர (மறுமை) வாழ்வு
என்று இரண்டு வாழ்வைப் பற்றியும் குர்ஆனும் நபிகளாரின் வாழ்வும் ஒரு
இஸ்லாமியனுக்கு வழி காட்டிக் கொண்டிருக்கின்றன.
தற்கொலை செய்பவன் நரகில் நுழைவான் என்பது நபிகளாரின் பிரபலமான மொழி.
ஹதீஸ் கலை வல்லுனர்கள் இதனை ஐயந்திரிபுற நிரூபித்திருக்கின்றனர் இந்த ஹதீஸ்
(நபிமொழி) எந்த ழயீப் (பலவீனமான) ஆன அறிவிப்புமல்ல புஹாரி என்ற ஹதீஸ்
(நபிமொழி) கிரந்தத்தில் பதிவாகியிருப்பதனை காட்டுகின்றனர் முல்லாககள்;. ஆக
தற்கொலை ஹராம் (பெரும்பாவம்).
தற்கொலை செய்பவன் நரகில் நுழைவான் என்கிறது நபிமொழி.
மறுமை நாளை நம்பும் முஸ்லிம் நபிமொழியை பின்பற்ற வேண்டும். அல்லாது விடின்
அவர் காபிர் (இஸ்லாமிய மத மறுப்பாளர்) ஆகிவிடுவார்.
என்னும் பொழுது தற்கொலைத் தாக்குதல்தாரிகள் எவ்வாறு இஸ்லாம்
மார்க்கத்திலிருந்து வந்தார்கள் என்பது மிகச் சிக்கலான விடயமாகும்.
மத நம்பிக்கையை வரைமுறையை உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பின் பற்றும்
முஸ்லிம் தன்னுயிரை மாய்க்கும் ஹராமான (பாவமான) செயலைச் செய்ய எப்படித்
துணிந்தார் என்பதே ஒரு நெருக்கடியான வினாவாகும்.
நபிகளாரின் காலத்தில் பல இறைக் கொள்கையுடையவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும்
பல முறை யுத்தம் நிகழ்ந்திருக்கிறது.
யுத்தம் ஒரு முஸ்லிமின் மீது மிகத் தேவையான ஒன்றாக நபிகளாரின் காலத்தில்
இருந்திருக்கிறது.
முஸ்லிம்களை மக்காவில் இருந்து குறைஷி காபிர்கள் (அல்லாஹ்வை மறுத்தவர்கள்)
விரட்டியடித்த போது அவர்கள் அகதிகளாக மதீனாவுக்கு போய் சேர்ந்தார்கள்.
பின்னர் முஸ்லிம்கள் பலம் பெற்று மதீனாவில் இருந்து அகதிகளாக விரட்டப்பட்ட
10 வருடங்களின் பின்பு மக்காவுக்கு வந்து தமது சொந்த இடங்களைக் கைப்பற்ற
யுத்தம் புரிந்து வெற்றி பெற்றார்கள.; இதனை பத்ஹ்மக்கா (மக்காவின் வெற்றி)
என்று கூறுவர். இடையில் பல யுத்தங்கள் முஸ்லிம்களுக்கும் காபிர்களுக்கும்
நடந்திருக்கின்றன.
முஸ்லிம்கள் அந்த நேரத்தில் இருந்து மகிழ்வாக வாழத் தொடங்கினார்கள்
நபிகளாரும் அவரது தோழர்களும்.
ஆனால் இஸ்லாத்தை காக்க யுத்தம் செய்யும் படி அல்லாஹ்வே குர்ஆனில் கூறியுள்ள
விடயங்களை மார்க்க வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
"மறுமை வாழ்க்கைக்காக இவ்வுலக வாழ்க்கையை விற்றுவிடுபவர்கள் அல்லாஹ்வின்
பாதையில் யுத்தம் செய்யவும் இன்னும் எவர் அல்லாஹ்வின் பாதையில் யுத்தம்
புரிந்து அதில் அவர் கொல்லப்பட்டாலும் அல்லது வெற்றி பெற்றாலும் நாம்
அவருக்கு மகத்தான கூலியைக் கொடுப்போம்." (அன்னிஸா-74)
இந்த குர்ஆன் வசனம் இஸ்லாம் மார்க்கத்தை பாதுகாக்க யுத்தம் செய்யும்படி
வற்புறுத்துவதை தெளிவாக்குவதாகவும் சொர்க்கத்திற்கான வாக்குறுதியை
கொடுப்பதாகவும் ஆலிம்கள் (அறிஞர்கள்) தெரிவிக்கின்றனர்.
