பத்தி
அசுரனாகத் தொடங்கிய வாழ்வு
கே. பாலமுருகன்
கிருஷ்ண ஜெயந்திக்கு நான்கு நாட்களுக்கு முன் அகில உலக கிருஷ்ண
பக்தி இயக்கம் சுங்கைப்பட்டாணி கிளைக்கு அழைக்கப்பட்டிருந்தேன்.
மேடை நாடகத்தின் மீதான ஆர்வம் என்னை அதுவரை இழுத்து வந்திருந்தது.
ஆகையால் கிருஷ்ண ஜெயந்திக்கு அந்தப் பக்தி இயக்கம் மேடையேற்றும்
நாடகத்தில் எனக்கும் நடிப்பதற்கு வாய்ப்புக் கிட்டியிருந்தது...
சிறுகதை
ஒட்டிக் கொண்டது...
ஸ்ரீஜா வெங்கடேஷ்
அது அவளோடு எப்போதிலிருந்து ஒட்டிக் கொண்டது என்று அவளுக்குத் தெரியவில்லை. பிறக்கும் போதே ஒட்டியதா? இல்லை பூப்படைந்த பிறகா? என்பதெல்லாம் அவளுக்கு ஞாபகமே இல்லை. இத்தனை நாட்கள் அது ஒட்டியிருந்ததை அவள் உணர்ந்ததாகவே தெரியவில்லை...
தொடர்
அனைத்துக்
கோட்பாடுகளும் அனுமானங்களே ...11
எம். ஜி. சுரேஷ்
ஐரோப்பிய இலக்கிய உலகில் இரண்டு விதமான
கைத்தடிகளைப் பற்றிக் குறிப்பிடுவார்கள். ஒன்று ஃப்ரெஞ்சு
எழுத்தாளர் பால்ஸாக்கின் கைத்தடி. இன்னொன்று: ஜெர்மன் எழுதாளர்
ஃப்ரான்ஸ் காஃப்காவின் கைத்தடி பால்ஸாக்கின் கைத்தடி எதையும்
உடைத்து விடும். அந்த அளவுக்கு அது வலிமையானது...
|