முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 27
மார்ச் 2011

  மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள் ...2
ஏ. தேவராஜன்
 
 
       
நேர்காணல்:

'பிரதியின் ஜட்டியைக் கழற்றி பார்க்கும் அறிவுலகில் என்ன உரையாடுவது?'

லீனா மணிமேகலை



கட்டுரை:

ஏழாம் திணையில் எழுந்த புரட்சி!
கெ.எல்.



பத்தி:

மலேசிய பிரதமருக்கு ஒரு கடிதம்
கே. பாலமுருகன்

இலங்கைத் தமிழ் மீனவர்களால் சிறைப் பிடிக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்கள் : சிந்திக்கவேண்டிய சில வினாக்கள்
ரவிக்குமார்




சிறுகதை:

விரல்
கமலாதேவி அரவிந்தன்

எதைத்தான் தொலைப்பது?
குரு அரவிந்தன்



கேள்வி பதில்:

சாரு பதில்கள்
சாரு நிவேதிதா



பெற்றோல் (இப்போதைய "தலையங்கம்")
சேனன்



தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...9
எம். ஜி. சுரேஷ்

நடந்து வந்த பாதையில் ...16
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


ஒளிந்து விளையாடும் சினிமாவின் கதைகள்
கே. பாலமுருகன்

புலம் பெயர் வாழ்வு
இளைய அப்துல்லா

சுவடுகள் பதிவுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

மொழியியல் ஒரு பார்வை
வீ. அ. மணிமொழி

விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு
ம‌. ந‌வீன்

தர்மினி பக்கம்
தர்மினி

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

கட்டங்களில் அமைந்த உலகு
யோகி

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி



'நேர்காணல்' இதழில் வெளிவந்த எழுத்தாளர் வண்ணநிலவனின் நேர்காணல்



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...17

சபரிநாதன்

செல்வராஜ் ஜெகதீசன்

எம். ரிஷான் ஷெரீப்

தோழி

கே. பாலமுருகன்

பொழியாத மழையும் இறுகிப்போன கார்மேகங்களும்!

மலேசியக் கல்விச் சூழலில் அதிலும் தொடக்க, இடைநிலைப் பள்ளிகளில் தமிழ் இலக்கண இலக்கியம் முறையாகப் போதிக்கப்படுகின்றனவா எனும் கேள்வி வெகு நாட்களாகவே என் மனத்தில் குடைந்துகொண்டிருக்கின்றது. பாடத்திட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள‌ இலக்கண இலக்கியத்தைப் போதித்துவிட்டாலே போதும் எனும் சுய ஆறுதல் வெகு நாட்களாகத் தமிழாசிரியர்கள் மத்தியில் வேரூன்றியுள்ளது. வரையறுக்கப்பட்ட சில குறட்பாக்கள், பழமொழிகள், இணைமொழிகள், மரபுத் தொடர்கள், உவமைத் தொடர்கள், இரட்டைக் கிளவிகள், நான்கடி செய்யுட்கள் என முடிந்துவிடுகின்றன. கட்டுரைகளும் அங்ஙனமே!

தேர்வுக்குத் தயார்படுத்தும் பொருட்டு அவ்வாறான அணுகுமுறையைக் கொண்டிருப்பினும், அது ஆக்ககரமான விளைபலனை யாருக்கும் கொண்டுவந்ததாகத் தெரியவில்லை. இத்தகைய மாணவர்களில் சிலர் ஆரம்ப, இடைநிலைக் கல்வித் தேர்வுகளில் தமிழ் மொழிப் பாடத்தில் ‘ஏ’ வாங்கிக்கொண்டு மலாயாப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் உயர்கல்வி கற்று ஆசிரியர்களாக வருகின்றனர். அண்மைய ஆண்டுகளில் ஆசிரியர்ப் பயிற்சிக் கல்லூரிகளிலும் தமிழ்த் துறையில் பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகின்றனர். மொழி, பண்பாடு ஆகிய அனைத்திலும் ஒடுக்கப்பட்டுள்ள ஒரு சமூகத்தின் தலைவிதியைக் கொஞ்சமாவது மாற்றிக் காட்டும் கடப்பாடு தங்களின் கைகளில் உள்ளது என்பதை அநேகமாக அனைவரும் மறந்த நிலையில் இருக்கின்றனர். சத்தியப்பிரமாணத்துக்குத் தலைவணங்கி பேராயசத்தோடு கையொப்பமிட்டதெல்லாம் கானல் நீராகவே போய்விட்டது. தங்களின் வயிற்றுப்பாட்டுக்கு மாத்திரமே ஆசிரியர் பணி பலருக்கு வாய்த்திருக்கிறது.