நபிகளாரின் காலத்தில் நபித் தோழர்கள் மார்க்கத்தையும் முஸ்லிம்களையும்
அவர்களது உடமைகளையும் பாதுகாக்க ஜிஹாத் (புனித போர்)இல் முஸ்லிம்கள்
ஈடுபட்டார்கள் என்றே வரலாறுகள் தெரிவிக்கின்றன.
ஆனால் அது கிறிஸ்தவர்களுக்கானதும் முஸ்லிம்களுக்கானதுமான யுத்தமாக
இருக்கவில்லை. பல இறைக் கொள்கையுடையவர்களுக்கும் ஓரிறை
கொள்கையுடையவர்களுக்குமான யுத்தமாகவே இருந்தது.
அல்லாஹ்வால் சொர்க்கம் வாக்களிக்கப்பட்ட யுத்தத்துக்கு சென்று தன்னுயிரை
போக்க எதிரிகளின் அம்பை தனது வீர மார்பில் ஏந்தி நபித் தோழர்கள் மரணித்து
சொர்க்கம் போனதாகத்தான், நபிமொழிகளும் நபித் தோழர்களது வாழ்க்கை
வரலாறுகளும் எமக்கு தெளிவுபடுத்துகின்றன.
ஆனால் தற்கொலைத் தாக்குதல்கள் நபிகளார் காலத்தில் இருக்கவில்லை. உயிரின்
மீது பற்று இல்லாமல் அல்லாஹ்வின் மீது அன்பு கொண்டு சொர்க்க ஆசையில் போய்
உயிர் துறந்தவர்கள் எவரும் தற்கொலை செய்யவில்லை.
எதிரிகளால் கொல்லப்பட்டனர். தற்கொலைத் தாக்குதல் ஹராம் (பாவம்) என்பதற்கு
இலங்கையில் உள்ள பல மார்க்க வல்லுனர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது
எல்லோரும் சொன்ன நபிமொழி ஆதாரம் இதுதான்.
குஸ்மான் என்கின்ற நபித்தோழர் ஒரு யுத்தத்தில் மிக வேகமாக மிக ஆர்வமாக
துணிகரமாக எதிரிகளிடையே புகுந்து வெட்டி வீழ்த்திக் கொண்டிருந்தர் (யுத்தம்
செய்தார்).
அந்த வீரதீரச் செயலைப் பார்த்த நபித் தோழர்கள் குஸ்மான் கொள்ளையிடும்
சுவர்க்க நன்மைகளைப் பார்த்து மிகவும் பொறாமைப்பட்டனர்.
நபியவர்களிடம் வந்து குஸ்மான் தொடர்பாக சிலாகித்து பேசினர். 8 காபிர்களை
(ஓரிறை நிராகரிப்பவர்களை) கொலை செய்து விட்டார் என்றனர்.
ஆனால் நபிகளார் (தீர்க்க தரிசனமாக) சொன்னார்கள் குஸ்மான் நரகவாதி.
நபியின் வார்த்தையில் மிகவும் நம்பிக்கை கொண்ட நபித் தோழர்களில் ஒருவர்
குஸ்மான் என்ற நபித் தோழரைப் பின் தொடர்ந்து போனார். ஒரு மரத்தினடியில்
பலத்த வெட்டுக் காயங்களுடன் சாய்ந்திருந்தவர் சொன்னார் நான் யுத்தம்
செய்தது எனது குலப் பெருமையை காப்பாற்ற அல்லாஹ்வுக்காக அல்ல என்றுவிட்டு
காயங்கள் ஏற்படுத்திய வலி மிகுதியால் தன்னுடைய ஈடட்டியால் தானே தனக்கு
குத்தி தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நபிமொழி தற்கொலை செய்வதை ஹராமாக்கி (பாவம்)யுள்ளது என்றே உலமாக்கள்
தெரிவிக்கின்றனர்.
