முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 32
ஆகஸ்ட் 2011

  மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள் ...8
ஏ. தேவராஜன்
 
 
       
நேர்காணல்:

"இலக்கியவாதிகள் உண்மைக்குக் குரல் கொடுக்க வேண்டும்"

சமாட் சைட்



பத்தி:

யார் இந்த அம்பிகா சீனிவாசன்?

கே. பாலமுருகன்

சுரண்டப்படும் மலேசிய எழுத்தாளர்கள்

ம. நவீன்



கட்டுரை:

பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி : ஆளுமைகளின் சேர்க்கை
லதா

நான் உதவ முடியாது!
அ. முத்துலிங்கம்

உணர்வுசார் நுண்ணறிவு (EQ) குறித்து நாம் ஏன் அக்கறை கொள்ள வேண்டும்?
சிவா பெரியண்ணன்



சிறுகதை:

கனவைக் கொல்வது அல்லது கனவுக்குள் சாவது
கே. பாலமுருகன்



கேள்வி பதில்:

ஷோபாசக்தி பதில்கள்
ஷோபாசக்தி



தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...14
எம். ஜி. சுரேஷ்



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


நிலத்தினும் பெரிதே
ரவிக்குமார்

மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


ஒளிந்து விளையாடும் சினிமாவின் கதைகள்
கே. பாலமுருகன்

சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

கட்டங்களில் அமைந்த உலகு
யோகி

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

மனிதம் மிஞ்சும் உலகம்
நித்தியா வீரராகு



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...22

லதாமகன்

கிண்ணியா எஸ். பாயிஸா அலி

வண்ணச் சாந்துகளில் குளித்துக் கதைகளில் தம்மைத் துவட்டிக்கொண்ட கலைஞன்!

தமிழ் சார்ந்தவர்களின் அதிலும் குறிப்பாகத் தமிழ்க் கல்விச் சூழலில் மேலிடத்திலிருந்து அடிமட்டம் வரை ஆடப்படுகின்ற தகிடுதத்தங்களைப் படம் பிடித்துக் காட்டும் இத்தொடரில் கைங்கர்யவாதிகளுக்கப்பால் மாறுபட்ட வகையில் இயங்கிக்கொண்டிருக்கிற ஆசிரியர்கள் இருவரை இக்கட்டுரையின் வழி சொல்லலாம் என நினைக்கிறேன். ஒருவர் திரு முத்துக்கிருஷ்ணன் மற்றொருவர் திரு தாயபு கனி. இருவரையும் ஆசிரியர்கள் என்ற கட்டமைப்புக்கு வெளியே சமூகச் சேவையாளர்களாகவும் இலக்கியம் சார்ந்தவர்களாகவும் அவதானிக்கிறேன். இவர்களைப் போல் நாட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருக்கவே செய்வர். ஆனால், நமது துரதிர்ஷ்ட்டம் அத்தகையவர்களைப் பெட்டிக்குள் அடைத்துவைப்பது!

முதலில் மலாக்கா முத்துக்கிருஷ்ணன் அவர்களைக் குறித்துத் தொடங்குகிறேன். மலாக்கா, டுரியான் துங்கல் எனும் குக்கிராமத்தில் பிறந்த திரு முத்துக்கிருஷ்ணன், மலேசிய ரீதியில் முற்றிலும் மாறுபட்ட தமிழாசிரியராகப் பவனி வந்தவர். இன்று மலேசிய நண்பன் ஞாயிறு பதிப்பில் கணினி கேள்வி பதில் அங்கத்தைச் சுவைபட நடத்துவதோடு, ‘மாணவர் சோலைப்’ பகுதியை ஈர்க்கின்ற வகையில் தொகுத்துத் தருகிறார். இவர் தமிழாசிரியர் என்ற முத்திரையத் தாண்டி மிகச் சிறந்த சித்திரக் கலைஞனாக உலா வந்தவர்.

இவரது சித்திரங்களும் வண்ணக் கலவைகளும் பள்ளிச் சுவர்களில் நங்கூரமிட்டுவிட்டால், அவற்றிலிருந்து கழன்றுகொள்ள எந்த விழிகளுக்கும் துணிவு வராது. வெற்றுச் சுவர்களுக்கு உயிர் வந்தது போல் மிக நேர்த்தியான சித்திர வேலைப்பாடுகளுக்குரியவர் என்ற பெயர் இன்றளவும் உள்ளது. தாம் பணியாற்றிய பல தமிழ்ப்பள்ளிகளில் இன்றளவும் அந்த வசீகரச் சித்திரங்கள் நம்மை ஒரு கணம் நிறுத்திவிடுகின்றன.மாதிரிக்கு ஜாசின் தமிழ்ப்பள்ளியில் முத்துக்கிருஷ்ணன் தீட்டிய சித்திரங்களும் வடிவ எழுத்துகளும் இன்றளவும் யாரும் தீண்டிக் கெடுக்க அஞ்சுவர். வெளியிலிருந்து பள்ளிக்கு வருகின்றவர்கள் ஓரிடத்தில் அவரது சித்திரம் தட்டுப்பட்டுவிட்டால், மற்றச் சித்திரங்களுக்குத் தாவுவர். அதே போல அவரது கையெழுத்துகளும் தனித்துப் பேசப்பட்டன. அன்று அவர் பயன்படுத்திய ‘PELAKA’ இரக வண்ணச் சாந்துகள் இன்றளவும் சாயம் சிதையாமல் அழகூட்டிக்கொண்டிருக்கின்றன.

