முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 33
செப்டம்பர் 2011

  மெல்ல தொடங்கும் அரசியல் விழிப்புணர்வு!
கெ.எல்.
 
 
       
கட்டுரை:

மரண தண்டனை என்பது மனித விழுமியங்களுக்கு எதிரான ஊழல்
ரவிக்குமார்

இலக்கியத்தைக் கொல்பவனின் சாட்சியம்: றியாஸ் குரானாவின் கவிதைகள்
கே. பாலமுருகன்

மெல்ல தொடங்கும் அரசியல் விழிப்புணர்வு!
கெ. எல்.

கப்பலுக்குப் போன மச்சான்

எம். கே. குமார்

புலம்பெயர் முகங்கள்
வி. ஜீவகுமாரன்

பிசாசின் வைத்தியரிடம் தற்செயலாகச் சென்ற பயணம்
எம். ரிஷான் ஷெரீப்



பத்தி:

உயிர்ப்பு

ஷம்மிக்கா



பதிவு:

எஸ். ராமகிருஷ்ணனுடன் கழிந்த நாள்களும் கழியாத நினைவுகளும்
தயாஜி



கேள்வி பதில்:

ஷோபாசக்தி பதில்கள்
ஷோபாசக்தி



தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...15
எம். ஜி. சுரேஷ்



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


நிலத்தினும் பெரிதே
ரவிக்குமார்

மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


ஒளிந்து விளையாடும் சினிமாவின் கதைகள்
கே. பாலமுருகன்

சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

கட்டங்களில் அமைந்த உலகு
யோகி

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

மனிதம் மிஞ்சும் உலகம்
நித்தியா வீரராகு



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...23

மாதங்கி

ஆ. மாரிமுத்து

ம. நவீன்

ந. பெரியசாமி

சிங்கப்பூர் வரலாற்றில் இதுவரையில்லாத பரபரப்புடன் நடந்து முடிந்துள்ளது அண்மைய அதிபர் தேர்தல். ஆகஸ்ட் 28ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தல் சிங்கப்பூர் மக்களின் அரசியல் முதிர்ச்சியையும் பரந்துபட்ட எதிர்பார்ப்புகள், கருத்துகளையும் பிரதிபலிப்பதாக அமைந்திருந்தது.

மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் அதிபர் தேர்தல் முறை அமலுக்கு வந்த பின்னர் கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நான்கு வேட்பாளர்களைக் கொண்ட போட்டியாக இது அமைந்ததுடன் போட்டியும் மிகக் கடுமையாக இருந்தது. வெற்றியாளரை முடிவு செய்ய வாக்குகள் ஒருமுறைக்கு இருமுறையாக எட்டு மணி நேரத்துக்கும் அதிகமாக காலம் எடுத்து வாக்குகள் எண்ணப்பட்டன.

இறுதியில் 7,269 வாக்குகள் அதிகம் பெற்ற அனுபவம் மிக்க அரசியல்வாதியும், சிங்கப்பூரின் முன்னாள் துணைப் பிரதமரும் வங்கியாளருமான 71 வயது டாக்டர் டோனி டான் மயிரிழையில் வெற்றி பெற்றார். அவருக்கு மொத்தம் 744,397 மக்கள் அதாவது 35.19 விழுக்காட்டினரே வாக்களித்திருந்தனர்.

35 விழுக்காடு வாக்குகளைப் பெற்று, ஒரு நாட்டை பிரதிநிதிக்கப் போகிறார் அதிபர்! இது சரித்திரம் கண்டறியாத ஒன்று.

ஆக அதிக அளவில் 2.27 மில்லியன் சிங்கப்பூரர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த இந்த அதிபர் தேர்தலில் 2.15 மில்லியன் மக்கள் வாக்களித்தனர். அவர்களின் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே வெற்றி பெற்ற டாக்டர் டோனி டானுக்கு ஆதரவளித்துள்ளனர்.

அவருக்கு கடும் போட்டியளித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மருத்துவருமான, ஆளும் மக்கள் செயல் கட்சிக்கு வாடிக்கையாக மிக அதிக அளவில் வாக்குகளைப் பெற்று தந்தவருமான டாக்டர் டான் செங் போக் 737,128 அதாவது 34.85 விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருந்தார்.