நபிகளார் குஸ்மான் நபித்தோழராக இருந்தும் அவர் நரகவாதி என்று சொன்னதன்
மூலமாக இது நிரூபணமாகின்றது.
இஸ்லாமியர்களின் யுத்தம் தொடர்பான பல முக்கியமான விடயங்கள் திருக்குர்ஆன்
இல் பல இடங்களில் அழுத்தி சொல்லப்பட்டு வந்திருக்கிறது.
உலகின் ஒவ்வொரு மூலையிலும் யுத்தத்தின் வாசல்கள் திறந்து கொண்டுதான்
இருக்கின்றன. அது மதங்களுக்கிடையிலான இனங்களுக்கிடையிலான
மொழிகளுக்கிடையிலான கோத்திரங்களுக்கிடையிலான நாடுகளுக்கிடையிலான போராக பல
பல புதிய புதிய பரிமாணங்களை எடுக்கின்றன.
போர் எந்த ரூபத்திலும் வரலாம். அதனை தவிர்க்க கூடிய சாத்தியங்களை போரில்
ஈடுபடும் இரு பகுதியினரும் தான் ஏற்படுத்த வேண்டும்.
ஆனால் உலகில் முஸ்லிம்கள் மட்டும் தான் யுத்தவாதிகள் போல காட்டும் மீடியா
ஆக்கிரமிப்பு தான் தற்போதைய மேற்குலக, இஸ்லாமிய உலக நெருக்கடிக்கு காரணம்.
ஆனால் இந்த நெருக்கடி நிலை இனிமேல் குறைவதற்கான சாத்தியங்களே இல்லை
போலத்தான் எதிர்காலம் கண்முன் விரிந்து கிடக்கின்றது.
குர்ஆனும், ஹதீஸ_ம் இவ்வுலகம் நிலை இல்லாதது மறுமை வாழ்க்கை மட்டுமே
நிலையானது உடம்பு அழியக் கூடியது. உயிர் அழிவில்லாதது உயிரின்
சந்தோஷத்துக்காக அமல் (நற்செயல்) செய்யுங்கள் என்றே வற்புறுத்திக்
கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், பிறந்த உடன் குழந்தையின் காதில் அல்லாஹ_அக்பர் (அல்லாஹ்
பெரியவன்) என்று காதில் சொல்ல வேண்டும் என்ற வழிமுறையோடு ஆரம்பிக்கின்றது
ஒரு முஸ்லிமின் வாழ்வு.
ஒவ்வொரு முஸ்லிமும் சொர்க்கம் போக வேண்டுமென்றால் என்ன விலை கொடுக்கவும்
தயார். அது உயிராக இருந்தாலும்.
ஏனெனில் அப்படித்தான் வளர்க்கப்பட்டிருக்கிறார் முஸ்லிம்;. அது தவிர்க்க
முடியாத ஒன்று.
தற்கொலை செய்வது ஹராம் (பாவம்) என்பதன் பின்பு உயிரை மாய்த்துக் கொண்டு
நரகம் போக முஸ்லிம் ஏன் தயாரானார் என்ற கேள்விக்குள் தான் பிரச்சினையே
இருக்கிறது.
சில ஆலிம்கள் (இஸ்லாம் மார்க்க அறிஞர்கள்), முப்திகள் (மார்க்க சட்டக் கலை
வல்லுனர்கள்), தற்கொலை சில சந்தர்ப்பங்களில் ஹலால் (ஆகுமாக்கப்பட்டுள்ளது)
ஆகும் என்று சொல்கிறார்கள். இதுதான், தற்கொலைத் தாக்குதல் நடத்தும்
முஸ்லிம்களை வழிநடத்துகிறது.
அரபு நாட்டில் பல ஆலிம்கள் இருக்கிறார்கள். ஆனால் யூசுப் அல் கர்ளாவி என்ற
மார்க்க சட்டக் கலை வல்லுனரின் கூற்று பெரிதாக மதிக்கப்படுகிறது.
இஸ்லாம் மார்க்கத்தை, முஸ்லிம்களை அழிக்க வரும் எதிரிப்படையினுள் புகுந்து
தற்கொலைக் குண்டுதாரி குண்டை வெடிக்க வைத்து எதிரிகளை கொல்வது சரி
என்கிறார் யூசுப் அல் கர்ளாவி.