வண்ணச் சாந்துகளை அநாயசமாகக் கையாளும் நுட்பம் எப்படி வாய்த்து என்பது வியப்பு! கலை தொடர்புடைய படைப்புகளை உடனுக்குடன் தீட்டித் தரும் தனித்த பெரும் ஆளுமையைக் கொண்டிருந்தார். பள்ளியைத் தவிர்த்து வெளியே பல இடங்களுக்கு அவரது தூரிகை ஊர்ந்து போயிருக்கிறது. ஆலயங்கள், சமூக மண்டபங்கள், பொது நிலையங்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம். அப்பொழுது நான் இடைநிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த சின்ன பையன். நான் வசித்த புக்கிட் செர்மின் தோட்டத்தில் முனியாண்டி என்பவர் புதுப் பள்ளிப்பேருந்தொன்றை வாங்கியிருந்தார். பள்ளிப் பேருந்து என்பதை அடையாளப்படுத்துவதற்கு வாசகங்கள் தீட்ட வேண்டி முத்துக்கிருஷ்ணனை அணுகியிருந்தார்.

ஒரு மாலையில் முத்துக்கிருஷ்ணன் மிக எளிமையான தோற்றத்தோடு நெற்றிக் கோட்டில் நீர் வழிய மாலைச் சூட்டுக்குக் கீழ் பேருந்துக்கருகில் நின்றுகொண்டு தமக்கே உரிய ஓரப் பார்வையில் வேலையைத் தொடங்கினார். மிகப் பெரிய ஓவியரென்றாலும் சின்ன பந்தாகூட இல்லாமல் ஒரு தோட்டத் தொழிலாளியைப் போல் செயல்பட்டுக்கொண்டிருந்தார். அவரது வேலையைத் தொடக்கத்திலிருந்து பார்க்க இயலவில்லை. காற்பந்து விளையாட நண்பர்கள் என்னை அழைத்துக்கொண்டிருந்த நேரம் அது. மறு நாள் காலை, அந்தப் பேருந்து புதுமணப் பெண் போல அழகு கோலம் பூண்டு தோட்ட மக்களைச் சுண்டியிழுத்துக்கொண்டிருந்தது. அதுவரை எனக்கு அறிமுகமாகாதவர்,பிறகுதான் தெரிந்தது அவர் ஜாசின் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் என்று! அதற்குப் பிறகே, அவரைப் பின் தொடர ஆரம்பித்தேன்.

ஜாசின் பட்டணத்தில் பிரபலமாக விளங்கிய கே.வி.நாயர் அவர்களுக்கு உரிமையான இரண்டு மாடி வீட்டை மாணவர் விடுதியாக மாற்றி ஏழை மாணவர்கள் எல்லாம் தங்கிப் படித்தனர். கல்வியில் தீவிரம் காட்டிய மாணவர்களுக்கு அந்தத் தளம் கூட்டுக் கல்வி முறைக்கான களமாக மாறியது. அங்குப் பகுதி நேர ஆசிரியராகத் திரு முத்துக்கிருஷ்ணன் வந்து போய்க்கொண்டிருப்பது தெரிந்தது. எழுதிக் குவித்த எண்ணற்ற எழுத்தோவியங்களை ஒரு முறை மாணவர்களிடம் கொண்டு வந்து காண்பித்துள்ளார். அவை யாவும் பத்திரிகையில் முழுப்பக்கக் கதைகளாக வெளிப்பட்டிருந்தன. எனக்கு அதைத் தரிசிக்க வாய்ப்புக் கிட்டவில்லை. நண்பர்களின் மூலம் காதுபடக் கேட்டதே மிகப் பெரிய செய்தியாகத் தோன்றியது.

