முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 27
மார்ச் 2011

எதிர் (www.ethir.org) வலை தளத்தில் மூன்று பகுதிகளாக இடம்பெற்ற ம. நவீன் நேர்காணல்
'ம. நவீன் பக்கத்தில்' இடம்பெற்றுள்ளது.






             
 

கட்டுரை


ஏழாம் திணையில் எழுந்த புரட்சி!
கெ.எல்.

என்ன முயற்சி செய்தும் வேலை கிடைக்கவில்லை. அம்மா, உடன்பிறந்தவர்கள், உறவினர்கள் பெரும் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு 26 வயது முகமது பௌவாசிசிக்கு. துனிசிய நாட்டின் மக்கள் தொகையில் பாதி அளவிலான 30 வயதுக்கும் குறைந்த 5.3 மில்லியன் இளையர்களில் ஒருவனான அவன், மாதம் யுஎஸ் 140 வெள்ளியைச் சம்பாதிக்கப் பெரும் பாடுபட்டான்...


பத்தி


மலேசிய பிரதமருக்கு ஒரு கடிதம்
கே. பாலமுருகன்

கடந்த 4 வருடங்களுக்கும் மேலாக நான் தைப்பூசமே செல்வதில்லை. ஆனால் இந்த வருடம் உங்களைப் பார்க்க வேண்டும் என்கிற ஆவலில் சரியாக 7.20 மணிக்கெல்லாம் சுப்ரமண்ய கோவிலுக்கு வந்துவிட்டிருந்தேன். அப்பொழுதுதான் கோவிலிலும் கோவிலுக்கு வெளியேயும் கூட்டம் நிரம்பத் துவங்கியிருந்தது...

இலங்கைத் தமிழ் மீனவர்களால் சிறைப் பிடிக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்கள் : சிந்திக்கவேண்டிய சில வினாக்கள்
ரவிக்குமார்

தமிழக மீனவர்கள் இலங்கைத் தமிழ் மீனவர்களால் சிறை பிடிக்கப்பட்டு அந்த நாட்டுக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள செய்தி தமிழ்நாட்டில் கடுமையான கோபத்தைத் தூண்டியிருக்கிறது. தமிழக மீனவர்கள் இலங்கையின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததுமட்டுமின்றி...


சிறுகதை


விரல்
கமலாதேவி அரவிந்தன்

கையடிபட்டு ஊருக்குப்போனப்ப எவ்வளவோ ஜாக்கிரதையாய் இருந்தும், வேண்டாம் வேண்டாம்னு மசுக்குள்ள நினைச்சாலும் ஆண்டவன் சித்தம் வேறாக இருந்தது. பொன்னுவின் மெத்தென்ற உடம்பும், 'மாமா' என்ற கொஞ்சும் விளிக்கும் முன்னே, பாவாடையும் சராசரி மனுஷன் தானே?...

எதைத்தான் தொலைப்பது?
குரு அரவிந்தன்

வியர்க்க விறுவிறுக்க ஓடி வந்த வேகத்தில் மூச்சிரைத்தது. பேய், பிசாசுகளுக்கெல்லாம் நண்பன் பயந்தவனல்ல, ஏதாவது பிணத்தையோ, மண்டை ஓட்டையோ, அல்லது மனித எலும்புக் கூட்டையோ கண்டிருக்கலாம் அதுதான் பயந்துபோய் ஓடி வருகிறான் என்று நினைத்தேன்...


'நேர்காணல்' இதழில் வெளிவந்த எழுத்தாளர் வண்ணநிலவனின் நேர்காணல்


 
கேள்வி பதில்


பெற்றோல்
(இப்போதைய "தலையங்கம்")


கவிதை

o இளங்கோவன்
o சபரிநாதன்
செல்வராஜ் ஜெகதீசன்
o எம். ரிஷான் ஷெரீப்
o தோழி
கே. பாலமுருகன்


தொடர்

அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...9
எம். ஜி. சுரேஷ்
ஒரு பொருள் வருகிறது. அதன் பின் வேறு ஒரு பொருள் வருகிறது. அவை இரண்டுக்கும் இடையே முரண்பாடு வருகிறது. அவ்விரு பொருள்களின் இரு கூறுகளும் ஒன்றிணைந்து மூன்றாவதாக வேறு ஒரு பொருள் புதிதாக உருவாகிறது. இதை இயக்கவியல் என்கிறார் ஹெகல். இதற்கு எடுத்துக் காட்டாக நாம் தமிழ் நாட்டில் தோன்றிய திராவிடக் கட்சிகளின் வரலாற்றைப் பார்க்கலாம். முதலில் திராவிடர் கழகம் தோன்றியது...

நடந்து வந்த பாதையில் ...16
கமலாதேவி அரவிந்தன்
இரண்டு மாடியும் இட்டாலியன் மார்பிள் பதித்து ஒவ்வொரு அறையும் தான் என்ன விசாலம்! இசைப்பயிற்சிக்கு ஒர் அறை, உடல் பயிற்சி, களரி பயிற்சி, யோகா, தியானம், நாடக வகுப்புக்கள், சுவரொட்டிகள் தயாரிப்பு என எல்லாமே மூன்றாம் மாடியில்...

 
 
உல‌க‌த் த‌மிழ் எழுத்தாள‌ர்க‌ளின் க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்
ஒவ்வொரு மாத‌மும் வ‌ல்லின‌த்தில்...

 
           
 
 
 
 
       
 
 
 
 
       
 
 
 
 
         
             

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768