பணிக்கு வந்ததும் அவர்கள் தமிழ், தமிழர் சமூகவியலில் முனைப்புக் காட்டவும் முன்மாதிரியாகத் திகழவும் வேண்டுமெனச் சமுதாயம் மிகவும் விழிப்புடன் கவனித்துக்கொண்டிருக்கிறது. கலை, இலக்கிய முயற்சிகளில் அவர்களின் பங்களிப்பை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. தமிழாசிரியர்களில் பலருக்குத் தமிழ் இலக்கியம் கசாயமாகத் தெரிகிறது. உயர்கல்விக்கூடங்களில்கூட மிகவும் சிரமப்பட்டுத்தான் இலக்கியத்தை உள்வாங்கிக்கொள்கிறார்கள் என ஒருமுறை விரிவுரையாளர்களே மிகவும் நொந்து குறிப்பிட்டனர். இதில் மாணவர்களை மட்டும் சுட்டாமல் விரிவுரையாளர்களின் சமூகப் பங்களிப்பு என்ன என்று கேட்டால் அனைவரும் ஒரே குட்டையில் ஊறியவர்களாகத்தான் உள்ளனர். இது நமக்குச் சாபக்கேடு!

குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சிலருக்கு இன, மான உணர்விருந்தும் இலக்கியம் என்று வருங்கால் எல்லைக்குட்பட்ட வாசிப்போடு நின்றுவிடுகிறார்கள். மொழியை வளப்படுத்தவும் அதை மாணவர்களுக்கு இக்காலச்சூழலுக்கேற்றபடி சேர்ப்பிக்கவும் எத்தனை ஆசிரியர்கள் பிரயத்தனமெடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆசிரியர்களில் பெரும்பாலோருக்கு இலக்கியம் என்பதே தமிழோடு தொடர்பற்ற துறையென்ற புரிதல் உள்ளது. பழைய இலக்கியத்தில்தான் நாட்டமில்லை, புதிய இலக்கியங்களிலாவது ஆர்வம் காட்டலாமே? இன்றைய மாணவர்களின் நகர் சார்ந்த வாழ்வியல் போராட்டத்தைச் சமகாலச் சூழலோடு தமிழைப் புழங்குமொழியாகப் பிரயோகப்படுத்தவும் அவர்களால் முடியவில்லை.

இன்னொரு பார்வையில் இலக்கியம் எந்த வகையிலும் மாணவர்களுக்கு உதவப் போவதில்லை என்ற உறுதிப்பாடும் அதையேன் மாணவர்கள் மெனக்கெட்டுப் படிக்க வேண்டும்? இலக்கியமெல்லாம் அவசியமில்லை என்ற அக்குத் தொக்கற்ற கருத்தும் அவர்களிடம் வேரூன்றியுள்ளது. அதனால், ஆழமான வாசிப்பும் அது குறித்த வெளிப்பாடும் குண்டுச் சட்டிக்குள் உள்ள குதிரையைப் போலுள்ளது. மொழியின் பயன்பாடும் குட்டைநீரைப் போல் சலனமற்றுக் கிடக்கிறது.மாணவர்களின் முன்னிலையில் கனமாகவும் திருத்தமாகவும் தங்கு தடையற்ற பொருத்தமான சொல்லாடலில் உரையாற்றவும் பலருக்குக் கைவரவில்லை. பேச்சுக்கலை முற்றாக அற்றுப்போய் இரசனை செத்துக்கிடக்கிறது. இதற்குக் காரணமென்ன? கலை, இலக்கியத்தினின்று தூர விலகியிருப்பதால் வந்த கேடுதான் இது! தமிழ் மொழியில் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழியலில் தேர்ச்சியடைய பள்ளியைக் களமாகக் கருதுகின்ற மாணவர்களுக்கு இதுவும் ஒரு வகையில் பேரிடிதான்.