அதனால் முடிவு என்ன ஆகுமோ என்று எல்லாரும் பரபரப்போடு காத்திருந்தார்கள். இருவருக்கும் மிகக் குறைந்த அளவு வாக்கு வித்தியாசமே இருந்தது. எனவே எல்லா வாக்குகளையும் திரும்பவும் எண்ண முடிவு செய்யப்பட்டது. கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் வாக்குகள் எண்ணப்பட்டன.

கடைசியில் 7,269 வாக்குகள் அதிகம் பெற்ற டாக்டர் டோனி டான் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு மொத்தம் 744,397 மக்கள் அதாவது 35.19 விழுக்காட்டினர் வாக்களித்திருந்தனர்.

மற்ற இரு வேட்பாளர்களான திரு டான் ஜீ சே 529,732 (25.04%) வாக்குகளையும் திரு டான் கின் லியன் 103,931 (4.91%) வாக்குகளையும் பெற்றனர். இதில் வைப்புத்தொகையான $48,000ஐ இழந்தவர்கள் திரு டான் கின் லியன் மட்டுமே. இதில் செல்லாத வாக்குகள் 37,826.

சிங்கப்பூரின் ஜனநாயகத்துக்கும் சிறந்ததோர் எடுத்துக்காட்டாக இந்த அதிபர் தேர்தல் அமைந்துள்ளது. கடந்த மே மாதம் நடந்த திருப்புமுனை பொதுத் தேர்தலைத் அடுத்து, அரசியலிலும் நாட்டு விவகாரங்களிலும் சிங்கப்பூர் மக்கள் அக்கறையும் கவனமும் செலுத்தத் தொடங்கியுள்ளதை இந்த அதிபர் தேர்தல் மீண்டும் உறுதிப்படுத்தியது.

சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து அதிபர் பதவிக்கு இப்படி ஒரு போட்டி நடைபெற்றதில்லை.

ஆளும் மக்கள் செயல் கட்சிக்கு முழுமையான ஆதரவை அளித்து வந்த சிங்கப்பூரர்கள் தற்போது, ஆளும் கட்சிக்கு நெருக்கமாக உள்ள டாக்டர் டோனி டானுக்கு 35 விழுக்காட்டு ஆதரவையே தெரிவித்துள்ளனர். இத்தனைக்கும் டாக்டர் டோனி டான் கட்சியிலிருந்து விலகி, அரசியல் சார்பற்றவராகத் தம்மை அறிவித்திருந்தார். அரசாங்கமும் அவருக்கு வெளிப்படையான ஆதரவைத் தெரிவிக்கவில்லை.

அரசாங்கம் நேரடியாக எவரையும் அதிபர் பதவிக்கு பரிந்துரைக்காகது இதுவே முதல் முறை.

சிங்கப்பூர் 1965இல் மலேசியாவிலிருந்து பிரிந்து சுதந்திர நாடான பின்னர் நியமன அதிபர் முறையில் திரு யூசோஃப் பின் இஷாக் (பதவிக் காலம் 1965-1970) சிங்கப்பூரின் முதல் அதிபராக நாடாளுமன்றத்தால் தேர்வு செய்யப்பட்டார். உத்துசான் மெலாயு பத்திரிகையின் ஆசிரியராக இருந்த யூசோஃப் பின் இஷாக் மலேசியாவில் பிறந்தவர். அவரது படம்தான் சிங்கப்பூர் நாணய தாட்களில் பொறிக்கப்பட்டுள்ளது. அவரைத் தொடர்ந்து மகப்பேறு மருத்துவரான அமரர் டாக்டர் பெஞ்சமின் ஹென்றி ஷியர்ஸ் (பதவிக் காலம் 1971-1981), தொழிற்சங்கத் தலைவர் அமரர் சி.வி தேவன் நாயர் (பதவிக் காலம் 1981-1985), பத்திரிகையாளரான அமரர் வீ கிம் வீ (பதவிக் காலம் 1985-1993) ஆகியோர் நியமன அதிபர்களாகப் பதவி வகித்தனர்

