முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 30
ஜூன் 2011

  காமேக் புகான் ஓராங் சிதோக் ...2
நோவா
 
 
       
நேர்காணல்:

“பயங்கரங்களை மட்டுமே விரும்புகிற அரசும் அதன் படைகளும் இழைத்தவை எல்லாமே குற்றங்கள்தான்”

தீபச்செல்வன்



பத்தி:

மே தினம் 2011 : பல்லின சங்கமத்தில் ஒரு நாள்
சு. யுவராஜன்

மே மாதம் : அமெரிக்கா, சிங்கப்பூர், தமிழ்நாடு
கெ. எல்.



புத்தகப்பார்வை:

பறவையின் தடங்கள் : மலாய் மொழிக்கவிதைகள்
பாவண்ணன்



கேள்வி பதில்:

ஷோபாசக்தி பதில்கள்
ஷோபாசக்தி



தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...12
எம். ஜி. சுரேஷ்



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


ஒளிந்து விளையாடும் சினிமாவின் கதைகள்
கே. பாலமுருகன்

சுவடுகள் பதிவுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு
ம‌. ந‌வீன்

தர்மினி பக்கம்
தர்மினி

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

கட்டங்களில் அமைந்த உலகு
யோகி

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...20

ஷம்மி முத்துவேல்

வீ. நித்தியா

ஏ. தேவராஜன்



எதிர்வினை

பேய் அறை

விமான நிலையத்தில் ஒரு புதிய வார்த்தை என்னை ரொம்ப யோசிக்க வைத்தது. என்னை சுற்றி இருந்தவர்கள் எல்லாம் 'நைக் பலோன் நைக் பலோன்' (Naik Belon) என்று சொல்லி கொண்டிருந்தார்கள். அதென்ன நைக் பலோன்? நைக் என்றால் தெரியும். ஏறுதல். அது சரி. பலோன்? பாரசூடோ? கண்டிப்பாக இருக்காது. ரொம்ப நேரம் மண்டையைப் போட்டு குழப்பிய பின் தாங்க முடியாது அங்கிருந்த ஒருவரிடம் கேட்டேன். என்னைப் பார்த்து புன்னகைத்த அவர் ஊருக்குப் புதுசா என குசலம் விசாரித்த பின்னரே இங்கே விமானத்தை பலோன் என தான் குறிப்பிடுவார்கள் என்றார். ஓஹோ... பலோன்-விமானம். வட்டார வழக்கு இங்கே புதுசாக இருந்தது. கூச்சிங் பட்டணத்திலிருந்து மணிக்கு 80கி.மீ வேகத்தில் போனால் சந்துபோங் உல்லாச விடுதியை 45 நிமிடத்தில் அடைந்து விடலாம். இது காரில் போனால் மட்டுமே. வேகமும் நேரமும் போகும் வாகனத்தை பொறுத்தது.

பேருந்து போகும் வழி நெடுக்க நிறைய மரங்கள், கம்பத்து வீடுகள், மேடு பள்ளம் என பச்சை பசேலென்று கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது. பேருந்துக்குள் அமர்ந்திருந்த எல்லாருமே ஊருக்கு புதுசு என்பதால் அனைவரின் தலைகளும் ஜன்னலை பார்த்தப்படி தான் இருந்தன. போகும் வழி எங்கும் எனக்கு காட்சி பிழையாக நான் பிறந்த டப்ளின் தோட்டத்தை நினைவு படுத்திய வண்ணமே இருந்தது.

பின்னாளில் அத்தோட்டம் சுங்கை டிங்கின் என பெயர் மற்றம் கொண்டுவிட்டிருந்தது. நான் பிறந்தது முதல் அந்த தோட்டம் பல வித மாறுதல்களை உள்வாங்கியவாறே இருக்கிறது இன்று வரை. எனக்கு விபரம் தெரிந்து, நான் ஏழு வயது வரை லயத்திலும் பின் 16 வயது வரை ஹனிப்பா பங்களா பக்க வீட்டிலும் இருந்தேன். அதன் பின் கூலிம் நகரவாசியாகிவிட்டிருந்தேன். எப்படியிருந்தாலும் அதன் நினைவுகள் மட்டும் என் மனதை விட்டு மறைந்ததே இல்லை. ஓடி விளையாடிய ஹனிப்பா பங்களா திடல், குனுங் போங்சு ஃபெல்டா, கோல்ப் திடல், தீமிதி நடக்கும் மாரியம்மன் கோயில், புனித சின்னப்பர் சிற்றாலயம், பாஞ்சான் கடை தெரு, ஜெராய் குருப் மருத்துவமனை , முக்கியமாக நான் படித்த சுங்கை டிங்கின் (பிரிவு 4) தமிழ்ப்பள்ளி என திரும்ப திரும்ப என் நினைவுகளை தூசி தட்டி எழுப்பியவாறே இருந்தது புது இடம்.

போதாதென என் அக்காமார்கள் அடிகடி சொல்லும் கதைகளும் அந்த தோட்டத்தை பற்றியதாகவே இருந்ததால் நானும் அந்த தோட்டத்தை பற்றிய நினைவுகளை என் அடிமனதில் ஆழமாக புதைத்து வைத்திருந்தேன்.