மாணவர்களின் இலக்கண இலக்கிய வெளிப்பாடுகள் தங்களின் எழுத்துகளில் பிரதிபலிக்கின்றன என்று மார்பை நிமிர்த்திச் சொல்ல முடியவில்லை. அவற்றிற்கான களம் ஊடகவெளியில் ஏராளமிருந்தும் அதைப் பயன்படுத்திக்கொள்ளாது பயிற்சிப் புத்தகத்திற்குள்ளேயே முடங்கிக்கிடக்கின்றன. இப்படியே அரைநூற்றாண்டைத் தாண்டிக்கொண்டிருக்கிறோம். ஆசிரியர்களும் மாணவர்களின் எழுத்து வளம் பெறுவதற்கு உந்து சக்தியாகவோ, கிரியா ஊக்கியாகவோ அமைந்திருக்கிறார்களா என்றால் அதை அவர்களின் மனசாட்சிக்கே விட்டுவிடுவோம். மொழிக்கு இலக்கணம் என்பது தொல்காப்பியரின் காலப் பெருமையை நிலைநாட்டுவதோடு புறநிலையில் முடங்கிவிடாது, அவரின் வழியையொட்டி நல்ல இலக்கியங்கள் பிறக்கவும் அவற்றை அறிவுப்பூர்வமாக விமர்சிக்கவும் ஆராதிக்கவும் வேண்டும். பாரதி என்ற மகத்தான புலவனின் தனித்தன்மையை உள்வாங்கிக்கொள்ளாமல் அவனது மீசையையும் தலைப்பாகையையும் அதோடு சிற்சில பாடப் புத்தகக் கவிதைகளையும் இன்னும் எத்தனை காலந்தான் ஓட்டிக்கொண்டிருப்பது? அவன் தொடக்கிவைத்த சின்ன புள்ளியின் பெருவிருட்சத்தை இவர்கள் தரிசித்தால்தானே அவனுக்குக் கனம் செய்யும் செயல்? அதை முன்னெடுத்துச் செல்லவேண்டுமல்லவா? இந்நிலையில் மொழிக்கான இலக்கணத்தை நன்கு தெரிந்து வைத்துக்கொண்டு இலக்கியங்கள் படைக்க ஆசிரியர்கள் முன்வர வேண்டும். குறைந்த பட்சம் அடிப்படை இலக்கணத்தையாவது எழுத்துக்குள் கொண்டுவர வேண்டும். அந்த எழுத்து இலக்கியமாக இருந்தால் பெருமை தமிழுக்குத்தானே?

நமக்குள்ள கோளாறுகள் இவ்விரண்டிலுமே கோட்டை விட்டதுதான்! ஊடகங்களுக்கு ஆசிரியர்கள் எழுதினால்தானே பிழையற்ற படைப்புகள் படிக்கக் கிடைக்கும். அச்சு ஊடகங்களில் மலிந்து கிடக்கின்ற இலக்கணப் பிழைகள் தமிழாசிரியர்களால் திருத்தப்பட்டு முழங்கும் காலம் நமக்குக் கனியவேயில்லை. வெளியில் நின்றுகொண்டு தாளிகைகளின் இலக்கணப் பிழைகளைச் சுட்டுவது மட்டும் சுகமாயிருக்கிறது போலும். இவர்களின் புரிதலில் இதழாசியர்கள்/பத்திரிகையாசிரியர்கள் அனைவரும் தமிழில் பாண்டித்தியம் பெற்றவர்கள் என்ற தவறான மனக்கணக்கு மையங்கொண்டுள்ளது. மற்றொரு கோணத்தில் தெரிந்தோ தெரியாமலோ இறுதியில் பாதிப்புறுவது மாணவர்கள்தான். அப்படியே பள்ளித் தேர்வில் தேறியவர்கள் சிலரிடம் உயர்ந்த மதிப்பெண்களைப் பெற்றுவிட்ட ஒரே காரணத்தால் தமிழே தங்கள் பிடிக்குள் அடங்கிவிட்டதான சாதனையில் ஆசிரியர்களுக்கும் மாயையில் மாணவர்களுக்கும் கொம்புகள் முளைத்துவிடுகின்றன. இதை ஒரு முறை பழுத்த ஆசிரியரிடம் சுட்டிக் காட்டப் போய் அவர் என்னையே கிண்டலடித்துச் சொன்ன பழமொழி இன்னும் ஞாபகத்தில் பசுமையாய் உள்ளது- ‘முன்னே முளைத்த காதைவிட பின்னே முளைத்த கொம்பு வலிமையானதோ?’ என்பதுதான். பிழைகள் வரவேண்டிய அவசியமே இல்லாத வாக்கியங்களில்கூட பிழைகளைச் செய்துவிடுகிறார்கள். மொழியறிவு நிறைந்த, கல்வித் துறையைச் சாராத பொது மனிதர் ஒருவர் இவற்றையெல்லாம் சுட்டிக் காட்ட முடியுமா? அப்படியே சுட்டிக் காட்டினால் அவரது பிள்ளைகள் அப்பள்ளிக்கூடத்தில் ஓர்மையுடன் கல்வி கற்கத்தான் முடியுமா?

அண்மையில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை இவ்விடம் நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகிறேன்.