இது மார்க்கப் போர் ஜிஹாத் ஆகும் எனவும் விளக்கம் சொல்கிறார். அவரின்
கூற்று மதிக்கப்படுகிறது.
ஆனால் பொதுமக்கள் மீதான தற்கொலை தாக்குதல்கள் ஹராமானது அவருக்கு சொர்க்கம்
கிடைக்காது.
இன்னும் ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பலஸ்தீனத்தில் உள்ள உலமாக்களில்
பலர் இயக்கங்களோடு தொடர்புடையவர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் கள
நிலவரத்தை வைத்து பத்வா (மார்க்கத் தீர்ப்பு) கொடுக்கிறார்கள் இது கொஞ்சம்
விரிவாக ஆராயப்பட வேண்டிய விடயம்.
ஆனால் பொதுமக்கள் மீதான கொலைத் தாக்குதல்களை அனுமதிக்க முடியாது.
இருப்பினும் முன்சொன்ன யூசுப் அல் கர்ளாவியினுடைய பத்வா (மார்க்கத்
தீர்ப்போடு) எனக்கு உடன்பாடு இருக்கிறது என்கிறார். இலங்கையில் மார்க்க
சட்டக் கலை வல்லுனர்களின் ஒருவராகவும் நாவலப்பிட்டி தாருல் உலூமில்
ஹாஸிமிய்யயஹ் அரபுக்கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளராகவும் இருக்கும் மௌலவி
அமானுல்லாஹ் முப்தி.
தற்கொலைத் தாக்குதலில் ஈடுபடும் ஏனைய மத அல்லது இயக்கத்தவரை விட
முஸ்லிம்கள் பெரும் ஆபத்தானவர்களாக இருக்கின்றனர்.
ஏனெனில் வேறெதையும் விரும்பாத உலக வாழ்வை வெறுக்கின்ற முஸ்லிமுக்கு மறுமை
வாழ்வை மட்டும் காட்டி சொர்க்கம் கிடைக்க விருக்கிறது வாருங்கள் காபிர்களை
(இறைநிராகரிப்பாளர்களை) கொல்லுங்கள் என்று ஆலிம்கள் (மார்க்க அறிஞர்கள்)
அழைத்தால் வந்து விடுவார்கள்.
இப்பொழுது தற்கொலைத் தாக்குதல் மாறி இருக்கிறது. இது பெரும் ஆபத்தானதாகும்.
அப்பாவிகளை கொல்லுவதற்கு இது பயன்படுத்தப்படுகிறது. இது ஹராமானது ஆகும்.
எதிர்க்க வரும் எதிரியை பல வீனப்படுத்த கொல்ல தற்கொலைத் தாக்குதல்
ஆகுமானது. எங்களுக்கு முன்னால் நபிகளாரின் காலத்து உதாரணங்கள் நிறைய
இருக்கின்றன.
ஜிஹாத் (புனிதப்போர்) என்றாலே பெரு விருப்புடன் இஸ்லாமிற்காக தனது உயிரை
மாய்த்துக் கொண்டு அல்லாஹ்வின் திருப்தியை பெறுவதுதான்.
அபூ முஸா அஸ்ஹரி என்ற நபித் தோழர் ரோமாபுரியில் நடைபெற்ற காபிர்களுடனான
யுத்தமொன்றில் திடீரென்று படைக்குள்ளே போய் வாளால் வெட்டுப்பட்டு உயிர்
துறந்தார். யுத்தத்தில் மௌத் (மரணம்) ஆகும் சிறப்பு பற்றிய குர்ஆன் வசனம்
அவரை அவ்வாறு செய்ய வைத்திருக்கிறது. இது கூட வெளியில் இருந்து பார்த்தால்
ஒருவகை தற்கொலை போலத்தான் தெரிகிறது. ஆனால் இல்லை.
இது சொர்க்கம் வேண்டிய ஆசை. உங்களை அழிக்க வருபவர்களை எதிர்த்து மடிந்தால்
சொர்க்கம் என்று தான் குர்ஆன் வாக்களிக்கிறது.
யுத்தத்தில் இருந்து பின் வாங்குவது ஹராம் (பெரும்பாவம்).
