முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 32
ஆகஸ்ட் 2011

  சுவடுகள் பதியுமொரு பாதை ...8
பூங்குழலி வீரன்
 
 
       
நேர்காணல்:

"இலக்கியவாதிகள் உண்மைக்குக் குரல் கொடுக்க வேண்டும்"

சமாட் சைட்



பத்தி:

யார் இந்த அம்பிகா சீனிவாசன்?

கே. பாலமுருகன்

சுரண்டப்படும் மலேசிய எழுத்தாளர்கள்

ம. நவீன்



கட்டுரை:

பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி : ஆளுமைகளின் சேர்க்கை
லதா

நான் உதவ முடியாது!
அ. முத்துலிங்கம்

உணர்வுசார் நுண்ணறிவு (EQ) குறித்து நாம் ஏன் அக்கறை கொள்ள வேண்டும்?
சிவா பெரியண்ணன்



சிறுகதை:

கனவைக் கொல்வது அல்லது கனவுக்குள் சாவது
கே. பாலமுருகன்



கேள்வி பதில்:

ஷோபாசக்தி பதில்கள்
ஷோபாசக்தி



தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...14
எம். ஜி. சுரேஷ்



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


நிலத்தினும் பெரிதே
ரவிக்குமார்

மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


ஒளிந்து விளையாடும் சினிமாவின் கதைகள்
கே. பாலமுருகன்

சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

கட்டங்களில் அமைந்த உலகு
யோகி

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

மனிதம் மிஞ்சும் உலகம்
நித்தியா வீரராகு



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...22

லதாமகன்

கிண்ணியா எஸ். பாயிஸா அலி

இந்திரனின் 'வர வர வார்த்தைகள் மீதே...'

இந்திரன் தமிழகக் கவிஞர். தமிழகத்தின் மிக முக்கியமான கலை விமர்சகர். “அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்” என்ற நூலின் மூலமாக கருப்பர் இலக்கியத்தைத் தமிழுக்குக் கொண்டு வந்த பெருமை இவருக்குண்டு. தமிழ் ஆங்கிலம் என எழுதி வரும் இவர் தமிழ்நாடு லலித் கலா அகாடமியின் ‘நுண்கலை’ இதழின் ஆசிரியர். இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள இவரது கவிதைகள் பெரும்பாலும் நகரத்து அனுபவங்களைப் பதிவு செய்பவையாக இருக்கின்றன. அவரின் “வர வர வார்த்தைகள் மீதே” என்ற கவிதையோடு இம்மாத பயணம் .

காற்றின் அலைகளில் கண்ணுக்குப் புலப்படாதபடி எப்போதும் மிதந்தபடியே இருக்கின்றன வார்த்தைகள். யாருமற்ற நிசப்த பொழுகளில் கூட யாரோ நம்மை பெயர் சொல்லி அழைப்பது கேட்டு நாம் திரும்பி பார்க்கும் தருணங்களில் காற்றில் மிதந்தபடி இருக்கும் வார்த்தைகள் குறித்து சிறிது பயம் ஏற்படலாம். எப்போதும் வார்த்தைகளை மட்டும் நிரப்பியபடி கனத்துக் கிடக்கிறது மனித வாழ்வு. நொடிதோரும் வார்த்தைகளின் சேமிப்பில் ஊதி பெரிதாகி இயல்பு மறந்து இயக்கம் சுருங்கி தள்ளாடி கொண்டே கரைந்து ஒரு நாள் வார்த்தைகளைத் துறந்தபடி காணாமல் போய்விடுகிறது வாழ்வு.

வர வர வார்த்தைகள் மீதே எனக்கு
நம்பிக்கை அற்றுப் போச்சு.

வார்த்தைகளால் சூழப்பட்ட வாழ்வில் அந்த வார்த்தைகளின் மீதே நம்பிக்கை இழத்தல் என்பது ஒரு வரம் எனலாம். எப்போதும் யாரோ ஒருவரின் வார்த்தைகளால் நாம் இயக்கப்படுகிறோம். பிறந்த நொடி தொடங்கி சுயமாக யோசித்து செயலாற்றும் தருணம் வரை பெற்றோரின் வார்த்தைகளால் இயக்கப்படுகிறோம். பின் நண்பர்கள், உறவினர்கள், கணவன், மனைவி என யாரோ ஒருவரது வார்த்தைகளால் தொடர் இயங்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறோம். வார்த்தைகளின் வீரியத்தைப் பொறுத்து நமது இயங்குதல் நடக்கின்றது.

நான் சொல்ல
மற்றவன் வேறொன்றாய்ப் புரிந்துக் கொள்ள
விளக்கம், மறு விளக்கம்
விளக்கத்திற்கு விளக்கமெனப்
புதராய் மண்டி புற்றாய் வளரும்
வார்த்தைகள்.

