முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 29
மே 2011

  அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...11
எம். ஜி. சுரேஷ்
 
 
       
நேர்காணல்:

பாலஸ்தீனப் பயண அனுபவங்கள் : "உலகின் அனைத்து துயரங்களின் மொழியும் ஒரே அலைவரிசையில்தான் இருக்கின்றன"

அ. முத்துகிருஷ்ணன்



பத்தி:

அசுரனாகத் தொடங்கிய வாழ்வு
கே. பாலமுருகன்



சிறுகதை:

ஒட்டிக் கொண்டது...
ஸ்ரீஜா வெங்கடேஷ்



பெற்றோல் (இப்போதைய "தலையங்கம்")
சேனன்



தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...11
எம். ஜி. சுரேஷ்



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


ஒளிந்து விளையாடும் சினிமாவின் கதைகள்
கே. பாலமுருகன்

சுவடுகள் பதிவுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு
ம‌. ந‌வீன்

தர்மினி பக்கம்
தர்மினி

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

கட்டங்களில் அமைந்த உலகு
யோகி

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...19

ஷம்மி முத்துவேல்

சூர்யகுமாரன்

ந. மயூரரூபன்

லதா

என். விநாயக முருகன்

லதாமகன்

கிண்ணியா எஸ். பாயிஸா அலி

ஐரோப்பிய இலக்கிய உலகில் இரண்டு விதமான கைத்தடிகளைப் பற்றிக் குறிப்பிடுவார்கள். ஒன்று ஃப்ரெஞ்சு எழுத்தாளர் பால்ஸாக்கின் கைத்தடி. இன்னொன்று: ஜெர்மன் எழுதாளர் ஃப்ரான்ஸ் காஃப்காவின் கைத்தடி.

பால்ஸாக்கின் கைத்தடி எதையும் உடைத்து விடும். அந்த அளவுக்கு அது வலிமையானது. காஃப்காவின் கைத்தடியை எதுவும் உடைத்து விடும். அது அந்த அளவுக்கு மென்மையானது. பால்ஸாக்கின் எழுத்து வாசகனின் அறச்சீற்றத்தைத் தூண்டும். காஃப்காவின் எழுத்தோ வாசகனிடம் நம்பிக்கை வறட்சியை ஏற்படுத்தும்.

ஐரோப்பியத் தத்துவத்துறையிலும் இதே போன்ற இரண்டு கைத்தடிகளை நாம் பார்க்க முடியும். ஒன்று: கார்ல் மார்க்ஸின் கைத்தடி. இன்னொன்று: ழீன் பால் சார்த்தரின் கைத்தடி. மார்க்ஸின் கைத்தடியில், ‘நீங்கள் அடிபட விரும்பும் பட்டறைக்கல்லாக இருந்தது போதும்; அடித்து நொறுக்கும் சம்மட்டிகளாக மாறுங்களேன்’ என்ற ஜெர்மன் கவி கதேயின் கவிதை வரிகள் பொறிக்கப்பட்டிருப்பதாக வைத்துக் கொள்வோம்; சார்த்தரின் கைத்தடியிலோ, ‘அடிபடும் பட்டறைக் கல்லே; நீ அடிபடுவதை விரும்பு. வலியைத் தாங்குவதே வாழ்க்கையின் சாரம்’ என்று பொறிக்கப்பட்டிருப்பதாக அனுமானிக்கலாம்.

இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய இந்த இரண்டு இஸங்களும் எதிரும் புதிருமாக நின்று நவீனத்துவத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தன.