சிங்கப்பூரின் அதிபர் தேர்வு நியமன முறையிலிருந்து தேர்ந்தெடுக்கும் அதிபர் முறைக்கான அரசியல் சாசன மாற்றம் 1991ஆம் நவம்பர் 30ஆம் தேதி அமலுக்கு வந்ததது. அதையடுத்து முதலாவது அதிபர் தேர்தல் 1993ம் ஆண்டில் நடைபெற்றது. அப்போது துணைப் பிரதமர் திரு ஓங் டெங் சியோங்கும் வங்கியாளர் திரு சுவா கிம் யாவ்வும் போட்டியிட்டனர். அதில் 58.69 விழுக்காடு வாக்குகள் பெற்று திரு ஓங் டெங் சியோங் சிங்கப்பூரின் நான்காவது அதிபரானார்.

அதன் பிறகு அதிபர் தேர்தலில் போட்டியிட்ட திரு எஸ்.ஆர். நாதன் 1999, 2005ம் ஆண்டுகளில் போட்டி யின்றி அதிபராகத் தேர்வு பெற்றார். கடந்த 12 ஆண்டுகளாக சிங்கப்பூரின் அதிபராகப் பணி புரிந்து திரு எஸ்.ஆர்.நாதனின் பதவிக்காலம் ஆகஸ்ட் 31ம் தேதியுடன் முடிவடைந்தது.

சிங்கப்பூரின் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபருக்கு சில குறிப்பிட்ட அதிகாரங்கள் உள்ளன.

அவை தேசிய சேமிப்பை பாதுகாப்பது, அதை செலவு செய்வதற்கு நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் வழங்குவது, நிதிக் கொள்கைகள் வகுப்பதில் பங்கு, பொதுச் சேவை, அரசாங்க நிறுவனங்கள், அரசாங்க ஆணை பெற்ற நிறுவனங்கள் ஆகியவற்றுக்கான பதவி நியமனங்களில் அவருக்கு அதிகாரம் உள்ளது. அதிபர் ஆலோசனை மன்றத்தின் உதவியுடன் இவை குறித்த முடிவுகளை அதிபர் எடுப்பார்.

மறைந்த முன்னாள் அதிபர் ஓங் டெங் சியோங் சிங்கப்பூரின் சேமிப்புகள் தொடர்பாக முழு விவரங்களை கேட்டது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து அதிபரின் அதிகார வரம்பு குறித்து உச்சநீதிமன்றத்தில் கருத்துக் கேட்கப்பட்டது.

சிங்கப்பூரின் சேமிப்பைப் பாதுகாப்பதற்கான அரசமைப்புச் சட்ட விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்ட பின், கடந்த 20 ஆண்டு காலத்தில், ஒரே ஒரு முறைதான், 2009ஆம் ஆண்டு அதிலிருந்து பணம் எடுக்கப்பட்டது. சேமிப்பின் ஒரு சாவியை வைத்திருக்கும் அதிபரின் ஒப்புதல் இல்லாமல் பணம் எடுக்க முடியாது. பொருளியல் நெருக்கடியைச் சமாளிப்பதற்குச் சேமிப்பில் இருந்து $4.9 பில்லியன் தொகையை எடுக்க அதிபர் ஆலோசகர் மன்றத்துடன் ஆலோசனை நடத்தி, பிறகு 11 நாட்கள் கழித்துத்தான் அதிபர் நாதன் ஒத்துக்கொண்டார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் அரசியல் கட்சி சாராதவராக இருப்பதால், அவர் அரசாங்கத்தைக் கேள்வி கேட்கக் கூடியவராகவும், தங்களது கோரிக்கை கேட்பவராகவும் இருக்க வேண்டுமென சிங்கப்பூரர்கள் பொதுவாக எதிர்பார்க்கிறார்கள்.

சிங்கப்பூரை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தன்னம்பிக்கையுடனும் கெளரவத்துடனும் தம்மால் பிரதிநிதிக்க முடியும். நாட்டின் நிதி இருப்பை, சிரமமான காலத்திற்கான நமது நாட்டின் சேமிப்பை தம்மால் பாதுகாக்க முடியும் என்று கூறியிருந்தார் டாக்டர் டோனி டான்.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தில் இயற்பியல் துறையில் முதல் நிலை ஹானர்ஸ் பட்டம் பெற்றிருக்கும் டாக்டர் டோனி டான், ஆசிய அற நிறுவன உபகாரச் சம்பளத்தில் மாசெசூசட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் முது நிலைப் பட்டமும் அடிலேட் பல்கலைக்கழகத்தில் ஆய்வு முனைவர் பட்டமும் பெற்றவர்.

