|
|||||||||
இதழ் 28 |
எதிர்வினை | ||||||||
|
வணக்கம். தங்கள் இணையதளத்தில் 7 ம் திணையில் எழுந்த புரட்சி
(http://www.vallinam.com.my/issue27/essay.html) படித்தேன். ஒரு சிறு
திருத்தம். முதலில் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். பஹ்ரைனில் எண்ணெய்
ஏற்றுமதியே இல்லை. சவுதியில் இருந்தே இங்கு வருகிறது. நீங்கள் நினைப்பது
போல் பஹ்ரைனில் நடப்பது கூடுதல் சுதந்திரத்துக்காக போராட்டம் அல்ல. இங்கு
நடப்பது ஒரு வகையான இன புரட்சி. இங்கு பெரும்பாலனவர்கள் (70%) ஷியா பிரிவை
சேர்ந்தவர்கள். ஆனால் இவர்கள் வெறும் 30௦ % மட்டுமே உள்ள சுன்னி பிரிவு
மக்களால் ஆளப்படுகிறார்கள். காவல் துறை, ராணுவம் போன்ற துறைகளில் வாய்ப்பு
மறுக்கப்படுகிறது. அவர்களது பல தலைவர்களும் அடிக்கடி கைது
செய்யப்படுகிறார்கள்.இவர்கள் தற்போது மக்களாட்சி கேட்கிறார்கள். தற்போது
உள்ள பிரதமர் பதவி விலக விரும்புகிறார்கள். சிரியா, பாகிஸ்தான் போன்ற
நாடுகளில் இருந்து இங்கு குடியமர்த்தப்படும் சுன்னி மக்கள் தொகையை இவர்கள்
விரும்புவது இல்லை. இதனாலேயே இங்கு புரட்சி (பிரச்சினை) ஆரம்பித்தது. ஆனால்
இங்கு நீங்கள் சில உண்மைகளை தெரிந்து கொள்ள வேண்டும்: சீனிவாச நாயுடு என்பவர் கேட்ட கேள்விக்கு சாருவின் பதிலைப் பார்த்தேன்.
உலகம் எங்கும் இருக்கும் surname / family name /last name தமிழ் நாட்டில்
ஒழிக்கப்பட்டு விட்டது. அப்பா பெயரை / கணவர் பெயரை last name ஆக
பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதில் உள்ள சிக்கல் என்னவென்றால்
வீட்டில் கணவனுக்கும் மனைவிக்கும் வெவ்வேறு lastname இருக்கும். இது
இந்தியாவில் இருக்கும் வரை பிரச்சினை இல்லை. வெளிநாட்டில் அங்கங்கே
விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும். தமிழ் நாட்டில் சாதி பெயர்களை
தான் ஒழித்தார்களே தவிர சாதியை ஒழிக்கவில்லை. இந்த சீனிவாச நாயுடு என்பவர்
சாதியை கடைபிடிக்காதவராக இருக்கலாம். வல்லினம் முன்பைவிட பெரிதும் கவர்கிறது. புதிய ஆண்டிலிருந்து புதிய
முயற்சி. அதிலும் குறிப்பாக மணிமொழி, யோகி, ராஜம் ரஞ்சனி, தர்மினி போன்ற
புதிய பெண் படைப்பாளிகள் எழுதுவது வரவேற்கத்தக்கது. லீனா மணிமேகலையின் நேர்காணலை முழுமையாகப் போட்டிருக்கலாமே. ஏன் இரண்டாவது
பாகம். காத்திருக்க முடியவில்லை. இத்தனை நேர்மையான நேர்காணலை நான்
சமீபத்தில் வாசித்தது குறைவு. லீனா தொடர்ந்து வாசகர்களுடன் உடையாடும்
தளத்தை வல்லினம் ஏற்பாடு செய்ய வேண்டும். தர்மினி எழுதும் தொடருக்காகவே இப்போதெல்லாம் வல்லினத்தை ஒன்றாம்
திகதியெல்லாம் திறந்துவிடுகிறேன். எளிமையான நடை. சுவாரசியமான வாழ்வு.
எனக்கு என்னையும் என் வாழ்வையும் நினைவு படுத்துகிறது. ஒரு இளம் பெண்ணுக்கு இத்தனை வகையான வாழ்வின் அனுபங்களா என வியக்க
வைக்கிறார் யோகி. அதே போல மணிமொழியும். அவர் இன்னும் விரிவாக மொழியியல்
பற்றி எழுதினால் பயனாக இருக்கும். உதாரணங்களும் தேவைப்படுகின்றன. குறிப்பாக
மொழியியலாளர்களைப் பற்றியும் எழுதலாம். சாருவின் கேள்வி பதில்கள் கவர்கின்றன. சில கேள்விகளைத் தவிர்க்காமல் அவர்
பதில் கொடுக்கலாம். இதில் என்ன பாராபட்சம். என்னுடைய கேள்வி உட்பட. மற்றபடி
வல்லினத்தில் இடம்பெரும் கட்டுரைகள் கவர்கின்றன. பாலமுருகனின் சினிமா
கட்டுரை நன்று. வல்லினம் சிறப்பாக இருக்கிறது. மாதம் முழுதும் படிக்கும் அளவிற்கு
படைப்புகள். எழுத்தாளர்களின் மின்னஞ்சலையும் அவர்கள் படைப்புகளோடு போடலாமே.
யாரய்யா இந்த மணிஜெகதீசன். புதுசா மலேசியாவுல. எழுத்து நடை சூப்பர். அவர்
போன்றவர்கள் தொடர்ந்து எழுதனும். தம்பி தயாஜியும் அசத்துராறு. வல்லினம்
நிறைய புதிய முகங்களைக் காட்டியுள்ளது. வாழ்த்துக்கள். |
||||||||
உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் |
|||||||||
வவல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine
For Arts And Literature |