தொடக்கத்தில் மனித குல விடுதலையை மீட்க வந்ததாக நம்பப்பட்ட மார்க்ஸியம் ஸ்டாலின் அடக்குமுறையின் போது தனது நம்பகத்தன்மையை இழந்தது. ஹிட்லர் ஆரிய இனத்தின் மேன்மையை முன் வைத்து சர்வாதிகாரியாக இருந்து யூதர்கள் பலரை அநியாயமாகக் கொன்று குவித்தார். அதே போல் ஸ்டாலினும் பாட்டாளி வர்க்கத்தின் மேன்மையை முன் வைத்து பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவித்தார். நோக்கம் வேறாக இருப்பினும், விளைவு ஒன்றுதான். இதன் விளைவாக மார்க்ஸியத்தின் மீது அவநம்பிக்கை வந்தது. அதே நேரத்தில் சார்த்தர் முன் வைத்த அவநம்பிக்கை வாதத்தையும் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

அப்படியானால் என்னதான் செய்வது?

ஆயிரக்கணகான ஆண்டுகளாக நம்மை வழிநடத்தி வந்திருக்கும் கருத்துகள் மற்றும் கோட்பாடுகள் மீது மனித மனம் சந்தேகம் கொண்டது. சிந்தனை மொழியால் ஆனது. எனவே முதலில் நாம் மொழியின் மீதான கவனத்தை மேற்கொண்டாக வேண்டும் என்று அறிஞர்கள் நினைத்தார்கள். இருபதாம் நூற்றாண்டின் முக்கியமான சிந்தனயாளர்களான பெர்ட்ரண்ட் ரஸ்ஸல், லுத்விக் விட்ஜென்ஸ்டீன், மார்டின் ஹைடக்கர், சோம்ஸ்கி போன்றவர்கள் மொழியின் மீதான கவனத்தை மேற்கொண்டார்கள்.

‘எது அர்த்தமுள்ள சிந்தனையை அனுமதிக்கிறது?’

“மொழி?’

இந்தக் கேள்வி பலரையும் சிந்திக்க வைத்தது. கருத்தின் சாதனம் மொழி. மொழி என்ற சாதனம் நம்பத்தகுந்ததுதானா?அதைச் சோதித்துப் பார்த்தால் என்ன?

ஸ்விஸ் நாட்டு மொழியியல் அறிஞரான பெர்டினாண்ட் சசூர் என்பவர் ஒரு முக்கியமான கண்டு பிடிப்பை நிகழ்த்தினார். அது இதுவரை இந்த உலகம் கொண்டிருந்த மொழிக் கொள்கைகளைக் குப்புறக் கவிழ்த்துப் போட்டது.

மொழி என்ற பெயரால் நம் வாய் எழுப்பும் ஒலிகளுக்கும், அந்த ஒலிகளுக்கான அர்த்தத்துக்கும் சம்பந்தமில்லை. அதாவது, புலி என்ற வாய்மொழிச் சத்தத்துக்கும், புலி என்ற பிராணிக்கும் சம்பந்தம் இல்லை. அதே போல் புலி என்ற கருத்துக்கும் புலி என்ற சொல்லுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. போக்குவரத்து ‘சிக்னல்’ விளக்குகளில் சிவப்பு, பச்சை, மஞ்சள் போன்ற வர்ணங்களை நாம் எப்படிப் பயன் படுத்துகிறோமோ அதே போல்தான் நாம் மொழியைப் பயன் படுத்துகிறோம். தனிப்பட்ட முறையில் அந்த வர்ணங்களுக்கு அர்த்தம் ஏதும் இல்லை. சிவப்பு என்ற வர்ணத்துக்கு ‘நில்’ என்றோ, பச்சை வர்ணத்துக்குச் ‘செல்’ என்றோ அர்த்தம் இல்லை. ஆனால், இந்த மூன்று வண்ணங்களும் வர்சையாக வைக்கப்பட்டு ஒன்றை ஒன்று சார்ந்து நிற்கும் போதுதான் இந்த அர்த்தங்கள் பொருள்படுத்திக் கொள்ளப்படுகின்றன.