1980 களின் இறுதியில் இக்கட்டான நிலையில் எமது குடும்பம் ஜாசின் பட்டணத்திற்குக் குடிபெயர்ந்தது. எங்கள் வீட்டிலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள கம்போங் கெலுபி எனும் கிராமத்தின் சாலை மருங்கேதான் அவரது இல்லம் அமைந்திருந்தது. அவர் எனக்கு மேலும் நெருக்கமானார். ஒரு தடவை பள்ளி நிகழ்வுக்காக திரைப்படப் பாடல் மெட்டில் ஒரு பாடலைக் கேட்டிருந்தேன். ‘திருடாதே பாப்பா திருடாதே’ என்ற பாடல் அமைப்பில் உடனடியாக அமர்ந்து கறுப்பு மையில் சித்திர எழுத்துகளைக் கோர்த்து யாத்துத் தந்தார். எழுதும்போதே எப்படி இவரால் இத்தனை நிதானமாகவும் பிழையறவும் அழகுறவும் எழுதமுடிகிறது என வியந்தேன்!

பெரும்பாலும் தமிழாசிரியர்கள் மத்தியில் இதுபோன்ற தனித்துவம் வாய்ந்தவர்களைக் காண்பது குதிரைக்கொம்பு! சிலருக்கு அத்திறமை இருக்கலாம். ஆனால், உயிர்ப்பு என்பதும் நீட்சி என்பதும் எத்தனை பேரில் காண இயலும்? முத்துக்கிருஷ்ணனிடம் இருக்கின்ற அந்த உயிர்ப்பும் பிரசன்னமும் யாரிடமும் கண்டதில்லை. அந்த மகோன்னத வியப்பு இன்றளவும் என் நெஞ்சக் கூடத்தில் எழிலோவியமாக உள்ளது! நான் உட்பட அன்றையக் காலத்தில் அவரது பாதிப்பு இல்லாமல் சித்திர எழுத்துகளைத் தீட்ட முடியாது என்பது நிதர்சனமான உண்மை. நேரடி போதனை இல்லாவிடினும், நாமும் அவரைப் போல் அழகாக வடிவமாக எழுத வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தியவர் திரு முத்துக்கிருஷ்ணன் ஒருவரே!

நமது கல்விச் சூழலில் எத்தனையோ விதமான ஆசிரியர்களைச் சந்தித்திருப்போம். எனக்குக் கற்றுக்கொடுத்த ஆசிரியர்களின் கையெழுத்துகளை நான் இரசித்ததேயில்லை. கோழிகள் நடந்து போன காகிதங்கள் போலவும், கொம்புகள் மழிக்கப்பட்ட மொட்டை மான்களைப் போலவும், இராட்சச இட்டிலிகளைப் போலவும் விதவிதமான எழுத்துக்குரிய ஆசிரியர்களைப் பார்த்திருப்போம். திரு.முத்துக்கிருஷ்ணனன் அவர்கள் எனக்கு நேரடி ஆசிரியராக அமையாதது எனது துரதிர்ஷ்டம். எழுத்து வடிவத்தை நேசிக்கக் கற்பித்தவர். அந்த நேசம் தமிழைத் தொடும்போதெல்லாம் வியாபிக்க வேண்டும் என்ற புதுவகை இரசாயனத்தைப் பாய்ச்சியவர் என்றால் மிகையில்லை. தெரிந்தோ தெரியாமலோ இன்றுங்கூட அழகாக எழுத வேண்டும் என்று தூவலை ஏந்துங்கால், வடிவ எழுத்துக்கு முன்னோடியாக முத்துக்கிருஷ்ணன் அவர்கள் முந்தி வந்து நிற்பதைத் தவிர்க்க முடியவில்லை.

சராசரி ஆசிரியருக்கப்பாற்பட்ட திறமைகளைத் தமக்குள்ளே வைத்திருந்தார். ஆனால், கல்வியுலகம் அவரை அறிந்துவைத்த அளவுக்கு உணர்ந்துவைக்கவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. சில உப்புச் சப்பற்ற காரணிகளை முன்வைத்து அவர் ஒரு சாமான்ய ஆசிரியர் என்று எடை போட்டு இன்றளவும் அவரது ஆளுமையை அலகிடத் தவறிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

எத்தனையோ அச்சு ஊடகங்களில் பணிபுரிந்துமுள்ளார். சான்றாகப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, மயில் இதழில் பணி புரிந்தபோது அவரது கைவண்ணம் தங்கப் பதக்கத்தின் மேலே ஒரு முத்துப் பதித்தது போல வெளிப்பட்டது. சிறுகதைகளின் பாடுபொருளும் நடையும் மாணவர்கள் விரும்பிப் படிக்கின்ற அளவுக்குக் கையாண்டிருந்தார். நன்றாக ஞாபகமிருக்கிறது, எண்பதுகளில் உலகச் சாரணர் இயக்கத்தில் முக்கியப் பொறுப்புக்குரியவராகவும் சைக்கிளோட்ட வீரராகவும் தம்மை வெளிப்படுத்தியிருந்த முத்துக்கிருஷ்ணன் பல சந்தர்ப்பங்களில் அந்த அனுபவங்களையே சிறுகதைக்குக் களமாக்கியிருந்தார்.