நம்மை கொல்ல வருபவனை உயிர் கொடுத்தேனும் தாக்கலாம். இது தற்கொலை அல்ல,
தற்கொடை தான் என்கிறார் மௌலவி கலீலுர் ரஹீம் இவர் தாருல் உலூமில்
ஹாஸிமிய்யா அரபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளராக பணிபுரிகின்றார்.
"இஸ்லாமிய இளைஞர்கள் உலமாக்களின் கருத்துக்களை தவறாக விளங்கிக்
கொள்கின்றனர். லண்டனில் நடைபெற்ற தற்கொலைத் தாக்குதல்கள், அமெரிக்காவில்
இடம்பெற்ற செப்டம்பர் 11 தாக்குதல், மற்றும் ஈராக்கில் இடம்பெறும் பொது
மக்கள் மீதான தாக்குதல்கள் சிரிய, எகிப்து, இந்தோனிசியா போன்ற இடங்களில்
இடம்பெறும் நேரடியான யுத்தமல்லாமல் மேற்கொள்ளப்படும் தற்கொலை தாக்குதல்கள்,
எந்தவித சரிகாணலும் செய்ய முடியாதவை ஹராமானவை.
யுத்தத்தின் போது சேதம் விளைவிக்காமல் தவிர்க்க வேண்டியவைகளில்.. வயது
முதிர்ந்தோர் கொல்லப்படக்கூடாது, குழந்தைகள், பெண்களைக் கொல்லக்கூடாது,
மரங்களை வெட்டி அழிக்கக்கூடாது, கட்டடங்களை உடைக்க கூடாது. அனியாயம்
செய்யக்கூடாது என்று குர்ஆன் போதனை செய்துதான் யுத்தத்துக்கு வீரர்களை
அனுப்புகிறது.
எனவே அனியாயங்கள் எங்கு நடந்தாலும் முஸ்லிம்கள் செய்தாலும் கண்டிக்கப்பட
வேண்டியதே" என்று மௌலவி கலீலுர் ரஹீம் தெரிவித்தார்.
மறுமை நாளில் மூன்று பேருக்கு அல்லாஹ் நரகத்தை கொடுக்கிறான். அதில்
பெருமைக்காhக (அல்லாஹ்வுக்காக அல்லாமல்) போருக்கு சென்று மரணித்தவர்
ஒருவர்.
ஜிஹாத் (மார்க்கப்போர்) செய்பவராக இருந்தாலும் மன எண்ணம் இறைவனுக்காக
என்றில்லாமல் இருக்குமானால் சொர்க்கம் இல்லை என்பது இந்த நபி மொழியில்
இருந்து புலனாகிறது.
ஆனால் இப்பொழுது பார்க்கும் பொழுது நெப்போலியன் நாடுகளுக்கு ஆசைப்பட்டது
போல, ஹிட்லர் நாடுகளைப் பிடிப்பதற்கு அவாவுற்றது போல புஷ்ஷும் ரொனி
பிளேயரும் ஏனைய ஐரொப்பிய வல்லரசுகளும் உலகில் உள்ள எல்லா வளமான நாடுகள்
மீதும் மேலாதிக்கம், அடர்ந்தேறும் தன்மை கொண்டிருக்கின்றன.
ஆகவே அந்தந்த நாடுகள் மீது தாக்குதல் தொடுப்பது ஆகும்.
தற்கொலை தாக்குதல்களை அடர்ந்தேறும் நாடுகள் மீது நடத்தலாம் இதற்கு தற்காலிக
பத்வா (மார்க்கத் தீர்ப்பு) கொடுக்கலாம்.
அந்த அடர்ந்தேறிகளுக்கு சில எச்சரிக்கையை செய்வதற்காக அழுத்தங்களை
கொடுப்பதற்காக தற்கொலை தாக்குதல்கள் ஆகும்.
9-11 இரட்டைக்கோபுர தாக்குதலோ அல்லது 7-7 லண்டன் தாக்குதலோ தவறாகப்படவில்லை
எனக்கு|| என்கிறார் அரக்கியாலை ரவ்ளத்துல் ஹாபிளீன் அரபுக் கல்லூரி
ஆசிரியர் மௌலவி நவாஸ் அப்துல்லாஹ்.