இந்த வண்ணங்களுக்குப் பதிலாக ஆரஞ்ச், வெள்ளை, ஊதா போன்ற வண்ணங்களைப் பயன் படுத்தினால் கூட அவையும் இதே அர்த்தங்களைக் கொடுக்கும். எனவே, அர்த்தம் என்பது சார்பு நிலை கொண்டது.

மொழி என்பது ஓர் அமைப்பு. அது சிந்தனையின் வெளிப்பாடே. ஆனால் அந்தச் சிந்தனையை அது முழுவதுமாக வெளிப்படுத்துகிறதா என்பது முக்கியமான கேள்வி.
தவிரவும், மொழி என்பது இரட்டை எதிர் நிலைகளால் ஆனது. அதற்குக் காரணம் மனித மனம் இரட்டை எதிர் நிலைகளால் இயங்கும் தன்மை வாய்ந்தது.

பேச்சு x மௌனம்
குளிர் x வெப்பம்
இருட்டு x வெளிச்சம்

எனவே, சிந்தனை என்பது இரட்டை எதிர் நிலைகளால் ஆனது. இதில் மனிதன்xஇயற்கை என்ற இரட்டை எதிர் நிலை முக்கியமானது. தனிமனிதன் தன்னைப் பற்றியும், தனது சமூகத்தைப் பற்றியும் சிந்திப்பது போலவே தன்னைச் சுற்றிலும் இருக்கும் இயற்கையைப் பற்றியும் சிந்திக்கிறான். அவன் மனம் இயற்கையை ஆகு பெயர்களாலும், உருவகங்களாலும் சிந்திக்கிறது. சூரியக் கடவுள், நதியன்னை, கன்னி நிலம் என்றெல்லாம் சிந்திக்கிறான்.

மனம் தர்க்கரீதியாக இயங்கி இயற்கையை நகல் செய்து தனக்குத் தோதாகப் பயன்படுத்திக் கொள்கிறது. பாலை வனங்களில் பச்சை நிறத்தையேப் பார்க்க முடியாது. எங்காவது பாலைவனச்சோலை இருந்தால்தான் உண்டு. இதனால்தான் பாலைவனங்களில் சதா அலைய நேரும் அராபிய இனக்குழுக்கள் தங்கள் கொடியை பச்சை நிறத்தில் வைத்திருக்கிறார்கள். பசுமையின் மேல் தோன்றும் ஏக்கம் ஒரு லட்சிய நிறமாக உருமாறுகிறது. இயற்கையில் உள்ள தாவரப்பச்சையை மனம் கொடியின் பச்சை நிறமாக நகல் செய்து கொள்கிறது.

எனவே, இயற்கையில் எதற்கும் அர்த்தம் என்று எதுவும் இல்லை. எல்லா அர்த்தங்களும் பொருள்படுத்தப் படுபவையே. அர்த்தம் என்பது அமைப்பு சார்ந்தது. மொழி என்பது ஒரு அமைப்பு.

ஆக, மொழி, பிரதிகள், சமூக அமைப்பு போன்ற எல்லாம் சேர்ந்த ஓர் அமைப்பில், அதிலுள்ள ஒவ்வொரு தனிப்பட்ட பகுதிக்கும் ஒன்றை ஒன்று சார்ந்து பார்க்கும் போதுதான் அர்த்தம் பிறக்கிறது என்பதை சசூர் கண்டறிந்தார். அந்தக் கோட்பாடு அமைப்பியல் என்று அழைக்கப்படுகிறது.

பின்னாளில் பின் நவீனத்துவத்தை ஓர் இயக்கமாக ஆக்கிய தெரிதா, ரொலாண் பார்த், மிஷல் ஃபூக்கோ, ஜூலியா கிறிஸ்தேவா ஆகியோர் அமைப்பியலைக் கேள்விக்குள்ளாக்கிய போது இன்னொரு புதிய கோட்பாடு பிறந்தது.

அதன் பெயர் பின் அமைப்பியல்.

(தொடரும்)

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வவல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768