சிங்கப்பூரின் பெரிய வங்கிகளில் ஒன்றான ஓசிபிசி வங்கியை நிறுவிய டான் சின் துவானின் பேரனான அவர், படிப்பை முடித்ததும் அந்த வங்கியிலேயே பணி செய்யத் தொடங்கினார். வங்கியின் பொது நிர்வாகி பதவி வரை உயர்ந்த அவர், 1979ல் அரசியலில் சேர்ந்தார். 2006ஆம் ஆண்டு வரை டாக்டர் டோனி டான் சிங்கப்பூர் அமைச்சரவையில் பணியாற்றியுள்ளார். கல்வி, வர்த்தகம் - தொழில், சுகாதாரம், நிதி, தற்காப்பு ஆகிய ஐந்து அமைச்சுகளில் டாக்டர் டான் பணிபுரிந்துள்ளார்.

இடையில் 1991ல் அரசியலில் இருந்து விலகிய பின், 1992 முதல் முதல் 1995 வரை ஓசிபிசி வங்கியின் தலைவராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் செயல்பட்டார். பின் மீண்டும் 1995ல் அரசியலுக்கு அழைக்கப்பட்ட அவர், 2006 வரையில் நாட்டின் துணைப் பிரதமராகவும் தற்காப்பு அமைச்சராகவும் பணி புரிந்துள்ளார்.

ஜிஐசி எனப்படும் அரசாங்க முதலீட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவர், சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவர் என பல அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளை அண்மைக்காலம் வரை வகித்து வந்துள்ளார்.

நிலையற்ற உலகப் பொருளியல் சூழல், சிங்கப்பூரின் மக்களின் வேறுபட்ட அரசியல் நிலை போன்ற இக்கட்டுகளைச் சமாளிக்கும் திறன் படைத்தவர் டாக்டர் டோனி டான் என்பது அரசியல் அறிஞர்களின் கருத்து.

தாம் அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் அதிபர் என்றும் மக்களை ஐக்கியப் படுத்துவதே தமது முதல் பணி என்றும் கூறியுள்ளார் டாக்டர் டோனி டான். சிங்கப்பூர் மக்கள் மட்டுமன்றி வெளிநாட்டினரும் முதலீட்டாளர்களும் புதிய சிங்கப்பூர் அதிபர் டாக்டர் டோனி டான் எவ்வாறு செயல்படப் போகிறார் என்பதில் மிகுந்த எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளனர்.

தமது ஆறு ஆண்டு காலப் பதவிக் காலத்தில் பல்வேறு சந்தர்பங்களில் டாக்டர் டோனி டான் எடுக்கும் நிலை, வருங்கால சிங்கப்பூர் அரசியலுக்கு விடியலாக அமையும். நிலைத்தன்மையான அரசியலே சிங்கப்பூரின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்து வந்துள்ளது.

எனினும் அண்மைய தேர்தல் முடிவுகள் அதுகுறித்த ஐயப்பாட்டை உலகஅளவில் ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கக் கொள்கைகளின் மேலுள்ள அதிருப்தியால் மக்கள் இக்கட்டான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்கத் தவறிவிடுவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

வெளிநாட்டு முதலீடுகளைப் பெருமளவு நம்பியிருக்கும் சிங்கப்பூருக்கு அரசியல் நிலைத்தன்மையும் நம்பகத்தன்மையும் இன்றியமையாதது.

இந்த ஆண்டின் பொதுத் தேர்தல், அதிபர் தேர்தல் முடிவுகள் சிங்கப்பூரின் எதிர்கால நலன், அரசாங்கக் கொள்கைகள் பற்றி அரசையும் மக்களையும் அதிகம் சிந்திக்கத் தூண்டும் அளவில் அமைந்துள்ளன.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2011.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768