|
கட்டுரை
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி : ஆளுமைகளின் சேர்க்கை
லதா
எந்தவிதமான பேதங்களும் இன்றி, எல்லா மனிதர்களுடனும் ஒரே மாதிரியான அன்போடும் கனிவோடும் பேசும் அவரைப் போன்ற அறிஞர்களைச் சந்திப்பது மிக மிக அரிது.
எத்தனை பட்டங்கள், பெருமைகள், சிறப்புகள், மகுடங்களைப் பெற்றிருந்தபோதும் மனிதரைக் காட்டிலும் பெரிது எதுவுமில்லை என்றே இறுதி வரை வாழ்ந்தவர் பேராசிரியர் சிவத்தம்பி...
நான் உதவ முடியாது
அ. முத்துலிங்கம்
ஒவ்வொரு முறையும் பொஸ்டனுக்குப் போகும்போது இப்படித்தான் ஏதாவது
ஒன்று நடந்துவிடுகிறது. இம்முறை கம்புயூட்டர் பழுதாகிவிட்டது; ஆகவே
எழுத முடியவில்லை. மின்பதில்கள் போட வேண்டிய அவசியமும் இல்லை.
நல்லகாலமாக வாசிப்பதற்கு நிறைய புத்தகங்கள் இருந்தன. அவற்றை இரவு
பகலாக தொடர்ந்து வாசித்தேன்...
உணர்வுசார் நுண்ணறிவு (EQ) குறித்து நாம் ஏன் அக்கறை கொள்ள வேண்டும்?
சிவா பெரியண்ணன்
வாழ்வை உருவகப்படுத்த நாம் புதிய ஒரு வார்த்தையை கண்டுபிடிக்கவேண்டும். இயந்திரத்தனமானது என்பதைவிட சிக்கலாகி உள்ளது இன்றைய வாழ்வு. பாலகப்பருவம் முதற்கொண்டு வேலை செய்யும் பெரியவர்கள் வரை பல்வேறு தளங்களில் வாழ்வு நம்மை வெறிகொண்ட மிருகமாய் துரத்திக்கொண்டே இருக்கிறது...
சிறுகதை
கனவைக் கொல்வது அல்லது கனவுக்குள் சாவது
கே. பாலமுருகன்
காலம் ஒவ்வொரு கணமும் எங்கோ தவறிவிடுவது போல அச்சமாக இருக்கிறது. வீட்டு மேல் சட்டங்கள், வெளியிலுள்ள குளிரையும் வெயிலையும் உள்ளிழுத்து பரவவிடும் தகரங்கள், பாதி நீரை நிரப்பிக்கொண்டு பல நாட்களாக இடைச் சட்டத்திலேயே உட்காந்திருக்கும் குவளை, என அனைத்தையும் வெகுநேரம் பார்த்திருக்க முடியவில்லை...
|
|
கேள்வி பதில்
கவிதை
தொடர்
அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...14
எம். ஜி. சுரேஷ்
மொழியியல் என்பது மொழியின் வடிவம், அர்த்தம், மொழி பிரயோகிக்கப்படும் சந்தர்ப்ப சூழ்நிலை ஆகியவை குறித்துப் பேசுகிறது. குறியியலோ மொழியை ‘குறி’ யாக (sign) அதாவது சமிக்ஞையாகப் பார்க்கிறது. குறி என்ற சொல் இலக்கு, அடையாளம், சமிக்ஞை, பிறப்புறுப்பு போன்ற பல அர்த்தங்களை உள்ளடக்கிக் கொண்டு இருப்பதால் குறி சொல் குழப்பம் தரக்கூடும்...
|
|