முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 31
ஜுலை 2011

  புத்தக அறிமுக உரை: "விடிந்தது ஈழம்" - நம்மை நோக்கிய கேள்விகள்
சு. யுவராஜன்
 
 
       
நேர்காணல்:

“முற்றிலும் பரதேசியாய் சுற்றி திரிந்தவன் நான்”

மஹாத்மன்



பத்தி:

வரலாற்றின் ஓர் அத்தியாயம் முடிவுற்றது
கே. எல்.

ரஜினியின் தற்கொலை
ம. நவீன்

பீல்மோர் பாலசேனாவுக்கு ஒரு கடிதம்
மா. சண்முகசிவா



வல்லினம் கலை, இலக்கிய விழா 3 - சில பதிவுகள்

கலை இலக்கிய விழா - 3
ம. நவீன்


புத்தக அறிமுக உரை: "விடிந்தது ஈழம்" - நம்மை நோக்கிய கேள்விகள்
சு. யுவராஜன்


புத்தக அறிமுக உரை: உலகின் ஒரே அலைவரிசை நாட்டுப்புறப்பாடல்கள்
கே. பாலமுருகன்



சிறுகதை:

பூமராங்
எம். ரிஷான் ஷெரீப்



புத்தகப்பார்வை:

தர்மினியின் "சாவுகளால் பிரபலமான ஊர்" - ஒரு பார்வை
யோகி



கேள்வி பதில்:

ஷோபாசக்தி பதில்கள்
ஷோபாசக்தி



பெற்றோல் - (இப்போதைய "தலையங்கம்")
சேனன்


தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...13
எம். ஜி. சுரேஷ்



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


ஒளிந்து விளையாடும் சினிமாவின் கதைகள்
கே. பாலமுருகன்

சுவடுகள் பதிவுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு
ம‌. ந‌வீன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

கட்டங்களில் அமைந்த உலகு
யோகி

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

மனிதம் மிஞ்சும் உலகம்
நித்தியா வீரராகு



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...21

தேனு

தர்மினி

அதீதன்

நித்தியா வீரராகு

வல்லினம் கலை, இலக்கிய விழா 3-ல் நிகழ்த்தப்பட்ட உரை

அனைவருக்கும் வணக்கம், ஐயா ரெங்கசாமி அவர்களின் ‘விடிந்தது ஈழம்’ நூலைப் பற்றி சில வார்த்தைகள் பேச பணிக்கப்பட்டுள்ளேன். இன்றைய சூழலில் ஈழத்தைப் பற்றிய எவ்வித உரையாடல்களுமே எனக்கு மிகுந்த சங்கடத்தை அளிக்கிறது. தற்போது ஈழத்தில் நிகழும் விடயங்களைப் பற்றி எனக்கு பெரிதாக எதுவும் தெரியாதென்பதாலும் நம் காலத்தின் ஆக பெரிய மனித அவலத்தின் சாட்சியாக மட்டுமே இருப்பதன் இயலாமையாக சிந்தித்துப் பார்க்கிறபோது புலப்படுகிறது. இருப்பினும் ஐயா ரெங்கசாமியின் நூல் என்பதால் தட்டமுடியவில்லை. சில மாதங்களுக்கு முன் இன்டெர்லோக் நாவல் பிரச்சனை உச்சத்தில் இருந்தபோது ஓரிரவு ஐயா எனக்கு தொலைபேசினார். இப்பிரச்சனைக்குத் தீர்வை உணர்ச்சிவசப்பட்ட வகையில் எடுக்காமல், மலேசிய இந்தியர்களின் வரலாற்றை முறையாக தொகுக்கும் பணியில் தம்மை ஈடுப்படுத்திக் கொள்ளப் போவதாக சொன்னார். எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. காரணம் அவருக்கு இப்போது வயது 82 நெருங்கிக் கொண்டிருக்கிறது.

சங்கடம் என்றவுடன் எனக்கு ரோமான் போலான்ஸ்கியின் ‘பியானிஸ்ட்’ திரைப்பட காட்சிகள் நினைவுக்கு வருகின்றன. கதையின் நாயகன் போலந்து நாட்டின் சிறந்த பியானோ கலைஞனான ஸ்பில்ஸ்மன். இரண்டாம் உலகப் போரின் தொடக்கமாக ஜெர்மனி போலந்தை தாக்குவதோடு படம் தொடங்குகிறது. ஸ்பில்ஸ்மன் கட்டாய உழைப்பு முகாமிற்கு இழுத்துச் செல்லப்படுகிறார். அங்கே நிகழ்ந்த ஒரு காட்சி இன்னும் என் மனதில் ஆழமான நெருடலை தந்து கொண்டே இருக்கிறது. கட்டாய உழைப்பிற்குப் பிறகு அனைவரும் வரிசையாக நிற்க வைக்கப்படுகின்றனர். தோளில் துப்பாக்கி மாட்டிய ஒரு ஜெர்மனி அதிகாரி அவர்கள் முகங்களை ஊடுருவி பார்த்தவாறே நகர்கிறான். வயதானவர்களையும் நோயுற்றவர்களையும் நெடுஞ்சாண்கிடையாக படுக்கப் பணிக்கிறான். படுத்தவர்களின் தலைகளை துப்பாக்கி குண்டு பதம் பார்க்கிறது. அப்போது கேமரா ஸ்பில்ஸ்மனின் முகத்தை மட்டும் காட்டிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு குண்டிற்கும் ஸ்பில்மனின் முகம் காதுகளை பொத்தும் யத்தனத்துடன் சுருங்குகிறது. தலைகளில் பாய்ந்த துப்பாக்கி குண்டின் ‘தட், தட்’ ஓசை என்னை மிகவும் தொந்தரவு செய்தது. இரப்பர் காடுகளில் தொலைதூரங்களில் விழும் இரப்பர் கொட்டைகள் விழும் மெல்லிய ஓசையை நினைவுக்குக் கொண்டு வந்தது. மரணத்தின் ஓசை இவ்வளவு மெல்லியதா? என யோசிப்பது ஆழ்ந்த வருத்தத்தை அளித்தது.

