முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 33
செப்டம்பர் 2011

  புலம்பெயர் முகங்கள்
வி. ஜீவகுமாரன்
 
 
       
கட்டுரை:

மரண தண்டனை என்பது மனித விழுமியங்களுக்கு எதிரான ஊழல்
ரவிக்குமார்

இலக்கியத்தைக் கொல்பவனின் சாட்சியம்: றியாஸ் குரானாவின் கவிதைகள்
கே. பாலமுருகன்

மெல்ல தொடங்கும் அரசியல் விழிப்புணர்வு!
கெ. எல்.

கப்பலுக்குப் போன மச்சான்

எம். கே. குமார்

புலம்பெயர் முகங்கள்
வி. ஜீவகுமாரன்

பிசாசின் வைத்தியரிடம் தற்செயலாகச் சென்ற பயணம்
எம். ரிஷான் ஷெரீப்



பத்தி:

உயிர்ப்பு

ஷம்மிக்கா



பதிவு:

எஸ். ராமகிருஷ்ணனுடன் கழிந்த நாள்களும் கழியாத நினைவுகளும்
தயாஜி



கேள்வி பதில்:

ஷோபாசக்தி பதில்கள்
ஷோபாசக்தி



தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...15
எம். ஜி. சுரேஷ்



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


நிலத்தினும் பெரிதே
ரவிக்குமார்

மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


ஒளிந்து விளையாடும் சினிமாவின் கதைகள்
கே. பாலமுருகன்

சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

கட்டங்களில் அமைந்த உலகு
யோகி

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

மனிதம் மிஞ்சும் உலகம்
நித்தியா வீரராகு



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...23

மாதங்கி

ஆ. மாரிமுத்து

ம. நவீன்

ந. பெரியசாமி

இந்தப் புலம்பெயர்ந்த தமிழர்கள் என்ற சொல்லினால் நான் உட்:பட அனேக எழுத்தாளர்கள் இலங்கையில் இருந்து அல்லது இலங்கை மக்கள், எழுத்தாளர்களிடம் இருந்து அன்னியப்படுவது பற்றி என்றுமே எனக்கு வருத்தம் உண்டு. ஒவ்வொரு நாட்டைப் பொறுத்தவரை எங்களை சில சட்டதிட்டங்களின் அடிப்படையில்தான் அழைப்பார்கள். அகதி அந்தஸ்துக் கோரியவர்கள், அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டவர்கள் - வதிவிடவுரிமை பெற்ற அகதிகள் - வேலைச்சான்றிதழ் பெற்ற வெளிநாட்டவர்கள் - குடியுரிமை பெற்றவர்கள் - பிரஜாவுரிமை பெற்றவர்கள். இந்த ஏழு வகையாறாக்களில் பிறப்பால் அந்த நாட்டைச் சேராத மற்ற இன மக்கள் பாகுபடுத்தப்படுவார்கள். அல்லது ஒருவர் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு பிரிவில் பயணித்துக் கொண்டு இருப்பார்கள். உதாரணமாக அகதி அந்தஸ்து கோரும் நிலையில் இருந்த ஒருவர் வதியிடவுரிமை பெற்ற அகதியாகுவதும் பின் அந்த நாட்டு பிரஜாவுரிமை பெற்றவராதலும் காலப்போக்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கும். இந்த மாற்றம் நாட்டுக்கு நாடு மாறுபடும். இதற்கான காலங்களும் ஒன்றிலிருந்து ஐந்து அல்லது பத்து வருடங்கள் வரை மாறுபடலாம்.

