முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 33
செப்டம்பர் 2011

  வழித்துணை ...9
ப. மணிஜெகதீசன்
 
 
       
கட்டுரை:

மரண தண்டனை என்பது மனித விழுமியங்களுக்கு எதிரான ஊழல்
ரவிக்குமார்

இலக்கியத்தைக் கொல்பவனின் சாட்சியம்: றியாஸ் குரானாவின் கவிதைகள்
கே. பாலமுருகன்

மெல்ல தொடங்கும் அரசியல் விழிப்புணர்வு!
கெ. எல்.

கப்பலுக்குப் போன மச்சான்

எம். கே. குமார்

புலம்பெயர் முகங்கள்
வி. ஜீவகுமாரன்

பிசாசின் வைத்தியரிடம் தற்செயலாகச் சென்ற பயணம்
எம். ரிஷான் ஷெரீப்



பத்தி:

உயிர்ப்பு

ஷம்மிக்கா



பதிவு:

எஸ். ராமகிருஷ்ணனுடன் கழிந்த நாள்களும் கழியாத நினைவுகளும்
தயாஜி



கேள்வி பதில்:

ஷோபாசக்தி பதில்கள்
ஷோபாசக்தி



தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...15
எம். ஜி. சுரேஷ்



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


நிலத்தினும் பெரிதே
ரவிக்குமார்

மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


ஒளிந்து விளையாடும் சினிமாவின் கதைகள்
கே. பாலமுருகன்

சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

கட்டங்களில் அமைந்த உலகு
யோகி

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

மனிதம் மிஞ்சும் உலகம்
நித்தியா வீரராகு



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...23

மாதங்கி

ஆ. மாரிமுத்து

ம. நவீன்

ந. பெரியசாமி

சு.ராவைத் தேடி ...2

வாசிப்பின் தேவை என்ன என்பது பற்றி அதிகம் அலட்டிக் கொள்வதேயில்லை. வாசிப்பு அனுபவம் அழகியற் சுவையும் தாண்டி பல கணங்களில் வேறு ஒரு புதிய அனுபவத்தை, புதிய தளத்தில் மனதை உலவ விடுவதை உணர்ந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்படினும், அதனை வளர்த்தெடுக்க எந்தப் பிரயத்தனமும் பட்டதில்லை. இலக்கியத் தேடல் என்பதும் ஒரு மாதிரி புதிய புதிய ருசிகளைத் (பல நேரங்களில் அவை வெறும் 'வார்த்தை ஜிம்னாஸ்டிக்' மட்டுமே) தேடிய கதைதான். எங்கெல்லாம் நல்ல Char Kuew Teow கிடைக்கும் என்று தேடிச் சுவைப்பதுபோல! (எனது ஆசிரிய நண்பர்கள் சிலர், பக்கத்தில் எந்த கோவிலில் கிடா வெட்டி விருந்து வைத்தாலும் கட்டாயம் ஆஜராகிவிடுவார்கள். எந்தெந்த கோவில்களில் பலி விழுகிறது என்ற விஷயம் சரியாகத் தெரிந்து வைத்திருப்பார்கள்.) Information is wealth அல்லவா! இதுவும் தேடல்தான். என் இலக்கியத் தேடலும் இதைவிடப் பெரிதான ஒன்றல்ல.

சு.ராவை பார்க்கப் போனது அப்படியான ஒரு நோக்கில் அல்ல. 'ஜே.ஜே. சில குறிப்புகள்' வாசித்தபின் பலருக்கு எற்பட்ட பாதிப்பு எனக்கும் ஏற்பட்டது. இப்படிப்பட்ட தமிழ் நாவல் ஒன்றை அதுவரை படித்ததேயில்லை. முதன்மையாக அதன் வடிவம், கதைப் பின்னல், மொழிநடை மிகவும் வித்தியாசமாக (அன்னியமாக) இருந்தது. மனதுக்கு மிகவும் நெருக்கமான நடை அது. புதுமைப்பித்தன் கதைகளில் எப்படி சொற்கள் சொக்குப்பிடிப் போட்டு உங்களை உள்ளிழுத்துக் கொள்ளுமோ, அதேபோலவோ அல்லது அதைவிட செறிவான, இறுக்கமான ஒரு நடை அது. பல இடங்களில் ஒரு தர்க்க நூலை வாசிப்பது போன்ற பிரமையை ஏற்படுத்தியது. இதற்கு முன் பல நல்ல நாவல்களை வாசித்திருக்கிறேன். அவை அற்புதமான அனுபவத்தை நிச்சயம் அளித்தன. தி.ஜாவின் 'மோகமுள்' பெரும்பாடு படுத்தியிருக்கிறது. ஜமுனாவை யாரால்தான் மறக்க இயலும்! அதுவும் மீசை அரும்பும் வயதில் அந்தக் கதையைப் படிக்கும் எவருக்குதான் மனம் பாதிக்காமல் இருக்கும்.

ஜே.ஜே அப்படியல்ல. உங்கள் தர்க்க புத்தியை தீட்டிக் கொண்டே இருக்கச் செய்கிறது. வாசித்து உச்சி மோந்து, நெஞ்சோடு இறுக அணைத்து மனதைக் கரைய விடுவதில்லை. உங்களை சிந்திக்கச் சொல்கிறது; சீண்டுகிறது; நீங்கள் வெறுமனே வாசித்துப் போக முடியாதவாறு பல சிக்கலான கேள்விகளை தொடர்ந்து எழுப்பிக் கொண்டே செல்கிறது. அவற்றை நீங்கள் உதாசினப் படுத்தவும் முடியாது; உங்களையே ஏமாற்றிக் கொள்வது அப்பட்டமாகத் தெரியும். பிறகு என்னதான் செய்வது? அந்தப் புத்தகத்தை தூக்கிப் போட்டுவிட்டு, வேறு ஏதாவது 'பாரம்' குறைவானதாகப் படிக்கலாம். ஆனால் ஜே.ஜே. ஒரு மூலையில் இருந்து உங்களைப் பார்த்து பரிகசித்துக் கொண்டே இருப்பான்.