சம்பவம் இதுதான். தம் மகனின் பயிற்சிப் புத்தகத்தைப் புரட்டிப் பார்த்த தந்தையொருவர் அதில் ஆசிரியர் செய்த சில திருத்தங்களைக் காண்கிறார். மாணவர் சரியாக எழுதியதைச் சிவப்பு மையால் திருத்துவதாக ஆசிரியரே தவற்றைச் செய்திருப்பதைத்தான் தந்தையால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதுவும் மிகவும் சாதாரண வாக்கியத்தில் ஏற்படக்கூடாத அடிப்படைப் பிழை. வாக்கியம் இதுதான்: ‘என் அப்பா ஆசிரியராகப் பணி புரிகிறார்’. மகன் எழுதிய இவ்வாக்கியத்தில் பணிப்புரிகிறார் என ஒற்றெழுத்து மிகுந்தி எழுதியுள்ளார் சம்பந்தப்பட்ட ஆசிரியர். “ஆசிரியர்தாம்பா நான் எழுதியது தவறுன்னு சிவப்பு மையில் திருத்தினார்” என்று மகன் குறிப்பிட அப்பா அதைத் திரும்பவும் திருத்த, ஒரு நாள் கழித்து ஆசிரியர் அதைப் பார்த்து மாணவனிடம் விசாரிக்க அதன்பின் நடந்ததெல்லாம் அம்மாணவன் கொஞ்சங் கொஞ்சமாக ஒதுக்கப்பட்டதுதான்.

பள்ளியிலேயே சிறந்த தலைமைத்துவமும் பேச்சாற்றலும் மிக்க அந்த மாணவனைத் தவிர்த்துவிட்டுப் பழி வாங்கும் படலமாகத் தரத்தில் அவனைவிட சற்றே குறைந்த மற்ற மாணவர்கள்தான் பள்ளியைப் பிரதிநிதித்துப் பெரும் போட்டிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதன் பின்னர் சம்பந்தப்பட்ட மாணவன் புறப்பாட நடவடிக்கைகள் எதிலும் வேண்டா வெறுப்போடுதான் தலை காட்ட நேரிட்டது. முகத்துக்கு முகம் நேரடியாக வந்து சொல்வதுதானே பெற்றோருக்கு அழகு என்பது ஆசிரியரின் வாதம். இதைச் சுட்டிக்காட்ட வேண்டி பள்ளிக்கு வர, அது பலருக்குத் தெரியப்போனால் ஆசிரியருக்குத்தானே மானப் பிரச்சனை என்பது அப்பாவின் வாதம். அது மட்டுமன்று, சம்பத்தப்பட்ட ஆசிரியர் தாள் திருத்துநர்த் தேர்வுக் குழுத் தலைவருமாவார். இப்பொழுது நேர்ந்திருக்கிற சிக்கல் யாதென்றால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் புத்தகங்களில் கை வைக்கக்கூடாது என்பதுதான்.

ஆசிரியர்கள் செய்வது அனைத்தும் சரி என்கின்ற பிம்பம் வலுவாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் தவறிழைக்குங்கால் அதை முறையான சான்றுகளோடு சுமூகமாகத் தீர்ப்பதுதானே அறிவார்ந்த செயல்? செய்பணியில் ஊறு நேரா வண்ணம் செயல்பட்டால் மொழியறிவும் அதன் வாயிலாக இனப் பெருமையும் தோன்றும். இனம், மொழி ஆகியவற்றைவிட பெரும்பாலோருக்கு ஆன்மிகத்தில்தான் பற்று மிதமிஞ்சிக் கிடக்கிறது. ஆன்மிகத்தின் வாயிலாகத் தமிழ் வளர்க்கும் எண்ணமும் தமிழர் இங்குக் குடியேறிய காலந்தொட்டுச் சீராக இருந்ததில்லை. ‘சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்; தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்’ என்று கொல்லிப் பண்ணில் திருநாவுக்கரசர் அருளிய பாடலிலாவது இலக்கிய நயத்தோடு தமிழும் வளர்ந்தது பக்தி இலக்கியமாக அன்று! இன்றோ, சில தேவார திருவாசகங்களை மனனம் செய்து ஒப்புவித்தால் தமிழும் தமிழர் நெறியும் தழைத்துவிட்டதாக ஒரு வெற்றுக் கணிப்பு. பக்தி இலக்கியங்கள் வெறுமனே இறைச்சிந்தனையில் முக்தியடைவதாக மட்டும் இருக்கக்கூடாது. பாதம் மண்ணில் பதிந்திருக்கிற வரையில் மனிதனையும் அவனது பாடுகளையும் முன்னிலைப்படுத்தி ஆவணமாக்கிவைக்க வேண்டும். ஆன்மிகத்தின் ஆர்வம் மொழியின் விருத்திக்கும் பண்பாட்டின் விளைச்சலுக்கும் ஆதார சுருதியாக அமையாதவரை தமிழுக்கு இழுக்குத்தான் சேரும். மற்றவர்களவிட தமிழாசிரியர்கள் ஆற்றவேண்டிய பங்கு ஏராளமாக உள்ளது என்பதால் கட்டுரையின் புலம்பல். கேட்டால் விடியல் வெகு தூரத்தில் இல்லை என்பார்கள்.

நானும் தேடிக்கொண்டுதானிருக்கிறேன் - விடியலையல்ல, சொன்னவனை!

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வவல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768/span>