ஆனால் இலங்கையைப் பொறுத்தவரை கட்டுநாயக்காவில் இருந்து விமானம் ஏறியவுடன் அல்லது ரமேஸ்வரத்தை நோக்கி ஏதாவது ஒரு கடற்கரையில் இருந்து வள்ளம் புறப்பட்டதும் அனைவரும் புலம்பெயர்ந்தவர்கள்தான். எவ்வாறு ஒரு பெண் திருமணம் செய்து கணவன் வீட்டுக்குப் போன பின்பு தனது வீட்டுக்கு பிறத்தி ஆகின்றாளோ அவ்வாறே நாமும் எம் இனத்திற்கு பிறத்தியராய் போவது கசப்புடன் விழுங்க வேண்டிய மாத்திரைதான்.

எண்ணை வள நாட்டிற்கு வேலைக்காக போய்வரும் பொழுதோ அன்றி உயர்கல்விக்காக வேற்று நாட்டுக்காக சென்று திரும்பும் பொழுது இந்த புலம்பெயர் முத்திரை குத்தப்படுவதில்லை. பதிலாக நாம் சென்றடையும் நாடுகளின் தரையை விமானத்தின்; பின் சில்லுகள் தொட முன்பு அல்லது கரையை வள்ளங்கள் அண்மிக்க முன்பு நாமே எங்கள் கைகளால் எங்கள் கடவுச்சீட்டைக் கிழித்துப் போட்டு அகதி அந்தஸ்த்தைக் கோரும் பொழுது அந்த நாட்டில் அகதி அந்தஸ்து கோருபவர்கள் என்ற ஒரு புதுமுகமும் அந்த புதுமுகங்களை தாயகத்தின் கைக்கண்ணாடிகளில் பார்க்கும் பொழுது புலம் பெயர்ந்தவர்கள் என்ற முகவரியும் எமக்கு கிடைக்கின்றது. எங்கு சென்றாலும் இலங்கையர் என்ற பெயர் மறைந்து சென்ற இடத்தில் அகதிகள் என்றும், பிறந்த மண்ணில் புலம் பெயர்ந்தவர்கள் என இரு பெயர்களைப் பெறுகின்றோம்.

இடம் பெயர்ந்தவர்களும் புலம் பெயர்ந்தவர்களும் புலம் பெயர்ந்தவர்களைப் பற்றி ஆழமாக அலசிக் கொண்டிருக்கும் பொழுது இந்;தியாவில் மண்டபத்திலும் மற்றைய அகதிமுகாம்களில் இருப்பவர்களையும் ´புலம் பெயர்ந்தவர்கள்´என்ற வகையறாக்களுக்குள் அடக்கி விட முடியுமா என்ற கேள்வி எழுகின்றது. இந்த புலம் பெயர்வின் ஆழம் எதில் தங்கியுள்ளது என உற்று நோக்கின் அது தன் முகத்தை ´இழக்கும்´அல்லது ´மாற்றும்´ அபாயத்துடன் கை கோர்த்து நிற்பது புரியும். ஆனால் இந்தியாவில் உள்ள அகதி முகாம்களில் உள்ளவர்களை இடம் பெயர்ந்தவர்கள் என்ற பிரிவினுள்ளேயே என்னால் பார்க்க முடிகிறது. காரணம் அவர்கள் இதுவரை தம் சுயத்தை இழக்கவில்லை அல்லது அவ்வாறான ஒரு சமூக நெருக்கடிக்குள் சிக்குப்படவில்லை. மேலும் இலங்கைக்குத் திரும்பி தம் வாழ்விடங்களுக்கு சென்று வாழக் காத்துக் கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்கள் அவர்கள். ஏன்றும் அவர்கள் இந்தியத் தமிழராகப் போவதில்லை – ஐரோப்பியத் தமிழர்…அவுஸ்திரேலியத் தமிழர் போல. (தென் இந்தியாவில் தொழில் நிமித்தமும், திருமணங்கள் காரணமாக அங்கு பிரஜாவுரிமை பெற்வர்களையும் வேண்டுமென்றால் ´புலம் பெயர்ந்தவர்கள´ என அழைக்கலாம்.)