எனது அவதானிப்பில் அறிவுரையோ போதமோ சொல்ல வேண்டி தூவலைத் தூக்கியிருப்பார் என்று எண்ணத் தோன்றியில்லை. கலாம்சக் கூறுகளுக்கும் சில நுட்மான சம்பவங்களுக்கும் முன்னுரிமை அளித்திருப்பார் என்றே உணரத் தோன்றுகிறது. எழுத்தில் அனைத்துமே அவருக்குப் பாடுபொருளாகியிருந்தன. இலக்கியப் போட்டிகளில் அவரது ஈடுபாடு கம்மிதான். 1983 ஆம் ஆண்டு, காஜா பெராங் மண்மன்ற கலை இலக்கியப் போட்டியில் அவரோடு நானும் பங்குபெற்றிருந்தேன். சிறுகதைப் பிரிவில் எங்களுக்கு முதன்மைப் பரிசுகள் கிடைத்தன. அதன் பின் பிற போட்டிகளில் கலந்துகொண்டார என்று அறுதியிடத் ஹெரியவில்லை.

எனது பள்ளிப் பிராயத்தின்போது தாம் மேற்கொண்ட சாரணர் முகாமின்போது ஏற்பட்ட இடர்பாடுகளையும் திகிலையும் கதையாக்கித் தந்திருந்தார். இலக்கியத்தைப் பொறுத்தமட்டில் ஆற்றொழுக்கு நடையும் இயல்பான வருணனைகளையும் கொண்டிருந்தவர். ‘நினைவெல்லாம் நித்யா’ என்ற கார்த்திக்கின் படம் பேர் போட்டுக்கொண்டிருந்தபோது, முத்தாய்ப்பு வைத்தாற்போல மயில் வார ஏட்டில் ‘கனவெல்லாம் கார்த்திகா’ எனும் தொடர்கதையைச் சுவாரஸ்யத்துடன் தந்து வாசக மனங்களைக் கொள்ளைகொண்டது பழைய வாசகர்களுக்குத் தெரியும். ஆசிரியருக்கும் ஆறாம் படிவ மாணவிக்கும் ஏற்படக்கூடிய காதலும் அதன் அத்துமீறலும் மட்டும் இப்போதைக்கு என் ஞாபகத்தில் உள்ளது. அத்தொடர்கதை நூல்வடிவம் பெற வேண்டும் என்பது என் அவா!

எழுபதை நோக்கிப் போய்க்கொண்டிருக்கும் முத்துக்கிருஷ்ணன் அவர்கள் தம்முடைய பதிவாக எந்த நூலையும் இதுவரை தமிழுக்குக் கொடையாக்கவில்லை என்பது ஏமாற்றந்தான்! கலை இலக்கிய வெளிகளில் அவரும் பலமுறை, பலரிடம், பல சூழல்களில் தெரிந்தே ஏமாற்றப்பட்டிருக்கிறார். அச்சு ஊடகங்களின் கொடுக்கிப் பிடியில் தன் சக்தியை மாத்திரமே இழந்தவர். தற்போது தான் சார்ந்துள்ள அச்சு ஊடகத்தில் நேர்மையான பலனைக் கையைக் கடிக்காத அளவுக்குப் பெற்று வருவது மனத்துக்கு ஆறுதல் அளிக்கிறது! உண்மைக் கலைஞர்கள் வாழ வேண்டும்! அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடிய பாரதியார்கள் இனியும் வேண்டாம்! அவர் அப்பொழுதே விழித்திருந்தால் இந்நேரம் துருவ நட்சத்திரமாக நின்றுகொண்டிருப்பார். (ஆனால், கலை இலக்கியம் அவரிடமிருந்து காணாமற் போயிருக்கலாம்) அதோடு மற்ற எழுத்தாளர்களைப்போல் அவருக்குக் காக்காய்ப் பிடிக்கத் தெரியாது; சம்பாதிக்கவும் தெரியாது! சத்தியமும் உண்மையும் நிறைந்தவர்!

எண்பதுகளில் நகர்ப்புறச் சூழலில் முகிழ்க்கின்ற உறவுகளை மையமாக வைத்துத் தொடர்கதையைத் தீட்டியது, மலேசிய தமிழாசிரியர்கள் தொடாத ஒரு விடயமாகும். அதிலும் தங்களுக்கான பிம்பத்தோடு உலா போகும்தமிழ் ஆசிரியர்கள் நல்ல காலத்திலேயே பாடப் புத்தகத்தைத் தாண்டி தூவலைத் தூக்க மாட்டார்கள் என்பது வேறு! அதில் திரு. முத்துக்கிருஷ்ணன் முற்றிலும் விதிவிலக்கு என்பது பெரும்பேறு!

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2011.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768