~~இப்பொழுது முஸ்லிம்கள் மீது நடத்தப்படுவது போர். இதனை எதிர்கொள்வது
ஜிஹாத். இது போரின் பகுதிகளில் இருக்கும் முஸ்லிம்களின் பர்ள் (கடமை).
உலகில் எங்கெல்லாமோ முஸ்லிம்களிலும் அவர்களது நாடும் உடமையும் அழிப்பதற்கு
காபிர்கள் முயன்றால் அவர்களோடு யுத்தம் செய்வது பர்ள் (கடமை).
~~இலேசாகவும் கனமாகவும் (இளைஞர்கள், முதியவர்கள், செல்வந்தர்கள்,
செல்வமில்லாவர்கள், வாகனத்தில் ஏறியவர்கள், நடப்பவர்கள் ஆகியோர்)
புறப்பட்டு, உங்களின் செல்வங்களாலும், உங்களின் உயிர்களாலும் அல்லாஹ்வின்
பாதையில் நீங்கள் போர் செய்யுங்கள்@ நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் இதுவே
உங்களுக்கு மிகச் சிறந்ததாகும்.
(அத்தவ்பா 41)
திரு குர்ஆனில் பல வசனங்கள் இப்படி யுத்தத்தை சரியான முறையில்
விளங்கப்படுத்துகின்றன.
இதுவே ஆதாரமாக எம்முன் இருக்கிறது|| என்று மௌலவி நவாஸ் அப்துல்லாஹ்
தெரிவிக்கிறார்.
ஆனால் தற்கொலையாளி நரகம் தானே போவார் என்று கேட்டதற்கு
~~நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைக்கப்படுவதை மன்னிக்க மாட்டான்@ மேலும்
இதல்லாத (குற்றத்)தை தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்@ இன்னும் யார்
அல்லாஹ்வுக்கு இணை வைப்பாரோ அவர் திட்டமாக வெகு தூரமான வழிகேடாக வழி கெட்டு
விட்டார்.
(அன்னிஸா - 116)
இந்த குர்ஆன் வசனத்தை ஆதாரமாகக் காட்டி இல்லை என்று மறுதலிக்கிறார்.
ஏனெனில் அல்லாஹ், லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமா சொன்ன நம்பிக்கையுடைய
முஸ்லிமுக்கு சொர்க்கம் கொடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளான்@
எனவே நரகத்தில் சொஞ்சக்காலம் இருந்தாலும் மன்னித்து முஸ்லிமானதால்
சொர்க்கம் போவார், ஒரு முஸ்லிம் என்று தெரிவித்தார்.
உண்மையில் சொர்க்கம் நரகம் என்ற மறுமை வாழ்வு என்பதை எதிர்வு கூற முதல்
முஸ்லிம்கள் அமெரிக்கா, லண்டன், ஐரொப்பிய நாடுகளில் வெள்ளைக்காரர்களால்
தூசிக்கப்படுகிறார்கள். மனோரீதியான பாரிய
நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றனர்.
முஸ்லிம்கள் ஆடை விடயத்தில் கலாச்சாரம் பேணுவதால் இந்த சிக்கல்
தோன்றியிருக்கிறது. மிகப் பெரிய நெருக்கடிக்குள் முஸ்லிம் பெண்கள்
தள்ளப்பட்டிருக்கின்றனர்.
பிரிட்டனில் வாழும் முஸ்லிம் பெண்களை பர்தா அணிய வேண்டாம் என்று லண்டன்
பள்ளி வாசல்களின் இமாம்கள் சபைத் தலைவர் டொக்டர் ஸக்கி பதாவி வேண்டுகோள்
விடுத்திருக்கிறார்.
முஸ்லிம் பெண்கள் நேரடியாக வெள்ளைக்காரர்களால் தாக்கப்படுகிறார்கள் இது
இன்னும் தொடருகின்றன. தொடர்ந்தும் முஸ்லிம்கள் கைது செய்யப்படுகின்றனர்.
இதுஒரு வகை இன நெருக்கடிக்குள் லண்டன் சம்பவங்கள் தள்ளியிருக்கின்றன.
7-7 லண்டன் குண்டு வெடிப்புகளுக்கு பின்னர் 269 முஸ்லிம்கள் மீதான மத
வெறுப்பு குறறங்கள் பதிவாகியிருக்கின்றன.