வார்த்தைகள் வெளிவந்த அந்த நொடியோடு மறைந்து விடுவதில்லை. அதற்கு விளக்கப்படுத்துதல் பல நீள் அளவுகள் தாண்டி தொடர்ந்தபடியே இருக்கின்றன. பெரும்பாலும் ஓரிரு வார்த்தைகளால் ஆன சிறு விளக்கங்கள் யாரையும் மகிழ்ச்சிப்படுத்துவதில்லை. அவர்களுக்கு நீண்ட விளக்கங்கள் தேவையானதாய் இருக்கின்றன. புதிது புதிதாய் பிறக்கின்ற அவர்களின் தொக்கி நிற்கும் தொடர் கேள்விகளுக்கு உடனடியாக நாம் பல வார்த்தைகள் கோர்த்து விளக்கங்கள் தயார் செய்கிறோம். ஒரு சிறு வார்த்தையோடு நாம் எழுந்து போய்விட முடிவதில்லை. பிறரின் வார்த்தைகள் நம்மை தடுத்து நிறுத்துகின்றன. அவர்களுக்காக மீண்டும் சிந்தி கிடக்கும் வார்த்தைகள் பொறுக்கி விளக்கங்கள் தயார் செய்தபடியே இருக்கிறோம்.

“என் பிரிய நண்பனே”
என்பதின் பொருள்
“நீ எனக்கு அதிகம் தேவைப்படுகிறாய்”
என்பதாய் இருப்பின்
வார்த்தைகள் ஏன் இன்னும்
வழக்கொழிந்து போகவில்லை?

ஒருவர் சொல்லிச் செல்லும் வார்த்தைகள் அவர் போனபின் அவரோடு போய்விடுவதில்லை. அந்த வார்த்தைகளைக் கேட்கும் நம்மைச் சுற்றி அவை பின்னப்பட்டுவிடுகின்றன. வார்த்தைகளுக்கு உரியவர் போனபின் அந்தப் பின்னல்கள் மிக மெதுவாக அவிழ்கின்றன. அந்த வார்த்தைகள் ஏற்படுத்திய தாக்கத்தில் நாம் அமிழ்ந்து போகின்றோம். அதுகுறித்து அடுத்த வார்த்தை நம்மை பாதிக்கும் வரை யோசித்தபடியே இருக்கின்றோம். வார்த்தைகளின் உரிமையாளரை ஒரு வார்த்தைகூட கேட்காமல் அவரது வார்த்தை நாமே நமக்கேற்ற மாதிரி மொழிப்பெயர்த்துக் கொள்கிறோம். ஒரு நல்ல நண்பர் எதிரியாவதும், ஒரு எதிரி நல்ல நண்பராவதும் இந்த வார்த்தைகளின் மொழிப்பெயர்ப்பால்தான் நடக்கிறது.

மீன்கள்
கண்ணாடித் தொட்டிக்குள் துப்பும்
காற்றுக் குமிழிகளாய் வார்த்தைகள்...

வார்த்தைகள் காற்றுக்கு வளையும் நாணலைப் போன்றது. இன்று நம்மை போற்றும் ஒருவரது வார்த்தை நாளையே நம்மைப் தூற்றலாம். மிகக் கவனமாய் வார்த்தைகளைப் பொறுக்கி எடுத்து நாம் பேசத் தொடங்குகைளில் எதிர்த்திசையிலிருந்து வரும் ஒற்றை வார்த்தை நம்மை வார்த்தைகளற்ற வெற்றிடத்தில் நிறுத்தி வைக்கலாம். “என்ன சொல்றதுனு தெரியல” என எத்தனை தடவை நமது எல்லா வார்த்தைகளையும் தொலைத்து விட்டு நாம் சொல்லியிருப்போம்.

பஸ்ஸில், பள்ளியில்
பார்லிமெண்டில்
படுக்கையறையிலும்...
வெறுமனே உடைந்து வீணாய்க் கரையும்.

மனித வாழ்வில் வார்த்தைகளை அவ்வளவு எளிதில் பிரித்துதெடுத்துவிட முடியாது. நிசப்தமான பொழுதுகளை விட சத்தமான பொழுதுகளே நம்மை அதிகம் ஆட்கொள்கின்றன. எங்கும் எப்போதும் ஒரு வேளை தனிமையும் பல வேளைகளில் அமைதியும் இன்றி கதைத்தபடியே இருக்கின்றார்கள். வேறுபாடின்றி வார்த்தைகளும் எல்லாரிடமும் மிக இயல்பாய் புழங்குகின்றன. மனிதர்கள் வாழும் இடங்களிலெல்லாம் வார்த்தைகளும் வாசம் செய்கின்றன மனிதர்களைப் போலவே...

வர வர வார்த்தைகள் மீதே எனக்கு
நம்பிக்கை அற்றுப் போச்சு.

வார்த்தைகளின் மீது எனக்கு எப்போதும் நம்பிக்கை இருந்தபடித்தான் இருக்கிறது. வார்த்தைகலற்ற வெறுமையைக் கற்பனை செய்ய முடியாத ஒரு பொழுதில் ஆலமரமாய் அடிப்பெயராது நிலைத்து விடுகிறது வார்த்தைகள் குறித்த நம்பிக்கை.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2011.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768