|
 |
|
|
|
|
இதழ் 29
மே 2011
|
|
கவிதை:
கிண்ணியா எஸ். பாயிஸா அலி |
|
|
|
|
|
|
|
|
|
|
|
சிறுமீனாய்
நீலப்பச்சையாய் நீளப்பரவிய
பசுமைகளின் ஆழங்களூடே
உலோகக் கலவைகளின் குழம்புகள் குமிழியிட
மிகப் பாந்தமாய் சுழல்கிற பந்துகளிடையே
தீப்பாறைகளின் இறுக்கங்களுக்குள்
சில்லெனும் குளிரோடை மறைத்தபடி அனல் சொரிகிறாய்
எரிந்து பிடித் தூசாவோமெனப் பயந்தொதுங்குமிவர்
கால்தடம் விலக்கி விலக்கிப் பயணப்படுகிறேன்.
கிரகங்கள் தனித்தியங்கத் தொடங்கு முன்பான
ஆதிக்கனலில்
இழை திரித்து சிறகு முடித்தே
காலத்தைச் சுருட்டிக் கைப்பைக்குள் புதைத்தபடி
ஏழுபூமி ஏழுவானம்
தாண்டித் தாண்டிப் பறக்கிறேன்
ஒளிந்திருக்குமக் குளிரோடைக்குள்
செட்டைகள் விறைக்க விறைக்க நீந்திக் களித்தபடி
என்றென்றைக்குமா யதில்
தங்கிவிடத் துடிக்குமொரு சிறுமீனாய்.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் |
|
|
|
|
|
வவல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine
For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved.
2010. | Designed by CVA | Best View in : Mozilla Firefox | Best
resolution : 1024 X 768
|