இவை எனக்கு ஈழத்தைதான் நினைவுப்படுத்தியது. நம் காலத்தின் மிக பெரிய இனவழிவை வெறும் கைக்கட்டி வாய் பொத்தி பார்த்த நிலைமைதான் நமக்கு இருந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மனித உரிமையும் நேயத்தையும் முன்னெடுப்பதற்காக நாம் நிறுவிய அத்தனை அமைப்புகளும் கதியற்ற மெளனத்தில் உறைந்து நின்றன. உண்மையில் எல்லோருக்கும் அடுத்த கட்டத்தைப் பற்றி நிறைய குழப்பங்கள் இருக்கிறதென்னவோ உண்மைதான். அடுத்தக்கட்டத்தை தொடங்குவதற்கான புள்ளி மங்கலாகத்தான் தெரிகிறது. அ.ரெங்கசாமிக்கும் அப்படிதான். ஆனால் மீண்டும் ஈழ வரலாற்றை எளிமையாக தொகுத்துக் கொள்ளலாம் என ‘விடிந்தது ஈழம்’ எனும் இந்நூலை எழுதியுள்ளார். எழுத்தாளர்கள் தங்கள் எதிர்வினையை இப்படிதான் தொடங்க வேண்டும்.

இந்நூலில் ஈழப்பிரச்சனையின் தொடக்கத்திலிருந்து அதாவது இலங்கை சுதந்திரமடைந்த 1948-லிருந்து தொடங்கி முள்ளிவாய்க்கால் இறுதி போர் வரை நடந்ததை எளிமையாக சுருக்கமாக சொல்லி நகர்கிறார். தந்தை செல்வா போன்றவர்களின் ஆரம்ப கால அமைதி போராட்டங்கள் எப்படி சேனநாயகா, பண்டாரநாயகா போன்றவர்களால் தவிடு பொடியாகின என்பதை விளக்கி, அனைத்துலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு தாக்குதல், யாழ் நூலக எரிப்பு, யாழ் நூலக எரிப்பு, 1983-ல் நடந்த கறுப்பு சூலை கலவரம் என விரிகிறது இந்நூல். அந்நேரத்தில் போராளி குழுக்களுக்கு எம்.ஜி.ஆர், இந்திரா காந்தி போன்றவர்கள் செய்த உதவிகளும், தொடர்ந்து வந்த ராஜீவ் காந்தியின் சிங்கள் சார்பினால் ஏற்பட்ட விளைவுகளையும் சொல்கிறார். பிறகு 90-களில் நடந்த வெற்றிக்கரமான ஓயாத அலைகள் தாக்குதல் தொடங்கி முள்ளிவாய்க்காலில் உலகம் முழுவதும் வேடிக்கை பார்க்க இலங்கை தன் சகாக்களோடு ஆயுதப் போராட்டத்தை வெற்றிக்கரமாக துடைத்தொழிப்பது வரை நகர்கிறார்.

எனக்கு இந்நூலில் பெரும்பாலான ஆரம்ப கட்டப் போராட்டத்தைப் பற்றிய கருத்துகளோடு உடன்படுகிறேன். தலைவர்களின் பெயர்களை தமிழ்ப் படுத்தி எழுதுவது பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. ஆயுத குழுக்களைப் பற்றிய அவருடைய அவதானங்கள் குறுகியனதாகவும் ஒரு பக்க சார்பானதாகவும் இருப்பது நெருடுகிறது. ஆயுத குழுக்கள் பிளவுப்பட முக்கிய காரணமே கருணாநிதி என்பதும் சரியா என தெரியவில்லை. அவர் இப்படி எழுதுவது எனக்கு ஒரு சம்பவத்தை நினைவுக்குக் கொண்டு வருகிறது. பள்ளித் தேர்வில் தோல்வியுற்ற மாணவன் தன் தோல்விக்கு ஆசிரியர் முறையாக பாடம் போதிக்காததே காரணமென்றான். பிறகு பெற்றோர்கள் தன் படிப்பில் அக்கறை செலுத்தாததும் காரணமென்றான். நண்பர்கள் முறையாக படிக்க விடாமல் தொந்தரவு செய்கிறார்கள் என்றான். அவனுடைய காரணங்களைக் கேட்டுக் கொண்டிருந்த பெரியவர் ‘உன் தோல்விக்கு இவை மட்டும்தான் காரணமா?' என கேட்டுவிட்டு அவன் கண்களை உற்றுப் பார்த்தாராம். இன்றைய நிலையில் ஈழத்தின் அடுத்தக்கட்ட முன்வைப்புகளுக்கு முன் ‘நம்மை’ நோக்கிய உற்றுநோக்கல் மிகவும் அவசியமாகிறது. இதை எனக்கு இந்நூலின் வாயிலாக நினைவுப்படுத்திய ஐயாவிற்கு நன்றி. அவரின் முயற்சிக்கு என் வணக்கம்.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2011.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768