இப்படி என் நினைவுகளை அசைப்போட்டு கொண்டிருக்கையிலே ஒரு மணிநேரம் போனதும் தெரியவில்லை, நாங்கள் சேர வேண்டிய இடத்துக்கு வந்ததும் தெரியவில்லை. உடம்பு அடித்து போட்ட மாதிரி வலித்தது. நான் மொத்தம் 3 பைகளைக் கொண்டுவந்திருந்தேன். இடது கையில் ஒன்று, வலது கையில் ஒன்று, முதுகு புறத்தில் ஒன்று. இவ்வளவையும் தூக்கி கொண்டு அந்த ரிசோர்ட்டின் முகப்புக்கு வந்து சேர்வதுக்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. எங்கள் வருகைக்காக காத்திருந்த பணியாளர்கள் எங்களுக்கான அறையின் எண்ணையும் அதற்கான சாவியையும் கொடுத்தார்கள். ஓர் அறையில் நால்வர் வீதம் எங்களைப் பிரித்திருந்தனர். அந்த நேரம் வரை எங்களுக்கு நாங்கள் எங்கே செல்ல போகிறோம் என்று தெரியவில்லை.

சரவாக் மிகவும் பெரிய ஊர். தீபகற்ப மலேசியாவே அதற்குள் அடங்கக்கூடிய பரப்பளவு. ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு அவ்வளவு சுலபமாக போகவியலாது. ஆளாளுக்கு ஒவ்வொரு இடத்தைக் கற்பனை செய்து கொண்டிருந்தோம். கப்பிட் (Kapit), சிபு (Sibu), மீரி (Miri), நியா (Niah), பிந்தாவா (Bintawa) என இன்னும் பல இடங்களின் பெயர்களைப் பற்றி எங்களுக்குள்ளே பல அனுமானங்கள். நாங்கள் செல்லவிருக்கும் இடங்களை பற்றி ரொம்ப ரொம்ப ரகசியமாக வைத்திருந்தார்கள். அதற்கான காரணம் அங்கிருந்த இரண்டாவது நாளில்தான் தெரிய வந்தது. அதை அப்புறமாக சொல்கிறேன். இப்போது நம் அறை கதைக்கு வருவோம்.

நாங்கள் வந்து சேர்ந்த கொஞ்ச நேரத்தில் ஒரு கல்வி துறை அதிகாரி எங்களுக்கு ஒரு சிறு வரவேற்புரை நிகழ்த்தினார். அவர் சொன்ன ஒரு முக்கியமான விஷயம் 'இந்த இடம் கொஞ்சம் ஒரு மாதிரி, வாய்க்கு வந்த மாதிரி பேசினால் பின் விபரீத விளைவுகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும், எனவே பார்த்து நடந்து கொள்ளுங்கள்'. இந்த வார்த்தைகள் மூளைக்குள் பயங்கரமான ஜாலத்தை நடத்திகொண்டிருந்தன. இந்த விஷயத்தை ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தாலும் அனுபவ ரீதியாக உணரும் போதுதான் அதன் தாக்கம் அதிகமாக இருந்தது. சட்டி பெட்டியெல்லாம் எடுத்து கொண்டு அறைக்கு நடையை கட்டினேன் என் இரண்டிரவு அறை தோழிகளோடு.

சும்மா சொல்ல கூடாது. அறை மிகவும் விசாலம். அழகான வெளிப்புற காட்சி. பக்கத்திலேயே கடற்கரை. கடல் காற்றை சுவாசிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. இத்தனையும் தாண்டி அடிவயிற்றில் அடிகடி புளி கரைந்து கொண்டிருந்தது. அங்கே ஆவிகளின் நடமாட்டம் அதிகமாம். கழிவறையில் முகத்தை கூட சரியாக கழுவ பயந்தேன் என்றால் பார்த்து கொள்ளுங்களேன். சரியாக இரண்டே நிமிடங்கள்தான். விறுவிறுன்னு குளித்து விட்டு விடுதியில் அதிகமானோர் புழங்கும் இடத்துக்கு ஓடி வந்து விடுவோம். கொஞ்சம் நிம்மதியாக இருக்கும். மித்ராவுக்கும் எனக்கும் வெவ்வேறு அறை கொடுக்கப்பட்டிருந்ததால் அடிகடி இப்படிதான் சந்தித்து கொள்வோம். அறிமுக கதைகளோடு ஆவி கதைகளும் எங்கள் உரையாடலில் அதிகம் இடம் பெற்றிருந்தன எங்களுக்கே உரித்தான புனைவுகளுடன்.

சரவாக் முழுவதுமாகவே சீக்கிரம் இருட்டிவிடும் என்பது அப்போது தான் தெரிந்தது. மாலை மணி ஆறு மணிக்கெல்லாம் இரவு எட்டு மணியின் இருள் அங்கே படர்ந்திருந்தது. இந்த மாற்றத்தை உடலும் உணர்ந்திருக்கும் போலும். ஆறு மணிக்கெல்லாம் வயிற்று பசி ஆரம்பித்து விட்டிருந்தது. அந்த விடுதியில் உணவும் மிக மிக சிறப்பான முறையில் தயார் செய்ய பட்டிருந்தது. சரவாக் கடல் உணவுகளுக்கு பிரசித்தி என்பதால் அங்கே வைக்க பட்டிருந்த உணவு வகைகளில் கடல்வாழ் உயிரினங்கள் அதிகம் சேர்க்க பட்டிருந்தன (உயிரோடு அல்ல). மற்றபடி காய்கறிகள், பருப்பு வகைகள் என ஜமாய்த்து இருந்தார்கள் விடுதி சமையல்காரர்கள். நன்றாக ருசித்து ருசித்து சாப்பிட்டோம். வயிறு நிறைந்தவுடன் கண் சொருக ஆரம்பித்தது. பயணக்களைப்பு வேறு. ஆனாலும் நிரலின் படி இரவு 8 மணிக்கு அங்கிருந்த மண்டபத்துக்கு போகும்படி உத்தரவிடப்பட்டிருந்ததால் வேறு வழியில்லாமல் அங்கே போக வேண்டிய நிர்பந்தம். சென்றோம்.

அங்கே இன்னும் பல அறிமுக விபரங்கள் காத்திருந்தன...

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2011.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768