சிறிய தாக்குதல்கள், தவறான வார்த்தை பிரயோகங்கள் என்பன உணர்வு பூர்வமான
மனத்தாக்கத்தை முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தியிருக்கின்றன என்கிறார் லண்டன்
பொலிஸ் துணை கமிஷனர் தாரிக் காஃபர்.
தற்கொலை என்பது இஸ்லாத்தில் ஹராமானது. அதற்கு எந்த விதத்திலும் ஆதாரம்
கொள்ள முடியாது. யூசுப் அல் கர்ளாவி போன்ற சவூதி ஆலிம்களின் கருத்தைக் கூட
எதிர்க்கும் மார்க்க சட்டக் கலை வல்லுனர்கள் இருக்கிறார்கள்.
ஒருவர் தன்னுயிரை மாய்த்துக் கொள்வதோ அல்லது தன்னுடம்பில் ஒரு
பகுதியையேனும் வேதனைப் படுத்துவதோ (தனக்குத்தானே எரித்தல், அல்லது
உறுப்புகளை வெட்டிக் கொள்ளுதல், கூரிய ஆயதங்களால் கீறுதல்) முற்றாக தடை
செய்யப்பட்டுள்ளது.
ஆனால் எதிரியை அழிக்க தற்கொலை ஹலால் (ஆகும்). என வெலேகொட இப்னு மஸ்ஊத்
அரபிக் கல்லூரி ஆசிரியர் மௌலவி நுஃமான் தெரிவித்தார்.
பல மார்க்க சட்டக்கலை வல்லுனர்களோடு இந்தக் கட்டுரைக்காக நான் தொடர்பு
கொண்டு கதைத்தபோது அவர்கள் எல்லோருடைய கருத்துமே இஸ்லாம் மார்க்கத்துக்கும்
முஸ்லிம்களுக்கும் எதிர்ப்பும் இடைஞ்சலும் வரும் பொழுது எதிரிகளை உயிர்
கொடுத்தேனும் தாக்கி அழிப்பது ஹலால் (ஆகும்) என்கின்றனர்.
ஆனால் இன்னொரு உயிரை தேவையில்லாமல் கொல்லவோ அல்லது அழிக்கவோ அனுமதியில்லை
ஹராம் (பாவம்) என்றே தெரிவிக்கின்றனர்.
முஸ்லிம் நாடுகள் மீதும் முஸ்லிம்கள் மீதும் தாக்குதல்களும் ஆக்கிரமிப்பும்
அதிகரிக்க அதிகரிக்க தற்கொலைத் தாக்குதல்களும் அதிகரிக்கும். இது
அபாயகரமானது. சிலஆலிம்கள் முஸ்லிம் இளைஞர்களுக்கு எல்லா தற்கொலை
தாக்குதல்களும் சரி ஹலால் (ஆகும்) என்று சொல்லும் போது குறிப்பாக ஈராக்,
பலஸ்தீன், லெபனான், ஆபகானிஸ்த்தான்,பாகிஸ்தான் போன்ற நாடுகளில் உள்ள
முஸ்லிம்கள் மீதான அமெரிக்க, இஸ்ரேலின் அத்துமீறல்களையும் கொன்று
குவிப்பதனையும் ஆதாரமாக காட்டி உற்சாகப்படுத்தும் போது இஸ்லாமிய உணர்வு
மேலீட்டால் முஸ்லிம் இளைஞர்கள் தற்கொலை தாக்குதல்களுக்கு தங்களை முனைப்போடு
ஈடுபடுத்துவார்கள்.
ஏனைய இயக்கங்கள் தற்கொலை தாக்குதல்களை அருமையாகவும் அத்தியாவசிய
தேவைக்குமாக பயன்படுத்தும்.
இஸ்லாமிய இயக்கங்கள் இளைஞர்களை ஊக்கப்படுத்துவது மறுமையை நோக்கி. அதுதான்
ஆபத்து என்கிறேன். சில தேவையற்ற ஹராமான விடயங்களுக்கும் தற்கொலை
தாக்குதலின் அச்சம் ஆபத்து உள்ளது.
ஏனெனில் இந்த அழியும் உலகை விட்டு நிரந்தரமான சொர்க்கத்துக்கு போவதற்கு
யாருக்குத்தான் விருப்பமில்லை.
|
|