இருத்தலியல் தொடர்பான விவாதங்கள் நிறைந்ததாக நாவல் இருந்தது. எனக்கு அதில் எவ்வித வாசிப்போ, ஈடுபாடோ கிடையாது. உண்மையில் தெரியாது. கல்கியின் நாவல்களைக் கிண்டலடித்தது கொஞ்சம் புரிந்தது. (அது தமிழ் நாவல்களின் போதாமை மீதான ஒரு கருத்து என பிடிபட ரொம்ப காலமானது. பொன்னியின் செல்வனையும், சிவகாமியின் சபதத்தையும் இப்போது படித்தாலும் சுகமாகத்தான் இருக்கிறது!) ஆகவே, நாவலை முழுமையான பிரதியாக உள்வாங்காமல், பிரித்துப் பிரித்துப் படிக்க முற்பட்டேன். உதாரணமாக, குஷ்டரோகிக்கு உதவலாமா, வேண்டாமா என ஜே.ஜே முடிவெடுக்கும் கட்டம். அப்புறம், பழுதுற்ற பஸ்ஸை யாராவது சரிசெய்துவிடுவார்கள் என மற்ற பயணிகள் வாளாவிருக்கும் போக்கு போன்ற சமூக ஒப்புமைகள் நாவலின் முழுமைத்துவத்திற்கு எவ்வித பங்களிப்பைச் செய்கின்றன என்பதை காண்பதைவிட்டு, அவற்றை ஒரு தனிப்பட்ட கருத்தாக/quotation பார்க்க முற்பட்டேன். வேறு என்னதான் செய்வது? அபத்தமான வாசிப்புதான், இருந்தாலும் வாசித்தேன். அதுவும் நன்றாகத்தான் இருந்தது!

சில ஆண்டுகளுக்குப் பிறகு வாசித்த, சுஜாதா இந்நாவலுக்கு எழுதிய ஒரு விமர்சனக் குறிப்புதான் கொஞ்சம் வெளிச்சம் காட்டியது. ('ஒரு குட்டியை இரண்டு குட்டன்கள் காதலித்த கதை' என்பது போன்ற தனது trade mark நடையில் அதனை எழுதியிருந்ததாக ஞாபகம்). சுஜாதாதான் சு.ரா என்ற பெயரையே எனக்கு அறிமுகம் செய்தவர். தனது கட்டுரை ஒன்றில், 'விஜயலெட்சுமி பண்டிட்டின் கவிதைகளை கவிதைகளே அல்ல,' என சுந்தர ராமசாமி கராத்தே அடி கொடுத்துக்கொண்டிருந்தார் என அவர் எழுதியிருந்ததைப் படித்த பிறகே எனக்கு சு.ரா தெரிய வந்தார். சிற்றிதழ் எதுவும் அறிமுகம் இல்லாத காலகட்டம்; சு.ராவின் செயல்பாடுகள் எதுவும் தெரியாது. இணைய அறிமுகமும் இல்லை. ஆக, அவரின் இலக்கிய போக்கு, மற்ற படைப்புகள், படைப்புகளையொட்டி எழுந்த விமர்சனங்கள் எதுவும் தெரிந்திருக்காத சூழ்நிலையில், அவரது எழுத்தை உள்வாங்குவது சிரமமானதாக இருந்தது.

2001-க்கு பிறகு, சிற்றிதழ்களின் அறிமுகம், குறிப்பாக காலச்சுவடு, படிக்க ஆரம்பித்த பிறகுதான் சு.ராவின் இலக்கிய ஆளுமை, செயல்பாடுகள் குறித்த போதிய தகவல்களை வாசித்தேன். (சு.ரா காலமான பிறகு ஜெயமோகன் எழுதிய அஞ்சலியில் (நினைவின் நதியில்), புதிய எழுத்தாளர்கள் அவரை முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் தட்டையான கருத்தையே கொண்டிருந்தனர்; அவற்றுள் பெரும்பாலும் அவரை சரியாக அடையாளம் காட்டாதவை எனும் கருத்துபட எழுதியிருந்தார்.) வேறு எப்படித்தான் எழுத முடியும்? சு.ராவை அசைக்கமுடியாத, இலக்கிய ஆதர்சமாக வரித்திக் கொண்டபின் அவர் வலியுறுத்திக் கூறிய கறாரான விமர்சனம் என்ற கருத்தாக்கத்தை அவர் மீதே பிரயோகிக்க (வேறு எந்த எழுத்தை விமர்சித்தாலும்) உங்களுக்கு ஆழமும், விரிவும் கொண்ட இலக்கிய வாசிப்பு இருக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் சுலபமான, பாதுகாப்பான அணுகுமுறை, புகழ்பாடுவதுதான். இந்தக் கதை நன்றாக எழுதப்படவில்லை, நிறைய ஓட்டைகள் என்றால்தானே பிரச்சனை; இந்தக் கதை எனக்குப் பிடிக்கவில்லை என்றால் எந்த வம்பும் வராதே! (நீங்கள் எந்த விளக்கமும் தரவேண்டியதில்லை; புத்தகத்தை கடாசிவிட்டுப் போய்கொண்டே இருக்கலாம், எப்படி!)

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2011.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768