இசைவாக்கம் (Integration)

இந்த அகதிவாழ்க்கை அல்லது புலம் பெயர்வு வாழ்வு நாம் சென்றடையும் நாட்டைப் பொறுத்தும் அந்த நாட்டில் எம்;மை வாழ இசைவாக்கப்படுத்தலிலும் அந்த வாழ்வின் தரம் மேலோங்கும் அல்லது கீழிறங்கும். இலங்கையிலேயே ஒரு மொழி பேசும் மக்களுக்கு இடையே பிரதேசங்களுக்கு இடையே அல்லது ஊர்களுக்கு இடையே பழக்க வழங்கங்களில் வேறுபாடு இருப்பது போல இந்த புலம் பெயர்ந்து சென்ற நாட்டுக்கு நாடு கலாச்சாரங்களில் பெரிய மாறுபாடுகள் உண்டு. உதாரணமாக இங்கிலாந்தில் நத்தார் பண்டிகை 25ம் திகதி நடுநிசியில் பாலன்பிறப்பிற்காக தேவாலத்தில் மக்கள் கூடியிருக்கும் பொழுது மற்றைய அனேக ஐரோபு;பிய நாடுகளில் கிறிஸ்மஸ் விருந்து முடிந்து விடும். உயிர்ந்தெழுந்த ஞாயிறு அன்று ஆசியாக் கண்டங்களில் விசேட வமிபாடுகள் நடைபெறறுஞக் கொண்டு இருக்கும் போது ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் செம்மறி ஆட்டை வாட்டிக் கொண்டும் அதனைச் சுற்றி நடனமாடிக் கொண்டும் இருப்பார்கள். இந்த கலாச்சார மாற்றங்களை உள்வாங்கி எமது தனித்துவங்களை இழக்காமல் இந்த நாட்டு மக்களுடன் இணைந்து வாழ்வதையே இசைவாக்கம் என இந்த நாடுகள் வரையறுத்துக் கொள்கின்றன.

300 ஆண்டுகள் அடிமைத்தன வாழ்க்கைக்கு பழகிவிட்ட ஆசிய நாட்டு மக்களுக்கு இந்த இசைவாக்கம் இலகுவாக வந்துவிடுகிறது. இந்த நாடுகளில் நன்கு முன்னேறிய இனமாக தென்கிழக்காசிய மக்கள் இருப்பது கண்கூடு. ஆனால் இந்த இசைவாக்கம் தன் இயல்பை இழக்காமல் இயல்பாகவே நடந்தேற வேண்டிய ஒன்று. இப் பாதையில் அதிஸ்டவசமாக மேலே தூக்கிச் செல்லும் ஏணிகளும் உண்டு. அதாள பாதாளத்துக்கு இழுத்துச் செல்லும் பாம்புகளும் உண்டு. வெற்றி என்ற 100வது கட்டத்தை எட்டிச் சென்றவர் ஒரு சிலர் என்றாலும் 75ஐத் தாண்டி இயல்பான நல்வாழ்வை அமைத்துக் கொண்டவர் பலர் உண்டு. இசைவாக்கத்தின் கருத்தினை பிழையாக விளங்கிக் கொண்டு தம் அடையாளங்களை இழந்தால்தான் அன்னிய இனத்துடன் ஒட்டமுடியும் என்ற வகையில் வாழ்வை அமைப்பவர்கள் தான் பல கலாச்சாரச் சிக்கலைச் சந்திக்கின்றார்கள். அல்லது கலாச்சார பிறழ்வுகளுக்கு முகம் கொடுக்கின்றார்கள். "நாங்கள்” , "எங்கள்” என்ற தாய்வழிக் கலாச்சாரத்தில் இருந்து "நான்” , "எனது” என்பதனை முதன்மைப்படுதும் பொருளாதார கலாச்சாரச் சூழ்நிலைக்குள் வரும் பொழுது இந்த அடிப்படை இசைவுமாற்த்திற்கு உள்ளாக வேண்டிய கட்டாத்திற்கு புலம் பெயர்ந்த மக்கள் திணிக்கப்படுகின்றார்கள். அத்துடன் இந்த "நான்” , "எனது” என்ற கலாச்சாரத்திற்கு இசைவாக்கப்படும் பொழுது புலம் பெயர்;மக்களுக்கும் தாயக மக்களுக்கும் உள்ள இடைவெளிக்கு பிள்ளையார் சுழி போடப்படுகின்றது. தொடர்ந்து இடைவெளி பிளவுகளாகின்றது. தாயக உறவுகள் "நாம்” எனப் பார்க்கின்றார்கள். புலம் பெயர் உறவுகளோ "நான்” எனப்பார்க்கின்றது. இங்கேதான் புதிய சமுதாயத்துடன் ஆன இசைவாக்கம் பலம் பெறுகிறது. தாயகத்துடன் ஆன உறவுகள் பலவீனப்படுகிறது.

புதிய தமிழ்க் கலாச்சாரம்

மேலாக மேலைத்தேய நாடுகளின் வாழ்க்கைத் தரத்திற்கேற்ப ஊதியம் அல்லது அரச உதவிகளும் எமது நாட்டு பின்னணியில் வாழ்ந்தோருக்கு அவை மிகப்பெரிய தொகையாக மாறியது. அதன் ஒரு பகுதி இலங்கையின் போராட்டத்திற்கும் வேறு பல தானதருமங்களுக்கு பின் புலமாயும் மறு பகுதி தம் வாழ்வியல் தரத்தை உயர்த்தும் ஒரு போலித் தனங்களுக்கு பயன்படுத்தப்படத் தொடங்க பின்பு கால ஓட்டத்தில் பலர் அதன் காரணகாரியங்களை ஆராயமாமல் அந்த ஓட்டத்தில் இணைய ஆரம்பித்து விட்டார்கள். உதாரணமாக எங்கள் கோயில்களின் திருவிழாக்கள் இந்தியா, இலங்கையில் சாத்திர சம்பிருதாயப்படி நாள், நட்சத்திரம், திதி பார்த்தே நடாத்தப்படுவவை. ஆனால் அனேகமாக ஐரோப்பிய நாடுகளில் தேர்த்திருவிழா என்பது சனிக்கிழமை-களிலும் தீர்த்தத் திருவிழா என்பது ஞாயிற்றுக் கிழமைகளிலும் வரக்கூடியதாகவே அமைக்கப்படும். இங்கு சாத்திரம் சம்பிருதாயம் நாள்கள் என்பன ஓரம் கட்டப்பட்டு மக்களின் லீவு தினமும் அதனால் வரக்கூடிய அர்ச்சனைத் துண்டுகளின் விற்பனையும் விழாவை ஒட்டி வீதிகளில் நடாத்தப்படும் பெரிய வியாபார அங்காடிகளின் வருமானமே கருத்திற் கொள்ளப்படுகிறது. மக்களும் இதுபற்றி பெரிதாய் அலட்டிக் கொள்வதில்லை.

அவர்களுக்கும் லீவு நாள் என்றால் வசதிதானே?

ஆனால் இதே மக்கள் ஆயுதங்கள் மௌனமாக்கப்பட முதல் மாவீரர் தினங்கள் என்ன நாட்களில் நடந்தாலும் அரைநாளோ அல்லது முழுநாள் லீவு எடுத்துக் கொண்டு மாவீரர் உரையைக் கேட்பதற்காக மண்டபங்களில் கூடித்தான் இருந்தார்கள். இந்த இரண்டு உதாரணங்களும் எங்கே மக்கள் தங்களை வளைத்துக் கொண்டார்கள் அல்லது வளைய இடம் கொடுத்துக் கொண்டார்கள் என்பதிற்கு நல்ல உதாரணம் ஆகும்.

இவ்வாறுதான் இன்றைய புலம் பெயர்வு வாழ்வு போய்க் கொண்டு இருக்கின்றது.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2011.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768